மௌனத்தால் உடைந்த காதல் 14

நேசனும் பூண்டு உரித்து கொடுக்க.” உங்க மருமகளுக்கு வத்த குழம்புனா பிடிக்கும். நிறையவே பூண்டு உரிங்க” என்ற தன் மனைவியை பார்த்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
 

 

இவள் தான் அன்று அந்த வார்த்தை பேசினால் என்று சொன்னால் ,யாருமே நம்ப மாட்டார்கள் .”ஆனா, இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் அடக்கிட்டா பரவால்ல சித்ரா நீ!” என்ற படியே பூண்டு உரிக்க .
 

 

“அது பொறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கு .ஒன்னும் பண்றதுக்கு இல்ல. பிடிக்காத விஷயத்தை பண்ணுனா கேள்வி கேட்க தான் செய்வேன் .வார்த்தை தெரியாத்தனமா தடிச்சதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு இங்க இருந்து எதையும் சரி கட்டணும்னு நினைச்சு இருக்கணும். பையைத் தூக்கிட்டு போனா, நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் எங்கேயும் போய் நிக்க சொல்லல” என்றவர்.
 

 

கோர்ட் வாசப்படியை மறைமுகமாகவே அங்கு குறிப்பிட்டும் இருந்தார். மேற்கொண்டு அதைப்பற்றி நேசனுக்கும் பேச விருப்பமில்லை.
 

 

அதேபோல் சித்ராவுக்கும் விருப்பமில்லை.” பேச்ச வளத்தாம சீக்கிரம் வேலைய பாருங்க .வேலை கிடக்கு, முடிஞ்சு போனத பேசி ஒரு பிரயோஜனமும் கிடையாது. இருக்கிறத ஆக வேண்டியதை பாருங்க” என்று அப்படியே பேச்சு பேச்சு வாக்கில் இருந்தாலும் பேர பிள்ளைகளுக்கும், மகனுக்கும் சாப்பாடு செய்வதில் மும்மரமாக இருந்தார். 
 

 

அடுத்த முக்கால் மணி நேரத்தில் அனைத்தையும் ரெடி செய்து டப்பாவில் போட்டுக் கொடுத்தவர். “பசங்க குளிக்கலைன்னா ,போய் குளிக்க வச்சுவிட்டு சாப்பாட்டை டப்பால போட்டு வையுங்க சரியா? நீங்களும் சத்தம் போட்டு எழுப்பி விடாதீங்க” என்று சொல்லி அனுப்பினார். 
 

 

வேகமாக சென்று நேசன்  இறங்க. குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு கிளம்பி ,யூனிஃபார்ம் உடன் உட்கார்ந்து இருந்தனர் .
 

 

“தாத்தா!” என்று சத்தம் போட்டு குதிக்க.
 

 

“சத்தம் போடாதீங்கடா .இன்னும் எழுந்திருக்கலையா ?” என்றார்.
 

 

” இல்லை” என்று இருவரும் குசுகுசுக்க.” சரி” என்றவர் வேகமாக குழந்தைகளுக்கு ஊட்டி விட்டபடி இருக்க.
 

 

சத்தம் கேட்டு ஆதி தான் முதலில் எழுந்து வந்தான்.
 

 

வந்தவன் ,”அப்பா நீங்க எப்ப வந்தீங்க ?”என்று கேட்டான்.
 

 

இவனது சத்தம் கேட்டு, சுதாவும் எழுந்து கொண்டாள். அதன் பிறகு, நேரத்தை பார்த்தவள் அடித்து பிடித்து ,”அச்சோ!  ஆதி ஏதாவது செஞ்சீங்களா? இன்னும் சமைக்கவே இல்லை “என்றபடியே வெளியில் கொண்டையிட்டபடி வர.
 

 

அங்கு மாமனார் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டதை பார்த்தபடி இருந்தவள் .
 

 

“வாங்க மாமா! மன்னிச்சிடுங்க .இன்னைக்கு அசந்து தூங்கிட்டேன் “என்றாள்.
 

 

அவளுக்கு கணவனை கட்டிப்பிடித்தபடி உறங்கி இருந்தது நினைவில் இல்லை. நேரம் ஆகிவிட்டது என்பது மட்டும்தான் நினைவில் இருக்க .
 

 

“வரேன் மா “என்று சிரித்தவர். “கிச்சன்ல டப்பால சாப்பாடு இருக்கு சுதா .ஒன்னும் அவசரம் இல்ல, ரெண்டு பேருக்கும் வேலைக்கு நேரம் ஆயிடுச்சு பாருங்க, குளிச்சிட்டு கிளம்பி வாங்க, சாப்பிட்டு வேலைக்கு போவீங்க” என்றார்.
 

 

அவள் தன் மாமனாரை பார்க்க. “போ சுதா”
 

 

கணவனை ஒரு முறை பார்த்தவள் .எதுவும் பேசாமல் ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். பின்னாடியே ஆதியும் வர.
 

 

” நீங்களும் இப்பதான் எழுந்தீங்களா?”
 

 

” ஆமா  சுதா. நேரமாயிடுச்சுடி அம்மு”  என்று இருவரும் குளித்து முடித்து வெளியில் வர.
 

 

குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு ,குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் போட்டுவிட்டு, மருமகளுக்கும் ,மகனுக்கும் டிபன் பாக்ஸில் போட்டு வைத்து இருந்தார் நேசன்.
 

 

“சரிடா நான் போகாம உங்க அம்மா சாப்பிட மாட்டா. புள்ளைங்கள ஆட்டோ ஏத்திவிட்டு நானும் அப்படியே வீட்டுக்கு கிளம்புறேன்” 
 

 

” டீ போடுற மாமா குடிக்கலாம் “
 

 

” வேணாமா. நீங்க ரெண்டு பேரும்  சாப்பிட்டுட்டு குடிச்சிட்டு போங்க. புள்ளைங்களுக்கு ஃப்ளாஸ்கில் எடுத்துட்டு வந்து இருந்ததை குடுத்துட்டேன். உங்களுக்கு ஃப்ளாஸ்குல இருக்கு பாரு” என்றவர் வேறு எதுவும் கூறாமல் ஆட்டோ வந்துவிட ,குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு, இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்.
 

 

டீ யை ஊற்றியவன் அவளிடம் கொடுக்க .
 

 

அவளோ அவஸ்தையா உணர்ந்தாள்.
 

 

அவள் கையை இறுக்கி பிடித்து, ஒரு சில நொடியேனும் கட்டி அணைத்து விடுவித்தவன் .”சுதா எதையும் யோசிக்காதடி அம்மு! அங்க இருந்த வரைக்கும் நீயும் சரி, அம்மாவும் சரி எப்படி இருந்தீங்கனு  உங்களுக்கே தெரியும். நான் அம்மா செஞ்சது சரின்னு சொல்லல .ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக இதை எதையும் ஒதுக்காது அம்மு .எனக்கு கஷ்டமா இருக்குன்றதுக்காக நீ ஏத்துக்க வேணாம் .ஆனா, ஒரு சில விஷயத்தை இப்படியே ஏத்துக்காம போயிடுவோமோனு பயமா இருக்குடி” என்றவன் கண் கலங்க.
 

 

“ஒன்னுமில்ல”  என்று அவன் கண்ணீரை துடைத்து விட்டவள். அமைதியாக டீ பருகி விட்டு, மதியத்திற்கு கட்டிவைத்த உணவையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
 

 

“நான் பஸ் ஸ்டாண்ட்ல விடுறதா?”
 

 

நேரத்தை பார்த்தவள்.” இல்லை உங்களுக்கு நேரம் ஆகுது. நீங்க போங்க, நான் பஸ் புடிச்சிக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல “
 

 

சரி என அவளிடம் நெருங்கி நெற்றியில் இதழ் பதித்தவன். ஒரு சில நொடி நின்றான். அவள் இதழ் பதிக்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் ..
 

 

அவளோ அமைதியாக இருக்கவும்.அவன் கிளம்பி விட்டான் நேரம் ஆகுவதை உணர்ந்து,
 

 

வாய்க்குள் சிரித்துக் கொண்டவள். “ஆதி!” என்று ரொம்ப நாட்களுக்கு பிறகு காதலாக அழைக்க.
 

 

சந்தோஷத்துடன் திரும்பினான். திரும்பியவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள் .வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
 

 

அவள் இதழ் பதித்தது அவனுக்கு ஆனந்தத்தை கொடுக்க. வேறு எதும் எதிர்பார்க்காமல் “வரேன் அம்மு! லவ் யூ!”என்று கிட்சன் வாசலில் நின்று குரல் கொடுத்தபடியே கிளம்பி விட்டான்.
 

 

அவளும் ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாள். 
 

 

ஒரு வாரம் நன்றாக சந்தோஷமாக சென்றது . வார இறுதியில் லீவு என்பதால், கலை 7 மணிக்குத்தான் எழுந்து இருந்தாள் .
 

 

எழுந்தவள் முகத்தை கழுவிக்கொண்டு ,வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு, டீ போட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவர்கள் வீட்டின் முன்பு ஒரு ஆட்டோ சத்தம் கேட்டது.
 

 

  ஆட்டோ சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவள். தன் தாய் இறங்கி வரவும், ஒன்றும் புரியாமல்,” வா மா!” என்று அழைத்தவள் வீட்டிற்குள் வந்து உட்கார வைத்து விட்டு ,” வேணுமின்னே வந்து நிக்கிறயமா?” என்றாள்.
 

 

“வந்தவளை வானு கூப்ட, அடுத்த வார்த்தை எதுக்கு வந்தேன்னு கேட்காம கேக்குறடி?”
 

 

“வீம்புகுனே நீ பண்ற மாதிரி இருக்கு .”
 

 

“என்னத்த வீம்புக்கு பண்ற ?”

 

பின்ன பசங்க அங்க போக கூடாதுன்றதுக்காக தான விடிஞ்சதும் வந்து நிக்கிற”
 

 

“என் மக வீட்டுக்கு வந்தது ஒரு குத்தமா?”
 

 

” இதே இந்த ஒத்த வார்த்தை சொல்லி சொல்லி என்னை மடக்காதம்மா. இன்னும் அதுங்க எழுந்திருக்க கூட செய்யல. ஆனா, நீ இம்புட்டு வேகமா வந்ததுக்கு காரணம் அதானே”
 

 

” ஆமாண்டி நான் அதுக்காக தான் வந்தேன். இப்ப என்னங்குற அதுக்கு? எனக்கு புள்ளைங்க உன் மாமனார் ,மாமியார் வீட்டுக்கு போறதுல பிரச்சனை கிடையாது சரியா, எனக்கும் என் பேர புள்ளைங்க மேல பாசம் இருக்க தானே செய்யுது. இதுக்கு முன்னாடி வர ,வார வாரம் அங்க கூட்டிட்டு வருவ, இல்ல நேரம் கிடைக்கும்போது கூட்டிட்டு வருவ, இப்ப எதுவுமே கிடையாது. உனக்கு நேரமும் கிடைக்கிறது கிடையாது,
 

 

வாரவாரம் வரதுக்கு வழி இல்ல, இந்த லட்சணத்துல நான் இதுக்காக என் பேர புள்ளைங்கள பாக்காம இருக்க முடியுமா? நானும் ஒத்தையில தாண்டி இருக்கேன். சரியா”  என்றார்.
 

 

அவளுக்கு அவருடைய சூழ்நிலை புரிந்தாலும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.
 

 

சத்தம் கேட்டு எழுந்து வந்தவன். தன் மாமியாரை பார்த்து விட்டு, திருத்திருவென முழித்தாலும், “வாங்க அத்தை!” என்று வரவேற்று விட்டு, தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
 

 

அவளுக்கு சங்கடமாக இருந்தது. எதுவும் பேச முடியாமல் , கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள். ஆதி ரூமுக்குள் நுழைந்தவன், நேசனுக்கு அழைத்து விவரத்தை கூறிவிட்டான்.
 

 

” சரிடா நீ அங்க பாரு. நான் உன் அம்மாவ சமாளிச்சுக்கிறேன். இதை எதும் பெருசாக்க வேணாம்”என்றவர் வைத்துவிட்டார். 
 

 

நேசனுக்கு இப்பொழுது இருக்கும் பிரச்சனை, இதை மனைவியிடம் எப்படி கூறுவது ?என்பதுதான். இருந்தாலும், தயங்கியபடி கிச்சனுக்குள் நுழைந்தார். அப்போதுதான் காலை உணவிற்கு அனைத்தையும் ரெடி பண்ணிக் கொண்டிருந்தார் சித்ரா.
 

 

” சித்ரா !”என்றப்படி நேசன் உள்ளே வர.
 

 

” சொல்லுங்க ” என்றவர் திரும்ப.
 

 

” அது சம்பந்தி அம்மா இந்த வாரமும் வந்துட்டாங்களாம் “என்றவுடன் கொதித்து விட்டார் சித்ரா.
 

 

” என்ன விளையாடுறீங்களா ?வேணும்னே தானே அவ ஆத்தாக்காரி இப்ப அங்க வந்து உக்காந்து இருக்கா. காலங்காத்தால வந்து இருக்கானா, இங்க பிள்ளைங்க வரக்கூடாதுனு தான.நீங்க ஒன்னும் இப்ப அவளுக்கு கொடி புடிச்சிட்டு அலைய வேணாம்.”
 

 

“சித்ரா அது..”
 

 

” என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்றார் எரிச்சலாக,
 

 

” சரிடி அடுத்த வாரம் பாத்துக்கலாம். இல்லனாலும் சாயங்காலமா, நம்ம பிள்ளைகளை வர வச்சுக்கலாம் “
 

 

“போன வாரம்  திங்கட்கிழமை அவுங்க வூட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு  தான வந்தான். நான் ஏதாவது சொன்னேனா? சரி அது அவங்க விருப்பம் ,அது இல்லாம அந்த பொம்பள தனியா தான இருக்காங்கனு விட்டுட்டேன். இந்த வாரமும் இங்கு வந்து உட்கார்ந்திருக்கானா வேணுமுன்னு தானே, வேணும்னு அழுச்சாட்டியம் பண்றது உங்க சம்பந்தி. ஆனா, என்ன குத்தம் சொல்லுவீங்க குடும்பத்தோட” என்றவர் முகத்தை வெட்டித் திரும்ப.
 

 

” சரி அதுக்கு என்னதான் பண்ணலாம் “
 

 

” என்ன பண்ணலாம்னா கிளம்புங்க போலாம்”
 

 

“எங்க சித்ரா?”
 

 

“எங்கனா உங்க மகன் வீட்டுக்கு தான் “
 

 

“என்ன சித்ரா விளையாடுறியா ?அங்க நமக்கு என்ன வேலை?”
 

 

” ஏன் அவளுக்கு மக வீடுனா, நமக்கு மகன் வீடு இல்லையா? கிளம்புங்க போலாம்” 
 

 

“இப்ப அங்க போய் சண்டை போட போறியா சித்ரா ? பசங்கள கூட்டிட்டு வரலாம்னு இருக்கியா?”

 

என்றவுடன்,
 

 

கலகலவென்று சிரித்தவர். “அவ்ளோ கெட்டவ  எல்லாம் கிடையாது இந்த சித்ரா. என்ன எந்த நேரமும் வில்லியாவே பாக்குறத விட்டுட்டு ,கொஞ்சமாச்சு என்கிட்ட இருக்கு நல்ல குணத்தையும் பார்த்தா நல்லாத்தான் இருக்கும்” என்று முகத்தை வெட்டி திருப்பியவர்.
 

 

” அந்த பொம்பளைக்கு அங்க வந்து உட்கார்ந்து தின்னுட்டு போக உரிமை இருக்கும்போது ,எனக்கு என் மகன் வீட்ல உக்காந்து தின்றதுக்கு உரிமையிருக்கு வாங்க போலாம் “என்றவுடன்,
 

 

” நீ அங்க வரியா? அங்க வந்து எதுவும் பிரச்சினை பண்ணிட மாட்டியே ?”என்று கண்கள் வெளியே தெரித்து விழும் அளவிற்கு தன் மனைவியை பார்க்க.
 

 

” உங்க சம்மந்தி எதுவும் வாயை திறக்காதவரை நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். நான் வாயை திறக்க மாட்டேன். ஆனா, உங்க சம்மந்தி வாயை திறந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. எதுக்கு நின்னுக்கிட்டே இருக்கீங்க? நேரம் ஆகுது பாருங்க கிளம்புங்க “
 

 

“சரி வாடி போகலாம் “என்றார் நேசன்.
 

 

“என்ன கெளம்ப சொன்னா வா போலாம் சொல்றீங்க?  எப்படி இப்படி தல கூட வாராம வா.பேர   புள்ளைங்க இங்க வரும்னு சமையல் கட்டுலதான இருக்க போறோம்னு நான் இருந்தேன். போயிட்டு வேற சட்டையை மாத்திட்டு வாங்க .நானும் போய் நல்ல புடவையா  மாத்திட்டு வரேன்”என்று கணவனை துரத்தி விட்டார் .ஆனால், கணவனை இந்த பக்கம் அனுப்பி விட்ட சித்ரா, இந்த பக்கம் சமையலறையில் ஒவ்வொன்றாக உருட்டியப்படி ஏதோதோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் .
 

 

சட்டையை மாற்றிக் கொண்டு வந்த நேசன்,” என்னடி என்ன சட்ட மாத்த சொல்லிட்டு.நீ இங்கேயே உருட்டிட்டு இருக்க?”
 

 

” உங்களுக்கு என்ன ஒத்த சட்டை மாட்டிகிட்டு வந்துடுவீங்க. நான் புடவை சுத்திட்டு வர நேரமாகாதா?”
 

 

” சரிடி. ஆனா இங்கணவே கிளம்பாம நிக்கிற?”
 

 

” இருங்க நீங்க .எந்த நேரம் பார்த்தாலும் புலம்பிக்கிட்டே ,செத்த நேரம் அப்படி உக்காருங்க, ஒரு பத்து நிமிஷம் வந்துர்றேன்” என்று மீண்டும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தபடி இருக்க .
 

 

“என்னத்த டி அப்படி எடுத்து வச்சுட்டு இருக்க ?”
 

 

“பொட்டச்சி ஆயிரம் எதையோ எடுத்து வைக்கிற. அது ஏன் நோண்டிக்கிட்டே இருக்கீங்க ?”என்று கணவனிடம்  காய்ந்தவர் அவரை வெளியே தள்ளிவிட்டு ,இரண்டு கட்டை பைகள் நிறைய எதையோ எடுத்து வைத்த படி இருந்தார்.
 

 

அதன் பிறகு, சித்ரா ரூமுக்குள் நுழைந்து, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தலைவாரி வேறொரு புடவைக்கு மாறி வெளியில் வந்தார்.
 

 

” புடவை மாத்த உனக்கு அஞ்சு நிமிஷம் தாண்டி தேவைப்பட்டுச்சு. ஆனா கிச்சன்ல என்ன நோண்டிக்கிட்டு இருந்தன்னு தான் தெரியல” என்ற தன் கணவனை முறைத்து விட்டு, “அது இப்போ உங்களுக்கு ரொம்ப முக்கியம் ! பாருங்க வாங்க நேரமாகுது” என முறுக்கிக் கொண்டு கணவனுடன் மகனின் வீட்டை நோக்கி கிளம்பினார்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page