விரகதாபம் தீருமோ விதுரா?

“இதுதான்  முதல் தடவையா? அப்போ நல்லா தெரிஞ்ச மாதிரி நம்ம கடையினு சொன்ன?” என்று விதுரன் தன் சந்தேகத்தை கேட்க,

“சத்தமா சொல்லாதீங்க! அது ஒரு ஃப்ளோல சொன்னது!” என்று பிரதிக்ஷா சிரித்துவிட்டு பூரியை குருமாவில் முக்கி மறுபடியும் தன் வாயில் எடுத்து வைத்தாள்.

‘என்ன பொண்ணுடா இவ’விதுரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

“சரி பேசாம சாப்பிடுங்க டேஸ்டா இருக்கு!” என்று விதுரனிடம் சொல்லிவிட்டு  “அண்ணா இன்னொரு செட்டு பூரி எனக்கு!” என்று  கூற அவரும் அடுத்த பூரியை எண்ணெயில் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுடச்சுட பொறித்த பூரியை எடுத்து பிரதிக்ஷாவின் தட்டில் வைக்க, பிரதிக்ஷா பூரியை உடைத்து குருமாவை மீண்டும் ஊற்றி சுவைக்க ஆரம்பித்தாள். பிரதிக்ஷா சாப்பிடுவதை பார்த்த விதுரன் 

“நைட்டு நேரத்துல ஆயில் ஐட்டம் இவ்வளவு எடுத்துக்க கூடாது!” என்று விதுரன் சொல்ல, ” இத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்! நீங்க அளவா எடுத்துக்கிடுங்க,  நான் அதிகமா எடுத்துக்குறேன்! இப்படி ஒரு தள்ளி வண்டி கடையில என் மனசுக்கு புடிச்ச ஒருத்தரோட  நின்னு சாப்பிடணும்னு எத்தனை நாள் ஆசை தெரியுமா? இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு அதை ரசிச்சு பொக்கிஷமா என் மனசுல சேமிக்கணும்னு ஆசைப்படுறேன்!” என்று கூறிவிட்டு ஃபுல்லாக சாப்பிட ஆரம்பித்தாள் பிரதிக்ஷா.

அவளுடைய நடவடிக்கையும் அவளுடைய பேச்சும் சிறு குழந்தையைப் போல் விதுரனின் கண்களுக்கு தெரிய அவன் ரசிக்க ஆரம்பித்தான்.

தன்னவளை பார்வையால் ரசித்து விட்டு பூரியை  நாவால் ரசித்து கொண்டிருந்தான் கள்வன்.

“பூரி நல்லா இருக்கா?” என்று பிரதிக்ஷா தன் புருவத்தை உயர்த்தி கேட்க, அவளின் அழகில் சற்று கிறங்கி தான் போனான் விதுரன்.

“என்ன ஆச்சு பாத்துக்கிட்டே இருக்கீங்க? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க!” என்று பிரதிக்ஷா சொல்ல,”நல்லா இருக்கு!” என்று கூறினான் விதுரன்.

ஒரு வழியாக இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்தனர். கடைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பக்கெட் தண்ணியில் இருவரும்  கை கழுவினார்கள். கடைகாரரை பார்த்த விதுரன் டிஷ்யூ பேப்பர் இருக்கா?”என்று கேட்க கடைகாரர் இல்லை எனும் விதமாய் தலையசைத்தார். விதுரன் யோசித்துக் கொண்டு நிற்க,பிரதிக்ஷா  தன் துப்பட்டாவை கொடுத்தாள். 

“இதில் எப்படி துடைக்கிறது?” என்று கேட்டான் விதுரன். “கைய வச்சு  தான் தூடைக்கணும், வேணுமுன்னா துடைங்க, இல்லைனால்  விடுங்க!”என்று பிரதிக்ஷா சொல்ல “சரி  கோபப்படாத?” என்று சொல்லி  விட்டு அவளின் துப்பட்டாவில் தன்னுடைய கைகளை துடைத்துக் கொண்டான்   விதுரன்.

‘பணம் கொடுக்கணுமே’ என்று நினைக்க அச்சச்சோ என்று அவள் மனம் பதறியது. மெல்லமாய் கடையில்  ஏதாவது ஸ்கேனர் இருக்கிறதா?’ என்று பார்க்க எதுவும் இல்லாது இருந்தது.

‘போச்சு சாப்பிடறதுக்கு முன்னாடி கேட்டிருக்கணு.ம் அவசரப்பட்டு ஆம்லெட்டும்,  பூரியும் சாப்டாச்சு! அன்னைக்காவது இருபது ரூபாய் இன்னைக்கு 200 ரூபாய் வந்திருக்குமே, இவர் வேற கார்டு தான் இருக்குனு பர்சை திறந்து காட்டுவாரு,நம்ம என்ன சொல்லி சமாளிக்கிறது,  நம்ம வேற காசு  எதுவும் எடுத்துட்டு வரலையே? ” என்று நினைத்துக் கொண்டே  தயங்கி நிற்க,

“அண்ணா எவ்வளவு?” என்று கேட்டான் விதுரன். ‘ஆமா அப்படியே அவர் கேட்டுட்டாலும் இவர் கொடுத்துருவாரு!’ என்று சலித்துக் கொண்டே விதுரனை பார்த்தாள். என்னென்ன சாப்பிட்டீங்க என்று விதுரனை கடைகாரர் கேட்டுவிட்டு கணக்கு போட்டு இருநூற்றி முப்பது ரூபாய் என்று கூறினார்.

தன்னுடைய பர்சை திறந்தவன் அதிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்க அதிர்ந்து போனாள் பிரதிக்ஷா. கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் விதுரன் பணமா கொடுக்கிறான் என்று பார்க்க, அங்கு கண்ட காட்சி உண்மை என அவள் மண்டைக்கு உரைத்தது.

அதை வாங்கியவர் மீதி சில்லறையை விதுரனிடம் கொடுக்க “இதை நீங்களே வச்சிக்கிருங்க?” என்று கூறினான் விதுரன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தம்பி, உழைக்காமல் வர்ற காசே நம்ம உடம்புல ஒட்டாது, இதை  நீங்களே வச்சுக்கிருங்க?” என்று அவர் சொல்ல கடைக்காரரை பார்த்தான் விதுரன்.

வாழ்வின் சந்தோசங்களை இழந்து கோடிக்கு மேல் கோடி வைத்திருக்கும் அவனும் அவனுடைய நண்பர்களும் போட்டி போட்டு வேலை செய்து பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்க, 

‘நம்ம வாழ்றதுக்கு தேவையான பணத்தை உழைச்சு சம்பாதிச்சா போதும், நிறைய பணம் சேர்த்து என்ன பண்ணப் போறோம்!’ என்று அந்த கடைகாரர் சொல்லிய வார்த்தை அவன் காதுகளில் கண்ணீரென்று ஒலித்தது.

எப்போதும் பிசினஸ், பிசினஸை விட்டால் வீடு என்று இயந்திர மனிதனாய் வாழ்ந்த அவனுக்கு இன்று எளிய மக்களின் வாழ்க்கையும் அவர்களுடைய சிந்தனையும்  பார்க்க ஒரு தெளிவு கிடைத்தது போல் இருந்தது அவனுக்கு!

கடைக்காரர் கொடுத்த காசை விதுரன் கைகளினால் வாங்க முற்பட “அண்ணா ஒன்னு பண்ணுங்க,இந்தப் பக்கம் இல்லாதவங்க வந்து பசிக்குதுன்னு உங்ககிட்ட சாப்பாடு கேட்டால் இந்த காசுக்கு சாப்பாடு குடுங்க!” என்று பிரதிக்ஷா கூறுவதை கேட்ட விதுரனுக்கு வியப்பாக இருந்தது. ஏன் இப்படிப்பட்ட வார்த்தை தன்னிடம் இருந்து வரவில்லை என்று தன்னை ஒரு முறை சுய அலசல் செய்து கொண்டான். 

கடைகாரரும் பிரதிக்ஷா கூறியதை கேட்டு சரி என தலையசைக்க இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தங்கள் பைக் நிறுத்திய இடத்திற்கு வந்தார்கள்.

“ஆமாம் உங்க கிட்ட தான் காசு இருக்காதேனு  நான் கூட பயந்துட்டேன்! பரவால்ல  காசோட வந்து இருக்கீங்களே!” என்று பிரதிக்ஷா சொல்ல புன்னகை செய்தான் விதுரன்.

பீச்சுக்கு போயிட்டு  வந்த உடனே   முதல் வேலையாக தன்னுடைய கபோர்டை திறந்து அதில் இருந்த பணத்தை தன்னுடைய பர்சீல் ஞாபகம் வந்தது.

“என்ன கேட்டுகிட்டே இருக்கேன், எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்க?” என்று பிரதிக்ஷா கேட்க 

“நேத்தே பர்ஸ்ல பணத்தை எடுத்து வச்சிட்டேன்! நீதான சொன்ன பொண்டாட்டி வாங்கி கேப்பானு தெரியாது, பணம் இல்லாம வந்து இருக்கீங்கன்னு! அதான் அன்னைக்கே முதல் வேலையா பர்ஸ்ல  பணத்தை  எடுத்து வச்சுட்டேன்!” என்று விதுரன் சொல்ல பெண்ணவளின் மனம் குதுகளித்தது.

“என்ன சொன்னிங்க? நான் சொன்னதுக்காகவா, எனக்கு வாங்கி கொடுப்பதற்காகவா பணத்தை பர்ஸ்ல எடுத்து வச்சீங்க?” என்று ஆவலாக பிரதிக்ஷா கேட்க அப்போது தான் தன் உளறியதை உணர்ந்தான் விதுரன்.

” உனக்காக எல்லாம் இல்ல.  காசு இல்லாம எப்படி எங்கேயும் போக முடியும்! அதான் பர்ஸ்ல பணத்தை எடுத்து வச்சேன்!” என்று சமாளித்தான் விதுரன்.

‘உனக்காகத்தான்’ என்ற ஒற்றை வார்த்தையை விதுரன் வாயிலிருந்து எதிர்பார்த்திருக்க , விதுரன் சொல்லியது பெண்ணவளுக்கு ஏமாற்றமாய் போனது.

‘அதான பார்த்தேன்! ஒரு நிமிஷத்துல நமக்காகவே எடுத்துட்டு வந்து இருக்காருன்னு சந்தோஷப்பட்டுட்டேன்’ என்று சலித்துக் கொண்டாள் பிரதிக்ஷா.

“வீட்டுக்கு போவோமா?” என்று விதுரன் கேட்க, ” இங்கேயே பைக்க வச்சுட்டு கொஞ்சம் தூரம் ரெண்டு பேரும் நடந்து போவோமா  விது!”என்று  பிரதிக்ஷா கேட்டாள்.

” என்னால எல்லாம் நடக்க முடியாது! ” என்று விதுரன் சொல்ல,” ப்ளீஸ்  விது நிறைய சாப்பிட்டேன்! கொஞ்சம் வயிறு ஒரு மாதிரியா இருக்கு,கொஞ்சம் தூரம் நடந்தால் சீக்கிரமா டைஜஸ்ட்டாகும்!” என்று பிரதிக்ஷா சொல்ல, சரியென்று விதுரனும் நடக்க ஆரம்பித்தான்.

தன்னவனோடு அந்த இரவு ஒளியில் சேர்ந்து நடந்த தருணம் அவள் வாழ்வின் பெரிய பொக்கிஷம் என்று கருதி  ரசித்து கொண்டே நடந்தாள்  பிரதிக்ஷா.

நள்ளரவில் நாயகன் உன்னோடு 

நான் பயணித்த 

இந்த வீதி 

சொர்க்கத்தின் வாயிலே!

பல கால கனவு 

இன்று பலித்திருக்க 

என் எண்ணமோ  

இது உண்மையா

இல்லை கற்பனையா 

என்று கலவரத்தில்

ஈடுபடுகிறது!

எட்டி நடந்தால் கூட

சீக்கிரத்தில் 

இந்த பயணம் முடிந்து

 விடும் என்று சிறு 

குழந்தை போல் 

எட்டெடுத்து

நடக்கின்றேன்

இந்த இனிமையான

தருணத்தை 

இதயமதில்

சேமிக்கிறேன். 

என் உள்ளத்தில் 

ஏற்படும் உணர்வு 

உன் உள்ளத்தில்

தோன்றும் 

அந்த நிமிடம் வரை 

என்னுடைய

 உணர்வுகளை 

உன்னிடம் வெளிக்காட்ட  

விருப்பமில்லை எனக்கு!! 

இருவரின் மனமும் 

ஒரு மனமாய் 

இணைந்த பிறகு  

என்  உணர்வுகளை

உரைத்து 

உன் மார்பிலே  முகம்

புதைத்து உறைந்து போவன்!…

என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.

“என்னாச்சு அமைதியா வர்ற?” என்று விதுரன் கேட்க, ” ஒன்றுமில்லை” என்றவாறு தலையை ஆட்டினாள் பிரதிக்ஷா.

விதுரன் நடந்து சென்று கொண்டிருக்க அவனின் அருகில் நெருக்கமாக இணைந்து நடக்க ஆரம்பித்தாள் பிரதிக்ஷா.

இங்கு விதுரனின் வீட்டில்,

டைனிங் டேபிளில் நடந்ததை நினைத்து கோபத்தில் தன்னுடைய அறைக்குள் நடந்து கொண்டிருந்தாள் மனிஷா.

பிரதிக்ஷா செல்லவும் விதுரனும் மனிஷாவிடம்  சொல்லிவிட்டு அவளுடைய பதிலை கூட கேட்காமல் போனது மனிஷாவிற்கு கோபத்தை அதிகப்படுத்தியது.

தனது செல்போனை எடுத்து ரஞ்சித்திற்கு இங்கு நடந்ததை சொல்வதற்காக அழைப்பை விடுக்க ரஞ்சித் அழைப்பை ஏற்கவில்லை.

‘இவன் வேற ஃபோனை எடுக்க மாட்டேங்குறான்’ என்று சலித்துக் கொண்டு தன்னுடைய மொபைலை மெத்தையில் வீசி எறிந்தாள் மனிஷா.

டைனிங் டேபிள்ல நடந்ததை நினைச்சு கோபமா இருக்கியா மனிஷா என்று குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி பார்க்க  அங்கு அம்பிகா புன்னகை முகமாய்  கொண்டிருந்தார்.

அம்பிகாவின் முகத்தில் தோன்றிய புன்னகை மனிஷாவிற்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்த, மனிஷா அம்பிகாவை முறைக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அம்பிகா மனிஷாவை நோக்கி முன்னேறி வந்தார்.

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page