கண்கள் பேசுதே-19

அத்தியாயம் – 19

அன்று அருந்ததியிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தான். தனக்கு நடந்த முதல் கல்யாணம் அதன் பிரிவு பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருந்தான். 

“அப்போ நீங்க asexual பர்சனா “என்று ஆச்சரியமாக கேட்டாள் அருந்ததி.

“யெஸ் ஆனால் அதுல இருந்து என்னை வெளியே கொண்டு வர முயற்சி பண்ணதே ரோஜா தான் இப்போ நான் நார்மல் “என்றான் ராஜா.

“எனக்கும் பெருசா செக்ஸ் மேல எல்லாம் ஆர்வம் கிடையாது. என்றாள் அருந்ததி “

“உனக்கு ஆர்வம் இருக்கா இல்லையா னு கேட்கவே இல்லையே “

“ஆங் ஓகே ஓகே சாரி நான் நீங்க பேசவே அப்படியே பேச ஆரம்பிச்சிட்டேன் “என்றாள் அருந்ததி. ஒரு நிமிடம் யோசித்தாள் ‘இவங்க மட்டும் தங்களோட செக்ஸ் ஆர் அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசலாம் ஆனால் பொண்ணுங்க பேசினா மட்டும் வித்தியாசமா பாக்குறாங்க ஏன் நம்பலாம் இதை பத்தி பேசவே கூடாதோ ‘என்று அருந்ததி நினைத்து விட்டு ஓகே சார் நான் கிளம்புறேன் என்றாள்.

“ஹே ஒரு நிமிஷம்…..நீ ஏன் இன்னும் மேரேஜ் பத்தி யோசிக்கலை”என்றான் ராஜா.

“யோசிச்சு என்ன பண்றது கல்யாணம் பண்ற அளவு இப்போ சேவிங்க்ஸ் இல்லை சார் “

“ம்ம் சரி “என்று அவளை போகுமாறு கூறினான். பிறகு அவள் சென்றுவிட்ட பிறகு “நம்ப மனசு விட்டு பேசும் போது அவளும் ஏதோ அவளை பத்தி பேச வந்தா ஆனால் தடுத்துட்டோம் ம்ம் ப்ச்ச் நம்ப நம்மளோட பர்சனல் ஷேர் பண்றப்ப அவளும் நம்ம கிட்ட ஷேர் பண்றான்னா அவளுக்கு நம்ப மேல நம்பிக்கை இருக்குன்னு தானே அர்த்தம் ‘என்று யோசித்தான். பிறகு அவளை ஃபோனில் தொடர்பு கொண்டு 

“ஹலோ அருந்ததி சாரி நீ உன்னை பத்தி ஏதோ சொல்ல வரப்ப நான் பேசவே விடலை “

“ஓ அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கவே இல்லையே டாக்டர் ராஜா “

ஆனாலும் நான் உன்னை பேச விட்டுருக்கணும் சாரி “என்றான் ராஜா.

“அது ஒன்னும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை”என்றாள். சரி என் வீட்டு பங்கஷனுக்கு வருவ தானே என்றான் “ஆங் நான் வராமையா சார்”என்று உரிமையாக கூறிய போது அவனுக்கு பிடித்திருந்தது. அவன் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தாள். 

“இவங்க அருந்ததி என் க்ளினிக் ல வொர்க் பண்றாங்க”

“ஓ சொல்லிருக்க ல “

அருந்ததியிற்கு ராஜாவின் குடும்பத்தினரை பிடித்துப்போனது. ராஜாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது 

“சார் எனக்கு தெரிஞ்சு ரோஜா அன்லக்கி சார். இவ்ளோ நல்ல குடும்பத்தை விட்டு ஏன் பிரிஞ்சி போனாங்க”

“ஹாஹா ஒரு பொண்ணுக்கு குடும்பம் நல்லா அமைஞ்சா போதுமா அவளுக்கு என்னை பிடிக்கலை . அவ என்கிட்ட எமோஷனல் அட்டாச்மெண்ட் அதிகமா எதிர்பார்த்தா ஆனால் என்னால தர முடியலை அந்த எமோஷனல் அட்டாச்மெண்ட் எவ்ளோ முக்கியம்னு இப்ப தான் புரியுது”என்றான் ராஜா.

“சார் எப்பவும் focused ah responsible ஆக இருக்கிற பொண்ணுங்க உங்க மாதிரி ஆள ஓகே சொல்லுவாங்க ஆனால் தனக்கு இதெல்லாம் முக்கியம்னு நினைக்கிறவங்க இப்படி இருக்கிறதை விரும்பமாட்டாங்க “என்றாள் அருந்ததி.

“நீங்க எப்படி பட்டவங்க அருந்ததி?”

“எனக்கு ரெஸ்பான்ஸிபில் தான் வேணும். அன்பு காதல் அதெல்லாம் அவ்ளோ பெரிய விஷயமா எனக்கு தோணலை. “என்றாள் அருந்ததி.

“ஹாஹா அதுவும் வேணும் அருந்ததி “

“எனக்கு சின்ன வயசுல இருந்தே பெருசா அன்பு பாசம் எல்லாம் ப்ளூ கிடைச்சதே கிடையாது நான் எதுக்கும் பெருசா ஆசைப்பட்டதும் கிடையாது எனக்குள்ள அன்பு காதல் இதெல்லாம் இருக்கான்னு எனக்கே தெரியாது எங்க அம்மாவ நல்லா பாத்துக்கணும் அதை தவிர எனக்கு வேற எந்த ஆம்பிஷன் கிடையாது”- அருந்ததி.

“சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா லைப் நல்லா இருக்கும்னு நம்புறியா”என்றான்.

“என்ன சார் திடீர்னு இப்படி கேக்குறீங்க கல்யாணம் மாதிரி இது நான் அதெல்லாம் யோசிக்கவே இல்லையே ஒருவேளை கல்யாணம் அப்படின்னு ஒரு விஷயம் வந்தா கண்டிப்பா நீங்க எனக்கு பொருத்தமா தான் இருப்பீங்கன்னு தோணுது”

“அப்போ உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட பொண்ணு கேட்கவா”

“உங்க விருப்பம் என்று சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து நகர்ந்தால் பின்பு சிறிது நேரம் ராஜாவின் குடும்பத்தாருடன் கலகலவென்று பேசி சிரித்துவிட்டு அங்கேயே இருந்து சாப்பிட்டு முடித்துவிட்டு லேட் ஆக தான் தன் வீட்டிற்கும் சென்றாள் வீட்டிற்கு சென்றதும் ராஜாவுடன் பேசியதுதான் அவள் ஞாபகத்திற்கு வந்தது அச்சச்சோ திடீர்னு இப்படி கேட்டுட்டாரு நம்ப கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்கவே இல்லையே என்ன முடிவெடுக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் எப்போதும் கடமை குடும்பம் கண்ணியம் என்று இருக்கும் ராஜாவுக்கு தான் பொருத்தமானவள் தான் என்றே தோன்றியது. 

நாட்கள் இப்படியே செல்ல ராஜாவுக்கு பதில் கொடுத்தால் நம் அருந்ததி மிஸ்டர் ராஜா அன்னைக்கு நீங்க கேட்டதை நான் நிறைய தடவை யோசிச்சு பார்த்தேன் எனக்கும் சரின்னு தான் தோணுது நீங்க சீக்கிரமே எங்கள் வீட்டில் வந்து பொண்ணு கேட்கலாம் என்றாள். 

“ஆனா அருந்ததி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு செக்ஸ்ல பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது கொஞ்ச நாளா தான் நானா என்ன நிறைய மாத்திக்கிட்டேன்”என்றான்.

“நானும் அன்னைக்கே அதைத்தான் சொல்ல வந்தேன் எனக்கும் பெருசா இல்ல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே கிடையாது இன்ட்ரஸ்ட் கிடையாது அப்படிங்கறது எல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்கிறது கிடையாது நீங்க அத பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் நல்லா இருக்கும் அவ்வளவுதான்”என்றாள்.

“எனக்கு நீ சப்போர்ட் உனக்கு நான் சப்போர்ட் என் குடும்பத்திற்கு உன் ஆறுதல் தேவை உன் அம்மாவுக்கும் என்னுடைய உதவி தேவை ரைட்”என்றான் ராஜா.

“ஹாஹா மே பி யாருக்கு தெரியும் ஒருவேளை கல்யாணம் ஆனட்டுமா நம்பர் ரெண்டு பேரும் மத்த கப்புல் மாதிரி லவ் பண்றவங்களா கூட இருக்கலாம்”என்றாள்.

ராஜாவுக்கு என்னவோ அவ அவள் கூறுவது எல்லாம் சரியாகவே தோன்றியது அவளுடன் ஆரம்பிக்கும் வாழ்க்கையை ரோஜாவுடன் ஆரம்பித்த வாழ்க்கை போல் அல்லாமல் ஒரு தெளிவான முடிவோடு எடுத்த வாழ்க்கை போல் தோன்றியது அருந்ததி அவனிடம் பேசும் விதமெல்லாம் அவனுக்கு பிடித்திருந்தது அருந்ததி தனக்கு சரியானவளாக இருப்பாள் என்று அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது ஒரு நல்ல தெளிவான சிந்தனையுடன் இருவரும் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறார்கள் இருவருடைய மனமும் நன்றாக ஒத்துப் போகிறது அதை இதற்கு மேல் அந்த வாழ்க்கையை பற்றி யோசிக்க என்ன இருக்கிறது அவளை ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியது.

இதைப் பற்றி ரோஜாவுடன் பேசி கலந்த ஆலோசிக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது அதனால் ரோஜாவுக்கு போன் செய்தான் முதலில் ரோஜா தயங்கியபடி அவனுடைய அழைப்பை எடுத்தால் ஆனால் அவன் எடுத்ததுமே சந்தோஷமான குரல் வளத்துடன் பேச துவங்கினான். 

“ரோஜா எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகப்போகுது எனக்கே ஏத்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கா அவ பேரு அருந்ததி என்று சொல்லி முடித்தான்”

“ஆங்….ஓஹோ அப்படியா? “என்று விருப்பமில்லாதவள் போல் கட்டும்படாமல் அவனிடம் விஷயத்தை காதில் வாங்கிக் கொண்டிருந்தால் அவனுக்கு சரியாக படவில்லை என்னடா இவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தால் இவ்வளவு அப்படியா என்று அல்லவா கூறுகிறாள்.

“ஹே உனக்கு இதுல சந்தோஷமே இல்லையா “

“யார் சொன்னா நான் சந்தோஷம் தானே படுறேன்”

“பொய் சொல்லாத நீ விருப்பம் இல்லாமல் தான் இருக்க”என்றான்.

“எனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி இந்த விஷயத்தில் என்ன கவலை உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா அப்ப நீங்க முடிவெடுத்தது சரிதான் என்றாள்.

என்னவோ தெரியவில்லை அவளுக்கு ஒரு மனதில் சற்று பொஸஸிவ் உருவாக்கியது ஒரு காலத்தில் தன்னுடைய கணவனாக இருந்த ராஜா தற்போது இன்னொருவனுக்கு கணவமாக போகிறான் என்பதை நினைக்கும் போது அவளுக்கு உள்ளமனதிலிருந்து இருந்து ஒரு பொஸஸிவ் உருவாக்கியது.

அவன் மீது பொஸஸிவ் கொள்வது எல்லாம் சரியானதா இல்லையா என்று அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவள் அறியாமல் தோன்றியது. பேசுவதை அவள் அப்படியே நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தால் அவனுக்கு அந்த மௌனம் கூட போராட்டத்தை கொடுத்தது நம் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கப் போகிறது என்ற போது அவளின் சந்தோஷம் கொள்ளவில்லை ஒருவேளை அவள் என்னமோ நம்மை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஒருவேளை அவள் அப்படி நினைத்துக் கொண்டிருந்தாள் அது அவன் வாழ்க்கைக்கு சரி இல்லை என்பதுதான் உண்மை. 

“ரோஜா நீ என்னமோ என்னதான் நெனச்சிட்டு இருக்கியா என்றான் அதற்கு அவள் இல்லை நான் ஏன் உங்களை நினைக்க வேண்டும் எனக்கு தான் திருமணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது என்றாள். 

“அப்படி என்றால் நான் என் வாழ்க்கையின் நல்லது நடக்க போகிறது என்று உன்னிடம் சொல்லும் போது உனக்கு ஏன் அது ஒரு மாதிரியாக இருக்கிறது ஏன் நீயும் அதே சந்தோஷத்துடன் எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா என்று கேட்டான். 

“வாழ்த்தா ஐயோ மறந்துட்டேனே என்று கங்ராஜ்லேஷன் ராஜா “என்றாள்.

மதிய அவள் மீது வைத்திருக்கும் அன்பு பாசம் அட்டாச்மெண்ட் மிகவும் பிடித்திருக்கிறது . ஆனால் அதே சமயம் ராஜாவின் வாழ்க்கையில் தான் இல்லாமல் இன்னொருவர் வரப்போகிறார் என்று நினைக்கும் போது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது தனக்கே தனக்கானவன் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தால் அது மாறிப்போய் அவள் தற்போது இன்னொருவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் அதுவும் மாறி போய் தனக்கே தனக்காக இருந்த அந்த முன்னாள் கணவனுக்கும் இப்போது இன்னொருத்தி வரப் போகிறாய் என்று நினைக்கும் போது இந்த மாற்றம் எல்லாம் ஏன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவரவர் வாழ்க்கையை நோக்கி அவரவர் பயணிக்கிறார்களா அல்லது அவரவருக்கு சரியான தீர்வை இயற்கை பரிசளிக்கிறதா என்று புரியவில்லை. 

ஆனால் எது எப்படி இருந்தாலும் அது போகும் போக்கில் அப்படியே போகட்டும் இதில் வருத்தப்படுவதற்கோ சந்தோஷப்படுவதற்கோ எதுவுமே இல்லை நான் எப்படி மகிழ்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ அப்படி அவன் அரும்பதியுடன் வாழ போகிறான் அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை கவனிக்க துவங்கினாள்.

தொடரும் 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page