அவங்க ஏதோ ஒரு தப்பா பண்ணிட்டாங்க….
அதுக்காக முழுசா அவங்கள நம்ம விட்டுட முடியாது.
இப்போ விக்ரம் ரொம்ப கோபத்தில் இருக்கிறார் மன விரக்தியில் இருக்காரு அதனாலதான் இந்த மாதிரி பேசுறாரு, அது சரி பண்ண வேண்டியது நம்முடைய கடமை தான்.
சீக்கிரமா அவருக்கு என்ன தேவையோ அதை நம்ம சரி பண்ணனும் சில நேரங்களில் ஏக்கம் வந்து எப்போதுமே ஒரு கோபம் மாதிரி மாறும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் மேல நம்மளுக்கு எப்போதும் ஒரு கோபம் இருக்கும்.
அவர் சின்ன வயசுல இருந்து அவருடைய சின்ன வயசு வாழ்க்கையை இழந்து இருக்காரு. நிச்சயமா அந்த தனிமை அந்த கோபம் எல்லாம் இருக்கும்.
அதுக்காக நாம் அவரை அப்படியே விட்டுவிட முடியாது. சில விஷயங்களை நம்ம எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கும் ஆனால் நான் மட்டும் சரி கிடையாது.
அதனாலதான் என்னமோ எனக்கு அவருடைய பெயின் ரொம்ப புரியுது பார்த்துக்கலாம்…
இப்படி அவள் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு அவன் கூடவே அவனோட கைகள் இறுக்கமா பிடித்தபடியே அவனோடு உட்கார்ந்திருந்தாள்.
கொஞ்ச நேரத்திலேயே அவன் கண் அசைந்து உறங்க, விக்ரமின் தலையை மெதுவாக தலையணையில் வைத்து விட்டு அவள் அவளுடைய போனை எடுத்துக்கிட்டு இப்போ நேரம் கீழே ஓடினாள்.
தினேஷுக்கு தான் இப்போ போன் பண்ணி அவன்கிட்ட பேச,
ஹலோ…
தினேஷ் நான்தான் நிலா பேசுறேன். சொல்லுங்க நிலா,
நீங்க அந்த லெட்டர் குடுத்துட்டு போனீங்களே…. தப்பா எடுத்துக்க வேணாம். எனக்கு உங்க மேல ஒரு உதவி தேவைப்படுது. எப்படியாவது மேடம கண்டு பிடிக்கணும்.
இது அவங்க குடும்ப விஷயம் ஒரு நாள் ரெண்டு நாள்ல சரியாயிடும் ஆனா அவங்க ஒட்டுமொத்தமா இங்க இருந்து போயிட்டாங்கனா இந்த பிரச்சனை பிரச்சினையாகவே இருக்கும்.
நான் விக்ரம சமாளிச்சுக்கிறேன். நீங்க யார் மூலமாவது அவங்க எங்க இருக்காங்க என்னன்னு விசாரிக்க முடியுமா?…
ஏதாவது பிரைவேட் டிபார்ட்மெண்ட்ல கூட சொல்லி இந்த மாதிரி விசாரிச்சு பாருங்களேன்… இப்படி சொன்னதும்,
ஓகே நிலா,
நான் யார்கிட்டயாவது பேசி பார்க்கிறேன். முதல்ல அவங்க பிளைட்ல போனாங்களா ட்ரெயின்ல போனாங்களா இந்த மாதிரி ஏதாவது ஒரு டீடைல் கிடைக்குதான்னு பார்க்கிறேன் அப்படி இல்லன்னா கார் இருக்கான்னு வீட்ல செக் பண்ண சொல்றேன். என்ன தகவல் கிடைக்கும் அவங்க கிட்ட சொல்றேன் என்று அவன் சொல்ல,
சரி…. இந்த விஷயம் விக்ரமுக்கு தெரிய வேணாம். உங்ககிட்ட நான் தேங்க்ஸ் சொல்லணும்னு நினைக்கிறேன் தேங்க்ஸ் தினேஷ் இப்படி சொல்லும்போது இல்ல நிலா,
நீ நினைச்சிருந்தா இந்நேரம் என்ன இந்த வேலையை விட்டு தூக்கி எறக்க முடியும் ஆனா நீ எனக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்பி வச்சிருக்க அதுவே எனக்கு போதாதா?..
அதுக்காகவாவது நான் ஏதாவது பண்ண வேணாமா?…
நிச்சயமா நான் அவங்கள தேடி பாக்க சொல்றேன்னு அவன் வாக்குறுதி கொடுத்தான்.
ரொம்ப தேங்க்ஸ் இப்படி பேசிக்கிட்டே அவள் போன கட் பண்ணிட்டு இப்போ மேல போய் பார்க்க,
யார் கிட்ட பேசிட்டு வர்ற?….
பால்கனியில் இருந்து நான் பாத்துட்டு தான் இருந்தேன். உனக்கு என்ன ஆச்சு புத்தி மழுங்கி போயிடுச்சா?…
எதுக்கு இப்போ அவங்கள தேட சொல்லிட்டு இருக்க போனவங்க அப்படியே போய் தொலையட்டும்.
நீ எதுக்கு இப்போ இந்த மாதிரி வேலை எல்லாம் பாத்துட்டு இருக்குற நிலா அதுவும் என்கிட்ட சொல்லாம,
நீ நினைக்கிற அளவுக்கு அவங்க இன்னும் நல்லவங்க கிடையாது திடீர்னு அவங்க இந்த லெட்டர் கொடுத்ததுமே இல்லாத எதிரி எல்லாம் இருக்கிற மாதிரி அவங்க காட்டுறது எல்லாம் பார்க்கும்போது தெரிய வேணாமா நம்ம ரெண்டு பேருக்குள்ள ஏதாவது இடஞ்சல் பண்ணிடுவாங்க தயவு செஞ்சு சொல்றேன் அவங்களை நம்பாதே…
முதல்ல தினேஷுக்கு போன் பண்ணி அவன் கிட்ட நான் சொல்லணும் அவங்கள தேட வேண்டாம் என்று சொல்லி…
அவர்களுக்கு எப்போதுமே என் கூட யாராவது இருந்தா உங்களுக்கு பிடிக்காது அவங்க தான் புல் டாமினாட்டிங்கா இருக்கணும்னு ஆசை.
இப்ப நீ வந்துட்டே இல்ல அதுக்கு தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க நீ இதை பெருசா எடுத்துக்கிட்டேன் நம்ம ரெண்டு பேருக்குள்ள பிரிவு வந்துரும் சொன்னா கேளு… இப்படி அவன் அட்வைஸ் பண்ணும் போது,
விக்ரம்…
நான் சொல்றத கொஞ்சம் கேக்குறீங்களா?…
இப்போ கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பாப்புலர் ஆன லேடி இறந்து போயிட்டாங்க,
அவங்கள கொன்றது அவங்க வீட்ல இருக்கிற வேலைக்கார குடும்பம்னு சொல்லிட்டு இருக்காங்க,
ஒருவேளை இப்படி இருக்கலாம் இல்லையா?… உங்களுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லாமல் போய் அவங்க இறந்து போய் இருக்கலாம் ஆனால் எல்லாரோட பார்வையிலுமே அவங்க தப்பா தெரிஞ்சதுனால அந்த குடும்பத்து மேல அது தீராத பலியா கூட மாறியிருக்கலாமே?…
எப்போதுமே ஒரே கண்ணோட்டத்தில் நாம பார்க்கவே கூடாது. ரெண்டு பக்கமும் பாக்கறது தானே சரியா இருக்கும்.
உண்மைய சொல்லவா?..
நான் இங்க வந்து ரெண்டு நாள் ஆகப் போகுது. ஆனா நான் என்னுடைய வீட்டு ரொம்ப மிஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். அவங்க எனக்கு என்னென்னமோ அவமானம் கொடுத்திருக்காங்க என்னை அசிங்கப்படுத்தி இருக்காங்க ஆனாலுமே அவங்க என்னோடு குடும்பம் தானே அத நான் எப்போதும் விட்டுக் கொடுத்துவிட முடியாது.
உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா விக்ரம். என்ன எங்க அப்பா வீட்டை விட்டு அனுப்பினதுக்கு அப்புறம் அவர் நம்மள வந்து பார்த்து இருக்காரு. தினேஷ் வந்துட்டு போனான் பாத்தியா அதுக்கு அடுத்து அவரு தூரமா நின்னு பார்த்துட்டு வந்திருக்காரு நம்ம ரெண்டு பேரும் கட்டி புடிச்சிட்டு இருந்ததை பார்த்ததுமே கொஞ்சம் டென்ஷன் ஆகி அங்க இருந்து போயிட்டாரு.
என் பொண்ணு நான் இப்படி திட்டிட்டேனே அவள் என்ன பாடு பட போறான்னு நினைச்சு அவர் என்னை தேடி வந்திருக்காரு. பாசம் இல்லாமல் எப்படி அப்படி வருவாரு நீங்களே சொல்லுங்க?…
நம்ம நின்ன கோலம் சரியில்லாமல் இருந்துச்சு அதனால தான் எங்க அப்பா மறுபடியும் கோபப்பட்டு போயிருக்காரு ஆனா மத்தபடி அவருக்கு என் மேல பாசம் இல்ல நான் ஆகிடாதே…
அவர் மேல என் குடும்பத்தில் இருக்கிற எல்லாருமேலயும் எனக்கு அளவுக்கு அதிகமாக வருத்தம் இருக்கு ஆனாலுமே அதே அளவு பாசமும் இருக்கே..
அத காட்டிலும் பல மடங்கு அளவுக்கு அதிகமான பாசத்தோடு தான் நான் இருக்கேன்.
இப்ப கூட என் மனசு அவங்கள தேடி போகணும்னு தான் நினைச்சுட்டு இருக்கு. அவங்க இன்னும் எவ்வளவு கோபப்படுறாங்க அசிங்கப்படுத்தினார்கள் ஆனாலுமே அவங்க என் குடும்பம் தான,
என் மேல எவ்வளவோ கோபம் காட்டி இருந்தாலும் என் மேல அன்பு இல்லாம ஒரு நாள் இருந்ததில்லை என்று நான் முழுசா நம்புறேன் அந்த நம்பிக்கை நீங்க உங்க அம்மா மேல ஒரு தடவையாவது வச்சிருந்தா ஒருவேளை அவங்க என்ன சொல்ல வராங்கன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமோ என்னவோ?…
நான் நினைக்கிறேன் அவங்க கிட்ட நீங்க பொறுமையா பேசி பார்த்தா அவங்க எப்படி இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியலாம் அதேபோல உங்க மனசுக்குள்ள எவ்வளவு வேதனை இருக்குன்னு அவங்களுக்கும் புரியலாம்.
கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்க…
இப்படி அவன் சொல்லும்போது நீ சாதாரணமா சொல்லிட்டு நிலா ஆனா சின்ன வயசுல இருந்தே நானு ரொம்ப தனிமையிலே இருந்துட்டேன். என்னோட சித்தி இங்க இருக்கும்போதெல்லாம் அவங்க அசிங்கப்படுத்தி இருந்து அனுப்பி வச்சிட்டு இருப்பாங்க.
ஆனா அவங்களும் சரியா வீட்டுக்கு வர மாட்டாங்க அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி இருக்கும் என்று நீயே சொல்லு.
இங்க பாருங்க விக்ரம் எல்லாமே எனக்கு புரியுது. இப்ப நீங்க வேற ஒரு பொண்ணு கிட்ட பேசினீங்கன்னு வச்சுக்கங்க எனக்கு அவ்வளவு கோபம் வரும். என்னோட உரிமையை இன்னொரு ஆளுக்கு நான் எப்படி கொடுப்பேன்.
இப்ப நாம ரெண்டு பேருக்குள்ள சண்டை இருக்கு நம்ம ரெண்டு பேரும் பேசிக்குறது இல்ல அப்படிங்கற பட்சத்தில் கூட நான் அடுத்தவங்கள உங்க கிட்ட நெருங்க விட மாட்டேன். நீங்க முழுசா எனக்கு எனக்கு மட்டும் தான் அப்படிங்கிற ஒரு உணர்வு எனக்கு இருக்கு உங்களுக்கும் இருக்கு அதை தான் ஒரு அம்மாவுக்கும் இருக்கும்.
அவங்களும் உங்க மேல அழகு அதிகமான காதலோட ஆசையோட பாசத்தோட இப்படி இருந்திருப்பாங்க அவங்களோட சிச்சுவேஷன் இந்த மாதிரி உங்களை பார்த்துக்க முடியாம கூட இருந்திருக்கலாம் ஆனா நீங்க உங்க அம்மாவை விட நிறைய மடங்கு உங்க சித்திய விரும்பி இருப்பீங்க அதனால தான் அவர்களுக்கு அவ்வளவு கோபம் வருது.
அதனால வந்து பாத்துக்க முடியல அது உண்மைதான். ஆனால் உங்க அப்பா உங்க அப்பாவுடைய பக்கத்திலிருந்து பேசுறாரு நீங்க உங்க பக்கத்துல இருந்து பேசுறீங்க அதே மாதிரி தான் அவங்கள பக்கத்துல இருந்து பேசுவாங்க.
அது மட்டும் ஏன் யாருமே கேட்க மாட்டேங்கிறீங்க அதுதான் என்னோட கேள்வியாவே இருக்கு.
ஒருவேளை உண்மையிலேயே அந்த மாதிரி எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் இல்லையா?..
ஏன் ஒரு பிசினஸ்ல எதிரி இல்லாம எப்படி இருக்க முடியும் அப்படி எதிரி இல்லாம இருந்தா அது பிசினஸ் இல்லையே..
அவங்க சொன்னதுல ஒரு valid பாயிண்ட் இருக்கு. ஒரு பொண்ணா நின்னு ஒரு இடத்துல அவங்க ஜெயிக்கும் போது இங்கு நிறைய பேரோட கண்கள் உறுத்தத் தான் செய்யும். ஏன் அது உங்களுக்கு தெரியாதா?…
கோவம் பயங்கரமா வரும் அவங்களை அடிக்கணும்னு தோணும் அவங்களை ஏதாவது பண்ணனும்னு தோணும் முக்கியமா பேட் டச் பண்ணி அவர்களை ஒரு இடத்துல உட்கார வைக்க வேண்டும் என்று தோணும்.
ஆனா இது எல்லாத்தையும் தாண்டி ஒரு பொண்ணு முன்னேறி வந்திருக்காங்க அவங்க சில விஷயங்களை இழக்காமல் அந்த மாதிரி வந்திருக்க மாட்டாங்க சில அம்மாக்கள் வெளிநாட்டுக்கு போறாங்க.
அங்க போய் நர்ஸ் வேலை பார்க்கிறார்கள். அவங்களுக்கு என்ன தலை இருக்கா மூணு நாலு பிள்ளைகளை பெத்து அதை வளர்க்க அவங்களுக்கு என்ன வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும் ஆனா அங்க போய் தான் நான் வேலை பார்த்து என் பிள்ளை இல்ல காப்பாத்தணும்னு நினைக்கிறது காரணம்..
என் பிள்ளைகளுக்கு வெறும் ஒரு வாய் சோறு மட்டும் போடணும்னு நான் நினைக்கல. அவங்களுக்கு நல்ல வசதியான ஒரு வாழ்க்கை உருவாக்கி தரணும்னு தான் நான் ஓடிட்டு இருக்கேன் அப்படி என்னதான் அவங்க ஓடுறாங்களே தவிர அவங்களுக்கு வெளிநாட்டை சுத்தி பார்க்கணும்னு ஆசையும் இல்ல குழந்தையை வளர்க்கறது இல்ல அவங்க அவ்வளவு கஷ்டப்படவும் இல்லை பெத்துக்க தெரிஞ்சவங்களுக்கு வளர்க்க தெரியாதா?…
நான் பட்ட கஷ்டம் பிற்காலத்தில் என் பிள்ளையும் படக்கூடாது என்பதற்காக தான் இப்படி அவங்க வெளிநாட்டில் போய் பாஷை தெரியாம அங்கு அவமானப்பட்டு ஏழு எட்டு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை ஒரு நாள் முழுவதும் ரெஸ்ட் இல்லாம பண்ணி குழந்தைகளும் வளர்க்கிறார்கள்.
ஆனால் நிறைய பேருக்கு அது புரியல அப்படி எல்லாம் நீ வெளிநாட்டுக்கு போய் என்னத்த சாதிக்க போற புள்ளைய வளக்கறது விட்டுட்டு… உன் பிள்ளைகளுக்கு உன் அடையாளமே தெரியாதுன்னு சொல்லுவாங்க,
ஆனா ஒரு அம்மா இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?… அதையும் நம்ம ஒரு பக்கம் இருந்து யோசிச்சு பாக்கணும் இல்ல,
அவங்க எக்கச்சக்கமான வலிகளை தாண்டி வந்திருக்க வேண்டும்.
அதுபோல உங்க அம்மா ஏன் உங்களுக்காக அப்படி போயிருக்க கூடாது ஆனா கடைசியில நான் நினைச்சது போலவே நான் அவங்கள சொன்னாங்க,
ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க அவங்க எங்க போவாங்க யாருமே இல்லாம?…
நீங்களும் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி அவங்கள பேசிட்டீங்க இப்படி அவள் சொல்ல சொல்ல,
அவன் அமைதியாகவே நின்றான்.
இப்போது தினேஷுக்கு போன் பண்ணி நீங்க யாரையும் பார்க்க போக வேணாம் அவங்களை தேட வேண்டாம்னு சொல்லுங்க இப்படி ஆவது கொஞ்சம் வருத்தமாக சொல்லிட்டு போனதுமே நிலா..
நான் என்னோட அம்மாவை நம்பல, ஆனா நான் உன்னை நம்புறேன்.
நீ சொன்னது உண்மையா இருந்துச்சுன்னா பார்க்கலாம்..
ரொம்ப நாள் வேதனைப்பட்ட மனசு இல்லையா அவ்வளவு சீக்கிரம் ஆறிடாது இப்படி சொல்ல அவள் வேகமாக இருக்க கட்டி அணைத்துக் கொண்டாள் ரொம்ப தேங்க்ஸ்..
எனக்காக பண்றேன்னு சொன்னேன்ல அதுவே எனக்கு போதும்.
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு இப்படி சொல்லிக்கொண்டு இறுக்கமாக கட்டி அணைத்தபடி அவன் முகம் முழுவதும் பல முத்தங்களை கொடுத்தாள்.
இனி என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
