ஆடி வரும் வண்ண மயிலே-30

அத்தியாயம்:30 

ராஜவேலு குரு மூர்த்தி மண்டையை போட்டு விட்டானா என பாரு…? என சொல்லி கொண்டே இருக்கும் போது அதற்க்கு… இன்னும் நேரம் வரவில்ல என சொல்லி கொண்டே குரு மூர்த்தி வந்தார்.  

அவரை கண்டதும் ராஜவேலு வாய் மூடி கொள்ள…கனகராஜ் மனதில். 

“ இந்த நாய் கொஞ்சம் நேரம் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காதே…வீண் வம்பு சண்டையை இழுத்து என்னையும் சேர்த்து கோர்த்து விடும்…எலக்சன் நேரம் வேறு பிறகு மொத்த ஓட்டும் இந்த கிழவனுக்கு தான் போய் விழும்.  

இந்த முறை எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்ற வேணும்…என்று நான் கணக்கு போட்டு கொண்டு இருக்கிறேன் இதில் இவன் வேறு… தலைவலியை இழுத்து விட்டு கொண்டு இருக்கிறான்…” என மனதில் நினைத்தவர்…வெளியே  

“ தலைவரே நீங்களா..! வாங்க வாங்க உங்களுக்கு ஏதும் ஆகவில்லை தானே…நல்ல வேலை பிறகு ஆளுங்கட்சிக்கு புது தலைவரை தேட வேண்டி இருக்கும்… 

உங்களை போல நாட்டை கட்டி எழுப்ப யாராலும் முடியும்…” என சிரித்து கொண்டே கேட்டார்.  

ராஜவேலு “ அதற்க்கு தான் இவர் தம்பி மகன் ராகவன் இருக்கிறார் தானே…இவர் எப்படா மண்டையை போடுவார் நம்ம முதல்வராக வேணும் என கனவு கண்டு இருக்கிறார்…” என சொல்லி சிரித்தான்…கூடவே அவன் கூட்டமும் மெல்ல சிரித்தது.  

குருமூர்த்தி “ கனகு கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை…என் கூட இருக்கும் கூட்டம் எல்லாம் நான் அன்பால் சேர்த்த கூட்டம்.  

அதனால் அவ்வளவு சீக்கிரமாக என்னை போக விட்டு விட மாட்டாங்க…நான் உன்னை பார்க்க வந்த காரணம் நீயும் நானும் ஒன்றாக தான்…இந்த அரசியலில் நுழைத்தோம்.  

என்ன தான் அரசியல்வாதிங்க வெளியே அடித்து கொள்வது போல காட்டி கொண்டாலும்…நம்ம எல்லாம் ஒரே இனம் என்ன நான் நல்லது செய்ய நினைக்கிறேன் அவ்வளவு தான்.  

ராகவன் என் மகன் அவனை எப்போ..? எங்கே…? எப்படி..? தட்டி வைக்க வேணும் என எனக்கு தெரியும்…அவன் பட்டம் போல மேலே பறந்த ஆசைபடுகிறான்… 

பறக்க விட்டு இருக்கிறேன் ஆனால்… அதன் நூல் என் கடைபிடிக்குள்ளே தான் இருக்கிறது.  

அதை எப்படி கீழே இறக்க வேணும் என எனக்கு தெரியும்…சரி நல்ல காலம் அண்ணன், தம்பிக்கு ஏதும் பாதிப்பு இல்ல போல தெரிகிறது.  

உங்களை பெத்தவங்க செய்த புண்ணியம் தான் உங்க இரண்டு பேரையுமே காப்பாற்றி இருக்கு…இதுவே உங்க புண்ணியம் என்று இருக்க நான் மேலே போக முன்னே… 

என்னை வரவேற்க நீங்க இரண்டு பேருமே… எனக்காக மேலே காத்து கொண்டு இருப்பீங்க.  

சரி நான் நலம் விசாரித்து விட்டேன்…உடம்பை மட்டுமல்ல மனசையும் பார்த்து கொள்ளுங்க…ராஜவேலு பவதீப்பை சாதாரண பாடி கார்ட் என எடை போட்டு விடாதே… 

உன் சித்து விளையாட்டு எல்லாம்…அவன் கிட்ட சொல்லாது நொடியில் நொறுக்கி தள்ளி விட்டு போய் கொண்டே இருப்பான்… 

நான் தான் பாவ புண்ணியம் எல்லாம் பார்ப்பேன்… அவன் பார்க்க மாட்டான்.  

போட்டு தள்ளி கொண்டு போய் கொண்டே இருப்பான்….அவன் ராணுவீரன் பாரு நாட்டை சுத்தம் செய்வது தான் அவன் முதல் கடமை… 

சரி எலக்சன் வருகிறது அடக்கி வாசிங்க…” என சொல்லி விட்டு கிளம்பி போனார்.  

ராஜவேலு “ அண்ணா இந்த கிழவனுக்கு இருக்கும் திமிரை பாரு…எப்படி மறைமுகமாக நம்மை அவமானப்படுத்தி மிரட்டி விட்டு போகிறான் என்று … 

டேய் ..! காளை முதலில் அந்த பாடி கார்ட் பற்றிய விபரத்தை சேகரி டா…பிறகு இருக்கு இவனுக்கு…” என்றான்.  

மயூரிகா கண் விழிக்கும் போது அவளை சுற்றி…சக்ரபாணி, கல்யாணி, யசோதா, கண்மணி, வெங்கட் நின்று இருப்பதை கண்டாள்… 

அவளுக்கு ஒரு கணம் தான் உயிரோடு தான்… இருக்கிறோமா என சந்தேகம் வந்தது.  

பிறகு திரும்ப கண்களை மூடியவள் முன்னே…நடந்து எல்லாம் படமாக ஓடியது அதில் கதாநாயகனாக பவதீப் தான் இருந்தான்…அவள் கன்னத்தை தடவிய கல்யாணி.  

“ பாப்பா பாட்டி பேசுவது கேக்குதா தங்கம்…கண் விழித்து பாருமா இங்கே பாரு நீ கண் விழிக்க தான்…நாங்க எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.  

தாத்தாவை பாரு உசிரை கையில் பிடித்து கொண்டே காத்திருக்கிறார்…எழுந்திரு பாப்பா…” என்றார்.  

அவர் பேச்சு அவள் செவி வழியாக நுழைந்து இதயத்தை தட்ட…அவள் மெல்ல கண் திறந்தாள்.  

சக்ரபாணி பாப்பா என அவள் கைகளை பற்றி தன் நெஞ்சோடு அணைத்து கொள்ள…மயூரி வாய் தாத்தா என அழைத்தது அவளால் சத்தமாக பேச முடியவில்லை.  

மஸ்தி அவள் கன்னத்தில் அறைந்ததால்…அவள் கன்னம் இரண்டு வீங்கி போய் வலித்தது…அது மட்டுமல்ல அவன் அவள் கழுத்தில் கத்தியை வைத்து லேசாக அழுத்தியதால்…ரத்தம் வந்து அதற்க்கு கூட மருந்து வைத்து பிளாஸ்திரி போட்டு இருந்தார்கள்.  

பேத்தியின் நிலை உணர்ந்து சக்ரபாணி…அவள் தலையை தடவி விட்டவர்.  

“ நீ பாதுகாப்பாக இருக்க பாப்பா பயப்படாதே…உன்னை சுற்றி நாங்க எல்லாம் இருக்கிறோம் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு…பிறகு பேசலாம்…” என்றார்.  

அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறாங்க…என்ற நினைவில் கண்களை மூட போனவள் முன்னே…பவதீப் முகம் தோன்றியது.  

அவளை காப்பாற்ற வந்து தானே அவன்…கத்தி குத்து எல்லாம் வாங்கி கொண்டான் அவன் உயிருக்கு…ஆபத்தா என்று கூட தெரியாது அவள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.  

“ தாத்தா என மெல்ல அவள் அழைக்க…சக்ரபாணி என்ன பாப்பா என கேட்டார்.  

“ வந்து அவருக்கு ஒன்றுமில்ல தானே…எப்படி இருக்கிறார் தாத்தா அவர்…? என கேட்டாள்.  

முதலில் அவள் யாரை கேட்கிறாள்…என்று சக்ரபாணிக்கு புரியவில்லை அவர் மயூரியை பார்க்க.  

யசோதா “ சார் மேம் பவதீப்பை பற்றி கேட்கிறாங்க…” என்றாள்.  

கல்யாணி “ஓ..! அந்த தம்பியாக..? அவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை பாப்பா…நல்ல காலம் கடவுள் காப்பாற்றி விட்டார் ஆனால் ரத்தம் மட்டும் அதிகமாக போய் விட்டது போல.  

நம்ம கிருபா தான் ரத்தம் கொடுக்க போய் இருக்கிறான்…என்ன பார்க்கிற கிருபா உன் அண்ணன் சாரதாவின் பையன்…ஊருக்கு வந்திருக்கான் அவன் தான் பவதீப்புக்கு ரத்தம் கொடுக்கிறான்…” என்றார்.  

மயூரி “ ம் ‘ நானும் அண்ணன் குரலை கேட்டேன்…அப்போ இருந்த சூழ்நிலையில் அண்ணனை சரியாக பார்க்க முடியவில்லை… 

 குரு தாத்தா, பாட்டி புவா அக்கா…குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்கிறாங்க தர்ஷ் குட்டிக்கு ஆபத்து ஏதும் இல்லை தானே… 

அவனை கடத்தி போனதாக சொன்னாங்க… அப்பா நல்லா இருக்கிறாரா பாட்டி..? என அனைவரையுமே கேட்டாள்.  

சக்ரபாணி “ உன் அப்பனுக்கு என்ன அவன் நல்லா தான் இருப்பான்…பெத்த பெண்ணு மரணத்தை சந்தித்து விட்டு வந்திருக்கிறாள்… 

இப்போ கூட அவளை பார்க்க வராமல்.. அந்த குடும்பம் கூட தான் இருக்கிறான்.  

மற்ற எல்லோரும் நலமாக தான் இருக்கிறாங்க பாப்பா…இனி அதிகமாக பேச வேணாம் கழுத்தில் காயம் இருக்கு…கொஞ்சம் ரெஸ்ட் எடு…” என சொல்லி கொண்டே இருக்கும் போதே..  

மயூ பாப்பா, அப்பா, ஆன்ட்டி  அங்கிள் என்று…அழைத்து கொண்டே அசோக் ஓடி வந்தான்.  

தகவல் வந்ததும் அவன் கிளம்பி விட்டான்…ஆனால் சீக்கிரமாக வர முடியாதபடிக்கு ரோட் ப்ளாக் ஆகி இருந்தது…கூடவே ஆளும், எதிர்கட்சி தொண்டர்கள் வேறு ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டு இருந்தார்கள்.  

நேராக வந்தவன் மயூரியை ஆராய்ந்து விட்டு…அவள் கட்டுகளை தடவி விட்டவன் பின் தந்தையை தடவி பார்த்தவன்.  

“ அப்பா உங்களுக்கு ஒன்றுமில்ல தானே…அங்கிள், ஆன்ட்டி நீங்க எப்படி இருக்கிறீங்க..? நான் விஷயம் கேள்விப்பட்டதும் பதறி போய் விட்டேன்… 

உடனே கிளம்பி விட்டேன் எங்கே சீக்கிரமாக வர முடியவில்லை…ரேட் எல்லாம் ப்ளாக் பண்ணி வைத்திருக்காங்க… 

சி.எம் சார் அவர் பேமிலி எல்லாம் சேப்பாக இருக்கிறாங்க தானே…என்ன பாதுகாப்பு இது தீவிரவாதிங்க வந்ததும் தெரியாமல்…இவங்க பாதுகாக்கும் கொடுக்கும் அழகை என்ன என்று சொல்வது.  

ஒரு புரோகிராமுக்கு ஒழுங்காக பாதுகாப்பு கொடுக்க துப்பு இல்லை…இதில் மக்களை, நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்…இதில் எலக்சன் வேறு அதை வைத்து என்ன செய்ய போகிறாங்க.  

மேலும் மேலும் சொத்து சேர்க்க தானே இந்த அரசியலுக்கு அடித்து பிடித்து வருகிறாங்க… 

எவன் மக்களின் பிரச்சனையை தீர்க்க வருகிறான்…குரு சார் போல ஆளுங்க எல்லாம் ஆயிரத்தில் இல்ல….கோடியில் ஒரு அரசியல்வாதி.  

இனி வரும் ஆளுங்க கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா..? சி.எம் சார் பாடி கார்ட் பவதீப் தானே ராணுவதில் இருந்து வந்தாக சொன்னாங்க…அவனுக்கு கூடவா தீவிரவாதிங்க வந்தது தெரியாது.  

சிட்டிக்குள்ளே வந்தாலே கூடவே சொகுசும் கூடவே வந்து விடும்…வேஸ்ட் ஆளுங்க..” என திட்டி கொண்டு இருக்கும் போதே.  

அசோக் பார்த்து பேசு…” என சொல்லி கொண்டே கிருபாகர் வந்தான்.  

கிருபாகரை கண்டதும் ஒரு கணம் அவனை உற்று பார்த்து விட்டு…அண்ணா நீங்களா..? என அசோக் கேட்டான். 

கிருபாகர் “ நானே தான் ராணுவ வீரன் கூட மனிஷன் தான் அசோக்…பவதீப் பற்றி பேச முன்னே அவன் சேவையை பற்றி தெரிந்து கொண்டு பேசு.  

அவன் மட்டுமல்ல கவர்மெண்ட் கூட இப்படி நடக்கும் என எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க…அப்படி இருக்கும் போது அவனை அவனை…அவன் பாதுகாப்பை தப்பாக பேச யாருக்குமே ரைட்ஸ் இல்லை.  

உன் அண்ணன் கூட ராணுவ ஜெனரல் தான்…நீ அவனை பேசினால் என்னை பேசியது போல தான்…காரணம் அவனுக்கு அவன் டீம்க்கு ட்ரைனிங் கொடுத்தது நான்.  

இன்று அவன் மட்டும் இல்லை என்றால்…நம்ம மயூவை நம்ம உயிரோடு பார்த்து இருக்க முடியாது…அவன் கூடவே அவன் டீம்மால் தான் இன்று பெரும் அளவிலான உயிர் சேதம் இல்லாமல் இருக்கு.  

நீ மட்டுமில்ல இப்போ மக்களும் அவனை பற்றி தானே குற்றம் சொல்லி கொண்டு இருப்பாங்க…அதுவும் அவனுக்கு கூட காயம் ஏற்பட்டு இருக்கு அதை கூட பொருத்படுத்தாது.  

அவன் தன் கடமையை செய்து கொண்டு இருக்கிறான்…இப்போ கவர்மெண்ட்க்கு கூட அவன் பதில் சொல்ல வேண்டி இருக்கும்… 

அவன் தானே சி.எம் சாரின் பர்ஷனல் பாடி கார்ட்…நீயும் மற்றவங்க போல தெரியாமல் பேச கூடாது…” என்றான்.  

வெங்கட் “ சக்ரா ஒன்று சொல்வேன் நீ கோப்பட கூடாது…வந்து ராகவன் பாப்பா ஆபத்தில் மாட்டியதும் அப்படி துடித்து போய் விட்டான்…தியா பாப்பாவை கூட அவன் தான் காப்பாற்றினான்… 

இல்ல குழந்தைக்கு மூச்சு திணறி ஏதும் ஆகி இருக்கும்…தன் சால்வையால் அவளை மூடி பத்திரமாக கொண்டு வந்தான்…பாப்பாவை பார்க்க போகிறேன் என்று கிளம்பினான்.  

கிருபா தான் மூர்த்திக்கு உங்க துணை அவசியம்…மயூவை நாங்க பார்த்து கொள்வோம் பிறகு நீங்க பாருங்க என சொன்னான்…இப்போ அவன் உண்மையில் மயூ மேலே அக்கறை காட்டினான் டா…” என்றார்.  

சக்ரபாணி “ முட்டாளா வெங்கி நீ…பச்சோந்தி ஒரே நிறத்தில் இருப்பதை பார்த்து இருக்கிறாயா..?  

இவனும் அது போல தான் எலக்சன் வருகிறது இல்லையா..? பொம்பளைங்க ஓட்டு வேணுமே அது தான் மயூரி மேலே… அக்கறை உள்ளது போல நடித்து இருக்கிறான்…” என்றார்.  

அப்போது மயூ பாப்பா என அழைத்து கொண்டே ராகவன் வந்தான். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page