இருவருக்கும் சேர்த்து அவனே உணவை கூறிவிட்டு காத்துக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் சேர்த்து உணவு வந்து சேரவும். அமைதியாக உண்டு முடித்தனர். எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.
உண்டு முடித்து வெளியேறியதும் மீண்டும் ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வாயிலில் வண்டியை நிறுத்தினான் யஷ்வந்த்.
புரியாமல் பவித்ரா ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்கவும்.
“ஒவ்வொரு வேளையும் இப்படி ஹோட்டல் புட் சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது. வீட்ல சாப்பிடனும்னா அதுக்கு ஏதாவது சமைக்கணும். சமைக்கிறதுக்கு திங்ஸ் வேணும்.. அதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றவனும் அப்பொழுது தான் நினைவு வந்தது போல் ஒரு பாவனையோடு, “கேட்க மறந்துட்டேன் பாரு, உனக்கு சமைக்க தெரியுமா?”.
அவனை விளையாட்டாய் முறைத்தவள், “அதெல்லாம் தெரியும்”.
“நல்லவேளை, அப்போ நான் தப்பிச்சேன். நான் கூட சுடுதண்ணி வைக்க தெரியாதவளை கொண்டு வந்து சூப்பர் மார்க்கெட் வாசல்ல நிறுத்திட்டோமோனு ஒரு நிமிஷம் பதறிட்டேன்”.
“சரி வா, உன்னுடைய சமையல் திறனை இனிமே நீ காட்ட வேண்டிய நேரம் வந்திடுச்சு” என்றவாறு தன் சட்டையின் கையை இரு புறமும் ஏற்றிவிட்டுக் கொண்டே அவளுடன் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தான்.
அவளின் விழிகள் அவனின் அசைவில் சுகமாய் அசைந்தது.
பார்வையாலேயே அவனை கொள்ளையிட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
அவளுடன் ட்ராலியை தள்ளிக் கொண்டே அவன் நடக்கவும். ஒவ்வொரு பொருளாய் அதன் விலையையும், காலாவதி தேதியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தவளின் செயலில் மென் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே நடந்து வந்தான் யஷ்வந்த்.
“மேடம் எக்ஸ்பைரி டேட் எல்லாம் செக் பண்ணிட்டு சமைக்கிற அளவுக்கு பெரிய ஷெஃப் போலருக்கே”.
“ம்ம்.. வீட்ல அத்தைக்கு சமைக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்ல. அப்போ இப்படி தான் எந்த பொருள் எடுத்தாலும் டேட் பாத்துட்டு யூஸ் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க” என்று சட்டென்று கூறிவிட்டவள். பின் சுதாரித்து யஷ்வந்தின் முகத்தை பார்த்தாள்.
அவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வுமே பிரதிபலிக்கவில்லை. தன் ஒற்றை புருவத்தை ஏற்றி ‘என்ன’ என்பது போல் விழிகளாலேயே வினவ.
தன் தலையை வேகமாக ஒன்றுமில்லை என்பது போல் ஆட்டியவள். பொருட்கள் வாங்குவதில் கவனமானாள்.
அவனுக்குள்ளும் அத்தனை உணர்வுகள் சுழற்றி அடித்துக் கொண்டு தான் இருந்தது. எதையுமே காண்பித்துக் கொள்ளாமல் அவளுக்காக என அவன் பார்க்க..
அவனுக்காக என அவளும் பார்த்தாள்.
சற்று நேரத்தில் மீண்டும் அமைதி அவர்கள் இருவரையும் கவ்விக்கொள்ள.
“ஓய்” என்று அவளின் தோளில் யஷ்வந்த் தட்டவும்.
என்னவென்று அவள் அவனை திரும்பி பார்த்தாள்.
தன் கையில் ஒரு பொருளை வைத்து அவளின் முன்னே ஆட்டிக் காட்டியவன், “இது தேவைப்படுமா?” என்றான் கேள்வியாக.
அவனின் கேள்வியில் தன் விழிகளை உருட்டி திருதிருத்தவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனின் கையை கீழே இறக்கியவாறு, “என்ன பண்றீங்க பாவா, யாராவது பார்த்தாங்கன்னா பச்.. இதை எதுக்கு கையில வச்சு ஆட்டிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் தவிப்பாக.
“இப்போ குழந்தை குட்டி பெத்துக்க வேணாம்னு உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா இது யூஸ் ஆகும்ல.. அதுக்கு தான் வாங்கலாமான்னு கேட்க உன்னை கூப்பிட்டேன்” என்றதோடு அவளின் தோளைப் பற்றி அந்த பொருளை அடுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றவன்.
“இங்க பாரு பவி, ஆஃபர் போட்டிருக்காங்க.. நல்ல ஆஃபர்.. நீ ஓகேன்னு சொன்னா பல்க்கா வாங்கிடலாம். அதோட நமக்கும் தேவைப்படும்” என்றான் தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி தலை சரித்து சிரித்தவாறு.
அவனின் செயலிலும், பேச்சிலும் அவள் தான் திணறிப் போய் நின்றிருந்தாள்.
அதற்குள் அங்கே பணிபுரியும் பெண் வேறு இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர. இவளுக்கு தன் முகத்தை எங்கே கொண்டு சென்று மறைப்பது என்றே தெரியவில்லை.
“ஐயோ! படுத்துறீங்க பாவா! அந்த பொண்ண பாருங்க சிரிச்சிட்டு போறா எல்லாம் உங்களால தான்”
“நான் என்னடி பண்ணேன்.. நல்ல ஆஃபர் நமக்கு யூஸ் ஆகுமேன்னு..”.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல”.
“அப்போ உனக்கு ஓகேவா?” என்றான் இரட்டை அர்த்தத்தில்.
அவனின் கேள்வியில் முகம் குப்பென்று சிவந்து விட.
“ஐயோ! உங்களோட முடியல.. இங்க வச்சு கேட்கிற கேள்வியா இதெல்லாம்” என்று சங்கடத்தோடு நெலிந்து கொண்டே கூறியவள்.
அவனின் கையை பற்றி அங்கிருந்து இழுத்துக் கொண்டு சற்று தள்ளி வந்து நின்றாள்.
மீண்டும் அதே பெண் இவர்களைப் பார்த்து சிரித்து விட்டு செல்லவும்.
“பாருங்க, உங்களால தான் அந்த பொண்ணு நம்மள பார்த்து சிரிச்சிட்டே இருக்கா”.
“நான் வேணும்னா போய் எதுக்கு சிரிக்கிறான்னு கேட்டுட்டு வரவா.. கடையில எதுக்காக இப்படி சிரிக்கிற மாதிரி திங்ஸ் எல்லாம் வச்சிருக்காங்களாம்.. விக்கிறதுக்காக தானே.. வாங்க வந்த கஸ்டமரையே பார்த்து இப்படி சிரிச்சு நக்கல் பண்ணுவாங்களா”.
“நீங்க ஒன்னும் பண்ண தேவையில்ல. பண்ண வரைக்கும் போதும் முதல்ல கிளம்பலாம் வாங்க”
“அப்போ உனக்கு ஓகேவா குழந்தை குட்டி..” என்று அவன் ஆரம்பிக்கும் பொழுதே.
தன் பற்களை கடித்துக் கொண்டு, “ஓகே.. ஓகே.. குழந்தை குட்டி எல்லாம் ஓகே.. போதுமா” என்று கிசுகிசுத்துவிட்டு ஓடி விட்டாள்.
பேச்சுக்கே சிவந்து ஓடுபவளின் செயலில் இவனுக்கும் மனம் நிறைந்து விட்டது. இதற்காக தானே அவனும் அவளை சீண்டியது..
அனைத்தும் தன்னால் தான்.. நடந்த அனைத்திற்கும் தான் மட்டும் தான் காரணம் என்பது போல் தனக்குள்ளேயே அவள் மருகிக் கொண்டிருப்பது இவனுக்கும் நன்கு விளங்கியது.
என்ன தான் அப்படி இல்லை என்று எடுத்து கூறினாலும், அவள் மனம் அங்கேயே தான் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதை அவள் பேச்சும், செயலுமே காண்பித்து விட.
அவளை அதிலிருந்து வெளிக்கொண்டு வரவே அவனின் இந்த சின்ன சின்ன சீண்டல்கள் பெரிதாக உதவியது.
சமைப்பதற்கு தேவையான பொருட்களுடன், வீட்டு உபயோகத்திற்கு என சில பொருட்களையும் வாங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
விட்டிற்கு வந்தவர்கள் பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு வாங்கி வந்திருந்த பாயை விரித்து அறையில் படுத்து விட்டனர்.
“இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பவி. நாளைக்கு பெட் வாங்கிக்கலாம்” என்றவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டவள்.
“எனக்கு இதுவே போதும்” என்றாள் மனநிறைவாக.
அதில், அத்தனை அர்த்தம் பொதிந்திருந்தது. என்னுடன் நீ இருந்தாலே போதும், இடம் எப்படிப்பட்டது என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.
பூ மஞ்சமோ, முற்புதரோ உன்னுடன் செலவிடும் நேரங்கள் எனக்கு போதும் என்பதை சுருக்கி கூறியிருந்தாள்.
அது அவனுக்கும் புரிந்ததோ என்னவோ.. அவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் தன் இதழை பதித்தவன் அமைதியாக கண்களை மூடிக்கொண்டான்.
அறையே அத்தனை நிசப்தமாய் இருந்தது. அதற்கு நேர் எதிராய் இருவருக்குள்ளும் பேரலை அடித்து புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது
வெறுமனே இருவரும் கண்களை மூடி படுத்திருந்தனரே தவிர, வெகு நேரம் உறங்கவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் தன் விழிகளை மலர்த்தி அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும் விழி திறவாமல் கண்களை மூடியே, “என்ன?” என்றான் கேள்வியாக.
“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் பாவா” என்றாள் தொண்டை அடைக்க.
“ம்ம்”.
“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”.
இப்பொழுது கண் விழித்தவன் அவளை குனிந்து பார்க்கவும்.
“இப்படி எல்லாரையும் விட்டுட்டு வந்து தனியா இருக்கிறது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். எல்லாம் என்னால தானே?”.
“இப்படி எல்லாம் பேசாதன்னு உன்கிட்ட சொன்னதா ஞாபகம்” என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கடுமையாக.
அதில் கப்பென்று தன் வாயை மூடி கொண்டவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
மூடிய கண்களுக்குள் கருவிழி இங்கும் அங்குமாய் அசைந்தாடி அவள் இன்னும் உறங்கவில்லை என்ற நிதர்சனத்தை எடுத்துரைக்க. அனிச்சையாய் அவனின் கரம் அவளை தட்டிக் கொடுக்க துவங்கியது.
அதில், இருவரும் எப்பொழுது உறங்கினார்கள் என்பதை அவர்களே அறிந்திருக்கவில்லை.
அறை முழுவதும் வெளிச்சம் பரவ. தன் கண்களை சுருக்கி மெதுவாக திறந்தவன் தன் கண்களை கசக்கி விட்டு நன்கு விழித்து பார்க்கவும், அருகில் அவனின் மனைவி இல்லை.
பல்துலக்கி காலை கடன்களை முடித்துவிட்டு அவன் வெளியே வரவும், அடுப்படியில் நின்றிருந்தாள் பவித்ரா.
அவளை பார்த்துக் கொண்டே அடுப்படியின் மேடை மேல் ஏறி அமர்ந்தவன், “என்ன சீக்கிரம் எழுந்துட்ட.. புது இடத்துல தூக்கம் வரலையா?”.
“நீங்க பக்கத்துல இருக்கும்போது தூக்கம் வராம போயிடுமா என்ன?” என்றவளின் கைகள் அவனுக்கான காபியை கலந்து கொண்டு இருந்தது.
அதற்குள் வெளியே அழைப்பு மணி ஓசை கேட்கவும், மேடையில் இருந்து குதித்து இறங்கியவன்.
“இன்னும் கொஞ்சம் சுகர் எக்ஸ்ட்ராவா போடு பவி” என்று விட்டு வெளியேறி இருந்தான்.
அவனின் வார்த்தையில் மெல்லிய புன்னகையோடு அவள் மேலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு கலக்கினாள்.
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…