கல்லூரி முடிந்து வீடு வந்த பிரியா நேராக கிட்சன் சென்று ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் போன் அடிக்க யார் என்று எடுத்து பார்த்தவள் அஞ்சு பேபி என்று வரவும் மகிழ்ச்சியுடன் எடுத்தவள், ” ஹாய் பேபி, என்ன பண்ற “
என்று வினவவும், ” ரியா பேபி சாரி சாரி இனி அப்டி கூப்பிட கூடாதுல. ரியா அண்ணி உனக்கும் அண்ணாக்கும் கல்யாணமாம். அம்மா இப்ப தான் சொன்னாங்க. ரொம்ப ஹாப்பி ” என்று இவளை பேச விடாமல் அவள் பேசி கொண்டே போக பிரியா தான் அதிர்ச்சியில் சிலை ஆகி விட்டாள்.
“ஹலோ, ஹலோ அண்ணி லைன்ல இருக்கியா ” என்று அஞ்சலி கத்த சுயநினைவு அடைந்தவள், “அஞ்சலி, என்ன சொல்ற. அந்த ஹிட்லர் கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டாரா ” என்று வினவ,
” ஆமா. அண்ணா ஓகே சொல்லிட்டாங்க. இப்ப அம்மாவும் அப்பாவும் அத பத்தி பேச அங்க தான் வராங்க. சரி அண்ணி. இந்த விஷயத்தை ரோஹித் கிட்ட சொல்லணும். நா அப்புறம் பேசுறேன் ” என்றவள் பிரியாவின் பதிலை எதிர் பாராமல் வைத்து விட்டாள்.
ஆனால் பிரியாவின் நிலைமை தான் மோசமாக இருந்தது. உடனே தன் தாயை தேடி செல்ல அவரோ போன் பேசுவதில் பிஸியாக இருந்தார். அதனால் தன் போனை எடுத்து நந்தினிக்கு அழைத்தாள்.
அவளோ எடுத்ததும், ” என்ன பங்கு, இந்நேரம் நீ கிட்சேன்ல ஸ்னாக்ஸ் இருக்கானு தான உருட்டிட்டு இருப்ப. ஆனால் அத விட்டுட்டு எனக்கு கால் பண்ணி இருக்க. என்ன விஷயம் பங்கு “
பிரியாவோ, ” பங்கு நா மோசம் போய்ட்டேன் பங்கு. மோசம் போய்ட்டேன் ” என்று புலம்ப,
நந்தினி மனதில் ( என்னாச்சு இவளுக்கு இப்டி பொலம்பிட்டு இருக்கா. பேசாம நம்ம சித்துக்கு போன் போடலாம் ) என்று சித்துக்கு கான்பரன்ஸ் கால் போட்டாள்.
சித்து போனை எடுத்தவன் அந்த பக்கம் பிரியாவின் புலம்பல் கேட்க,’என்ன நந்தினி தான கால் பண்ணா. பிரியா பேசுறா. ஓ கான்பரன்ஸ் கால் போட்ருக்காங்க போல’ என்று நினைத்தவன், ” நந்து என்ன இந்த நேரத்துல கான்பரன்ஸ் கால் போட்ருக்கீங்க.அவ வேற ஏதோ பொலம்புர மாதிரி இருக்கு. என்ன விஷயம் ” என்று வினவ,
” டேய் சித்து, இந்த பிரியாவ என்னனு கேளு. எனக்கு போன் போட்டு புலம்பிட்டே இருக்கா. ” என்றாள்.
” பங்கு என்ன ஆச்சு .” என்று சித்து பிரியாவிடம் கேட்க, ” நா மோசம் போய்ட்டேன் பங்கு. எல்லாரும் என்ன ஏமாத்துறாங்க ” என்று மறுபடியும் புலம்பினாள்.
” அட ச்சை, நிறுத்து. என்ன ஆச்சுன்னு மொத சொல்லு. சும்மா ஒப்பாரி வச்சிட்டு ” என்று மிரட்ட,
” பங்கு அந்த ஹிட்லர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான் பங்கு. லவ் பண்ணி கல்யாணம் பண்ண நினைச்ச என் ஆசை கனவா போய்டுச்சு. எப்படியும் அவன் சம்மதிக்க மாட்டான்னு நம்புனேன். ஆனால் அவன் ஓகே சொல்லிட்டான். இந்த கல்யாணத்த நிப்பாட்ட ஏதாவது வழி சொல்லு பங்கு ” என்று புலம்ப,
சித்துவோ, ” பங்கு ஒரு ஐடியா இருக்கு. ஆனால் அது செட் ஆகுமான்னு தெரியல. “
நந்தினி, ” டேய் சித்து, ஐடியா குடுக்குறேனு வேற பிரச்சனையை உருவாக்கிடாத. அண்ணா இவள கல்யாணம் பண்ண ஓகே சொல்லி இருக்காங்கன்னா ஏதாவது காரணம் இருக்கும். ” என்றவள் பிரியாவிடம்,
” ரியா, நீ ஆல்ரெடி அண்ணா பத்தி சொன்னது எல்லாம் வச்சு பாக்கும் போது அண்ணா நல்லவங்கனு தான் தோணுது. ஆனால் என்ன உனக்கு அவங்களுக்கும் செட் ஆகல. பரவால்ல கல்யாணம் ஆனால் சரி ஆகிடும். அதுனால நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. ” என்றாள்.
பிரியாவோ, ” அடபோடி, நீ வேற. உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா. ” என்க,
சித்து, ” என்ன பங்கு சின்ன வயசுல இருந்து யாருக்கும் தெரியாம அண்ணாவை லவ் பண்றியா ” என்று வினவ,
” எடு செருப்ப நாயே. என்னை பாத்தா எப்படி தெரியுது. அந்த ஹிட்லர நா லவ் பண்ணுவேணா. அவனும் அவன் மூஞ்சியும். அவனுக்குலாம் சிரிப்புனா என்னன்னே தெரியாதுன்னு நினைக்கிறேன் பங்கு. எப்ப பாரு சிடு சிடுனு இருப்பான். இவனை கல்யாணம் பண்ணா ரொம்ப கஷ்டம் பங்கு. ரொமான்ஸ்னா என்னனு கே.. ” பேசிக்கொண்டு இருந்தவள் தன் முன் நின்று கொண்டிருந்தவனை பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.
பேசி கொண்டிருந்தவள் திடீர் என்று அமைதி ஆகவும் சித்து, ” பரவால்ல பங்கு அண்ணாக்கு ரொமான்ஸ் வரலைனா என்ன. அதான் நீ இருக்கியே, அவருக்கு அத பத்தி கிளாஸ் எடுத்துரு பங்கு. நீ தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஆசப்பட்ட. அண்ணாவை லவ் பண்ணிடு “
நந்தினியோ, ” ஆமா பங்கு சித்து சொல்றது கரெக்ட் தான். நீ பேசாம அண்ணாவை லவ் பண்ண ஆரம்பிச்சுடு ” என்று அவளின் அமைதிக்கு காரணம் தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டே போக,
” சீக்கிரமே நீங்க சொன்ன மாதிரி உங்க பிரண்ட் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இப்ப உங்க பிரண்ட் கிட்ட கொஞ்சம் நான் பேசணும். அப்புறமா உங்க கிட்ட பேசுவாங்க ஓகே ” என்று போனை கட் செய்தான்.
அந்த பக்கம் இருந்த இருவரும் பேய் அறைந்தார் போல் இருந்தனர்.
இங்கே பிரியாவின் போனை கட் செய்தவன் கைகளை கட்டிக் கொண்டு ஒற்றை புருவத்தை ஏற்றி அவளை பார்க்க, அந்த பார்வையில் மனம் ஒரு நொடி தடம் மாறினாலும் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.
( ஐயோ, நம்ம பேசுனத எல்லாம் கேட்ருப்பானோ. என்ன சொல்ல போறன்னு தெரியலையே. ஆமா இவன் எதுக்கு இப்ப வந்தான். அம்மாவை வேற காணோம். இவன் வந்தது கூட தெரியாம அவன் வேற இவனை லவ் பண்ண ஐடியா குடுக்குறான். இவன் கிட்ட என்ன பேசணு கூட தெரியலையே. ஆண்டவா நா என்ன செய்வேன். ஐயா முருகா உன் புள்ளய காப்பாத்து ப்பா. இவன் இப்டியே கிளம்பிட்டான்னா அந்த சித்துவுக்கு அழகு குத்துறேன் முருகா ‘ என்று மனதிற்குள் புலம்ப, பாவம் அவளுக்கு என்ன தெரியும் ஏற்கனவே முருகன் இரண்டு பொண்டாட்டிய சமாளிக்க கஷ்ட பட்டுட்டு இருக்காரு. அதுனால இவள அவரு கண்டுக்கவே இல்லை. 😂😂😂😂
மித்ரனோ அவள் மனதில் பேசியது அவனுக்கு புரிந்ததோ என்னவோ அவள் அறியாமல் சிரித்தவன் அவள் இடுப்பில் கை போட்டு தன்னை நோக்கி இழுத்தவன் மற்றொரு கை விரலால் அவள் நெற்றியில் இருந்து இதழ் வரை வருடியவன் சட்டென்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அவள் அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு அவனை விழித்து பார்க்க அவனோ ” என்ன மேடம் இப்படி பிரீஸ் ஆகி நின்னா அப்புறம். எப்படி எனக்கு ரொமான்ஸ் பண்ண சொல்லி தருவ ” என்று கேட்க ,
‘ ஆஹா, நம்ம பேசுன எல்லாத்தையும் கேட்டுட்டான் போலயே. ” என்று நினைத்துக்கொண்டு வேகமாக அவனை விட்டு விலகியவள்,” நீ.. நீங்க எதுக்கு இங்க வந்திங்க. என்ன வேணும் உங்களுக்கு “
” என்ன வேணும்னாலும் கிடைக்குமா”
” நீங்க பேசுறதே சரி இல்லை. வழி விடுங்க. நா போறேன் “
” அது எப்படி, நீ தான என்ன வேணும்னு கேட்ட. நா இன்னும் அதுக்கு பதில் சொல்லலையே. எனக்கு என்ன வேணும்னு சொல்றேன். அத குடுத்துட்டு இங்க இருந்து போ. அது வர உன்ன இங்க இருந்து போக விடமாட்டேன். “
‘ ஐயோ, இந்த ஹிட்லர்க்கு பேசலாம் தெரியுமா. இவன் இவ்ளோ பேசி இப்ப தான் பாக்குறேன். இப்ப எப்படி இவன் கிட்ட இருந்து தப்பிக்கிறது ‘
என்று மனதில் யோசிக்க, அவள் நல்ல நேரமோ என்னவோ அவள் அன்னை அவளை அழைக்கும் சத்தம் கேட்க, மித்ரனே அவளை விட்டு விலகினான்.
‘ நல்ல வேளை, இந்த அம்மா வந்து காப்பாத்தினாங்க. ‘ என்று நினைத்து கொண்டு தாயை தேடி சென்றாள்.
” என்ன பிரியா, யார் கிட்ட பேசிட்டு இருக்க. ” என்று அவர் வினவ,
” என் கிட்ட தான் அத்தை. ” என்றவாரே உள்ளே வந்தான் மித்ரன்.
” வா மித்ரன். உனக்காக தான் வெயிட் பண்ணேன். அதுக்குள்ள அண்ணி போன் போடவும் பேச போய்ட்டேன். ” என்றவர் பிரியாவிடம் திரும்பி,
” பிரியா, மித்ரன் உன் கிட்ட பேசணும்னு சொல்லி கேட்டான். அவன் கூட வெளிய போய்ட்டு வா ” என்க, அதில் அதிர்ந்தவள்,’ இவன் கூடவா ‘ என்று நினைத்தவள்,
” அம்மா, எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் போகல”
என்க,
” நீ படிச்ச லட்சணம் எனக்கு தெரியும். கிளம்பு. உன் கிட்ட பேசணும்னு வேலைய விட்டுட்டு புள்ள வந்துருக்கு. நீ ஓவரா பண்ற ” என்று திட்ட,
இருவரையும் பார்த்து முறைத்தவள், ” பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வரேன் ” என்றவள் தன் அறைக்கு சென்றாள்.
மித்ரனிடம் நிலா, ” ரொம்ப சந்தோசமா இருக்கு மித்ரன். இவ பண்ற சேட்டைக்கு வெளிய கட்டி கொடுத்தா இவ எப்படி சமாளிப்பாலோன்னு இருந்துச்சு. இனிமேல் அந்த பயம் இல்லை. என் பொண்ண நல்லா பாத்துக்கோ மித்ரன். உன்ன நம்பி தான் என் பொண்ண உனக்கு கொடுக்கிறேன் ” என்று அவன் கைகளை பிடித்து கண்கலங்கி பேச,
” இனிமே பிரியா என் பொறுப்பு அத்தை. நீங்க அவளை பத்தி கவலை படாதீங்க. யாருக்காகவும் எதுக்காகவும் அவளை விட்டு குடுக்க மாட்டேன். அதே மாதிரி அவளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அது என்ன தாண்டி தான் வரும். அவளுக்கு எல்லாமுமா நா இருப்பேன் அத்தை ” என்று கூற அவன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர் தன் மகளை பற்றி இனிய கவலை பட தேவை இல்லை என்று நினைத்து கொண்டார். ஏனென்றால் அவர்க்கு தெரியும். மித்ரன் கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவான் என்று.
சற்று நேரத்தில் பிரியா கிளம்பி வரவும் மித்ரன் அவளை அழைத்து கொண்டு சென்றான்.
இங்கு இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க அதை நிறுத்த கிளம்பி வந்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி.
திருமணம் நடைபெறுமா?
