சங்கருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒன்னு தப்பா இருக்கிற மாதிரியே இருந்துச்சு.
நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமா?…
ஒரு தடவை நம்ம பொண்ணு பேச்சை கேட்டு இருக்கலாம். இந்த மாதிரி அவர் யோசிச்சுகிட்டே இருந்தாரு ஆனா அவளை பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்கு கோவம் வருதே அது ஏன்னு எனக்கு தெரியல,
சரி பார்க்கலாம் என்னதான் ஆகுதுன்னு…
இப்படி யோசனையோடு இருக்கும்போது கீதா அமைதியாக அவளுடைய அப்பா பக்கத்துல வந்து உட்கார்ந்தாள்.
அவ அந்த மாதிரி உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சு.
காலேஜுக்கு போய் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்ததுக்கு அப்புறம் அவள் முடிந்த அளவுக்கு பேலன்ஸ் கூட அந்த அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணது கிடையாது.
என்ன கேட்டாலும் அதுக்கு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருப்பா ஆனா இன்னைக்கு அவளாகவே அவங்க பக்கத்துல வந்து உட்காரத பார்த்ததுமே,
என்ன எதுவும் வேணுமா?…
எவ்வளவு வேணும்?..
இப்படி கேட்க அதற்கு அவள் எதுவும் பேச முடியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் அது உங்க கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன். ஒரு தப்பு கிடையாது நிறைய பண்ணி இருக்கேன்.
உண்மையிலேயே நிலா ரொம்ப பாவமப்பா,
அவன் இதுவரைக்கும் எந்த ஒரு தப்பும் பண்ணவில்லை. நான் தான் வேணும்னே அவளை மாட்டிவிடுறதுக்காக அவ மேல இருக்கிற ஒரு விதமான அத நான் எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல,
எல்லாருமே கேக்குறாங்க நீ இவ்வளவு அழகா இருக்க நீ எவ்வளவு ஜாலியா பேசுறான் உங்க அக்கா ஏன் இந்த மாதிரி இருக்காங்கன்னு என்னமோ சொல்லுவாங்க அதெல்லாம் கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால தான் நான் அவள வேணும்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பேன் ஆனா அவன் எதையுமே கண்டுக்கிட்டது கிடையாது.
இப்போ கூட அந்த சேரி விஷயத்தை மாற்றி வைத்தது நான்தான் இப்படி சொன்னதுமே அவருக்கு எதுவுமே புரியல நீ என்ன என்னமோ சொல்ற எனக்கு ஒன்னும் புரியல மா,
எந்த சாரி என்ன விஷயம் எதுக்கு உன்னோட அக்காவை உனக்கு பிடிக்காது. இப்படி கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே இருக்கும் போது தான் அவள் மறுபடியும் சொல்ல ஆரம்பிச்சா,
அப்பா உங்களுக்கு என்னை பிடிக்குமா இல்ல அவளை பிடிக்குமா இப்படி ஒரு கேள்வி கேட்க உன்னைத்தான் எனக்கு பிடிக்கும் அவளை எல்லாம் பார்த்தாலே வெட்டி எறிஞ்சுடனும் போல இருக்கு இப்படி அவர் கோபமாக சொல்லும் போது அவரோட கையை இறுக்கமா பிடிச்சு நான் அதை கேட்கல,
இந்த மூணு நாளைக்கு முன்னாடி இருந்து கேட்கிறேன். உங்களுக்கு அக்காவை ரொம்ப பிடிக்கும் தானே அதுவும் அவள் உங்களோட பேச்சைக் கேட்டுகிட்டு உங்களுடைய கைக்குள்ளையே இருக்கிறது உங்களுக்கு இன்னும் பிடிக்கும் தானே..
நான் அந்த மாதிரி கிடையாது நான் உங்களை எதிர்த்து பேசுவேன் நீங்க சொன்ன மாதிரி இருக்க மாட்டேன் அடிக்கடி கோவில் வரமாட்டேன் இப்படி என் மேல கம்ப்ளைன்ட் சொல்றதுக்கு நிறைய இருக்கு ஆனா,
அவ அந்த மாதிரி கிடையாது நிலா எப்போதுமே உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்னு அதே போல நடந்து பா உங்களுக்கு என்னை மாதிரி இருக்கிற பெண்களை சுத்தமா பிடிக்காது என்பதற்காகத்தான் உங்களுக்கு புடிச்ச மாதிரி அவள் குடும்ப பொண்ணு மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்ட ஆனா இந்த காலத்துக்கு அது சரிப்பட்டு வரல கடைசில அது உங்களுக்கே அது புடிக்காம போயிடுச்சு.
இத நீங்க மறக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன் இப்படி சொல்லும் போது அதற்கு அவர் ஆமா… அது என்னவோ உண்மைதான். அவளுக்கும் உன்ன மாதிரி இருக்கணும்னு தான் ஆசை ஆனா நான் ஆரம்பத்தில் இருந்து கண்டிஷன் போட்டு போட்டு பழகி கடைசில அவளால அந்த விஷயத்தில் இருந்து வெளியே வர முடியல, அப்படியா பழகிடுச்சு இப்ப வேற மாதிரி டிரஸ் போடணும்னா அவளுக்கு கூச்சம் ஏற்பட ஆரம்பிச்சது அதனாலதான் எனக்கு எரிச்சலா இருந்துச்சு.
உண்மைய சொன்னா அது என்னோட தப்பு தான் நான் தான் அந்த மாதிரி பண்ணிட்டேன். உங்கள ஒழுக்கமாக வளர்க்கணும்னு நினைச்சு என்னென்னமோ செய்தேன் ஆனா அது இந்த காலத்துக்கு ஒத்து வராது.
அப்படி இருக்கிற பெண்களை யாருக்குமே இங்க பிடிக்க மாட்டேங்குது, அப்பா… நான் ஒன்னு சொல்லட்டுமா?…
என் மேல நீங்க கோபப்பட்டாலும் பரவாயில்லை நான் இதுவரைக்கும் அவளுக்கு என்னென்னமோ துரோகம் பண்ணி இருக்கேன்.
எப்போதுமே நாங்க டிரஸ் கடைக்கு போகும் போது நீங்க ஒரு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தா அதுல நாலாயிரத்துக்கு மேல நான் தான் செலவு பண்ணுவேன். இருக்குற மிச்ச காசில தான் அவ இருக்குறதுக்கு ஏதாவது ஒரு துணி எடுத்து போட்டுட்டு வருவா அவளுக்கு பிடித்தது ஒரு தடவை கூட அவளை நான் வாங்க வச்சதே கிடையாது.
அவள் வாங்குவதை பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. உங்ககிட்ட எப்ப பாத்தாலும் நல்ல பெயர் எடுக்கறத பார்த்தாலே எனக்கு அவ்வளவு எரிச்சலா இருக்கும் அதனால நான் வேணும்னேவும் எங்க ரெண்டு பேருக்கும் ஷேர் பண்ணி கொடுக்க வேண்டிய காசை எல்லாத்தையும் நான் ஒரு ஆளா யூஸ் பண்ணிப்பேன்.
அவளுக்கு என்ன மாதிரி டிரஸ் பண்ண வேண்டும் என்று ஆசைதான் ஆனா நான் தான் அந்த மாதிரி பணத்தை எல்லாம் செலவு பண்ணதும் எனக்காக விட்டுக்கொடுத்துடவா,
அவளுக்கு உங்க மேல எப்படியாவது கோவம் வரணும்னு நினைச்சேன் அது இப்பதான் அளவுக்கு அதிகமாக வர ஆரம்பித்தது என்னைக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயம் வந்துச்சோ அன்னைக்கு இருந்து அந்த மாதிரி தான் ஆச்சு.
ஆனா ஒரு சாப்பாடு விஷயத்தை கூட அவளுக்கு புடிச்ச மாதிரி அவ எதிர்பார்த்ததும் கிடையாது நானும் அதுக்கு இடம் கொடுத்ததும் இல்லை. அம்மா கிட்ட போய் அம்மா எனக்கு இதை செஞ்சு கொடுங்கன்னு ஆசையா போய் கேட்பா அவ கேட்கிறத பார்த்ததுமே நான் போய் சண்டை போட்டு எனக்கு பிடிச்சத தான் கேட்பேன்.
எனக்கு அதெல்லாம் செய்யும்போது ஜாலியா இருந்துச்சு ஆனா இப்போ அவளோட இடத்துல இருந்து பார்க்கும்போது எவ்வளவு வருத்தமா இருக்குன்னு இப்பதான் எனக்கு புரியுது.
உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு தான் உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தேன் அன்னைக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க வரும்போது அவள் வீட்டுக்கு வரல இல்ல அன்னைக்கு அம்மா ஒரு பட்டு சேலை எடுத்து அவளுடைய பேக்ல வச்சு விட்டாங்க இது அழகா கட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லி நான் வேணும்னு எங்களோட பார்ட்டி வேற ஒரு சாரி ஒன்னு இருந்துச்சு அத பாத்தா நீங்க அடிச்சிடுவீங்க,
அதனால நான் அதை வாங்கினதுல இருந்து யாருக்குமே காட்டாம ஒளிச்சு வச்சுருந்தேன் அதைத்தான் அவளோட பேக்ல வச்சு விட்டேன் வேணும்னே தான் நான் அப்படி பண்ணேன் அவ வரும்போது அவ வர்ற கோலத்தை பார்த்து நீங்க அவள் வர்ற கோலத்தை பார்த்து அவள் அடிப்பீங்க என்று நினைத்தேன்.
ஆனா நடந்தது எல்லாமே வேற மாதிரி நடந்துருச்சு. நான் கூட அக்கா லவ் பண்ணி இருக்கா போல நினைச்சேன் ஆனா அவளுக்கு அதெல்லாம் வராது… அந்த பையன் என்னவோ அக்காவை தாங்கு தாங்கு என்று தாங்குறாரு.
எப்படி ஒரு நாள் ரெண்டு நாள் குள்ள இவங்களுக்குள்ள இப்படி ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தது என்று எனக்கு தெரியல ஆனா அவளுக்கு அப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு எனக்கு இப்போ தான் புரியுது.
நான் செஞ்சது எல்லாமே எவ்வளவு கீழ் தரமான வேலை ஆனா நான் செஞ்ச கீழ்த்தரமான வேலைக்கு என்னோட வாழ்க்கையும் அது போல தான் மாறும் என்று எனக்கு இப்போ புரியுது எப்போதும் நல்லது நினைச்ச நாள் தான் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது…
இப்படி சொல்லும் போது அதை கேட்டா அவளுடைய அப்பா சங்கர். யாரு அவன் நல்லவனா?… அவன் எத்தனை தடவை குடித்து இருக்கான் தெரியுமா நானே பாத்திருக்கேன்.
எதற்கெடுத்தாலும் சண்டைக்கு போவான். அடிக்கடி நம்ம வீட்டையே உத்து உத்து பார்த்துட்டு இருப்பான் அதை நான் நிறைய தடவை பார்த்து இருக்கேன். அது ஏன் அப்படி செஞ்சா எனக்கு இப்பதான் தெரியுது.
அவனுக்கு ஏற்கனவே நம்ம வீட்டு பொண்ணு மேல கனெக்சன் இருந்திருக்கு இவளும் சொல்லாமல் இருந்திருக்கா அதான் நாலு மணிக்கு போய் கோலம் போட்டுட்டு இருந்திருக்கா, இப்படி அவர் ரொம்ப கோபத்தோடு சொல்லும் போது அப்பா அவர்கள் இந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்து என்ன ஒரு ரெண்டு வருஷத்துக்கு உள்ள தான் இருக்கும் ஒன்றரை வருஷம் ரெண்டு வருஷம் தான் இருக்கும்.
ஆனா அக்கா சின்ன பிள்ளையில் இருந்து கோலம் போட்டுட்டு தானே இருக்கா,
நான் சொல்றது தப்பு எல்லாம் காதுல வாங்காம அவளை குற்றம் சொல்வதிலேயே குறியா இருக்கீங்களே… அத நினைக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்காப்பா நீங்க ரெண்டு பேருக்கும் அப்பா தான் இப்படி சொல்லிட்டு அவள், என்னோட அக்காவை எனக்கு பிடிக்காமல் இருந்துச்சு அதனால நான் வேணும்னே அவளை மாட்டிவிட்டுகிட்டே இருந்தேன் ஆனா இப்ப சொல்றேன் அவ இதுவரைக்கும் எந்த தப்பும் பண்ணல அவர் தப்பு செஞ்சதா சொல்லி நீங்க திட்டினது அடிச்சது எல்லாமே எனக்கு விழுந்து இருக்க வேண்டியது.
ஆனால் எனக்காக அவள் வாங்கிட்டு இருக்கா என்னால் அவள் வாங்கிட்டு இருக்கா அதுதான் உண்மை.
நீங்களே பார்த்தாலும் அந்த பையனை மாதிரி பார்க்க முடியாது அக்காவை எப்படி தாங்குறான் தெரியுமா?…
ஒரு பொக்கிஷம் போல.. அவரோட கைக்குள்ள அவளை ஏந்துகிறார் உண்மையிலேயே எனக்கு ரொம்ப பொறாமையா தான் இருந்துச்சு அங்க நடக்குற விஷயத்தை எல்லாம் பார்க்கும் போது..
நம்ம எல்லாரும் சேர்ந்து ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கோன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது அது அக்காவை ஒதுக்கி வைக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
தயவு செஞ்சு அவகிட்ட ஒரு தடவை பேசுங்க என்ன ஆச்சுன்னு சொல்லி கேளுங்க இந்த மாதிரி எல்லாம் சொன்னதுக்கு அப்புறம் அவருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒன்னு பண்ணுச்சு.
ஒருவேளை நம்ம பொண்ணு சொல்றது உண்மையா இருக்குமா?… நான் பார்த்த வரைக்கும் அந்த பையன் அவளை இறுக்கமா பிடிச்சுகிட்டு விடாம சுத்திட்டு இருக்கான்.
நம்மளை நினைச்சாலும் இப்படி ஒரு பையனை கட்டி வைக்க முடியுமா என்ன?..
சும்மா பார்க்க ரவுடி மாதிரி இருக்கான் பேச்செல்லாம் அப்படித்தான் இருக்கு ஆனா இதுவரைக்கும் அவன் எந்த தப்பும் பண்ணி நான் பார்க்கல,
நம்ம கொஞ்சம் யோசிச்சி இருக்கணும்னு நினைக்கிறேன்.
அவளை கன்னத்தில் அறைஞ்சதுமே அந்த பையன் அவ்வளவு வேகமாக ஓடி வந்து என்னை தடுத்தான்.
என் கூட சண்டைக்கு வந்து நின்னா இது எல்லாம் பார்க்கும்போது இப்போ சந்தோஷமா இருக்கு அன்னைக்கு ஏதோ ஒரு முட்டாள் தனம் கோபத்துல அப்படி பண்ணிட்டேன்.
இப்படி யோசிச்சுகிட்டு வீட்ல இருக்க முடியாம நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வரேன்னு சொல்லி கையில ஒரு பைய எடுத்துக் கொண்டு இருந்து கிளம்பிட்டாரு.
மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயம் அறுத்துக்கிட்டே இருந்துச்சு. அப்படியே பலத்த யோசனையோடு அவர் நடந்து போயிட்டு இருந்த போது ஒரு வீட்டு முன்னாடி பயங்கர கூட்டமா இருந்துச்சு ஆம்புலன்ஸ் வந்து யாரையும் ஏத்திட்டு போனாங்க பின்னாடியே ஒரு சிலர் தலையில் அடிச்சுக்கிட்டு கிடைக்கிற வண்டியில் ஏறி அந்த ஆம்புலன்ஸ் பின்னாடியே போகும்போது,
பக்கத்தில் இருந்தவர் கிட்ட என்ன ஆச்சு?…
யாரை அந்த ஆம்புலன்ஸ் சேர்த்திட்டு போகுது?… எதுவும் பிரச்சனையா இந்த மாதிரி அவர் கேட்கும் போது தான் பக்கத்து வீட்டுக்காரங்க ஆமாங்க,
அந்த புள்ள வீட்டுக்கு லேட்டா வந்து அடிக்கிறது, பசங்களோட பேசினா ரொம்ப தப்பா பேசுறது இந்த மாதிரி என்னென்னமோ நடந்துச்சு அந்த பொண்ணு சொல்லி பார்த்து என்னோட பிரெண்ட்ஸ்னு சொல்லுச்சு.
சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சந்தேகப்பட்டு கடைசியில் அந்த பொண்ணு பேச வர்றதையே கேட்காம டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதனாலதான் இன்னைக்கு மருந்து குடித்துவிட்டது.
பெத்தவங்க முதல்ல நம்ப வேணாமா புள்ளைய?..
இது என்ன அந்த காலம் மாதிரியா பையனும் பொண்ணும் பேச கூடாதுன்னு சொல்றதுக்கு….
அப்படியே தப்பே பண்ணினாலும் எப்படி அட்வைஸ் பண்ணனும் அப்படித்தான் பண்ணனும்.
பொறுமையா சொன்னாலும் இப்ப இருக்குற பிள்ளைகளுக்கு புரியுது. ஏண்டா இப்படி இருக்காங்களோ தெரியல சின்ன வயசு பிள்ளைங்க சரியா இருக்கு பெத்தவங்க தான் இப்ப வர வர சரி இல்ல இப்படி அவர் புலம்புறது எல்லாம் கேட்டதுமே அவருக்கு ஒரு மாதிரி சுருக் என்று இருந்துச்சு.
அவரால் எதுவும் பேச முடியல, பாதி காதில் வாங்கிட்டு பாதி காதில் படாதவாறு வேகமாக ஓடி வந்துட்டாரு.
மனசெல்லாம் ஏதோ பதைபதைப்பாகவே இருந்துச்சு. இப்போதுதான் தன்னுடைய மகள் ஏதேதோ சொன்னா அதுவே மனச குழப்பிக்கிட்டு இருக்கு இப்ப மறுபடியும் அதுக்குள்ளேயே பாடம் சொல்ற மாதிரி இருக்குனு அவரு பதறிப் போயிட்டாரு.
இப்போ நிலா மேல இருந்த கோபம் ஒட்டுமொத்தமா காணாம போயிடுச்சு. தான்டா எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோமோ அப்படி என்கிற மாதிரி அவர் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.
இது என்ன நடந்தது என்று அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
