“மனிஷா குட்டி அடுத்த புது பணக்காரன் ஒருத்தவன மடக்கி வச்சிருக்கீங்களாமே அது உண்மையா? நான் கேள்விப்பட்டது உண்மையா இருந்தா கட்டாயம் நல்லா தான் இருப்பீங்க!” என்று கேட்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா.
“ஏய் நீ யாரு?” என்று மனிஷா கேட்க, எல்லா உங்களுக்கு நல்லா “தெரிஞ்சவன்தான். உங்கள பத்தி நல்லா தெரிஞ்சவன் தான்!”என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தாள் மனிஷா.
“இப்ப உனக்கு என்ன வேணும்!”என்று மனிஷா கேட்க,” எனக்கு பத்து லட்ச ரூபாய் பணம் வேணும்” என்று கேட்க அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டாள் மனிஷா.
“பத்து லட்ச ரூபாய் பணமா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை?” என்று மனிஷா சொல்ல, ” அதெல்லாம் எனக்கு தெரியாது நான் சொல்ற இடத்துக்கு பத்து லட்ச ரூபாய் பணத்த கொண்டு வந்து கொடு, இல்லனால் நீ பண்ண திருட்டுத்தனம் எல்லாத்தையும் நீ இப்ப வளைச்சு போட்டு இருக்கியே ஒரு பணக்காரன் அவன்கிட்ட ஒன்னு விடாம எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுருவேன்! அப்புறம் உன்னோட கல்யாண கனவு எல்லாம் தவிடுபொடி ஆகிடும்!” என்று மிரட்டினான்.
“ப்ளீஸ் அப்படி மட்டும் பண்ணிடாத!” என்று கெஞ்சினாள் மனிஷா.
“அப்போ சொன்ன பணத்தை எடுத்துக்கிட்டு நான் சொல்ற லொகேஷன்ல வந்து குடு!” என்று மீண்டும் சொல்ல, ” உண்மையிலேயே அவ்வளவு பணம் இப்போதைக்கு என் கிட்ட கிடையாது! ஒரு ரெண்டு வாரம் கொடு எப்படியாவது ஏற்பாடு பண்ணி உனக்கு கொடுக்கிறேன் என்று கூறினாள் மனிஷா.
“ரெண்டு நாள் என்னால வெயிட் பண்ண முடியாது, உனக்கு இருபத்தினாலு மணி நேரம் தர்றேன் அதுக்குள்ள நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து சேரு!” என்று கூறினான் அந்த முகம் தெரியாத நபர்.
“சரி நான் ஏற்பாடு பண்றேன்” என்று மனிஷா சொல்ல, ” உனக்கான டைம் ஸ்டார்ட் நவ் இப்ப இருந்து இருபத்தி னாலு மணி நேரத்துக்குள்ள பத்து லட்ச ரூபாய் பணத்த ரெடி பண்ணு, நானே உனக்கு போன் பண்ணுவேன். அப்ப நான் சொல்ற லொகேஷன் வந்து அந்த பணத்தை கொடு, அத விட்டுட்டு போலீஸ் போறது அடியாள் வச்சு மிரட்டுறது அந்த சந்துரு கிட்ட சொல்றது இந்த வேலை எல்லாம் வச்சிருந்தால் நான் உன்னைய பத்தி கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற எல்லா டீடெயில்ஸ்யையும் எவிடன்சோட அந்த விதுரனோட மொபைலுக்கு அனுப்பி விடுவேன்.
அதை எல்லாம் பார்த்தால் விதுரன் என்ன பண்ணுவான்னு உனக்கு தெரியும், விதுரனுக்கு மட்டும் இல்ல அந்த ரஞ்சித்துக்கும் உன்னைய பத்தின உண்மை முழுசா தெரியாது! ஒருவேளை உன்னைய பத்தி தெரிஞ்சா அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்கன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை!” என்று மிரட்ட
“ப்ளீஸ் அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாத நீ சொன்ன மாதிரி பணத்தை ஏற்பாடு பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள்.
‘பத்து லட்ச ரூபாய் பணத்துக்கு இப்ப நான் எங்க போவேன் என்னோட அக்கவுண்ட்ல கூட அவ்வளவு பணம் இல்லையே’ என்று தன்னுடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பார்க்க எழுபது ஆயிரம் மட்டுமே இருந்தது.
மீதி ஒன்பது லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு நான் என்ன பண்ண போறேன்’ என்று யோசிக்க தொடங்கினாள் மனிஷா.
திடீரென்று ரேணுவின் அறைக்குள் நுழைந்த அம்பிகா சிரிக்க தொடங்கிவிட்டார். “ரேணு நீ பேசுன பேச்சுல அந்த மனிஷா அப்படியே ஆடிப் போயிட்டா, அப்போ அவன் முகத்தில் தெரிஞ்ச அந்த பதட்டத்தை நீ பார்க்கணுமே, ஆனா நீ ஏன் நான் சொன்னதை சொல்லவே இல்ல?” என்று அம்பிகா கேட்க
“அம்மா நீங்க சொன்னது மாதிரி உடனே சொல்லிட்டா அந்த மனிஷா கண்டு பிடிச்சுருவா, நம்மதான் இந்த வேலையை பண்ணி இருக்கோம்னு! அதுக்காக தான் முதல்ல இப்படி பேசினேன்!” என்று கூறினாள் ரேணு.
“அதெல்லாம் சரிதான் ஒருவேளை நீ சொன்ன மாதிரியே பத்து லட்ச ரூபாய் பணத்த ரெடி பண்ணிட்டு வந்தால் என்ன செய்வது?” என்று அம்பிகா தன் சந்தேகத்தை கேட்க,
“அதுக்கும் ஒரு வழி யோசிச்சு வச்சு இருக்கேன். நீங்க எதையும் நினைத்து கவலைப்படாதீங்க அம்மா! இன்னைக்குள்ள அவ இந்த வீட்டை விட்டு சொல்லிக்காம ஓடிருவா? அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு யாரோட தொந்தரவும் இருக்காது.
விதுரன் அண்ணா பிரதிக்ஷா அண்ணி வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது!” என்று கூறினாள் ரேணு.
“கண்டிப்பா ரேணு, அதுதான் நமக்கு வேணும். அதுக்காகத்தானே இப்படி எல்லாம் பண்றோம்!” என்று அம்பிகா சொல்ல,
” கவலைப்படாதீங்க மா அண்ணியும் அண்ணாவும் சேர்ந்து நல்லபடியா சந்தோசமா வாழுவாங்க! அத நம்ம கண்ணால பார்த்து சந்தோசபட தான் போறோம் நீங்க எதையும் நினைச்சு வருத்தப்படாதீங்க!” என்று ரேணு கூறினாள்.
ரேணு கூறியதை கேட்கவும் அம்பிகாவின் முகத்தில் புன்னகை தோன்றியது.
இங்கு,
பிரதிக்ஷா விதுரனின் அருகில் நடக்க விதுரனுக்கும் பிடித்ததோ என்னவோ எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவனின் வாழ்க்கை இப்போதெல்லாம் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவே இந்நேரம் மனிஷாவுடன் வெளியே வந்திருந்தால், நேரமாச்சு வீட்டுக்கு போவோம் என்று சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பி இருப்பான். ஆனால் இன்று விதுரனே பிரதிக்ஷாவுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தான்.
பிரதிக்ஷா விதுரனிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் தன் மனதினுள் நினைத்துக் கொண்டே அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய அமைதியை கலைக்கும் விதமாக ” என்னாச்சு அமைதியாவே வர்ற?” என்று விதுரன் கேட்க,
” நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியா வர்றேனா என்ன? ” என்று பதிலுக்கு கேட்டாள் பிரதிக்ஷா.
“அதான பார்த்தேன் ஆரம்பிச்சுட்டியா?” என்று விதுரன் கேட்க, ” நீங்கதான அமைதியா வர்றேன்னு ஆரம்பிச்சீங்க” என்று உதட்டை சுழித்தாள் பிரதிக்ஷா.
ஒவ்வொரு முறையும் பிரதிக்ஷாவின் உதட்டுச் சுழிப்பில் தன்னையே அறியாமல் அவளிடம் உருகிக் கொண்டிருந்தான் விதுரன்.
அவளின் உதட்டு வரிகளின் மேல் மையல் கொண்டு அவனின் உணர்வுகள் தேவையில்லாத எண்ணங்களை தன்னுள் பிறப்பிக்க அதிர்ந்து போனான். அவனுக்குள் தோன்றும் இந்த எண்ணங்கள் நல்லதல்ல என்று நினைத்தவன் பேச்சை வேறு திசையில் மாற்றினான்.
“சரி சொல்லு உன்னைய பத்தி” என்று விதுரன் கேட்க, ” என்னைய பத்தியா? ” என்று ஆச்சரியமாக கேட்டாள் பிரதிக்ஷா.
“ஆமா உன்ன பத்தி தான் உனக்கு என்னென்ன புடிக்கும் அந்த மாதிரி” என்று விதுரன் கேட்க, “பால்கோவா, லட்டு மைசூர்பாகு என்று உணவு பொருட்களை எல்லாம் அடுக்கிக் கொண்டே போக, பிரதிக்ஷாவை முறைத்தான் விதுரன்.
விதுரன் திடீரென்று தன்னை முறைக்கவும்,” என்னாச்சு இப்ப என்ன சொன்னேன் எதுக்கு முறைக்கிறீங்க? ” என்று பிரதிக்ஷா கேட்க,” சாப்பாட பத்தி கேக்கல அதாவது உன்னோட ப்ரொபஷன், ஹாபி அந்த மாதிரி கேட்டேன்” என்று விளக்கினான் விதுரன்.
“ஒ… அந்த மாதிரியா?” என்று விதுரனை பார்த்து இளித்துவிட்டு, ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரா ஆகணும் தான் என்னோட மிகப்பெரிய கனவு. அதுக்கு தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஹரிஷ் சால்வே, முகுல் ரோஹத்கி, அபிஷேக் மனு சிங்கி இவங்கள மாதிரி பெரிய சட்ட வல்லுநர் ஆகணும் அதுதான் என்னோட பெரிய லட்சியம்” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“சூப்பர், இவ்வளவு பெரிய ஆசை உனக்கு இருக்கா? நான் கூட எந்தக் கனவும் இல்லாம வெட்டியா தான் இருப்பேன்னு நினைச்சேன்!” என்று விதுரன் சொல்ல, முறைத்தாள் பிரதிக்ஷா.
“கூடிய சீக்கிரத்துல பெரிய சட்ட வல்லுனர் ஆகப்போறேன். அப்ப நீங்க கூட என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வரலாம். அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு என்கிட்ட மரியாதையா நடந்துக்கிருங்க, அப்படி நீங்க என்கிட்ட நல்ல விதமா நடந்தால் பியூச்சர்ல உங்க கிட்ட சம்பளமே வாங்காம உங்களுக்கு கன்சல்டேஷன் பண்ணுவேன்!” என்று சொல்லி சிரித்தாள் பிரதிக்ஷா.
சிரித்தவளின் முகத்தை விதுரன் பார்க்க அவளின் கள்ளம் கபடமில்லா முகம் அந்த இரவிலும் வானத்தில் இருந்த நிலாவுக்கு போட்டியாக பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது விதுரனுக்கு..!
பிரதிக்ஷாவின் முகத்தை விதுரன் ரசித்துக் கொண்டிருக்க, அது எதையும் அறிந்து கொள்ளாத பிரதிக்ஷா விதுரனை பார்க்க, விதுரன் மெதுவாக அவளின் அருகினில் வந்தான்.
திடீரென்று விதுரன் தன்னை நோக்கிய வரவும் தன்னிச்சையாக அவளின் கால்கள் பின்னால் நகர்ந்தது.
பெண்ணவள் பின்னால் நகர ஆடவன் முன்னால் நகர்ந்து அவளை நெருங்கினான்.
இருவரும் இடைவெளி இன்றி நெருங்கி நிற்க விதுரனின் மூச்சுக்காற்று பிரதிக்ஷாவின் முகத்தில் பட்டது.
தன்னவனின் மூச்சுக்காற்று தன்மேல் பட்டதும் தன்னை அறியாமல் அவளின் உடல் சிலிர்க்க, பெண்மைக்குரிய நாணங்கள் தன்னிச்சையாகவே செயல்பட்டு இன்னும் ஒரு அடி விதுரனிடமிருந்து பின்னோக்கி நகர வைக்க அவளை வேகமாக இழுத்து இடைவெளி இன்றி தன்னோடு
அணைத்த விதுரனை பார்த்து , அதிர்ந்து அதிர்ச்சியில் தன் விழிகளை அகல விழித்தாள் பிரதிக்ஷா.
