திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -12
அத்யாயம் -3
விடியற் காலையில் எழுந்து இதோ கிளம்பி விட்டான் சூர்யா . அவன் இப்போது செல்லப் போகும் இடம் மைசூர் . இவர்களுக்கு ஏற்கனவே கோயம்புத்தூரில் பெரிய கான்ஸ்டருக்ஷன் கம்பனி இருந்தது. அதன் மூல பல நிறுவங்களுக்கு கட்டுமானப் பணி செய்துக் கொடுத்தாலும் இவனுக்கு ஆசை அந்த சுற்றுலாத் துறை மீது தான் . அதனால் தான் இங்கே ஒரு பக்கம் ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இவன் சுற்றுலா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். நிறைய ஹோட்டல் , ரெஸோர்ட்ஸ், காட்டேஜஸ் என்று எல்லாம் வகை வகையாக இருந்தாலும் நாம் செல்லுமிடங்களில் நமக்கு ஏற்ற வைகையில் இருக்கும் இடங்களைப் பார்த்து நாக்கு தேவையான வகையில் தேவதையான இடங்களில் புக்கிங் செய்து விடுவார்கள் கூடவே, டூரிஸ்ட் கைட் , கார் செல்லும் இடங்களில் உணவு என்று அனைத்தையும் இவர்களே ஏற்பாடு செய்து விடுவார்கள் .
அதாவது இவர்கள் ஒரு சுற்றுலா முகமையகம் போன்ற நிறுவனம். அங்கே என்றால் மொத்தமாக நாம் பணம் கட்டி விட்டு செல்ல வேண்டும். இங்கே நமக்கு என்ன தேவையோ அது , இது என்று எப்படி வேண்டுமானாலும் நாம் தேர்வு செய்து கொள்ள முடியும்.
இப்போது வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் தங்கி விட்டு நண்பர்கள் உணவினர்கள் வீட்டில் உணவு எடுத்துக் கொள்ளலாம் . வேண்டிய இடங்களுக்கு தேவையான படிக்கு நாமே தேர்வு செய்து கொள்ள முடியும் போன்ற பல விஷயங்களை அடக்கியது தான் இவன் நிறுவனம்.
அதைத் தவிரவும் அலுவலகத்தில் இருந்து அல்லது பள்ளி கல்லூரியிலி ருந்து வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கூட உண்டு.
இப்போது அவன் தொழிலில் புதிதாக சேர்த்திருப்பது சில ஹோட்டல்களில் பார்ட்னர்ஷிப் சேருவது அல்லது வரும் ஹோட்டல்களை கையகப்படுத்துவது. அவன் கையகப் படுத்தும் இடங்களில் தேவையானபடி சில மாற்றங்களை தேவை இருந்தால் செய்து விடுவான். சில இடங்களில் பார்ட்டி ஹால் இருக்கும். இல்லாத இடங்களில் பார்ட்டி ஹால், ஸ்விமிங் பூல், நடன மேடை, திருமணம் செய்ய அல்லது விழாக்கள் செய்வதற்கு வசதிகள், கூடவே அவர்களுக்கான உணவுக்கான பிரத்தேயகமான இடம், அதேப் போல அபிஷியல் மீடிங் என்று வருபவர்களுக்கும் ஏற்ற ஏற்பாடுகள்என்று தனித் தனியாக ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றபடி தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிடுவார்கள் இவர்களின் கம்பனி.
சில இடங்களில் பங்குதாரராகவும் சேர ஆம்பித்திருக்கிறான். புதிய ஹோட்டல்கட்டுவானா? அதைப் பற்றி அவன் யோசிக்கவில்லை.
இதில் அநேகமான இடங்களுக்கு இவன் நேரே சென்று பார்த்து விட்டு தான் ஓகே செய்வான். ஆனால் இது அப்படிப்பட்ட அழைப்பு அல்ல. நண்பனின் அழைப்பு. அதற்காகத் தான் நட்பு மற்றும் தொழில் இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்ள இவனின் பிரயாணம் ஆரம்பமாகிவிட்டது.
சில இடங்களுக்கு செல்லும்போது நமக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். உதாரணம் பிறந்த வீடு அல்லது நம் வீட்டு உறவினர்கள் . சில இடங்கள் போக வேண்டாம் என்றாலும் போய் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். உதாரணம் புகுந்த வீடு அல்லது அவர்களின் உறவினர்கள். (மக்களே இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொது தான். சும்மா ஜாலிக்கு தான்.)
ஒரே இடதுத்துக்கு நம் சென்று விட்டு அடுத்த சில வருடங்கள் அல்லது பல வருடங்கள் கழித்து நாம் அங்கே செல்லும் போது அந்த இடங்கள் பெரும்பாலும் மாறித்தான் போய் இருக்கும்.
“அப்ப நான் வரும்போது இங்க இது இருந்தது. அந்த கட்டிடம் என்னாச்சு? அங்க இருந்த அரச மரத்துக்கு நூறு வயசு. பல இனிமையான நினைவுகளைக் கொடுக்கும் சில பிரயாணம். இடம் கிடைக்காதப் பேருந்துகள், இடம் கிடைத்தாலும் ஸ்பீக்கரில் அலறும் பாடல்கள் , வயிறு சரியில்லாத போது மாத்திரைகளுடன் பிரயாணம், வா உன்னை அணைத்துக் கொள்கிறேன் அன்னையின் புடவையில் கட்டும் தூளி போன்ற ரயில் பிரயாணம், இந்த இரயிலில் இந்த வசதி இருக்கு அது அப்படி இது இப்படி, ஆசையுடன் செல்லும் வந்தே பாரத் இரயில் பிரயாணம், அவசரமாக கிளம்பி சில மணி நேரத்துக்கு முன்பே சென்று சேர வேண்டிய விமான பிரயாணம், எத்தனை எத்தனை விதமான பிரயாணங்கள் தான் இந்த உலகில்…
சிலது ஆனந்தம் தந்தாலும் பெரும்பாலும் பிரயாணங்கள் அனுபவம் தான் கொடுக்கின்றன.
இந்த பிரயாணம் சூரியாவுக்கு எப்படி இருக்கும்? பழைய நினைவுகளை கொடுக்குமா? இருக்கும் வாழ்க்கையை கெடுக்குமா ? என்ன விதமான மாற்றங்களைக் கொடுக்க போகிறது இந்த மகிழுந்து பிரயாணம். மகிழுந்துபி பிரயாணம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் சரி…
இந்தப் பிரயாணமும் பிரிந்திருக்கும் அவர்களை சேர்த்து வைக்குமா? அல்லது விவாகத்தையே ரத்து செய்து விடுமா?
ஆர் எஸ் புறமாக வந்தவன் அங்கே இருந்த ஒரு டீ கடையில் அமர்ந்து டீ குடிக்க ஆரம்பித்தான். சந்தானம் ஒரு படத்தில் நக்கல் அடிப்பது போல இல்லாமல், பெரிய பித்தளை டீ பாத்திரமும் சரி டீ போடும் ஓனரும் சரி இருவருமே நெற்றி நிறைய விபூதியில் தெய்வ கடாக்ஷமாக இருந்தார்கள். பாத்திரம் பள பள வென்று இருந்தது. இவன் நடத்தும் தங்கும் விடுதிகளிலும் அப்படித் தான். அவன் சுத்தம் மிகவும் பார்ப்பான்.
“நம்ம வீடு மாதிரி தானே இதுவும். அவங்களுக்கு வேணுங்கற வசதி செய்து தருகிறோம் என்றால் அது அவங்க., அப்ப சப்பிட்டு தூங்க மட்டும் இல்ல. அவங்க வீட்டுக்குப் போனது அப்புறம் நம்மளோட சாப்பாடு ரிசல்ட் காட்டிட கூடாது. ஒரு கரப்பான் பூச்சி கூட இருக்கக் கூடாது. காய்கறி நறுக்கும் இடம் கூட சுத்தமா இருக்கணும். எந்த இடத்துலையும் குப்பை இருக்கக் கூடாது.”
அத்தனையும் பார்த்துப் பார்த்து கவனிப்பான்.
இதோ அந்த சிறிய கடையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான். அந்த இடமும் மிகவும் சுத்தமாக இருந்தது. சிறிய கடைதான். ஒரு பக்கம் வடைக்கு மாவு தயாராகிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் டீ போடும் வேலையை செய்துக் கொண்டே சட்னிக்கு தேங்காய் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்தான் ஒனராக இருக்கவேண்டும்.
‘இந்தா ! வந்தவர்களை கவனி . இதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” சொல்லிக் கொண்டே அவர் மனைவி போலும் கோலத்தை போட்டு விட்டு உள்ளே நுழைந்தார். இவன் வந்த நேரம் வெறுமனே தண்ணீர் தெளித்து வைக்கப் பட்டிருந்த வாயில் இப்போது பெரிய சங்கிலி கோலத்தை வரைந்துக் கொண்டு பளிச்சென்று இருந்தது அந்த இடம். ஒரு மாதிரி மஞ்சளும் சாணியும் சேர்த்து தெளித்து மெழுகிய அந்த இடத்தில அந்த வெண்மை நிறக் கோலம் இன்னும் பளிச்சென்று இருந்தது . மனம் அழகாய் இருந்தால் பார்க்கும் எல்லாம் அழகு தான் இல்லையா?
தேநீரை உறிஞ்சியபடியே கோலத்தை பார்த்தவனுக்கு அவளின் நினைவு வராமலா இருக்கும்?
“என்னங்க இன்னிக்கு கோலம் எப்படி இருக்கு பார்த்து சொல்லுங்க.” காலையில் அவன் உடற் பயிற்சிக்கு செல்வதற்கு முன் அவனின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போவாள் . அவளின் கோலம் அழகுதான் அதைப் பார்ப்பதற்கு முன் அவன் கையைப் பிடித்து கிட்டத்தட்ட தொங்கி கொண்டு போகும் அவள் தான் எத்தனை பேரழகு !
“ஜில்லு !”
“என்னங்க ?”
இப்ப நாம கோலம் பார்க்க போய்த் தான் ஆகணுமா?”
“ஏன் ? நம்ம வீட்டு வாசல் தான?”
“நீ இப்படியே மேல பிடிச்சுக்கிட்டு வந்தீனா வாசல் வரைக்கும் கூட தாங்காது டீ “
அவன் பேச்சு புரியாதவள் இன்னும் அவளை ஒட்டிக் கொண்டே வந்தாள்.
வாயிலில் கோலம் அழகாக பளிச்சென்று இருக்க கணவனுக்கு அதைக் காட்டப் போன இவளின் நிலை தான் அலங்கோலமாக மாறியது. அப்படி என்றால் அவனின் உடற்பயிச்சி ! அதுதான் உடல் எங்கும் வியர்வை கொட்ட செய்துக் கொண்டிருந்தானே !
‘அச்சச்சோ எனக்கு வெக்க வெக்கமா வருதே. அதை நான் எப்படி சொல்லுவேன். சொல்ல வேணாம். சென்சார் பண்ணிடுவோம்’
“என்னங்க நீங்க என்னை இப்படி பண்ணீட்டீங்களே ? இப்பதான் குளிச்சுட்டு வந்தேன் “மற்றப் பெண்கள் போல அவள் அவனிடம் கேட்க மாட்டாள். அவன் என்ன சொன்னாலும் செய்வாள் .
அவளின் நினைவோடு சூடான பணத்தை குடித்து முடித்தவன் பெருமூச்சு விட்டு எழுந்துக் கொண்டான்.
“வேற என்ன வேணும் சார்?”
“இல்ல எதுவும் வேணாம் .”
“சார்! எங்க வெளியூருக்குப் போறீங்களா? பத்து நிமிஷம் இருந்தீங்கன்னா சுட சுட இட்லி தயாராகிடும் .”
அவரின் மனைவி தான் இந்த உபச்சாரம் செய்தது . இது பெண்களுக்கே உண்டான பழக்கம் இல்லையா?
“இல்லக்கா! பரவாயில்லை இருக்கட்டும் .”
“சார் உக்காருங்க சார்.” அழுந்த அவர் கூறியதில் இவன் மீற முடியாமல் அமர்ந்துவிட்டான் . அவளின் நினைப்பு மீண்டும்… அவள் எப்படி சமைப்பாள் ? அவளுக்கு என்ன சமைக்காத தெரியும்? ஒரு வேலை கூட அவனின் சமையல் அவன் சாப்பிட்டதில்லை . என் அவள் என்றுமே அவனுக்கு பரிமாறியதுமில்லை. எப்பபோதுமே அவன் உணவு உண்ணும்போது அவளை அவன் கண்கள் தேடினாலும் சித்தி தான் அவனுக்கு உணவிடுவார்.
“என்ன ராஜா ?” கண்ணு யாரை தேடுது? எந்த பாசம் காட்டினாலும் நான் என்ன அம்மாவா முகத்தை சித்தி தூக்கி வைத்துக் கொள்வார். அதனாலேயே அவன் அவர் எதிரிலில் எதையும் காட்டிக் கொண்டது கிடையாது. அப்பொதுமட்டுமில்லை. அவன் கிளம்பும்போதும் அவளை பார்க்க முடியாது.
அவனாகவே தன்னுடைய அறைக்கு வந்து உடைகளை சரிப் படுத்தி கொண்டு கிளம்புவான் . “ஜில்லு ! சட்டை டக் இன் பண்ணுடி ..அவள் மேனி படாதவாறு நின்றாலும் விடமாட்டான். அருகில் இழுத்து உதடு கடித்து அவள் புடைவையை அலங்கோலம் செய்து. இடுப்பில் கிள்ளி அதற்கு மேலே கைகளின் ஊர்வலம் நடந்து என்று ஐந்து நிமிட வேலையை இருபது நிமிடங்கள் ஆக்கி விடுவான். அவன் என்ன செய்தாலும் ஏனோ அவள் சிணுங்கியதே இல்லை. ஆனால் முகம் மட்டும் சிவந்து கிடக்கும் …
மனைவியின் சமையல் பற்றி நினைக்க ஆரம்பித்தவன் எண்ணம் வேறு எங்கோ சென்று விட்டது. உண்மையை சொன்னால் அவர்களின் திருமண வாழ்வில் அந்த கங்களை தாண்டி நினைக்க பெரிய நல்ல நினைவுகள் எதுவும் இல்லை. தாமரை எத்தனையோ முயற்சி செய்தும் அவர்களின் திருமணம் என்னும் கோலம் அசிங்கமாகவே இருந்தது. அழகாக மாறுமா?
அக்கா”” என்று அழைத்த தம்பிக்கு சொன்ன படியே அடுத்த பத்தாவது நிமிடம் இட்லியும் தக்காளி தொக்கும் செய்து பேக்கிங்கில் கொடுத்துவிட்டார்கள். வாய் ஜாலம் மட்டுமில்லை செய்யும் வேலையும் மாயாஜாலம் தான்.
“இதுல கட்டிடலாமா ?”
“கட்டுங்க தம்பி. ஒத்த ரூபா மட்டும் இருந்தா கைல குடுங்க. முதல் போனி.”
சொல்லியவருக்கு சிறு புன்னகையை கொடுத்தவன் பர்சில் தேடியபோது
சில்லறை எதுவும் இல்லை . ஒரு பத்து ருபாய் தாளை நீட்டினான்.
இவங்களுக்கு இன்னிக்கு வியாபாரம் நல்லா நடக்கணும் மனதிற்குள் வேண்டிக் கொண்டான் .
துடிக்கும் இதயம் ……….
