சுவாசம் – 1

 

காலை கதிரவன் உதித்து உலகம்  முழுவதும் இருட்டை விலக்கி வெளிச்சத்தை பரப்பி கொண்டிருக்க, ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஜன்னலை தீண்டியப்படி, அதற்கு மேல் நகர மறுத்து உள்ளே செல்ல முடியாமல் நின்றது.

அதோடு அருகேயிருந்த வீடுகளின் எல்லாம் அவ்வீட்டு மங்கைகளின் கை வண்ணத்தால் வாசல்கள் மங்களகரமாக காட்சியளிக்க, இவ்வீட்டியில் மட்டும் பெண்கள் இல்லையென்ற அடையாளமாக காய்ந்து போய் கிடக்க, இரவு மூடப்பட்ட கதவுகள் கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்தது.

காலை எட்டு மணியளவில் வீட்டியின் பைப் பிடித்து ஏறி மாடியில் குதித்த மனித உருவம், அதன் படி வழியாக இறங்கி ஆடவனின் அறையில் வந்து நின்றதது.

அதோடு பைப் ஏறி வந்த அவ்வுருவம் களைப்பால் மூச்சு வாங்கி கொண்டே தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே செல்ல, அறை முழுவதும் அப்பியிருந்த இருட்டில் முதலில் திண்டாடியப்படி தடவி சென்று ஜன்னலை திறந்து விட்டு வெளியே அதற்காகவே காத்திருந்த சூரியன் கதிர்களை வரவேற்றது.

அதன் பின் படுக்கையை இழுத்து போர்த்தியப்படி உறங்கி கொண்டிருந்தவனை பார்த்து பெருமூச்சு விட்ட அவ்வுருவம் வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து வாலியில் தண்ணீர் நிரம்ப பிடித்து வந்து படுக்கைக்கு பத்தடி இடைவெளிவிட்டு நின்றப்படியே கையிலிருந்த வாலி நீரை சலப்பென்ற சத்தத்துடன் ஊற்றி அவனுக்கு அபிஷேகம் செய்தது.

அதில் பட்டென்று போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தவன், வழக்கம் போல் தன்னை சீண்டும் இச்செயலுக்கு சொந்தகாரனை உறுத்து விழிக்க, அதனை கண்டுக்கொள்ளாமல் “குட் மார்னிங் மச்சி” என்று அனைத்து பற்கள் தெரிய சிரித்தப்படி சொன்ன அவ்வுருவத்தின் சொந்தக்கரான் எதிரே காரப்பார்வை வீசி கொண்டிருந்தவனின் நண்பனான சத்தியதேவன்.

நண்பன் எப்படியும் தன்னை பிடித்து மேய்ந்து விடுவான் என்ற பயத்தில் தான் ஆடவன் பத்தடி தள்ளி நிற்க, நொடியில் பாய்ந்து வந்து அவனின் கழுத்தை பிடித்து சுவற்றோடு ஓட்டி அந்தரத்தில் தூக்கியவன், அவன் கையை தள்ள முயற்சித்து அடித்தும் மன இறங்காதவனோ உடும்பு பிடியை இறுக்கினான்.

அவனின் இறுக்கத்தில் சற்று வயிற்றில் புளியை கரைத்த சத்தியதேவனின் கண்களோ விடுவிக்க கோரி இரைஞ்சி 

“இந்த பாவிய கொண்ணுட்டு ஜெயிலுக்கு போகிற பாவம் வேண்டாம் மச்சி” என்றவனின் வாயிலிருந்து வந்த வார்த்தையோ நண்பனின் பிடியால் காற்றாகவே வெளியே வர, அவனின் அசைவை உணர்ந்து கொண்டவன் ‘இந்த நிலைமைலயும் உன்னோட நக்கல் நையாண்டி குறையுதா’ என்றப்படி பார்த்துவிட்டு பிடியை தளர்த்தி விடுவித்தவனின் இதழ்கள் தாடிக்குள் சத்தியதேவன் அறியாவண்ணம் விரிந்து பின் இறுகியது.

நண்பன் விடுவித்ததும் தொண்டையை தடவியப்படி செருமிய சத்தியதேவன் “நண்பனுக்காக உயிர கொடுப்பேன் மச்சி.. ஆனா இந்த பாவிய கொன்னு உன் கைய கரையாக்கவா என் அத்தை உன்ன பத்து மாசம் சுமந்து வலிக்க பெத்தாங்க” என்று ஃபீல் செய்தது போல் பேசியவன் ஆடவன் பார்வை சுட்டதில் அதன் அர்த்தம் உணர்ந்து அசடு வழிந்து “ஹீ ஹீ.. சின்ன கரெக்ஷன் என் மாமா நீ ஜெயிலுக்கு போகவா உன்ன தாலாட்டி சீராட்டி வளர்த்தார்” என்று பாவமாக பேச,

‘உன் நடிப்பு என்னிடம் செல்லாது’ என்பது போல் பார்வை வீசிவிட்டு அவன் செய்த காரியத்தால் தொப்பலாக நனைந்த நிலையிலிருந்த தன்னை குனிந்து பார்த்துவிட்டு சக்தியனை பார்த்தவன் “எத்தனை தடவை என்கிட்ட வாங்கி கட்டினாலும் உன் சேட்டை குறையவே குறையாதுல இதான் லாஸ்ட் இன்னொரு முறை தண்ணி ஊத்தி எழுப்பின உசுரு போயிடுமோன்னு பாவம் பாத்து விடமாட்டேன்..” என்றவனின் வார்த்தை இறுக்கமாக ஒலிக்க, கண்களிலோ எப்போதும் இருக்கும் அனல் பார்வை குறையாது இருந்தது.

வழக்கமாக வாங்கும் ஆசிகள் என்றதால் பெரிதாக அலட்டிக்கொள்ளாத சத்தியன் படுக்கையை சுற்றியிருந்த மதுக்குவளையை கண்களால் காட்டிவிட்டு “மிஸ்டர் பயர் நானும் எத்தனையோ முறை சொல்லி பார்த்துட்டேன்.. இந்த கருமத்த விட்டு தொலைன்னு நீ கேட்கிறதா இல்ல அப்போ நானும் விடுறதா இல்ல.. அண்ட் ஒன் மோர் நீ இறக்கின அத்தன பேரும் தள்ளுற மப்புல உன்ன தட்டி எழுப்பி டைம் வேஸ்ட் பண்ணி உன்கிட்ட வாங்கி கட்டிக்க நான் என்ன கேனயா” என்றவனின் மனமோ ‘இப்போ நீ வாங்கி கட்டிக்கலயாக்கோம்’ என்று காரி துப்ப, அதனை கருத்தில் கொண்டால் அவன் சத்தியதேவன் அல்லவே.

அவன் பேசியதை அழுத்தமாக பார்த்துவிட்டு தோளைக் உலுக்கிய ஆடவனோ உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து கொண்டான்.

‘மூச்சு முட்ட டயலாக் பேசியும் ஒரு ரெஸ்பான்ஸ் பன்றானா பாரு’ என்று புலம்பி தலையிலடித்து கொண்டவனுக்கு எவ்வளவு கூறினாலும் அவனும் நிறுத்த போவது இல்லை தானும் அவனை சீண்டி வாங்கிக் கட்டிக்காமல் அன்றைய நாளை தொடங்க போவது இல்லையென்று தெரிந்தாலும், நண்பன் மாறி சந்தோசமான வாழ்க்கை வாழ மாட்டானா என்ற ஏக்கமும் அவனில் குடி கொண்டிருக்க, 

எதாவது மாயம் நிகழ்ந்து அவனின் வாழ்க்கையை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் வருடங்கள் தாண்டியும் அந்நிகழ்விற்கான காத்திருப்பிற்கு கடவுள் செவி சாய்க்கும் நேரம் எப்போது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பெருமூச்சு விட்டு கொண்டவன், அவனை தொடர்ந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஒரு மணிநேரம் அவ்விடம் நேரத்தை கழிக்க, ஆடவனோ பயிற்சி முடித்து உடலில் படிக்கட்டு தேகத்தில் குடி கொண்டிருந்த வியர்வைகளை துடைத்தப்படி சத்தியனின் அருகே அமர,

‘பெயருக்கு ஏத்த போல பாடியையும் ஃபயரா தான் மெயின்டெய்ன் பண்றான்..’ என்று எண்ணியப்படி தன்னை ஒருமுறை குனிந்து பார்த்த சத்தியதேவனின் எண்ணம் உணர்ந்து அவனின் தலையை கொட்டியவன் “பொறாமையா”

“பின்ன என்னடா ஒருநாள் எக்ஸர்சைஸ் பண்ணலன்னா தொப்ப வருதே இத்தனைக்கும் நான் குடிக்க கூட மாட்டேன்.. ஆனா நீ குடிச்சி கெட்டும் எப்படி பாடிய ஃபயரா மெயின்டெய்ன் பண்ற” என்றப்படி அவனின் படிக்கட்டு தேகத்தை வருட,

அவன் கையை தட்டிவிட்டு “உன் போக்கே சரியில்ல” என்றப்படி முறைத்துவிட்டு தள்ளி அமர்ந்து கொள்ள, நண்பன் கூறிய அர்த்தம் உணர்ந்து நொந்தவன் “அடேய் கிராதகா கல்லு மாதிரி இருக்கேன்னு தொட்டு பார்த்தேன் அதுக்கு கே அளவு கொண்டு போயிட்டியேடா.. பட் இந்த இடத்துல ஒன்னு பதிவு பண்ண விரும்புறேன் நான் கேயாவே இருந்தாலும் உன்ன சூஸ் பண்ணி என் வாழ்க்கைய நானே நரகத்துல அடமானம் வைக்க மாட்டேன் மிஸ்டர் பயர்” என்று கண்ணடித்து அவனை வாரினான்.

அதில் அவனை உறுத்து விழித்தவனோ நேரமாகுவதை உணர்ந்து அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் தயாராகி வருவதற்குள் சத்தியன் சமைத்து வைத்திருக்க, கோர்ட் ஷூட் ஷூ சகிதம் வந்தவன் கையில் சுற்றி கொண்டு வந்த கார் சாவியை சத்தியனிடம் தூக்கி போட்டுவிட்டு முன்னே நடக்க, அவனோ நகராமல் நின்றதின் அர்த்தம் உணர்ந்து நடையை நிறுத்தி பின்னே வந்தவன் நாற்காலியில் அமர்ந்து அவன் செய்து வைத்திருந்த சாண்ட்விச்சை சாப்பிட தொடங்க, அதனை புன்னகையுடன் பார்த்த சத்தியன் தானும் அவனுடன் இணைந்து காலை உணவை முடித்தான்.

இருவரும் சாப்பிட்டு முடிய தங்களின் பணியை பார்க்க கிளம்பினர்.

****

தேவன் கண்ட்ஸ்டிரக்ஷன் கம்பனி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த அனைவரும் நிமிர்ந்து பார்க்க கூடிய பெரிய கட்டிடம் முன் கார் வந்து நிற்க, மறுகணம் அதிலிருந்து கோர்ட் ஷூட் சகிதம் கண்களில் கூலர்ஸ் அணிந்து கம்பீரமாக இறங்கியவன் வேக நடைய போட்டு உள்ளே செல்ல, தன்னுடைய கைப்பையை எடுப்பதற்குள் முன்ன சென்றவனை கண்டு மிரண்ட உதவியாளனோ ‘பேக் எடுத்துட்டு இறங்குறதுக்குள்ள வெறி பிடிச்சவன் அவ்வளவு தூரம் போயிட்டான்’ என்று தலையில் அடித்து கொண்டு “பாஸ்..” என்றப்படி அவனை பிடிக்க ஓடினான்.

அவன் பின்னே வரவில்லை என்பதை உணர்ந்தும் நிற்காதவன் தன்னை வணங்குபவருக்கு சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு அக்னி தேவன் மேனேஜிங் டைரக்டர் (எம்டி) பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த தன் இருக்கையில் அமர்ந்து சுழலன்றான்.

பாவம் ஓடியே அவனின் அறைக்குள் நுழைந்த உதவியாளனுக்கு மூச்சு வாங்க நெஞ்சில் கைவைத்தப்படியே குனிந்து நின்று “ஏன் பாஸ் மாரத்தான் போட்டிக்கு ஓடவிட்டு பயிற்சி கொடுக்குறீங்களா அதான் பின்னாடி ஓடி வரேன் தெரியுதுல கொஞ்சம் நிக்கலாம்ல.. அட்லீஸ்ட் நான் காரவிட்டு இறங்கவும் இறங்கலாம்ல” என்றவனுக்கு மூச்சு வாங்குவது விட்ட பாடியில்லை.

அதில் எழுந்து அவனருகில் வந்த அக்னி தேவன் தண்ணீர் குவளையை நீட்ட, அவனிற்கும் தேவை என்பதால் வாங்கி மட மடவென்று மொத்தத்தையும் தொண்டைக்குள் இறக்கி காலி செய்தான்.

அவனையே பார்த்திருந்த அக்னியோ “எதுக்கு இப்படி கஷ்டப்படனும்.. நீயும் தேவன் குடும்பத்தோட ஒரு வாரிசு தான்.. ஒன்னு சொந்தமா கம்பனி கட்டி ரன் பண்ணு இல்லன்னா இருக்கிற கம்பனில பொறுப்பெடுத்து பாரு.. அத்தை நீ இப்படி என் பின்னால சுத்திறத பாத்து ஃபீல் பண்ணுவாங்க தான கொஞ்சமாவது யோசிடா” என்று தன்னுடன் நிழகலாக சுற்றி திரியும் உதவியாளன் நண்பன் மற்றும் அத்தை பையனான சத்தியதேவனின் நலனுக்காக முகத்தில் மென்மையை கொண்டு வந்து பேசினான்.

அவன் பேச்சை கேட்டு நிமிர்ந்து நோக்கிய சத்தியனோ “அவ்வளவு அக்கறை இருக்குல்ல அப்போ கடந்த காலத்த மறந்து உங்களுக்குள்ள இருக்கிற கெட்ட கருமத்தலாம் தூக்கி போட்டுட்டு ஆறு வருஷம் முன்னயிருந்த அக்னியா என் முன்னாடி வாங்க பாஸ் அப்புறம் நீங்க பேசினத கன்சிடர் பண்றேன்” என்றவனின் கண்கள் உன்னிடம் மாற்றத்தை காணாமல் என்னிடமும் எந்த மாற்றத்தை எதிர்பார்க்கதே என்று தீர்க்கமாக கூற,

அதில் கடுப்பான அக்னி “சத்யா.. நடந்தது என்னன்னு உனக்கே தெரியும் நானும் வெளிய வர தான் டிரை பண்றேன்.. என்னால முடியல முடியாது.. நீ தேவையில்லாம உன்னோட வாழ்க்கைய ஸ்பாய்ல் பண்ணிக்காதடா எனக்கு சுத்தமா பிடிக்கல”

“பாஸ் நீங்க சுயநினைவே இல்லாம செஞ்ச ஒரு விஷயத்த புடிச்சி வச்சி குற்றயுணர்ச்சி கூட்டு பொரியல்ன்னு நீங்களே உங்க வாழ்க்கைய கருப்பு பக்கமா மாத்திட்டு இருக்கீங்க..”

“சத்யா சுயநினைவே இல்லைனாலும் பண்ணினது தப்பு தான.. என்னால நான் பண்ணின தப்ப மறக்க முடியாது.. அதே சமயம் என் முதுகுல குத்தினவங்கள மன்னிக்கவும் முடியாது” என்றவனின் விழிகள் கோவத்தில் சிவந்து விட,

நண்பனின் வேதனையல் தானும் வேதனை கொண்ட சத்யனோ “இது ஆபீஸ் பெர்சனல் பேசணும்ன்னா வீட்டுல பேசலாம் கம்பனி என்டர் ஆயிட்டா நான் வெறும் பிஏ நீங்க என்னோட பாஸ் மட்டும் தான்.. சோ பிளீஸ் இனி கம்பனில பெர்சனல் பேசி என்ன சங்கடப்படுத்தாதீங்க பாஸ்..” என்று அதோடு அவனின் அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தவன் “பாஸ் நம்ம கன்ஸ்டரக்ஷன் எடுத்த சைதாபேட் பில்டிங் வொர்க் முடியுது.. நீங்க வந்து ஒன்ஸ் பாத்துட்டா பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு சைன் வாங்கிட்டு டூ டேஸ்ல மொத்தமா பார்ட்டிகிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணிடலாம்”

“ம்ம்..” என்றவனின் முகம் பழையப்படி இறுக்கத்தை தத்தெடுத்து கொள்ள, கூடவே தன் பேச்சை கருத்தில் கொள்ளாதவனின் மீது கடுப்பு எழ, அவனை முறைத்துவிட்டு வெளியேற பெருமூச்சு விட்ட சத்தியாவும் அவனை பின் தொடர்ந்தான்.

ஆம் அக்னி தேவன் அவனே இக்கதையின் நாயகன், பெயருக்கு ஏற்றார் போல் அக்னி பார்வையால் தன்னை எதிர்க்க நெருங்குபவர்களை தள்ளி நிறுத்தும் ஆற்றல் பெற்றவன்.

ஆறடிக்கும் மேல் உயரம் கருப்பும் இல்லை வெள்ளையும் இல்லை மாநிறம் கொண்டவன், தன்னுடைய ஆளுமை கம்பீரத்தால் மங்கைகளை மயக்கும் மாயவன்.

இப்போது கூட அவனின் அலுவலகத்திற்குள் நடந்து வரும் நொடியில் பெண்களின் கண்கள் அவனை ரசிக்கவும் தவறவில்லை, அதை ஆடவனும் உணராமல் இல்லை அதனை அலட்டிக்கொள்ளாமல் அவர்களிடம் அலட்சிய பார்வையுடன் கடந்து விடுவான்.

இதுவரை காளையவன் எந்த பெண்களிடமும் மயங்கியது இல்லை, தன்னை தவறான நோக்கத்துடன் நெருங்கினால் அவர்களை கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் பார்வையை விட்டே தள்ளி நிறுத்தி விடுவான். அது எத்தகைய கொம்பனாக இருந்தாலும் பாவம் கருணை எதுவும் இவனிடம் வேலைக்காகது.

அதனாலே இவனிடம் நெருங்கவே அனைவருக்கும் பயம் உண்டு. 

வேலை என்று வந்துவிட்டால் சிறிது பிசிரு தட்டினாலும் அனைவர் முன்னிலையும் கிழித்து விடுவான் என்ன தான் அவனை பெண்கள் ஆசை தீர சைட் அடித்தாலும், அவனின் கோவம் அறிந்து தேவையான கோப்புவில் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் கூட நடுங்கி விடுவார்கள்.

அதோடு யாரிடமும் அதிகமாக ஒட்டவும் மாட்டான் வார்த்தைக்கு வலித்து விடுமோ என்று எண்ணியே பேசுபவன் தன்னுடைய நண்பன் மற்றும் உதவியாளனாக சுற்றி திரிபவனிடம் 

மட்டுமே அளவை தாண்டி சில நேரம் பேசுவான் இல்லை இல்லை திட்டுவான்.

இவனின் இத்தகைய நிலைக்கு கடந்த காலத்தில் ஆடவன் கடந்து வந்த வடுக்களே காரணம், அதோடு குற்றயுணர்ச்சி என்னும் பெரிய சுமையை வருடங்கள் கடந்தும் அதனை இறக்கி வைக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கிறான்.

ஊரே வியந்து பார்க்கும் செல்வ செழிப்பான தேவன் குடும்பத்தின் வாரிசாகிய அக்னியின் கடந்த காலம் தான் என்ன? அவனின் குற்றயுணர்சியை போக்கும் மருந்தை காலம் அளிக்குமா? 

அதோடு அவனின் கடந்த காலம் தெரிந்து பக்க பலமாக இருக்கும் நண்பனை கசப்பான நிகழ்விலிருந்து வெளியே கொண்டு வர சத்தியதேவனின் முயற்சி வெற்றி பெறுமா?

சுவாசம் தொடரும்…

 –  AY_47😍😍

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page