அத்யாயம் -6

திருக்குறள்

 

திருக்குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -16

 சடங்கு முடிந்து பாவாடை தாவணி போட்டவள் எண்ணம் முழுவதுமே அவனிடம் தான் இருந்தது.

‘ஐயா வந்துருப்பாங்க இல்ல. ப்ச் இனி எப்ப வருவார்களோ/ தீவாளிக்குத்தான் பாக்க முடியும். ‘

அவன் இல்லாத நேரமும் விடுமுறையும் அவளுக்கு அலுப்பைத் தான் தந்தது. அதுவே அவனை இரு தினங்கள் கழித்துப் பார்த்த போது துள்ளி குதித்துக் கொண்டு வந்தாள் . சின்ன பாவாடை சட்டையில் போது தாவணியில் யாரோ போல இருந்தாள் . நீல நிற தாவணி ரோஸ் நிற பாவாடை.ஒற்றை பின்னல் இடுப்புவரை தவழ அதில் நிறைய பூ. முகத்தில் வந்த மகிழ்ச்சி. காதில் கழுத்தில் சில நகைகள். கை நிறைய கண்ணாடி வளையல். அவனிடம் தான் முதலில் காட்டி அழகுப் பார்த்தாள் .

“நல்லா இருக்கா ?”

“ம்! ஜோரா இருக்கு ” சொன்னவன் அவளை அழைத்துக் கண்டு அவளின் குடிசைக்குச் சென்றான். சில பொட்டலங்களை கொடுத்தான்.

இது என்ன? முன்னும் பின்னும் பார்த்தவளுக்கு அது என்ன என்று தெரியவில்லை. இது என்னனு உனக்கு தெரியாதா ?

“தெரியாதே!

“டிவில பாக்கல?”

“எங்க வீட்டுல தான் டிவி இல்லையே “

“ஓ! “லேசாக நெற்றியில் கீறி யோசித்தான். இதை எப்படி இவளுக்கு சொல்லிக் கொடுக்கறது? “ஸ்கூல்ல சொல்லி கொடுக்கலை ?”

இல்லை என்று தலை ஆட்டினாள் .

“உங்க அம்மாகிட்ட இல்ல பக்கத்துல யாரு கிட்டையாவது கேளு “
இவளுக்கேத் தெரியாது என்றால் சுத்தமாக படிப்பறிவும் பொது அறிவும் இல்லாத பெண்கள் தான் இங்கே இருப்பார்கள். யோசித்தான் அந்த கம்பனியின் விளம்பரத்தை

எடுத்து அவளுக்கு யு டியூபில் போட்டுக் காட்டினான்.

அவளுக்கு முகம் சிவந்து விட்டாது.

“ம் ! ஓகே வா?”

பதில் வரவில்லை. தளி மாட்டும் ஆடியது. கூடவே சேர்த்து அவன் அவளுக்கு சில உள்ளாடைகளும் வாங்கி வந்திருந்தான்.

சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் அது இருந்தது.

“இது எதுக்கு?”

“இதுக்கும் வேற வீடியோ பொடாவை?”

பரிதாபமாக இருந்தது அவன் குரல்.

“இல்ல வேணாம்.”

அவன் எப்பபோது இவள் மனதில் அமர்ந்து அட்டிப் பிடிக்க ஆரம்பித்தான் என்பது அவனுக்குத் தெரியும். 

அன்று அவளுக்கு எல்லாவதரியும் வாங்கி கொடுத்து விட்டு வீடு திரும்ப அவன் காரில் ஏறியபோது அவள் அவனிடம் ஓடி வந்து நின்றாள்.

தயக்கத்துடன் நின்றவள் கேட்டது…

“என்ன மாதிரி தான் எங்க ஸ்கூல்ல இருக்க எல்லா பிள்ளைகளும் அவங்களுக்கும்.. 

நான் வீடியோ கட்டணுமா ? விழி பிதுங்கி நின்றான்.

“இல்ல… இது இது வாங்கி தரீங்களா ? எல்லா பிள்ளைகளும் துணி தான் வச்சுக்கிட்டு கிட்டு வருவாங்க ..”

அவனுக்கு என்ன சொல்வது என்றது தெரியவில்லை. மருத்துவனாக இருந்திருந்தால் இது எல்லாம் எளிதாக கடந்து விடலாம். சாதாரண மனிதனுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையே. ஏனோ இதை பற்றி சித்தியிடமும் அவனுக்கு பேச வாய் வரவில்லை. எதையும் தயங்காமல் பேசிக் கூடியவனுக்கு இதைப் பற்றி அவரிடம் பேச கூச்சம் இருந்திருக்கலாம் . அது ஒருபக்கம் இருந்தாலும் சின்னப் பெண் நிச்சயம் திட்டு வாங்குவாள். யோசித்தவன் நேரே பள்ளிக்கு சென்று அந்த தலைமை ஆசிரியையிடம் பேசி விட்டு அவள் கேட்டபடியே அங்கே இருந்த பெண் பிள்ளைகளுக்கு மலிவு விலையில் கிடைக்க அருகே இருந்த பக்கத்துக்கு கிராமத்தில் இருக்கும் மகளிர் சுய உதவிக்கு குழுவில் ஏற்பாடு செய்து விட்டான். சித்தப்பா எதுக்கு இந்த தேவையில்லாத செலவு? ஏதாவது கோவில் குளத்துக்கு செய்தால் புண்ணியமாவது கிடைக்கும் என்று சுருதி கூட்டி பேசியவருக்கு… 

“அதுனால என்ன சித்தப்பா? ஏதோ செய்யணுன்னு தோணுச்சு” என்றதோடு நிறுத்திக் கொண்டான். அடுத்த சில நாட்களில் இவள் பள்ளிக்கு சென்றதும் விஷயம் கேள்வி பட்டாள். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி .

பள்ளியில் இருந்து வந்தவள் ஓடி வந்து அவனிடம் நன்றி சொன்னாலும் ஏனோ அவளால் முன்பு போல அவனிடம் இயல்பாக பேச முடியவில்லை . அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்குத் தான் அந்த அவஸ்தை ஏதோ போல இருந்தது. ஊருக்கு கிளம்பினான். பேசாமல் அவனிடத்தில் வந்து நின்றாள்.

“ஹோய் என்ன?”

அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்த்த போது அவள் கண்களில் கண்ணீர்.

“எதுக்கு அழகை?”

இது எப்போதும் நடப்பது தான். நம் வீட்டில் கூட சின்ன பிள்ளைகள் இப்படித் தான் தானிருப்பார்கள். வீட்டில் தங்கிய உறவுகள் பிரியும் போது கேவிக் கேவி அழுவார்கள். அது போலத் தான் சின்னப் பெண்ணும் . எப்போதுமே அவன் விடுமுறை முடிஞ்சு செல்லும் போது இப்படித் தான் கேவிக் கேவி அழுவாள்.

அது போலத் தான் இதுவும் என்று அவன் நினைக்க இதற்கு வேறு ஏதோ அர்த்தம் இருக்கிறதா?

“ஆம்! அன்று தான் அவர்கள் இருவரும் கடைசியாகப் பார்த்தது.

(இன்னும் முதன் முதலில் அவர்கள் சந்தித்த கொண்ட தருணம் பற்றி நான் சொல்லவில்லை. இப்போது கதை ஓட்டத்திற்கு ஏற்ப இந்த நிகழ்வுகள்….)

தீபாவளிக்கு அவன் அங்கு வந்த போது சின்னப் பொண்ணு ஊரில் இல்லை. தீபாவளிக்கு சில தினங்கள் முன்பு வந்த இவன் தம்பி ஆதவன் வெடித்த பட்டாசு அவர்கள் வீட்டின் கூரையில் விழுந்ததில் பெரியவர்கள் இறந்திருக்க இவளை மட்டும் காப்பாற்றி வீட்டிலிருந்து வெளியேத் தள்ளி விட்டார்கள்.

குடிகார கணவனிடமிருந்து இவளைக் காப்பாற்ற அவள் சித்திதான் இவளை அந்த விவேகானந்தா ஆசிரமத்தில் தான் சேர்த்து விட்டார்கள்.

இப்போது ராஜாவின் அரண்மனையில் அவன் மனைவியாக அவனுடன்…

ராஜாவின் மனைவி என்றால் ராணியா? இல்லையாம் .. யார் சொல்லப் போகிறார்கள்?

அவளின் தோளில் முகம் சாய்ந்து கொண்டு இடையோடு கட்டிக் கொண்டவனை பார்க்க வசதியாக முகம் திருப்பிக் கொண்டாள் அவள் .

அவனின் கண்ணுக்குள் அவளின் பார்வை ஊடுருவியது. அதில் அவனுக்குத் தெரிந்த, அவனுக்கு மட்டுமே தெரிந்த மறந்திருந்த பல செய்திகள் இருந்தன. அவன் யோசித்துக் கொண்டிருக்க சோர்ந்திருந்தவள் மெதுவாக அவன் நெஞ்சில் முகம் புதைத்து கண் மூடி உறங்க ஆரம்பித்தாள்.

“ஜில்லு ! நான் கொடுத்த பரிசு நீ ஏத்துகிட்ட . இப்ப நீயாவே ஏதாவது கேளு. நான் வாங்கித் தரேன்.”

“கண்டிப்பா?” கழுத்தை மட்டும் தூக்கி அவன் முகம் பார்த்தவள் அவன் கண்களை விரித்துக் கேட்டாள் .

“கண்டிப்பா !”

“என்னை கொடிவேரி நீர்வீழிச்சிக்கு கூட்டிட்டு போறீங்களா ?”

“சீ! இது தானா ? அது நாம போகலாம். வேற ஏதாவது கேளு .”

“நீங்க எனக்குத் தர வேண்டியது இன்னும் ஒரு பரிசு காத்திருக்கு . நினைவில் இருக்கட்டும்.”

அவன் சரி சொன்னானா இல்லையா அவளுக்குத் தெரியாது . அவள் தான் அப்போதே உறங்கி விட்டாளே .

அவளை இன்னும் இறுக்கி அனைத்துக் கொண்டு இவனும் உறங்கிப் போயிருந்தான்.

அவள் கேட்ட பரிசை அவன் தருவானா இல்லையோ அவனாகவே வேறு ஒரு பரிசு கொடுப்பான். அதை அவள் ஏற்றுக் கொள்ளட்டும். அப்போது தான் பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

=========================================

  கீர்த்தி. ரவியின் தங்கை. தோற்றம்? அளவான உயரத்தில் நம்ம பழைய லஷ்மி ராய் சாயலோட ஒரு பொண்ணு ….

சூர்யாவின் அலுவகத்தில்….

“சார் !”

சூர்யா முன்பு வந்து நின்றாள் அவள் .

“எஸ்!” செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்த படி கேட்டான்.

என்னோட சிஸ்டம் கொஞ்சம் பிராபலமா இருக்கு. ரிப்பேர் செய்யணும்.

“ஓகே ! பாலு நம்பர் இருக்கா?”

“இல்ல சார் ! தெரியாது “

காண்டாக்ட் லிஸ்டில் தேடித் பார்த்தவனுக்கு அலைபேசி எண் கிடைக்கவில்லை.

“எங்கிட்ட நம்பர் இல்ல. நீங்க கார்த்திக்கு கால் பண்ணி கேளுங்க . அவன் ஏதோ பேமிலி பன்க்ஷனுக்கு போய் இருக்கான். போன் எடுக்கலன்னாலும் அவனே திருப்பி கூப்பிடுவான்.”

“ஓகே சார் !”

திரும்பியவளிடம்,

“ஆ! மிஸ் ..”இழுத்தான்

“கீர்த்தி சார்.”

“அதுவரைக்கும் என்ன பண்ண போறீங்க?”

“பக்கத்துல இன்னொரு சிஸ்டம் ப்ரீயா இருக்கு சார். அங்க வேலை பார்த்துக்கறேன்.

“ஓகே குட்!”

மீண்டும் தனது வேலையில் மூழ்கினான் அவன்.

சூர்யா எப்போதும் வேலையில் கண்டிப்புடன் இருந்தாலும் ஆவணி அணுகுவது எளிது தான்.

“நம்ம கம்பனில, நீ இந்த வேலை செய் நீ அது செய்னு ஒவ்வொருத்தருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வருன்னு எதிர்பார்க்காதீங்க. நீங்களாவே தானே முன் வந்து வேலைகள் செய்யணும். எனக்கு இது வேலை இல்லை. அந்த வேலை தெரியாது என்று எப்போதும் யாரும் சொல்லக் கூடாது . யாரும் பிறக்கும்போதே எல்லாத்தையும் கத்து வைச்சுகிட்டு வர்றதில்லை. தெரியலைன்னா பரவாயில்லை. தெரிஞ்சுக்கற ஆர்வம் தான் வேணும். “

அவனின் இந்த போக்கும் செயல்களும் தான் இப்போது கார்த்திக் இல்லாத நேரத்தில் புதியதாக சேர்ந்திருக்கும் கீர்த்தியை முதலாளியிடம் வந்து தைரியமாக பேச வைத்திருக்கிறது .

அவள் சென்ற பிறகு ,

“கார்த்திக் இல்லை என்றாலும் அவன் வேலைகள் எல்லாவற்றையும் செய்ய வேறு வேறு ஆட்களை தயார் செய்ய வேண்டும். கார்த்திக் மட்டுமா? இல்லை, நானே இல்லை என்றாலும் இந்த தொழில் யாரையும் நம்பி இருக்கக் கூடாது.”

மனதிற்குள் எண்ணிக் கொண்டான் சூர்யா .

கார்த்திக் இவனின் கல்லூரி கால நண்பன். இவனை விட இரு வயது சிறியவன். ராகிங்கில் மாட்டிக் கொண்டு கார்த்திக் தடுமாறிய நேரம் காப்பாற்றியவன் தான் சூர்யா. இருவருக்கும் பிறகு வந்த நாட்களில் நல்ல நட்பு உருவானது.

அதுவே தான் படிப்பு முடிச்சு இவன் தொழில் தொடங்கவும் தடுமாறிக் கொண்டிருந்த நேரங்களில் அவ்வபோது உதவிக்கு என்று வந்தவன் அப்படியே இவனிடம் வேலைக்கு சேர்ந்து விட்டான். முதலில் எல்லாம் பெரியதாக சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும் பிறகு வந்த தொழில் வளர்ச்சியும் அவனுக்கு நல்ல சம்பளமும், அந்தஸ்தும், மரியாதையும் நிறையவே கொடுத்தது . கூடவே தொழில் இன்னும் ஒரு நிலைக்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக்கு என்று சில பங்குகளும் உண்டு. முதலாளிக்கு அடுத்த நிலை என்றால் என்ன சும்மாவா? அவனுக்கு இந்த வாய்ப்பு எங்கும் கிடைக்காது. 

இருப்பினும் அவன் சூர்யாவை விட்டு தனியேப் போகப்போகிறான். என்ன காரணம் வர போகிறதோ ?

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page