அத்தியாயம்:31
ராகவன் மயூ பாப்பா என அழைத்து கொண்டு ஓடி வந்தான்…அவனை கண்டதும் சக்ரபாணி முகம் மாறியது அவர் வெங்கட் என… சத்தமாக அழைத்தவர்.
“ இப்போ இவர் எதற்காக இங்கே வந்தார் என கேளு…? என்ன என் பேத்தி செத்து விட்டாளா என்று…இவர் இரண்டாவது பொண்டாட்டி, மச்சான் பார்த்து வர சொல்லி அனுப்பினாங்களா..?
இல்ல என் பெண்ணு, பேத்தி இல்லை தானே…அதனால் அவங்க சொத்தில் பங்கு கேட்டு வந்தாரா என கேளு..? தயவு செய்து அவரை இங்கே இருந்து போக சொல்லு.
நானே என் பேத்திக்கு இப்படி ஆயிற்று என்று கவலையில் இருக்கிறேன்…இதில் இவர் வேறு வந்து டென்ஷன் ஏற்றி கொண்டு… நான் அமைதியாக இருக்க காரணம் குரு தான்.
அவனுக்காக தான் இவரை எல்லாம்…பொறுத்து கொள்ள வேண்டியதாக இருக்கு…” என்றார்.
கல்யாணி “ என்னங்க என்ன இருந்தாலும் அவர் நம்ம பெண்ணோட புருஷன்…நம்ம பேத்தியின் அப்பா கொஞ்சம் பொறுமையாக பார்த்து பேசுங்க…
மற்றவங்க காதுக்கு விஷயம் போனால்… குரு அண்ணுக்கு தானே அவமானம்…” என்றார்.
சக்ரபாணி “ என்ன சொன்ன நம்ம பொண்ணோட புருஷனா இவரா…? என்ன கல்யாணி எல்லாம் நொடியில் மறந்து விட்ட போல…என் ஒரே பெண்ணை ரத்த வெள்ளத்தில் பார்த்ததை… இந்த நொடி வரைக்கும் கூட என்னால் மறக்க முடியவில்லை.
அவள் செய்த தப்பு என்ன தெரியுமா..? இவரை போல ஒருவரை காதலித்தது தான்…பழசை எல்லாம் நான் திரும்ப கிளற விரும்பவில்லை வெங்கட் என்ன ஊமையாகி விட்டாயா..?
இல்ல கல்யாணி போல நீயும் நினைக்கிறாயா..? உன் காதில் நான் சொன்னது விழவில்லையா..? என கேட்டார்.
வெங்கட் “ மாப்பிள்ளை என ராகவனை அழைக்க… சக்ரபாணி அவரை பார்த்து தன் நெற்றி கண்ணை திறந்தார் .
ராகவன் “ அங்கிள் நீங்க திரும்ப ஏதும் சொல்ல வேணாம்…எனக்கு காது நல்லா கேட்கும் இப்போ நான் ஏது சொன்னாலும் மாமாவுக்கு புரியாது…சியாமளாவை நான் கொலை செய்யவில்லை.
அவள் நான் காதலித்து கல்யாணம் பண்ணியவள்…ஊர், உறவு என்ன சொன்னாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை…என் சியாமிக்கு உண்மை தெரியும் அது எனக்கு போதும்.
மயூரிகா என் வாரிசு என் ரத்தம் அவளை பார்க்க, பேச எனக்கு… யார் அனுமதியும் தேவை இல்லை …அதை யாராலும் தடுக்க முடியாது நானும் பணக்கார பரம்பரையில் இருந்து வந்தவன் தான்.
சியாமி சொத்து எனக்கு எதற்க்கு…அவளை நான் காதலித்தது அவள் சொத்து, அழகுக்காக இல்லை….அவள் குணத்துக்காக தான் இதோ இந்த கோவிலில் தான்… அவளை முதல் முதலாக பார்த்தேன்.
அதை என் உயிர் போகும் தருவாயில் கூட மறக்க மாட்டேன்…என் காதல் எப்பவும் அவள் ஒருத்தி மேலே தான் மனிதர்கள் என்றால் தவறு விடுவது இயற்கை… அதற்காக எப்பவுமே இந்த சமூகம் அவனை கெட்டவனாக பார்த்தால் எப்படி..?
அது தான் அவன் திருந்த நினைத்தால் கூட…முடிவது இல்லை என்னை புரிந்து கொண்டவங்க என் பெரியம்மா மட்டும் தான்…இத்தனைக்கும் அவங்க என் சொந்த ரத்தம் கூட இல்லை.
நான் இப்போ பார்க்க வந்தது என் பெண்ணை…அதற்க்கு யார் அனுமதியும் எனக்கு தேவையில்லை…” என சொன்னவன்… மயூரியின் அருகில் போய் அவள் தலையை தடவி விட்டவன்.
“ எனக்கு தெரியும் மயூ நீ இந்த அப்பாவை வெறுக்கிற என்று…காரணம் உன் அம்மா சாவுக்கு நான் தான் காரணம் என்று…மற்றவங்க போல நீயும் நினைக்கிற அது தான் உன் அப்பாவை நீ தேடவில்லை.
நான் ஏன் உன்னை என் கூட அழைத்து போகவில்லை என்றால்…தன் ஒரே பெண்ணை இழந்த உன் தாத்தா அவள் உருவில் இருக்கும்…உன்னையும் இழந்தால் உடைந்து போய் விடுவார் என்பதால் தான்.
உன் அம்மாவுக்கு உன் தாத்தா என்றால் உயிர்…அவள் உயிரோடு இருக்கும் போதே என் கிட்ட கேட்டது இரண்டு விஷயம் தான்…
ஒன்று என் காதலை அடுத்து தன் அப்பாவை… நான் எக் காரணமும் கொண்டு கஷ்டப்படுத்த கூடாது என்று.
அதற்காக தான் நான் உன்னை தூக்கி அவர் கையில் கொடுத்தேன்…அடுத்து என்ன தான் இருந்தாலும் சிற்றனை அம்மாவாக முடியாது….நான் வீட்டில் பெரும்பாலும் இருக்க மாட்டேன்…அப்போ உனக்கு ஏதும் நடந்தால்.
என்னால் மட்டுமல்ல உன் அம்மாவின் ஆன்மாவால் கூட அதை தாங்கி கொள்ள முடியாது…அது தான் உன் கிட்ட இருந்து முற்றாக விலகி நின்றேன்…அதற்காக என் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்னும் போது நான் விலகி நிற்க முடியுமா..?
இது உன் அம்மாவின் நடனம் கலந்து இருக்கும் இடம்…அவளின் கனவு ,லட்சியம் எல்லாம் நடனம் தான் அதை தன் மகளுக்கு அவள் கொடுத்து விட்டு போய் இருக்கிறாள்…இன்று பவதீப் மூலமாக உன்னை காப்பாற்றியது கூட உன் அம்மா தான்.
ஜாக்கிரதையாக உடம்பை பார்த்து கொள்ளு பாப்பா…என்னால் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வர முடியாது அதற்க்கு அனுமதியும் உன் தாத்தா தர மாட்டார்…அவரை காயப்படுத்த என்னால் முடியாது.
நீயும் என்னை வெறுக்கிற என தெரியும்…பரவாயில்ல உண்மை ஒரு நாள் வெளிவரும் அப்போ நீ மட்டுமில்ல… மற்றவங்களும் என்னை புரிந்து கொள்வாங்க நான் உன் நலத்தை பற்றி…
பெரியம்மா, புவனா கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்….அப்பா கிளம்புகிறேன் ஜாக்கிரதையாக இரு …” என்று சொல்லி விட்டு கிளம்ப போனவன் கையை… மயூரி பற்றி கொண்டவள் அப்பா என அழைத்தாள்.
ராகவன் கண்களை கலங்க மகளை பார்த்தவன்…அவள் கன்னத்தை தடவி விட்டு பற்றிய கையை… மெல்ல விலகி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு போய் விட்டான்.
வெங்கட் “ சக்ரா மாப்பிள்ளை திருந்தி விட்டார் போல இருக்கு டா…என்ன இருந்தாலும் கூட மயூரி அவரின் மூத்த வாரிசு அப்பா என்ற அந்தஸ்தை அவருக்கு கொடுத்தவள்…அடுத்து மயூ சியாமளாவின் மறு உருவமாக இருக்கிறாள்.
அது தான் அவரை கட்டி இழக்க ஓடி வந்து இருக்கிறார்…மூர்த்திக்கு ராகவனின் இந்த மாற்றம் பற்றி தெரிந்தால் ரொம்ப சந்தோஷபடுவான்…” என்றார்.
சக்ரபாணி “ நான் நினைக்கிறேன்….வயதானால் மூளை மழுங்கி விடும் என்று நீயும் அப்படி தான் போல இருக்கு…நீ என்ன பாரினில் இருந்து இப்போ தான் ரிட்டன் ஆனது போல பேசுகிற.
என் கூடவே இருப்பவன் தானே நீ சியாமளா பிறந்து வளர்ந்தது எல்லாம் உன் கண் முன்னே…எல்லாம் தெரிந்த நீயே இவனை நம்பினால் இவன் பற்றி தெரியாத சனங்கள் ஓட்டு போட்டால்….அவங்களை தப்பு சொல்ல முடியாது.
குள்ள நரி எப்போ தன் குணத்தை மாற்றி இருக்கு…இவனும் கிட்ட தட்ட அப்படி தான் இப்போ எதற்காக இந்த நடிப்பு என்று தெரியுமா…? எலக்சன் வருகிறது தானே அது தான்.
எல்லா உண்மையும் தெரிந்த நீயே இவனை நம்பினால்…முழு உண்மையும் தெரியாத என் பேத்தி… அவன் நடிப்பை நம்புவது எனக்கு ஆச்சரியமாக இல்லை இங்கே பாரு மயூ பாப்பா… தாத்தா எப்பவுமே உன் நல்லதற்காக தான் எதையுமே சொல்வேன் செய்வேன்.
எனக்கு மட்டும் ஆசையா அப்பா இருந்தும் என் பேத்தி தனியாக நிற்க…உன்னை இப்படிப்பட்ட ஒரு நிலையில் நிறுத்தியவன் உன் அப்பன் தான் பாப்பா…அவன் யாருக்குமே உண்மையாக இல்லை.
பெத்த தகப்பன் போல வளர்த்த குருவை கூட தன் சுயநலத்திற்காக தூக்கியெறிந்தவன்…காதலித்து அவனை நம்பி கை பிடித்தவளின் காதலை, நம்பிக்கையை கொன்று புதைத்தவன்…இப்படிப்பட்ட இவன் உனக்கு மட்டும் உண்மையாகவா இருப்பான்…?
நீங்க யாரு அவனை நம்பினாலும் கூட நான் நம்ம மாட்டேன்…என் பெண்ணை தான் இழந்து விட்டேன் என் பேத்தியை இழக்க மாட்டேன்…அவனை நம்பாதே பாப்பா எல்லாம் நடிப்பு…” என்றார்.
பவதீப் ஆரோக்கியமான இளைஞன் மட்டுமல்ல… அவனின் ராணுவ பயிற்ச்சி காரணமாக விரைவாக கண் விழித்து விட்டான்.
அவன் மெதுவாக எழ போக வலது தோளைபட்டை சுளீரென்று வலித்தது…அவன் உடல் குண்டு காயம் எல்லாம் பார்த்தது தான்…என்ன இருந்தாலும் காயம் காயம் தானே அவன் உடம்பு என்ன இரும்பிலா செய்து இருக்கு..?
பவதீப் வலது தோள்பட்டையை பிடித்து கொண்டவன்…முகத்தை சுளிக்க “பாஸ் எழுந்திருக்க வேணாம்..” என சொல்லி கொண்டே தர்மா ஓடி வந்தான்… அவன் கையில் ஆவி பறக்கும் ஹார்லிக்ஸ் கப் இருந்தது.
அதை டேபிளில் வைத்தவன் மெதுவாக…பவதீப்பை பிடித்து அமர வைத்தான்.
தர்மா “ என்ன பாஸ் நீங்க இப்படியா யாருமே இல்லாத போது சட்டென எழுந்து கொள்வது…பாருங்க காயத்தில் இருந்து ரத்தம் கசிகின்றது இருங்க…
கட்டை மாற்ற வேணும் நான் டாக்டரை போய் அழைத்து வருகிறேன்….முதலில் களைப்பு போக இந்த ஹார்லிக்ஸை சாப்பிடுங்க …” என்றான்.
பவதீப் “ தர்மா நம்ம யுத்தத்தில் பார்க்காத ரத்தமா இல்ல காயம்..? இது சின்ன கத்தி கீறல் தானே…ஒரு வாரம் இல்ல இரண்டு வாரத்தில் ஆறி விடும் சரி இதை விடு ராகுல் எங்கே காணோம்..? சி.எம் சாரின் பாதுகாப்புக்கு நிற்பது யாரு..? என கேட்டான்.
தர்மா “ சி.எம் சாரின் பாதுகாப்புக்கு ராகுல், அலெக்ஸ் நிற்கிறாங்க…அதை பற்றி நீங்க கவலைப்பட வேணாம் இது சின்ன கீறலா உங்களுக்கு..? டாக்டர் சொன்னார் இன்னும் ஆழமாக கத்தி உள்ளே இறங்கி இருக்க… உங்க உயிருக்கு ஆபத்தாக முடிந்து இருக்கும் என்று.
காயம் ஆழம் தான் தையல் போட்டு இருக்கு…இன்னும் இரண்டு, மூன்று வாரத்துக்கு காயத்தில் தண்ணீர் பட கூடாது என டாக்டர் சொல்லி இருக்கிறார்…சென்னையில் ஒரு தடவை ஹாஸ்பிட்டலில் காட்ட சொன்னார்…” என்றான்.
பவதீப் “ ம் ‘ சரி மக்கள் எல்லாம் சேப்பாக இருக்கிறாங்க தானே…கெஸ்ட் எல்லாம் ஊருக்கு கிளம்பி விட்டாங்களா..? வெளியூரில் இருந்து வந்தவங்க எல்லாம் சேப்பாக தானே இருக்கிறாங்க…? என கேட்டான்.
தர்மா “ கெஸ்ட் எல்லாம் கிளம்பி விட்டாங்க…மயக்கம் தெளிந்த பார்ட்டிசிபன்ஸ் சிலர் தங்கள் ஊருக்கு கிளம்ப போவதாக சொன்னாங்க…சி.எம் சார் தான் அப்படி எல்லாம் நீங்க சட்டென கிளம்ப முடியாது.
எங்களை நம்பி நிகழ்சியில் கலந்து கொள்ள வந்த உங்களை…வெறும் கையோடு அனுப்ப மாட்டோம் உங்களை கெளரவித்து தான் அனுப்புவோம்…இரண்டு நாள் எங்க ஊரில் இருங்க.
உங்க உயிருக்கு ஆபத்து வராது பார்த்து கொள்வது என் கடமை என சொல்லி…அவங்கள் சென்னையில் உள்ள ஹோட்டலுக்கு அனுப்பி விட்டார்… சி.எம் சார் பேசியதால் தான் நிலமை ஒரு மாதிரி கட்டுக்குள்ளே இருக்கு பாஸ்…” என்றான்.
அப்போது வெளியே சலசலப்பு கேட்க பவதீப், தர்மா இருவருமே திரும்பி பார்க்க…மயூரியை தூக்கி கொண்டு கிருபா வர அவன் பின்னால்… சக்ரபாணி, கல்யாணி, அசோக் வந்தார்கள்.
மயில் ஆடி வரும்…
