மௌனத்தல் உடைந்த காதல் 26

ஆதி தன்னவளை அமைதியாக பார்க்கவும், “ஆதி அத்த நந்தா இங்க சுத்தமாவே வரப்போக இல்லாம, ஏன் அம்மாகிட்ட போன்ல கூட பெருசா பேச்சு வார்த்த இல்லாம இருக்கவும், ஒரு அம்மாவா அவங்களுக்கு எந்த அளவுக்கு வலி இருக்கும், ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை பெத்து ,ஒரு புள்ள சுத்தமா தன் கிட்ட பேச்சு வார்த்தையே இல்லாம இருக்கும்போது ,என்பதால்தான் ஒவ்வொரு நேரமும் நான் எல்லா இடத்திலும் இருக்கிறதால தானே நந்தா  அம்மாவை விட்டு விலகி இருக்கான்.

அதுவே நான் விலகி இருந்தேன்னா கல்யாணம் ஆயிடுச்சு எனக்குன்னு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இருக்கு, புள்ள குட்டி இருக்குன்னு நான் விலகி இருந்தனா, அப்போ அவனுக்கு தாயை பார்க்க வேண்டிய கடமை தனக்கும் இருக்குன்னு உணர்ந்து அம்மாவை அவன் கூட கூட்டிட்டு போகணும்னாலும் இல்ல ,அம்மா கூட அவன்  வந்து இங்க இல்ல நாளுமே கூட,அப்பப்போ வரப்போக இருக்கவும், பேர ப்பிளையை கொண்டு வந்து கண்ணுல காமிக்கவும், நல்லது கெட்டதுனா பார்க்கவும்  வருவான் போவானு தான், அத்தோடு நான்  ஒவ்வொரு நேரமும் அம்மாவுக்கு நான் இருக்கேன்னு போய் நிக்க போக தானே நந்தா விலகியே நிக்கிறான் என்றது தான் ஒவ்வொரு முறையும் அம்மா இங்கே வரும்போது எல்லாம் அத்தை சொல்லிட்டு இருக்கறதும் கூட ,

இப்பவும் காசு பணம் நீ கொடுக்கிறத நிறுத்தினால் தான், அம்மாவ பாத்துக்க, அம்மாவோட கை செலவுக்கு காசு வேணும், அதை போட்டு விட்டுட்டேன்னு சொல்றதுக்காவது போன் பண்ணி பேசுவான்ல, ஏதாவது உடம்பு முடியலன்னா என்ன ஆச்சுன்னு கேட்கவாவது போன் பண்ணுவான் இல்ல, அப்பப்ப வந்து பார்த்துட்டு போவான் இல்ல, ஆனா அது எதுக்குமே அவனுக்கு இடம் கொடுக்காம, ஒவ்வொரு நேரமும் எல்லாத்துக்கும் இழுத்து பிடித்து ஓடுறதாலதான அவனும் தனக்கென்ன ,அதான் பாத்துக்க ஆள் இருக்கேனு நினைப்புல தானே அங்க ஜம்பமா உட்கார்ந்துகிட்டு  அவனோட தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை பார்த்துட்டு இருக்கான் .

எந்த அளவுக்கு கட்டினவன் பொண்டாட்டிய பார்க்கிறது முக்கியமா ,அதே அளவுக்கு பெத்தவங்கள பாக்குறதும் முக்கியம் தான், அதுவும் உங்க அப்பா இல்லை என்ற போது, முழு பொறுப்பு அவனுக்கு இருக்கு, எந்த அளவுக்கு பொண்ணுக்கு இருக்கோ அதே அளவுக்கு தான் பையனுக்கும் இருக்கு, பையனுக்கு மட்டும்தான் முழு பொறுப்பு இருக்கு, பொண்ணு பார்க்க கூடாதுன்னு நான் சொல்ல கிடையாது ,என் பொண்ணு ஏன் இங்க வரானு நான் கேட்கிறேனா ?, அதே மாதிரி நீ அங்க போறத நான் கேட்கல.

நீ பணம் காசு கொடுக்கறது பிரச்சனை கிடையாது ,ஆனா, நீ குடுக்குறதாலதான, நீ பார்க்கிறதால தானே, உன் தம்பி இங்க சுத்தமா வராம,அதான் பார்த்துக்க அக்கா இருக்கே, நமக்கு என்ன அப்படின்னு ஒதுங்கி நிற்கிறான் .ஆனால், இது எதுவுமே நீ செய்யாம விலகி நின்னு பாரு, அவன் எல்லாத்துக்கும்  வருவான்னு சொல்லி இருக்காங்க.. ஆனா எனக்கும், அம்மாவுக்கும் தான் மனசு கேட்க மாட்டேங்குது ,என்கிட்டயும் அவங்க பலமுறை எடுத்து சொல்லிட்டாங்க.

இப்பையும் அத்தையோட நினைப்பு அது மட்டும் தான். அவங்க வாய்விட்டு இதான் விஷயம்னு சொல்லாம இருக்கலாம். ஆனா அவங்க நினைப்பு இதுதான்” என்றாள் முழுமூச்சாக,

தன் தாயைப் பார்த்தான். அவர் கண்களில் நீர் வழிய அமைதியாக நின்றார்.

“மா என்ன மன்னிச்சிடுமா” என்று தாய் அருகில் சென்றான்.

” போடா “என்றவர் நகரப் போக. வேகமாக அவரை தன் தோளில் சாய்த்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.

அவர் கையை பிடித்துக் கொண்டு அழுகையில் கரைந்தான்.

” இப்ப வர எதையுமே முழுசா புரிஞ்சுக்காம, அப்பப்ப வார்த்தையை விடுறீங்க. பேச வேண்டிய இடத்துல பேசாம இருக்க வேண்டியது,பேசக்கூடாத இடத்துல பேச வேண்டியது “என்றாள்.

“என்ன மன்னிச்சிடுங்க மா” என்றவன்,மனைவியின் புறம்  திரும்பி,” என்ன மன்னிச்சிடு சுதா. இப்போ ஒரு வருஷம் ஆகியும் கூட ,இந்த நிமிஷம் வரைக்கும் உன்கிட்ட மனசு வந்து மன்னிப்பு கேட்காம தானே இருக்கேன்”

“ஏங்க  என்ன பண்றீங்க?”

“இல்ல சுதா. சொன்னாலும் சொல்லாட்டியும் பேச வேண்டிய இடத்துல அமைதியாவும், எங்கெல்லாம் பேசக்கூடாதோ ,அங்கெல்லாம் பேசிட்டும் இருக்கேன். என் தப்பை நான் திருத்திக்க வேண்டி இருக்கு. என் தப்பை ஒவ்வொரு முறையும் புரிய வைக்க ஒரு  ஆளை தேடமா , இனியாவது என் தப்பை உணர்ந்து அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்”

” அப்படி இல்ல ஆதி..”

” நீ என்ன விட்டு கொடுக்க கூடாதுன்னு நினைக்கிற சுதா. என்கிட்டவே நீ என்ன விட்டு கொடுக்காம பேச நினைக்கிறேன் .ஆனா, உன்ன நான் என் கூட பொறந்தவ, பெத்தவங்க முன்னாடி ,உன்ன பெத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுத்து நின்னுட்டு இருந்தேன் ,என்ன மன்னிச்சிரு” என்று அவளின் கையையும் பிடித்தான் .

அவளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்க. மாமியாரும் மாமனரும் நகர்ந்து விட்டனர்.

வேகமாக அவனை கட்டி அணைத்து இருந்தாள்.” ஆதி ப்ளீஸ்!  இப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்கு தான் கஷ்டமா இருக்கு. நீங்க ” என்றவள் பேச முடியாமல் நிறுத்த,

“நீ எனக்காக உன் வலியை எவ்வளவு வேனா தாங்கிட்டு பேசலாம் சுதா.ஆனா, அன்னைக்கு உன்னோட வலி என்னன்னு என்னால உணர முடியுது. ஆனா” என்றவனும் அழுகையில் கரைய.

” எதுவும் இல்ல ஆதி” என்று அவனை தட்டிக் கொடுத்து இருந்தாள்.

மேலும் ஒரு வாரம் கடந்து இருந்தது. தன் மருமகள் தான் கூற வந்ததை சரியாக புரிந்து கொண்டாள். தாய்க்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், தாய்க்கு ஒன்றென்றால் இவளே ஒவ்வொரு முறையும் அனைத்து இடத்திலும் போய் நிற்பதால் தானே இவளது தம்பிக்காரன் வந்து தாயை பார்க்காமல் இருக்கிறான் என்பதை உணர்ந்து விட்டாள் என்ற பிறகு நேராக மருமகளையும் அழைத்துக் கொண்டு சம்மந்தியைப் பார்க்க சென்றிருந்தார்.

” வாங்க அண்ணி! வா சுதா.வரனு ஒரு வார்த்தை கூட சொல்லல.இப்ப எப்படி இருக்கு உடம்பு பரவாயில்லையா ?”என்று மகளை நலம் விசாரித்தவர். சம்மந்தியை விசாரித்து விட்டு, இருவருக்கும் டீ  போட்டு கொடுக்க.

” இங்கே உட்காரு கமலா. உன்கிட்ட பேச தான் வந்து இருக்கேன்”

இவ்வளவு நேரம் நன்றாக பேசியவர் உன்கிட்ட பேச தான் வந்திருக்கேன் என்றவுடன் சிறிது கை ,கால் நடுக்கம் எடுக்க.

கமலாவை அருகில் உட்கார வைத்து, தட்டிக் கொடுத்தார். கமலா மகளுக்கு கண்ணை காட்டி என்ன? என கேட்கவும்.

சிரித்த சித்ரா ,”உனக்கும் என் மேல நம்பிக்கை இல்லையா ?”

“ஐயோ அண்ணி!” என்று பதறியவர். “அப்படியெல்லாம் எதுவும் இல்ல அண்ணி. ஏன் இப்படி பேசுறீங்க ?எனக்கு உங்களைத் தெரியாதா ?அன்னைக்கு வார்த்தை தடிச்சதுக்கும் காரணம் என்னன்னு சுதா சொல்லிட்டா. திரும்பத் திரும்ப அதையே பேசாதீங்க, நான் நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. அவ்வளவுதான்,  உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல அண்ணி”என நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்.

“சரி உக்காரு “

” சொல்லுங்க அண்ணி” என்று சொல்லும்போதே அவருக்கு வேர்த்துவிட்டது.

சித்ரா தன் புடவை முந்தானையால் அவரது முகத்தை துடைத்து விட்டார் . “உனக்கு லோ பிபி வேற, எப்படி வேர்த்து கொட்டுது பாரு.சாக்லேட் எங்க வச்சிருக்க? இல்லன்னா சர்க்கரை எடுத்துட்டு வருவ ?”

“இல்ல வேணா அண்ணி. நான் நல்லா தான் இருக்கேன் “என்று சொல்லும்போது, சுதா சாக்லேட் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.

சாக்லேட்டை ஒன்றை வாயில் போட்டவர்,மகளையும் பார்க்க.

“அமைதியா இரு மா ஃபர்ஸ்ட்”

“சொல்லுங்க அண்ணி”

“உனக்கு  எதுக்கு இவ்ளோ பதட்டம் ?”

“இல்ல அண்ணி அது..” என ஒரு சில நொடிக்குப் பிறகு, “நம்ம சுதா நல்லா தானே இருக்கா? புள்ளைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”என்றார் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு,

தனக்கும்,தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஏதாவது பிரச்சனையோ ? அதனால் தான் அவரை தேடி நேரில்  விஷயத்தை சொல்ல வந்திருக்கிறோமோ? என்று எண்ணியே தாய் பதட்டம் அடைகிறார் என்பதை உணர்ந்தவள்.

அவரின் கையைத்தட்டிக் கொடுத்து, தாயின் தோளில் சாய்ந்தவள்,” மா எனக்கு எதுவும் இல்ல. குழந்தையும் நல்லா தான் இருக்கு “

“ஸ்கேன் பண்ணதுல எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்லடி .இரண்டு பேரும் சேர்ந்து அதுவும் என்ன அங்க கூட வர சொல்லாம ,நீங்க இங்க வரவும் எனக்கு பதட்டமா ஆயிடுச்சு”என படபடத்தார்.

” ஒன்னும் இல்ல கமலா” என்று தட்டிக் கொடுத்த சித்ராவும்,” உன் புள்ளையை பத்தி தான் பேச வந்திருக்கேன். ஆனா மகளை பத்தி இல்ல, மகன பத்தி”

இப்பொழுது தன் மகளைப் பார்த்தவர்,” ஏ சுதா நந்தாவுக்கு ஏதாவது பிரச்சனையா? காசு தேவைப்படுதா? இல்ல ஏதாவது உடம்பு சரி இல்லையா டி “என  மீண்டும் பதட்டமாக ,

“கமலா முதல்ல பதட்டத்தை குறை. உன் பிள்ளைங்க ரெண்டும் நல்லா இருக்கு. எந்த பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லை சரியா “

“இல்ல அண்ணி அ..அது” என்றவர் தடுமாற,

” கொஞ்சம் என்ன பேச விடு. நீ பதட்டப்படாம இருந்தா தான்  நான் பேச முடியும் “
 

” சொல்லுங்க அண்ணி “என்றவர், அவராகவே இப்பொழுது தண்ணீரை எடுத்து ஒரே மடக்கில்  குடித்துவிட்டு, தன் முந்தானையால் முகத்தை துடைத்து விட்டு, சம்மந்தியை பார்த்தார்.

“கமலா இப்போ நான் உன் பையனுக்கு போன் போடுவேன் சரியா ?”அவர் ஒன்றும் புரியாமல் பார்க்க.

“உனக்கு உடம்பு முடியலன்ற மாதிரி போன் பண்ணுவேன்,என் மருமக மாசமா இருக்கா, அடிக்கடி வந்து உன்னை பார்க்க முடியாது, உனக்கு உங்க அம்மா வேணும்னா போய் பாரு, இல்லனா பாக்காத,அது உன் பிரச்சனை, இல்ல நீ வேலைக்கு யாரையாவது ஆள் வச்சுக்கோ, என் மருமகளை அங்க இங்கனு இந்த மாதிரி நேரத்துல அலக்கழிக்காதீங்க,

இம்புட்டு நாளா அவ ஒழச்சி கொட்டின காச கொடுத்துட்டு இருந்தா,நீங்களும் இளிச்சவாயி ஒரத்தி சம்பாதிச்சி தராலேன்னு சொரண்டிட்டு இருந்தீங்க, இப்போ அவ வேலைக்கு போறது இல்ல,உங்க  திட்டம் தான் என்ன ?என் மகனுக்கு என் குடும்பத்தை பாக்கவே சரியா இருக்கும் ,இதுல உங்க அம்மாவை வேற பார்க்கணுமா? அதெல்லாம் என் புள்ளையால பார்க்க முடியாது.

உன் அம்மா கை செலவுக்கு காசு கொடுக்கணும்னா நீ கொடு. இல்ல உங்க அம்மா எதையோ பண்ணிக்கட்டும் ,எனக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது. என் மருமகளாலே முடியாது. போய் முன்ன மாதிரி தினமுமோ, இல்ல வாரத்துல ஒரு நாளோ, பார்த்துட்டு வர்றதுக்கு ,உனக்கு வேணும்னா ஆள் வச்சு பார்த்துக்க, இல்லை நீ வந்து உன் அம்மாவ பாத்துட்டு போ. உன் அம்மாவை தாங்குற அளவுக்கு என் மருமக உடம்புல தெம்மும் கிடையாது, என் குடும்பத்தையும், என் பேர புள்ளைங்களையும் பாக்குறதுக்கே என் மருமகளுக்கு சரியா இருக்குது,

இதுல எங்க இருந்து அவ போய் உங்க அம்மாவை பாத்துட்டு வருவா, என்னால எல்லாம் வயசான காலத்துல என் புள்ளைங்களையே பார்க்க முடியல, இதுல நான் பொண்ணு எடுத்த  சம்மந்தியை வேற பாத்துட்டு வருவேனானு சொல்ல போறேன் சரியா?” என்று கமலாவிடம் கேட்டவர்,
 

மருமகள் புறம் திரும்பி, “உனக்கு உன் தம்பி உங்க அம்மா கூட இருக்கணுமா வேணாமா? அவன் இங்கவே வந்து உங்க அம்மா கூடவே இல்லனாலும் கூட, பேச்சு வார்த்தை வேணுமா? வேண்டாமா ?”என்று கேட்டிருந்தார் வேகமாகவே,

ஒரு வாரமாக மருமகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். எதையோ பறிக்கொடுத்தவள் போல் இருக்கிறாள் .

“என்ன சுதா?” என்று கேட்டிருந்தார்.

“ஒன்னுமில்ல அத்தை”என்றிருந்தாள்.

‘ எத்தனை பேர் இருந்தாலும், அம்மாவுக்கு நந்தா கூட இருந்து பாத்துக்கிற மாதிரி வருமா? ஒரு தடவையேனும் வந்துட்டு போனா பரவாயில்ல .அம்மா அவனைப் பார்க்க ஏங்கி தவிக்கிறாங்க.  தனக்கும் தம்பியை தேட தான் செய்கிறது ‘என்பதை சொல்லாமல் விட்டாள்.

தான் உண்டாகியதை கூறிய பிறகு, ஒரே ஒரு முறையே அவன் அழைத்து பேசியிருந்தான். அதன் பிறகு அவன் அழைக்கவில்லை, இவளுக்கும் அழைக்க அவ்வபோது தயக்கமாக இருந்தது. ஆகையாலேயே வருத்தத்தில் இருந்தாள்.

இப்பொழுது நான் குடும்பம், இன்னொரு குழந்தையின் வரவு, பிள்ளைகள், தாய் ,மாமியார், மாமனார் ,நாத்தனார் என்று அனைவருடனும் சந்தோஷமாக இருக்க.

தாய் மட்டும் தனிமையில் வாடுகிறார். சொன்னாலும் சொல்லாட்டி உண்மையாலுமே அவளால் இப்பொழுது அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை, பேர பிள்ளைகள் மட்டும்தான் வாரத்தில் ஒரு நாள் வந்துவிட்டு செல்கிறார்கள். இவளுக்கு மசக்கை வாட்டி வதைப்பதினால், எங்கும் செல்லாமல் படுத்திருக்கிறாள் .

அவ்வப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கமலா தான் அங்கிருந்து இங்கு வந்து பார்த்துவிட்டு செல்வார். அவருக்கும் இங்கே பொழுதுக்கும் இருக்க ஒரு மாதிரியாக இருக்கிறது. பெண் கொடுத்த வீடு என்பதினால், அதை உணர்ந்த சித்ரா தான் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

அவருக்கு மருமகளை தாய் வீட்டில் தாய்க்கு துணையாக  கொண்டு சென்று விடவும் விருப்பமில்லை .அதற்காக கமலாவை அப்படியே விடவும் விருப்பமில்லை .மருமகளின் வருத்தத்தையும் உணர்ந்தவர், ஒரு முடிவுக்கு வந்து ,மருமகளிடம் கூறி அழைத்துக் கொண்டு வந்து விட்டார் .

“இது சரிப்பட்டு வருமா அத்தை ?அவன் வருவான்னு  நினைக்கிறீங்களா ?”

“நீ தான அன்னைக்கு சொன்ன ? ஆதி கிட்ட  நந்தா அம்மாவ வந்து பாக்க மாற்றானு தான் சொன்னாங்கன்னு அப்போ அது என்ன?”

“அத்த அது” என்றவள் அமைதியாக,

” அப்போ நீ உன் புருஷனை சமாளிக்க சொன்னியா ?என் மேல நம்பிக்கை இல்லாம?”

“ஐயோ அத்தை, நீங்க வேற, அப்படி இல்ல, அதுக்காக..” என்றவள் தடுமாற.

” சுதா நம்ப ஒரு சில விஷயம் துணிஞ்சி செஞ்சா மட்டும்தான், எல்லாம் நமக்கு சாதகமாக அமையும், உண்மையாவே நீ இங்க வரப்போக இருக்கிறது அவனும் தெரியவும் தானே அவன் இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கான் , எப்படி பார்த்தாலும் இப்ப  ரெண்டு மாசமா நீ இங்க அதிகமா வர போக இல்லன்னு அவனுக்கு யார் மூலமாவது தெரிஞ்சிருக்கும்.

இருந்தாலும், அவனுமே உனக்கு மசக்கை இருக்கிறதால தான்  அப்படின்னு நினைச்சிருந்திருப்பான். உங்க அம்மா அங்க வர போக இருக்கிறதும் தெரிஞ்சிருக்கும். இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு உன் அம்மாவும் அங்க வராம, நீயும் இங்க வராம இருங்க. அவனா உங்க அம்மாவ தேடி வரானா இல்லையானு பாரு ..
அவனுக்கு அம்மா பாசம் இல்லாமல் எல்லாம் கிடையாது. இங்க வர போக இருந்துட்டு தானே இருக்கான்” என்றுவிட்டு கமலாவை பார்க்க.

” அய்யோ அண்ணி அவன் எனக்கு மாச மாசம்  அக்கவுண்ட்ல பணம் போட்டு விட்டுட்டு தான் இருக்கான் என் தேவைக்குனு”

“ஓ! பணம் மட்டும் போட்டு விட்டுட்டா போதுமா? பெத்த கடமைக்கு முடிஞ்சு போச்சுன்னு நினைச்சிக்கிறானோ ? போன் போட்டு தினமும் என்னை ஏதுன்னு பேசுறது இல்ல, நேரம் கிடைக்கும் போது வந்து பாத்துட்டு போறது இல்ல, அங்க எம்புட்டு வேலையா இருந்தாலும் ,மாசத்துல ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போறதுக்கு என்ன வாம்? பெத்த தாய்க்கு காசு போட்டுட்டா முடிஞ்சு போச்சுன்னு நினைப்பா ,உனக்கு உடம்பு முடியலன்னா  என்னை ஏதுன்னு ஒரு எட்டு வந்து நேரில் பார்த்துட்டு போறானா? அதையும் எதுவும் செய்றது இல்ல , உனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சா மட்டும் ஒரு பத்து நிமிஷம் என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்டுட்டு வச்சிடுறான், 
 

நீயா போன் பண்ணாம, அவனா உனக்கு போன் பண்ணி, என்னமா பண்ற சாப்டியா ன்னு கேட்டிருக்கானா? எம்புட்டு தூரத்துல இருக்கிறவனாகவும் இருக்கட்டும், தினம் போன் பண்ணி ஒரு பத்து நிமிஷம் பெத்தவ கிட்ட பேசுறதுக்கு அவனுக்கு நேரம் இல்லாம போயிடுச்சா? 
இது எல்லாத்துக்கும் காரணம் யாரு? நீயும் ,உன் மகளும் தானே! அப்பப்போ அவன் பண்ற தப்ப தட்டிக் கேட்காம,அவன் போக்குல விடவும் தானே இப்படி வந்து நிக்கிறான்” என்று அம்மா, மகள் இருவரையும் வாங்குவாங்கு என்று வாங்கிவிட்டார்.

இருவருமே பாவமாக பார்க்க.

” இப்படி அவன் அடியோட இங்க வராமல் இருக்கறதுக்கு, வந்த மருமகளை மட்டும் குத்தம் சொல்ல முடியாது, நீங்களும் அதுக்கு இடம் கொடுத்துபுட்டீங்க, நீங்க ரெண்டு பேரும் ,சரி அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருந்தா போதும்னு இருக்கவும் தானே, அவன் அக்கா இருக்கே, அக்காவே  அம்மாவை பார்த்துகும்னு துணிஞ்சி அங்க இருக்கிறான். காசு மட்டும் கொடுத்துட்டா போதும்னு இருக்கீங்க அப்படியா?

அப்போ என் மருமகள உனக்கு காசு கொடுக்க வேண்டாம்னு நான் அதுக்காக தான் சொன்னேனா? அப்போ இவளும் நீ சொல்றது போல மாசம் மாசம் உனக்கு காசு மட்டும் கொடுத்துட்டு இந்த பக்கம் வராம இருந்தா பரவாயில்லையா? காசு வாழ்க்கைக்கு தேவை தான், ஆன அந்த  காசு மட்டும் வாழ்க்கை கிடையாது கமலா.. இல்ல, உன் மகன் சம்பாதிச்சு அனுப்புற காசு மட்டும் உனக்கு போதுமா ? அவன்  மொத்தமா இங்க வர போக போக்குவரத்து இல்லாம ,அங்கவே இருந்த போறான்னு நினைக்கிறியோ? அவனும் அங்க தனியா தான் இருந்தாகணும். கூட பொறந்தவ ,பெத்தவன்னு ரெண்டு பேரு இருந்தும்.. உங்களுக்கு மட்டும் இல்ல, அவனுக்கும் சேர்த்து அது வலி தான் “

  கண்களில் நீர் வழிய  உட்கார்ந்து இருந்தனர், தாயும் ,மகளும்.

அனைத்தையும் சொல்லி முடித்த சித்ரா,” இத நாள் கடத்த கூடாது.. சரியா வராது” என்று அங்கவே உட்கார்ந்து நந்தாவுக்கு அழைத்து இருந்தார்.

சித்ராவின் நம்பரும் நந்தாவிடம் இருக்க,  மதிய நேரத்தில் தான் போன் செய்திருந்தார்.

  அவனே இப்போதுதான் சொந்தமாக தனியாக வேலை அமைத்துக் கொண்டான். தாய் இங்கே நிலத்தை வைத்து அனுப்பிய பணத்தில் ஆகையால், எடுத்து எடுப்பிலே “சொல்லுங்க? எப்படி இருக்கீங்க ?”என்று கேட்டிருந்தான்.

அவனுக்கு முன்பு போல் அவர் இருந்திருந்தால் நன்றாகவே பேசி இருப்பான். இப்பொழுது அக்காவை கோர்ட்டு வரை இழுத்து, தப்பாக பேசியவரை “அத்தை “என்று கூப்பிட வார்த்தை வரவில்லை.
 

ஆனாலும் தாயின் வளர்ப்பில் மரியாதையாக “வாங்க போங்க” என்று அழைக்க மட்டும் வந்திருந்தது. உரிமை உணர்வு அங்கு இல்லாமல் இருந்தது.
 

அவனுக்கு இங்கு நடக்கும் அனைத்து விஷயமும் தெரியும். இருந்தாலும் ,எதுவும் பேசாமல், நடுவில்  வராமல் அமைதியாக இருந்தான்.

பிரச்சனை அவன் காதுக்குச் சென்ற உடனே, இரண்டு முறை தாயை அழைத்து பேசியிருந்தவன். ஆதியிடம் தான் சண்டைக்கு போயிருந்தான்.
அதுவும் போன் வழியாக மட்டுமே. நேரில் வந்து பார்க்கவில்லை. அதுவே அவருக்கு இப்பொழுது வரை உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

என்ன தான் மாமன் மீது நம்பிக்கை இருந்தாலும் ,தான் இவ்வளவு பேசியதற்காக தன்னிடம் வந்து கூட சண்டையிடாமல் இருக்கிறான். உங்க அம்மா அவ்வளவு பேசுறாங்க என் அக்காவை விட்டுக் கொடுத்துட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களா ?என்று ஆதியின் சட்டை பிடித்து ஒரு தம்பியாக கேள்வி கேட்க வேண்டாமா? 

 

அவன் உடன்பிறந்தவளின் வாழ்க்கை என்ற எண்ணம், துளியும்  இல்லாமல் ,அப்படியே தனக்கென என உலாவிக் கொண்டிருக்கிறான் என்று வேறு அவருக்கு கஷ்டம் தான். அதுவும் ஒரு அக்காவாக தனக்காக கேட்கக்கூடிய, உடன்பிறந்தவன் என  ஒருவன் இருக்கும் நிலையில் , தனக்கு ஒன்றென்றால் தன்னுடன் நிற்க வேண்டிய ஆண்மகன் தம்பி ஒருவனே, அவனே வரவில்லை என்றால் மருமகளின் மனநிலை என்னவாக இருக்கும் ?என்றும் யோசித்தார். 
 

அனைத்தையும் மனதிற்குள் அசை போட்டவர், கமலாவிடம் பேசிவிட்டு அவனுக்கு அழைத்தும் விட்டார்.

அவரிடம் அமைதி நிலவவும்,

” சொல்லுங்க அத்தை?” என்றான் பட்டம் போடாமல் ,இப்போது,

” என்ன டா நான் சொல்றது “என்றார் அவரும்  எடுத்த எடுப்பில் ஏகபோக கோபத்துடன்,

“அத்தை என்ன பிரச்சனை உங்களுக்கு இப்ப ? எதுக்கு போன் பண்ணிட்டு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க?”  என்றான் அவனுமே சிறிது சீற்றமாக ,

அவன் சீற்றமாக ஆரம்பித்தவுடன், இங்கு லேசாக வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.

” எனக்கு வேற பொழப்பு இல்ல பாரு, உன் அக்காவ பொழுதுக்கும் வயிஞ்சுகிட்டே இருக்குறது தான் வேல பொழப்பு , உன் ஆத்தாவுக்கு உடம்பு முடியலனு போன் பண்ணி, எப்ப சுதா வருவ  ஹாஸ்பிடல் போகலாம்னு கேட்டுட்டு இருக்கா ?ஏன் என் மருமகளுக்கு வேற வேலை வெட்டி இல்லனு நினப்பா ? அவ இப்ப வேலையை விட்டு நின்னு இருக்கிறது உன் ஆத்தாவை பார்த்துக்கவா?

பொழுதுக்கும் தின்றது எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்டு உட்கார்ந்து இருக்காளே, சோர்ந்து போய் எந்த நேரமும்  படுத்துகிறாளே, முடியாம இருக்காளே , அங்க போய் வேலையும் முடியாம பார்த்துக்கிட்டு வூட்டுக்கும் வரணும்னு , இவ பண்ற அட்டூழியத்துல எங்கே அது அவ வயித்துல இருக்க  என் பேர புள்ளையை  பாதிச்சுடுமோனு பயந்து வூட்டுல உட்கார வச்சிருக்கேன்.

ஆனா உன் அம்மாக்காரி நொடிக்கு ஒரு முறை போன் பண்ணி உடம்பு முடியல, அத பண்ணுது இத பண்ணுது வா ஹாஸ்பிடல் போலாம்ன்னு கூட்டிட்டு இருக்கா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? கட்டிக் கொடுத்த பின்னவும் என் மருமக உங்க வீட்டுக்கே சேவகம் பண்ணிட்டு திரியனுமோ? அப்படி உன் அம்மாவுக்கு உடம்பு முடியலன்னா , பார்க்கணும்னா நீயும் உன் பொண்டாட்டியும் இல்ல டா பாக்கணும். என் மருமகளுக்கு என்ன தலை எழுத்தா? “என்றார் காட்டமாக,

இவ்வளவு நேரம் அவனை அவர் திட்டியதை எதையுமே காதில் வாங்காதவன். உன் அம்மாவுக்கு உடம்பு முடியல என்பதை மட்டும் மனதில் பதிய வைத்தவன்.

“அம்மாவுக்கு என்னாச்சுத்த ?அம்மாவும் சொல்லல, எனக்கு சுதாவும் போன் பண்ணல?”என்றான் சிறு பதட்டத்துடன்,

“ஆமா இவரு போன் பண்ணி என்ன ஏதுன்னு தினமும் விசாரிக்கிறது தான் தவறுது . இதுல இவருக்கு போன் பண்ணி இவ ஆத்தாவுக்கு உடம்பு முடியலன்னு வேற என் மருமக சொல்லனுமாக்குல ?”என நொடிந்து கொண்டவர்.

“அது உன்  பிரச்சினை நீதான் கேட்கணும் .ஏ  மருமக எதுக்கு டா உனக்கு போன் பண்ணனும். மாச மாசம் அவ சம்பளத்துல பாதி கொடுக்கறது வரை போதும்.இதுல   என் மருமக உனக்கு போன் பண்ணி வேற விஷயத்தை சொல்லணுமோ ? நீ போன் பண்ணி விஷயத்தை என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுக்க மாட்ட?  உன்னை பெத்தவ இங்க தன்னந்தனியா இருக்காலே ,எப்படி இருக்கா என்னன்னு நீ தெரிஞ்சுக்காம? உனக்கு ஒருத்தவங்க போன் பண்ணி ஏதாவது விஷயம் சொல்லனுமா?”

“போதும் .விஷயம் என்ன நேரா வாங்க விஷயத்துக்கு ,சுத்தி வளச்சு பேசாதீங்க “என்றவனுக்கு பதட்டமாகிவிட்டது.

இதற்கு முன்பு இப்படி அவர் பேசியிருந்தால் பரவாயில்லை. இப்பொழுது தான் முதல் முறை பேசுகிறார். எவ்வளவு திட்டினாலும் மருமகளை அங்கு அனுப்பாமல் இருந்ததில்லை, அது ஒன்று அவன் பதட்டத்திற்கு காரணம்.

உண்மையாகவே சுதாவும் இங்கு இரண்டு மாதம் வராததை உணர்ந்து தானே இருக்கிறான். ஆட்களை வைத்து ஆகையால் மேலும் பதட்டம் அதிகரித்தது.
 

சிறிது பதற்றத்துடன் “என்னாச்சு அம்மாவுக்கு? முதல்ல அதை சொல்லுங்க?”

“உன் அம்மாவுக்கு பிபி ரொம்ப குறைஞ்சிடுச்சாம். பெட்ல அட்மிட் பண்ணனும் என்ற மாதிரி சொல்றாங்க ,யாரு கூட துணைக்கு இருந்து பாத்துப்பா சொல்லு ? பெத்தது ரெண்டு புள்ள, ஒன்னு நீ எனக்கு என்னனு போய் உன் பொண்டாட்டி புள்ள உன் வாழ்க்கைனு பார்த்துட்டு சுயநலமா உக்காந்துட்ட, இம்புட்டு நாளா உன் அக்கா காரி அப்பப்போ எட்டி பாத்துட்டு இருந்தா, இப்ப பாக்குற அளவுக்கு இல்ல, அவளை பார்க்கறதுக்கே ரெண்டு பேரு வேணும் ,அதுவும் மாசமா இருக்க புள்ள போய் உன் அம்மாவை பார்க்க முடியுமா ?

மசக்கையில அவளே சோர்ந்து போய் கிடக்கா. உன் அம்மாவ எங்க இருந்து பாப்பா? தூக்கி ஒக்கார வைக்க முடியுமா பெட்டுல இருந்து ?ஒன்னுக்கு ரெண்டுக்கு போக எழனும் இல்லையா? அவ தேவைக்கு எழுந்து பாத்துக்க கூட மயக்கமா வருது தள்ளுதுனு சொல்றா உன் அம்மா,
அவளை கை புடிச்சு கைதாங்களா கூட்டிட்டு போக கூட ஒரு ஆளு வேணும். என்  மகனா பார்ப்பான்  பொட்டச்சிக்கு. அதும் மாமியாக்காரிக்கு?” என்றார் வெடுக்கென்று,

சுருக்கென்று தைத்தது அவனுக்கு..

” அத்த அது” என்றவன் தடுமாற.

” டேய் நீ வந்து பாப்பியோ ?இல்ல,  ஆளு வச்சு பாப்பியோ அது உன் பிரச்சனை .என் பிரச்சனை கிடையாது சரியா ? இனி இப்ப என் மருமக வேலைக்கும் போகல, என் மருமக காசு தரத்துக்கும் வழியும் இல்ல ,என் மகன் தூக்கி குடுப்பான்னு கனவு காணாத ,ரெண்டு புள்ளைக்கு 3. ஆக போது அவனுக்குனு குடும்பம் குட்டினு இருக்குது.

என் புள்ளையால உன்ன மாதிரி பெத்தவங்க  எக்கேடு கெட்டு போனா என்னன்னு கைகழுவி விட தான் முடியுமா?  பெத்தவங்க எங்கள பாக்குறதும் அவனுடைய கடமை தான். அவனுக்கு பொறுப்பு கூடிட்டே போகுது, இதுல மாமியாரையும் சேர்த்து வச்சு பார்த்துக்கணும்னு கனவு காணாத ?உன்னால முடிஞ்சா வந்து ,உன் ஆத்தாவை பார்த்துட்டு பெட்ல அட்மிட் பண்ணி நாலு நாள் கூட இருந்து என்ன வேணும்னு கவனிச்சுட்டு  போ, இல்லையா ஆளு வச்சு பார்த்துக்க, அது உன் பிரச்சனை, உன் பாடு உன் அம்மா பாடு,

இங்க என் மருமகளுக்கு போன் மேல போன் போட்டுட்டே இருக்கா, இங்க என் மருமகக்காரி நான் போய் எங்க அம்மாவ பாக்கறேன்னு சொல்லிக்கிட்டு நிக்கிறா,வயித்துல புள்ள இருக்க நினைப்பு இருக்கா இல்லையான்னு தெரியல ?

இல்லையா ,உன் அக்காவ உங்க வீட்டுல கொண்டு போய் வச்சுக்க மொத்தமா, என் பேர பிள்ளைகளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் ,நான் பார்த்துக்கிறேன், இப்ப வயித்துல சுமக்கிற பிள்ளையையும், என் கிட்ட பெத்து கொடுத்துட்டு உன் குடும்பத்தையே பாத்துட்டு, உன் ஆத்தா கூடையே ஒக்காந்துகிட்டு உன் ஆத்தாவுக்கு துணையா  இருக்க சொல்லு, யாரு வேணாங்குறா ?

நீ உன் வாழ்க்கை பார்த்துட்டு போற, உன் அக்காவுக்கு உன்ன போல சுயநலமா இருக்க தெரியலனா அது அவ பாடு, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது, இப்பவே சொல்லிபுட்டேன் ஒன்னு உன் அக்காவை மொத்தமா உன் கூட கொண்டு போய் வச்சுக்க, என் பேரப்பிள்ளைகளை நான் பாத்துக்கிறேன். அவ என் அம்மாவை பார்க்க போனும், என் அம்மாவை பார்க்க போனும்னு சொல்லிக்கிட்டு நிக்கறா உன் அக்காக்காரி அங்க போய், உங்க அம்மாவ என்னன்னு பார்த்து கிழிப்பானு தெரியல?

உன் அம்மாவுக்கு பிபி குறைஞ்சு ஆத்திர அவசரத்துக்கு கூட ஒரு ஆளு கை தாங்கல தூக்கிட்டு போற நிலைமைதான். இதுல உன் அக்கா போய் உன் அம்மாவ என்னன்னு தாங்கிகிட்டு நிப்பா? யாருக்கு தெரியும்? ஏதாவது ஆகட்டும் அப்ப இருக்குது கச்சேரி,  நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது .. எதையோ ஒன்னு பண்ணு, நீ வா இல்ல, ஆள வச்சு பாரு ,இல்ல உன் அக்காவை கையோட கூட்டிட்டு போய் உட்கார வச்சுக்கோ உன் வூட்டோட”என மேற்கொண்டு எதுவும் பேசாமல் பட்டென்று  வைத்துவிட்டார்.

பேசி முடித்துவிட்டு சம்மந்தியையும், மருமகளையும் பார்க்க.

இருவரும் கண்கள் கலங்க அவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் .

வேகமாக மாமியாரை கட்டி அணைத்து இருந்தாள்.

‘தன் தம்பி  தாய்க்கு ஒன்றென்றால் பதறுகிறானே! இடைப்பட்ட காலத்தில் இப்பொழுது தானே இதை  பார்க்கிறாள். அம்மாக்கு முடியலடான்னு நான் கூறினால் கூட, அதான் கூட இருந்து பாத்துக்க நீ இருக்கியே  சுதா எனக்கு வேலை இருக்கு’ என்று பட்டென்று வைத்து விடுபவன்.

மாமியார் பேசவும் ,அவர் இவ்வளவு பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டு, அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்றவுடன் பதறுகிறானே!  அவனுக்கு தாய் மீது பாசம் இல்லை என்று சொல்ல மாட்டாள்.ஆனால், அவன் விலகி நிற்க்கிறானே ! என்று அவளுக்கும் வலிக்க தான் செய்கிறது ..

தாயைப் பார்க்க நேரில் வருவானோ ?இல்லையோ? ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு..

அண்ணி என்று கமலாவும் அவரின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்.

சாரி கைஸ் முடிஞ்சிடும்னு நினைச்சேன் .ஆனால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் இரு அத்தியாயம்  வரும் என்று நினைக்கிறேன்.10k வியூஸ் இருக்கு.ஆன,அதுல ஒரு பர்சன்டேஜ் கூட கமெண்ட்ஸ் இல்ல. ரொம்ப சைலன்ட்டா படிக்கிறீங்க நீங்க .ஒரு சில வார்த்தைகள் கமெண்ட் பண்ண தான் எனக்கு கொஞ்சம் உத்வேகமாக இருக்கும் .நெக்ஸ்ட் ஒவ்வொரு அத்தியாயமா கொடுக்க .ப்ளீஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க அதையும், ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போதும் உங்களுக்கு  என்ன தோணுதோ அதை கொஞ்சம் விமர்சனமா கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page