மயக்கம் தயக்கம் 15

திவ்யாவுடனான வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொணர்ந்துவிட்டான் தீபன். அவன் சென்ற பிறகு ,வீட்டில் அமைதி பெண்ணவளை சித்ரவதை செய்து கொண்டிருந்தது.செய்வதற்கு ஆயிரம் வேலைகள் உண்டு. மனதுதான் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. தனிமையில் அவள் மனதார ஒப்புக்கொண்ட ஒருவிஷயம் தீபனை அவள் விரும்பத்தொடங்கி இருந்தாள். ஏற்கனவே ,திருமணம் என்ற  ஒரு உறவுமுறையில் இருந்து,அதை சுதந்திரம் என்ற பெயரில் விட்டு வந்தவளுக்கு, மீண்டும் ஒரு ஆணுடன் திருமண பந்தத்தில் இணைவதில் விருப்பம் இன்மை.அதன் காரணமாக தெரிவு செய்த லிவ் இன்.

ஆரம்பத்திலேயே தீபன் சொன்ன ஒரு விஷயம் எந்தவித காரணத்தை சொல்லியும் காதல்வயப் படவே கூடாது.தனக்கும் திருமண உறவு அது தொடர்பான உரிமையுணர்வு,கடமைகள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்பதைத்தான்.இப்போது தனக்குள் அந்த உறவு துளிர்விடும் சமயத்தில் அவன் தன்னை விடுத்தது  அவளுக்குள் பெரும் அதிர்வையும் தாக்கத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

அந்த அதிர்வலைகளிலிருந்து அவளால் முழுமையாக வெளிவர முடியவில்லை.விரும்பவும் இல்லை. தான் காதல் சொல்லி,அதை அனுமதித்து,திருமணம் செய்துகொண்ட விஜயராகவனையும், தன்னை மட்டுமே “அம்மா என்னை நல்லா பார்த்துப்பா”என்ற பெரும் நம்பிக்கை கொண்டு இவள் வயிற்றில் முளைத்த சிறு கரு தயாவையும் இவள் நினைவடுக்குகள் இந்த நொடி வரை நினைத்தும் பார்த்தாள் இல்லை.

சென்னையின் அந்த மருத்துவமனையில் மகளை அனுமதித்துவிட்டு தனியாக போராடிக்கொண்டிருக்குக்கும் விஜயின் நினைவுகள் முழுவதும் தனது முன்னாள் மனைவி திவ்யா ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தாள்.

‘எந்த இடத்தில நான் ஏமாந்து போனேன்’ எண்டு பல்லாயிரம் முறைகள் கேட்டுக்கொண்ட அதே கேள்வி. திரும்பவும் கேட்டுக்கொள்வதால் ஏதும் மாறிவிடப்போவது இல்லை என்பதை நிச்சயமாக தெரிந்து கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறான். விடைதான் கிடைக்கவில்லை. இடையில் அவனது கீழே பணிபுரியும் சிலர்  மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றார்கள், அலுவலகரீதியில் தான். தனிப்பட்ட விஷயங்களை கேட்கவோ,விசாரிக்கவோ அவன் அருகில் கூட செல்ல முடியாது.

தனக்காக அளிக்கப் பட்டிருக்கும் அறையில் இருந்து கொண்டு அலுவலக வேலைகளை கவனிக்க ஆரம்பித்து மூன்று நாட்கள் முடிந்து போனது.தயா இப்போது பரவாயில்லை.ஜுரம் நன்றாக குறைந்து விட்டது.இன்னமும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கவனிப்பில் வைத்திருந்து அனுப்பி வைக்கலாம் என்று தயாவின் மருத்துவர் அரவிந்தன் சொல்லியிருக்கிறார்.

தயாவிடம் ஒரு கவனிக்கத்தக்க மாறுதல் உண்டு என்றால் ,அவள் நேற்றிலிருந்து அங்கே இருக்கும் எந்த நர்ஸுகளிடமும் ஒட்டிக்கொள்ளாதவள்,சந்தனா நர்ஸிடம் மட்டும் பிரத்யேகமாக ஒரு நெருக்கத்தையும்,தேடலையும் காண்பிக்கிறாள்.பல நோயாளிகளை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அந்த பெண்ணால்,சிறு குழந்தையை அலட்சியம் செய்யமுடியாமல் தவிப்பது நன்றாகவே தெரிகிறது.

குழந்தை விடாமல் சந்தனாவை தன்னுடன் இருக்க வைத்துக்கொண்டதற்கு, மேலே இருக்கும் சீனியரிடம் நேற்று மாலை கிளம்பும் முன் சந்தனா திட்டு வாங்கி கொண்டு இருந்தாள்.

“இங்கே பாரு சந்தனா, எந்த பேஷண்டு கிட்டேயும் அட்டச்மெண்ட் வச்சுக்காதேன்னு உனக்கு எவ்ளோ தடவை  சொல்லியாச்சு.அந்த குழந்தை மட்டும் உன்னோட பொறுப்புல இல்ல.இன்னமும் இங்கே அட்மிட் ஆகியிருக்குற வி ஐ பி பேஷண்ட்ஸ் ஆறு பேர் இருக்காங்க. இங்கே உங்களமாதிரி அமைதியும் பொறுப்புமான நர்ஸுகளை அதிகம் சம்பளம் கொடுத்து நிர்வாகம் வச்சிருக்க , நீங்க ஒரு பேஷண்டுகிட்ட மட்டும் அட்டென்ட் செஞ்சா காம்ப்ளியின்ட் ரைஸ் ஆகுது. இங்கே இருக்குறது மொத்தம் எட்டு நர்ஸ்கள். ட்யூட்டி மாத்தி போடறோம்.உங்களுக்கே விபரங்கள் தெரியும்.பி கேர்புல் ” என்று கால் மணிநேர நீண்ட திட்டுகளுடன் கூடிய அட்வைஸுகள்.அதற்குப்பிறகும் வீட்டுக்கு கிளம்பிவிடாமல் ஒரு அரை மணிநேர வேலை. முடிந்து அப்ப்பா ,கிளம்பலாம் எனும் பொழுது தயா சந்தனாவை கிளம்பிவிடாமல் ஒரு அழுகை.

இதற்க்கு நடுவில் வீட்டிலிருந்து ராகினி வேறு அழைத்து,”அக்கா,எனக்கு நாளைக்கு எக்ஸாம். பயோ சொல்லிக்கொடுக்கணும்.எப்போ வீட்டுக்கு வருவே?” என்று கேட்டதில் நிஜத்தில் சந்தனாவுக்கு அவ்வளவு அலுப்பு.ஆனாலும் நிதானத்தை விடாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்,” இல்ல ராகி,நா வர லேட் ஆகும். நீ ட்ரை பண்ணு. ட்ராயிங்ஸ் போட்டு பாரு. சீக்கிரம் வர பாக்குறேன்”என்று அவள் சொல்லி முடிக்கும் பொழுதே மணி ஏழரை என்றது.

தாயாவை அழ விட்டு,வீடு கிளம்பவும் சந்தனாவால் முடியவில்லை. அப்போது ட்யூட்டிக்கு வந்திருக்கும் மற்ற நர்ஸுகளும், விஜய ராகவனும் கூட முயற்சி செய்து பார்த்துவிட்டான். குழந்தை சந்தனாவை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம்.

‘எங்கே ஒரேயடியாக அழுது மீண்டும் வேறு தொந்திரவுகளை வரவழைத்துக் கொண்டால்’ என்று சந்தனாவுக்கே பயமாக இருந்தது. அதோடு ,இவ்வளவு தூரம் குழந்தை தன்னை எதற்கு தேடுகிறாள் என்றும் யோசனை. எட்டு மணிக்கு குழந்தைக்கு ஆகாரம் கொடுத்து, மருந்துகளை புகட்டி,தூங்கவைத்து என்று அவள் கிளம்பும்நேரம் மணி ஒன்பதை நெருங்கியிருந்தது.

காலையில் எட்டு மணிக்கு வந்தது,இன்னமும் கிளம்பமுடியவில்லை. சந்தனா விட்டால் அங்கேயே தூங்கிவிடுவாள் .அவ்வளவுக்காய் சோர்ந்துபோய் இருந்தாள். விஜயராகவன் எல்லாவற்றையும் ஒரு ஆச்சர்யத்துடன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.அவளது அளவுக்கு அதிகமான பொறுமையும், போலி தன்மை கலக்காத செயல்பாடுகளும் அவனை வெகுவாக கவர்ந்தது.

இத்தனைக்கும் அந்த பெண் முகத்தில் கடுமை இல்லை. பளு ஏறும் பொழுது இன்னுமே தன்னை நிதானித்துக் கொண்டாள் சந்தனா. அவள் கிளம்புவதை பார்த்த விஜயராகவன்,” சிஸ்டர், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்னோட டிரைவர வர சொல்லியிருக்கேன்.அவரு உங்களை வீட்டுல விட்டுருவாரு. என்னோட பொண்ணால தானே நீங்க கிளம்ப லேட் ஆகிடுச்சு ..சாரி..”என்று மன்னிப்பை வேண்டிய விஜயராகவனிடம் சந்தனா மறுத்து எதுவும் சொல்லவில்லை. இப்போது கேப் புக் செய்தாலும் வீடு போய் சேருவதற்கு எப்படியும் பத்து மணி ஆகிவிடும். அதோடு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்றும் சொல்ல முடியாதே!

கொஞ்சமே தயங்கியவள் சரி என்றுவிட்டாள். விஜயனின் கார் அவளை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விட்டது.

காரில் தூக்கம் கண்களை சுழற்றினாலும்  எங்காவது தூங்கிவிட்டால்  என்ன செய்வது என்று  எப்படியோ தன்னை  கண்ட்ரோல் செய்து கொண்டே வந்தவள்  வீட்டில் இறங்கியவுடன்  வழக்கமாக குளிக்கும் வழக்கத்தை கூட விடுத்து  உடைகளை மற்றும் மாற்றிக் கொண்டு கைகால் கழுவி  தரையில் ஒரு தலகாணியை போட்டு படுத்து விட்டாள்.அவளால் திறக்க கூட முடியவில்லை .

தனது அறையில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளை  ஆதுரமாக பார்த்துவிட்டு  ஒரு கப்பில்  குறைந்த சாதத்தில் ரசம் விட்டு  கலந்து எடுத்துக் கொண்டு வந்த  அவளது அம்மா  உறங்கும் மகளுக்கு,சுவற்றில் ஒரு தலையணையை சாற்றிவைத்து , சந்தனாவை அமர வைத்தார். அப்போதும் சந்தனாவுக்கு உறக்கம் கலையவில்லை. அந்த நிலையிலேயே கப்பில் இருக்கும் சாதத்தை ஒரு ஸ்பூனால் எடுத்து நிதானமாக  ஊட்ட தொடங்கினாள்.

வீட்டுக்கு வருவதற்கு தாமதம் ஆகும் என்று ராகினி தானே தனது பாடங்களை படித்து முடித்து விட்டாள் .அவள் இன்னும் தனது படிப்பை முடித்துவிட்டு மாடியில் இருந்து இறங்கி வரவில்லை .இன்னும் அரை மணி நேரம் ஆவது படித்து விட்டு தான்  ராகினி கீழே வரக்கூடும் .

தூக்கத்திலேயே தனது சாப்பாட்டையும் முடித்துவிட்டு ,அப்படியே உறக்கத்தை தொடர்ந்தாள் சந்தனா .

காலையில் விடியல் ஒரு  வித்தியாசமான அழகோடு  பூமியை உரசியது.இரவு  தனது பணியை முடித்துவிட்டு நிலா மகள்  காலையில்  ஓய்வு எடுக்க சென்று விட , சூரியன் தனது உஷ்ண கதிர்களை பூமியில் படர விட ஆரம்பித்தான் . அவசர கதியில் தனது உடுப்புகளை மாற்றிக் கொண்டு , சந்தன தென்றல் மருத்துவமனைக்கு கிளம்பியது . ராகினிக்கு மதியம் தான் பரீட்சை என்பதால்.இரவு படித்து முடித்துவிட்டு  வெகு தாமதமாக உறங்க வந்திருந்தாள்  ராகினி .

சந்தனாவின் பெற்றோர் இருவரும்  வேலைக்கு  கிளம்பி விட்டார்கள் . தூக்க கலக்கத்திலேயே  வீட்டை  உள்ளே பூட்டிக்கொண்டு , மதியம் 11 மணிக்கு  அலாரம் வைத்து விட்டு  மீண்டும்  தூங்க ஆரம்பித்து விட்டாள்  ராகினி .

தயா முதல் நாள்  இல்லை கடந்த இரண்டு நாட்களாக தன்னிடம் அதிகப்படியான ஒட்டுதலை  காண்பித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறாள்  சந்தனா. இன்னும்  ஒரே நாளில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு  வீட்டிற்கு  அந்த குழந்தை சென்றாக வேண்டும் . அப்படி இருக்கும் பொழுது  தன்னிடம்  இவ்வளவு தூரம் கூட்டி கொள்வதில்  சந்தனாவுக்கு  மனம் நெருடலாக  இருக்கிறது . குழந்தையின் தந்தை  தன்னை பற்றி என்ன யோசிக்க கூடும் என்றும்  மனதிற்குள் ஒரு விதமான தயக்கம் .

முதல் நாள்  சீனியர் நர்ஸ்  கூப்பிட்டு  கண்டிக்கும் பொழுது  மனதிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை . யோசித்துப் பார்க்கும் பொழுது  பல நோயாளிகள்  வந்து தங்களது நோய்க்காக  மருத்துவமனையில்  தங்கி இருக்கும் பொழுது  அத்தனை பேரையும் கவனிக்காமல்  ஒரு சிறு குழந்தையுடன் தனது நேரம் முழுவதையும் செலவிடுவது  அவ்வளவு சரியானது அல்ல  என்பது  சந்தனாவிற்கு தோன்றவாரம்பித்துவிட்டது.

இயன்றவரை குழந்தையின் கண்களில் படாமல் இருப்பது என்று தனக்குள் முடிவு செய்துகொண்டாள் சந்தானா.அதற்கு தகுந்தார் போல்  மற்ற நோயாளிகளை  கவனிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க , குழந்தை தயாவோ, காலை எழுந்த நேரத்திலிருந்து  சந்தனாவை  தேடிக் கொண்டிருந்தாள் . மூணரை வயதே ஆனா அந்த சிறுகுழந்தை, சந்தனாவிடம் தனது அம்மாவின் வாசத்தை உணர்ந்தது கூட காரணமாக இருக்கலாம்.

வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கு இந்த உணர்வு புரியாது . சந்தனாவின் இயல்பான சாந்த குணம் , அமைதி அன்பு  வேலையின் மீதான அர்ப்பணிப்பு  இவை எல்லாம் சேர்ந்து  குழந்தை அவளிடம்  தாய்மையை உணர்ந்து இருக்கலாம் . மற்றவர்களிடமிருந்து சந்தனாவை  வித்தியாசப்படுத்தி காண்பிக்கும்  தாய்மையினால்  குழந்தை மீண்டும் மீண்டும் அவளையே தேடுகிறது .எழுந்தவுடன் நம் அம்மா அருகில் இல்லை என்றால் எப்படி உணர்வோமோ அதே உணர்வு தான் தயாவுக்கும்.

சந்தனா என்ற ஒருத்தியை பார்க்கும் வரை இயல்பாக அப்பாவிடம் மட்டுமே வளர்ந்திருந்த குழந்தை இப்பொழுது தாய்மையின் வாஸத்தை உணர்ந்து விட்ட பிறகு அ தனை தேடி ஓடுகிறது .வெகுநேரமாய் ஜன்தனா தன்னை பார்க்க வருவாள் என்று காத்துக் கொண்டிருந்தாள் தயா அவள் தன்னை பார்க்க வரவில்லை என்றவுடன்  குரல் எடுத்து  அழ ஆரம்பித்து விட்டாள் . மற்ற எந்த நர்ஸ்களாலும் அவளை  சமாதானம் செய்ய முடியவில்லை .விஜய ராகவனும் கூட திகைத்து விழித்தான்.இன்னமும் சொல்லப்போனால்,இயல்பான ஒரு தயக்கம் அவனை ஆக்கிரமித்தது.

உடல்நலம் சரியில்லாத குழந்தையை கண்டிக்கவும் முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை . காலை உணவை சாப்பிடமாட்டேன் என்று அடம். குழந்தை மருத்துவர் வந்து பார்க்கும்பொழுது தயா அழுதுகொண்டுதான் இருந்தாள்.

அதைப்பார்த்த மருத்துவர் அரவிந் .,சந்தனாவை azhaithuvittarm” வாட்,மிஸ் சந்தனா.. குழந்தை இப்படி ஏங்கி அழுவுது.கண்டுக்காம இருந்திருக்கீங்க.ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யூ. குழந்தையை சமாதானம் செய்யுங்க. குழந்தை டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் அவள் கூனவே இருங்க. ஐ வில் ஸ்பீக் வித் யுவர் ஹெட் ” என்று கடிந்து கொண்டு கிளம்பினார்.

சந்தனா மனதில் குழந்தை வீட்டுக்கு சென்ற பிறகு தன்னை தேடக்கூடாது என்று தானே  தான் இவ்வாறு நடந்து கொண்டோம் . இதை எப்படி யாருக்கு சொல்லி புரிய வைப்பது என்று  மனதிற்குள்ளேயே  புலம்பினாள்.அவளால் அது மட்டும் தான் செய்ய முடியும் .

அன்று மாலையே குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிடலாம் என்று விட்டார் மருத்துவர். ஒருவழியாக தயா  அவளின் தந்தை இருவருக்குமான மருத்துவமனை வாசம் ஒரு முடிவுக்கு வந்தது.இருவரும் கிளம்பும் சமயத்தில் தயா,தன்னுடன் சந்தனாவும் வரவேண்டும் என்று ஒரே அழுகை. விஜய ராகவனுக்கு வியர்த்து வழிந்தது.எத்தனையோ வியாபார சந்திப்புகளை வெற்றிகரமாக முடித்தவனுக்கு அந்த சிறுமி ஆட்டம் காட்டினாள். அவன் மனமோ,அந்த பெண் சந்தனா என்ன நினைத்துக்கொள்வாளோ என்று யோசனையாக இருந்தது.

குழந்தை அடம்பிடிக்கிறாள்,அழுகிறாள் என்பதற்க்காக எவ்வ்ளவுதூரம் வளைய முடியும்? தயா கிளம்புவதற்கு அரைமணிநேரம் முன்பாக ஒரு முடிவெடுத்தவளாக, பெர்மிஷன் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டாள் சந்தனா.அவளது சீனியருக்கும் காரணம் புரிந்தது. அவருக்கு தயாவின் அழுகை கண்டு அவ்வளவு ஆச்சர்யம். இப்படி ஒரு குழந்தை சம்மந்தமே இல்லாத ஒருவரை தேடுமா..என்றுதான் அவருக்கு தோன்றியது.

விஜயராகவன் வீட்டுக்கு செல்லும் அதே நேரத்தில் அவனது பெற்றவர்களும், தங்கையும்,சிறு குழந்தையும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். த்யாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று கேள்விப்பட்டவர்களுக்கு மனம் தாங்கவில்லை. ரோஷிணியும் கூட ,”எனக்கு அண்ணாவையும்,தயாவையும் பாக்கணும்.அவங்களோட இருக்கணும் “என்றுவிட்டு பிடிவாதமாக கிளம்பிவிட்டாள்.ஏற்கனவே அவள் இந்தியா வருவதாக வெகு மாதங்களாக சொல்லிக்கொண்டிருப்பவள் தான்.

இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக ஆனபிறகு,தயாவின் நிலைமை இன்னமும் அவளது மனதை அழுத்தியது.எப்படியும் ரோஷினியின் கணவன் கனடா சென்றிருக்கிறான்.வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆகிவிடும்.கனடாவில் இப்போது கடுமையான குளிர்காலம். குழந்தையை அழைத்துக் கொண்டு வரவேண்டாம் என்று விட்டான் அவளது கணவன்.அதனால் அவளுக்கு இப்போது மூன்று மாதங்களுக்கு இந்தியா வருவது அவ்வளவு கடினமானதாக இல்லை.

வீட்டுக்குள் விஜயன் நுழைந்து ஒரு மணி நேரத்தில் அவர்கள் மூவரும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். சமையல் செய்யும் அம்மா தான் ஆரத்தி கரைத்து ரோஷினியையும் அவளது குழந்தையையும் உள்ளுக்குள் அழைத்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page