அத்தியாயம் 25

ஏங்க உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கணும். கேட்கவா? உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்கலைன்னா வேணாம் என்றாள் அபிராமி. 

 

கேளு அபி என்றான் அஸ்வந்த். 

 

அது வந்து…. நீங்களும் சுகன்யா அக்காவும் லவ் மேரேஜா? என்று கேட்டாள். 

 

அபிராமி அவனின் விழிகளை பார்த்தாள். லவ் மேரேஜ் தான் அபி. இந்த உலகத்திலேயே அவளை மட்டும் தான் அதிகமா காதலிச்சேன் என்றான் அஸ்வந்த். 

 

அபிராமியின் விழிகளில் ஆச்சர்யம் தேங்கி நின்றது. எங்க பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க? எப்படி பிடிச்சிது ஒவ்வொரு கேள்வியையும் ஒரே நேரத்தில் கேட்டாள். 

 

அவளின் கேள்விகளில் நிஜமாகவே சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. அதுவும் அவளின் ஆர்வம் சுகன்யாவின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது. 

 

வா கீழே போகலாம் என்று ஒரே பதிலில் மின் தூக்கியில் சென்று விட்டனர் மூவரும். 

 

அங்கு கீழே இடது புறத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். 

 

வா அபி இந்த சீட்ல உட்காரு என்றான் அஸ்வந்த். 

 

அபிராமி தயங்கினாள். 

வா அபி உட்காரு. நீ தான் இந்த ஹாஸ்பிடல் டீன். ஏன் தயங்குற என்று அவளை அழைத்து சென்று அமர வைத்தான். 

 

அவளுக்கு தயக்கத்தை விடவும் அஸ்வந்த்தின் மேல் பயங்கரமான மரியாதை வந்தது. அதை விட மனைவி என்ற உரிமையில் லேசான வெட்கம் வேறு வந்தது. 

 

ஏங்க உங்க லவ் ஸ்டோரி என்றாள் அபிராமி. 

 

சரி அபி சொல்லுறேன் என்றவன் அவளுக்கு நேரேதிரில் அமர்ந்தான். 

சுஜித் தூங்க ஆரம்பிக்க, அங்கு போடப்பட்டிருந்த டேபிலில் அவனை கிடத்தி விட்டு மறுபடி அவளின் எதிரில் அமர்ந்தான். 

ஒரு சிறிய பிளாஷ்பேக்.

 

டேய் மச்சான் எதுக்கு டா இவ்ளோ வேகமா போற என்று கத்திக் கொண்டு வந்தான் ஆகாஷ். 

 

இள ரத்தம்னா வேகமா பைக் ஓட்டணும் மச்சான் என்று டூ வீலரை அவனால் முடிந்த வரை முறுக்கினான் அஸ்வந்த். 

 

டேய் மச்சான் கொஞ்சம் வேகத்தை குறை டா. அப்பறம் ரெண்டு பேரும்,  இள ரத்தம் இருவர் மரணம்னு போஸ்டர்ல இருப்போம் டா என்று அவனின் வேகத்தில் பயந்து கூறினான் ஆகாஷ். 

 

அட போடா ஒன்னும் ஆகாது டா பயப்படாம இரு டா. நான் இருக்கேன் என்றவன் இன்னும் வேகத்தை கட்டுப்படுத்தவில்லை. 

 

சுர் என்று வேகமாக சென்று கொண்டிருந்தவன் நாலா புறமும் சாலைகள் சந்திக்கும் இடத்தில் எதிரில் வந்த டெம்போவில் உரசி கொண்டு தடுமாறி விட்டான். கீழே விழுந்தனர் இருவரும். 

 

அட பாவி அஷ் என்று கதறி கொண்டு அந்த தார் சாலையில் உருண்டு கொண்டு சென்றான் ஆகாஷ். 

 

ஆனால், அவனோ கூலாக சட்டையில் ஒட்டிய மணல் துகள்களை ஊதி விட்டு எழுந்து நின்றான். 

 

திடீரென்று நடந்த சாலை விபத்தில் கூட்டம் கூடியது. ஒரு நொடியில் போலீஸ் ஜீப்பும் வந்து நின்றது. 

 

சிரமப்பட்டு எழுந்து வந்தான் ஆகாஷ். ஆனால், அவனுக்கு எந்த சேதாரமும் ஆகவில்லை. கடவுளுக்கு மனதில் நன்றி கூறினான். 

 

டேய் தம்பி வயசு எத்தனை டா உனக்கு. இப்படி டூ வீலரை வேகமாக ஓட்டிட்டு வந்து உனக்கும் அடிபட்டு எதிர்ல வர்றவனுக்கும் அடிப்படணுமா என்று கோபமாக கேட்டு கொண்டிருந்த போலீஸ் மாமாவை பார்த்து சிரித்தான் அஸ்வந்த். 

 

அய்யயோ இவன் என்ன ப்பா இப்படி பண்றான் என்று புலம்பிய ஆகாஷ் பயத்தில் நின்றிருந்தான். 

அஸ்வந்த்தின் பார்வை சென்ற இடத்தை பார்த்த ஆகாஷ் பதறி தான் போனான். 

 

டேய் என்று நண்பனை நெருங்கி அவன் கைகளில் கிள்ளினான். 

 

ஆஹ் என்று அப்பொழுது தான் அஸ்வந்த் தன்னுடைய பார்வையை மாற்றி கொண்டு தன் முன் நின்றிருந்த ஏழு அடி உயர போலீஸ் மேனை பார்த்தான். 

 

ஐயோ போலீஸ் என்று பதறி பின்னால் நகர, ஆகாஷ் அவனை பல்லி போல் ஒட்டி நின்றிருந்தான். 

 

ஸ்கூல் தான டா படிக்கிறிங்க. இவளோ வேகம் தேவையா டா உங்களுக்கு என்று கோபத்தோடு கேட்டார் காவல் அதிகாரி. 

 

ஸ்கூல் முடிச்சிட்டோம் சார். பதினெட்டு வயசு ஆகுது என்று பயத்தோடு கூறினான் ஆகாஷ். 

 

ஆகாஷின் பதிலில் அவனை முறைத்து பார்த்தவர், துரை பேச மாட்டாரோ என்று அஸ்வந்தை கேட்க, அதான் என் ப்ரென்ட் பதில் சொல்லிட்டானே சார் என்றான் அஸ்வந்த். 

 

ஆகாஷ் விழிகளை உருட்டி எச்சில் விழுங்கினான். 

 

மிரட்டி விட்டுவிட வேண்டும் என்று தான் காவல் துறை அதிகாரி நினைத்தார். 

 

ஆனால், அஸ்வந்த்தின் திமிர் அவருக்கு கோபத்தை அதிகமாக்கியது. 

 

ஜீப்ல ஏறுங்க டா ரெண்டு பேரும். 

சார் என்று அதிர்ந்தான் ஆகாஷ். 

 

அஸ்வந்த் கூலாக சென்று ஜீப்பில் ஏறி ஹாய் என்று கை அசைத்தான். 

 

ஆகாஷ் தன் நண்பன் எங்கு பார்த்து கை அசைக்கிறான் என்று அவன் பார்வை சென்ற திசையை பார்க்க, காற்றில் அசைந்தாடும் கூந்தலை காதோரம் ஒதுக்கியவாரு அஸ்வந்தை சலிப்பாக பார்த்தாள் ஒரு பெண். 

 

டேய் மச்சான் நம்பள போலீஸ் ஸ்டேஷன் இழுத்துட்டு போக போறாங்க. நீ என்னனா இப்படி ஏதோ ஒரு பொண்ணை பார்த்து கை அசைக்கிறியே டா என்று கேட்டான் ஆகாஷ். 

 

மச்சான்  அந்த பொண்ணை பார்த்து தான் டா நான் என்னையே மறந்துட்டேன். அப்போ நான் தேடுற பொண்ணு அவள் தான் டா என்றான் அஸ்வந்த். 

 

நீ எப்போ டா பொண்ணை தேடுன. என்ன டா சொல்லுற பாவி. பயமா இருக்குடா எனக்கு. ஸ்டேஷன் போறோம் டா. அங்க நம்பள லாடம் கட்ட போறாங்க என்று ஆகாஷ் பயத்தில் கூற, பார்த்துக்கலாம் மச்சான் கூல் என்றான் அஸ்வந்த். 

 

உனக்கு என்ன டா உன்னைய காப்பாற்ற உங்க அப்பா வருவாரு. ஆனால் எங்க அப்பா என் பையன் பைக்ல வேகமா போனானா அப்போ அடிங்க சார் அவனை அடிங்க சார் அவனைனு சொல்லுவாரு டா என்று ஆகாஷ் புலம்பி கொண்டு வந்தான். 

 

அஸ்வந்த் தோழனின் புலம்பலை  கண்டு கொள்ளவில்லை. 

 

ஜீப் ஸ்டேஷன் சென்று நின்றது. இருவரும் இறங்கினர்.  அவர்கள் உள்ளே செல்லவும் அஸ்வந்த்தின் டூ வீலரும் ஸ்டேஷன்க்குள் நுழைந்தது. அதை ஒரு கான்ஸ்டபில் எடுத்து வந்திருந்தார். 

 

 ஆகாஷ் சிரமப்பட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். மச்சான் எனக்கு இது ரொம்ப புதுசு டா என்றான். 

நான் டெய்லி வந்துட்டு இருக்கேன் டா என்றான் அஸ்வந்த். 

போடா டேய் என்று ஆகாஷ் அவனை நன்றாக முறைத்து பார்த்தான். 

 

இப்போ ஒன்னும் பண்ண முடியாது மச்சான். வேற வழியும் இல்லை. வா போகலாம் என்று அழைத்து சென்றான். 

 

ஒரு மணி நேரம் கடந்தது. இருவரும் அந்த எஸ் ஐ முன் நின்றிருந்தனர். 

 

அவரும் சலிக்காமல் இவரை பார்த்து கொண்டிருந்தார். 

 

சார் இனிமேல் வேகமா வர மாட்டோம் சார் விட்டுருங்க சார் என்றான் ஆகாஷ். 

அந்த பையன் என்கிட்டே இனிமேல் வேகமா பைக்ல வர மாட்டோம் சார் அப்படினு என்கிட்டே கெஞ்சிட்டு இருக்குறான். ஆனால், நீ எதுவும் சொல்ல மாட்டிகிறியே டா என்று அஸ்வந்த்தை பார்த்து கேட்டார். 

 

தப்பு பண்ணிட்டோம் சார். அதுனால அனுபவிக்கிறோம் என்று தியாகி போல் அவன் பேச, காவல் துறை அதிகாரி சிரித்து விட்டார். 

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்டேஷன் வந்தார் சங்கர். 

 

ஆகாஷ் பயந்த முகத்தோடு சங்கரின் பின்னால் பார்த்தான். 

 

ஷப்பாடா நல்ல வேலை நம்ப அப்பாவை அழைச்சிட்டு வரல என்று நினைத்து சந்தோசப்பட்டான். 

 

என்ன டா உன் பையன் வேகமா பைக் ஓட்டுறான் என்றான் காவல் துறை அதிகாரி. 

 

டா வா என்று இருவரும் தந்தையையும் அவரையும் மாறி மாறி பார்த்தனர். 

 

சொன்னா கேட்க மாட்டிக்கிறான். இவனால எப்போ அடுத்தவனுக்கு ஆபத்து வருதோ அப்போ தான் இவன் திருந்துவான் என்று சலிப்பாக கூறினார் சங்கர். 

 

அப்படி இல்லைப்பா என்று வருத்தமாக கூறினான் அஸ்வந்த். 

 

சரி டா நான் இவங்கள அழைச்சிட்டு போறேன். தேங்க்ஸ் டா சின்ன பிள்ளைங்கனு நீ எதுவும் கேஸ் போடாமல் விட்டதுக்கு என்றார் சங்கர். 

 

இதுல என்ன டா இருக்குது என்றவர், பார்த்து ப்பா இனிமேல் கவனமா வண்டி ஓட்டு என்று கூறி அனுப்பினார் காவல் துறை அதிகாரியான சங்கரின் நண்பர். 

 

ஆகாஷ் வா ப்பா என்று அவனை கைபிடித்து அழைத்து போனார் சங்கர். 

 

அஸ்வந்த் விழிகளை உருட்டினான். 

 

அவர் உங்க ப்ரென்ட்டா ப்பா என்று கேட்டான் ஆகாஷ். 

 

ஆமா டா. அதான் உங்கள பார்த்ததும் எனக்கு கால் பண்ணி சொல்லிட்டான் என்றார். 

 

ஆகாஷ் நீ என்னோட கார்ல வா. அவன் பைக் எடுத்துட்டு வீட்டுக்கு போகட்டும் என்றார். 

 

ஆகாஷ் திரு திருவென்று விழித்தான். 

 

வா டா அவனால உனக்கு தான் அடி படும் என்று அதிகாரமாக அழைத்து சென்றார். 

அஸ்வந்த் மனம் நொறுங்கி போனது. தந்தை கோபமாக இருக்கிறார் போல என்று நினைத்தான். 

அவனோட நீ சேராத டா. இனிமேல் அவனோட பேசுனா உன்னைய உங்க அப்பாகிட்டே சொல்லி கொடுத்துருவேன் என்று மிரட்டினார் ஆகாஷை. 

ஐயோ அப்பா அவனோட பேசாமல் எப்படி இருக்குறது. இனிமேல் நாங்க பார்த்து கவனமா இருப்போம் என்றான். 

 

அய்யாக்கு அவரோட பேசாமல் இருக்க முடியாதோ என்று கிண்டல் செய்தார் சங்கர். 

 

ஆகாஷ் தலை குனிந்து புன்னகைத்தான். 

தேங்க்ஸ் ப்பா எங்க அப்பாகிட்டே எதுவும் சொல்லாமல் வந்ததுக்கு என்றான் ஆகாஷ். 

 

அவனின் தலையை வருடி கொடுத்தவர் எனக்கு உன்னைய மாதிரி பொறுப்பா ஒரு பையன் இல்லையேனு கஷ்டமா இருக்குது என்றவர் அவனின் முகத்தை பார்த்தார். 

 

அவனும் பொறுப்பு தான் ப்பா. என்ன கொஞ்சம் சுறு சுறுப்பு என்றான் ஆகாஷ். 

 

எது அடுத்தவங்களுக்கு இடஞ்சலா இருக்குறது சுறு சுறுப்பா என்று கேட்டார். 

 

இந்த வயதில் தானே ஜாலியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆகாஷ் சங்கரிடம் கூறவில்லை. 

 

எங்க போனாள் இங்க தான நின்று இருந்தால் என்று அதே சாலையில் நின்று அவளை தேடினான் அஸ்வந்த். 

 

என்ன ஒரு அழகு. என்ன ஒரு பவர். அவளோட கண்ணை பார்த்ததும் தான் நான் விழுந்துட்டேன் என்று புலம்பினான் அஸ்வந்த். 

 

ஏதோ பெரிய ஹாரன் சத்தம் அவன் காதை கிழிக்க, திரும்பி பார்த்து அதிர்ச்சியாகி பின் பைக்கை ஓரம் கட்டினான் அஸ்வந்த். 

 

தம்பி பார்த்து போடா என்று கூறிவிட்டு அவனை தாண்டி சென்றார் லாரி டிரைவர். 

 

நடு ரோட்லயா நின்று இருந்தோம் என்று லேசான அதிர்ச்சியோடு இருந்த அஸ்வந்த் அதே சாலையின் எதிர் கடையில் அவளை கண்டான். 

 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page