ஹேய் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு எதிர் கடைக்கு சென்றான்.
அவளும் அவளது தோழியும் அந்த கடையில் இருந்து கல்லூரிக்கு தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்தனர்.
அவர்கள் இருவரும் அறியாமல் மறைந்து நின்று அவர்களை பார்த்தான் அஸ்வந்த்.
சரி சுகன்யா அண்ணே வந்துட்டான் என்று அவளது தோழி அண்ணனுடன் சென்று விட, சுகன்யாவின் முகம் சுருங்கியது.
சுகன்யா….. சுகன்யா… ஐயோ பேரு செம்மையா இருக்குதே என்று அவளின் பெயரை பல முறை மனதிற்குள் கூறிவிட்டு அவளின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்.
சுகன்யாவின் பார்வை ஏக்கமாக மாறியது.
அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் நின்றிருந்தான் அஸ்வந்த்.
அவளின் தோழிக்கு சிரித்த முகமாக கை அசைத்தாள் சுகன்யா.
தோழியின் முகம் மறைந்ததும் அதே போல் ஏக்கம் அவளின் முகத்தில் தங்கியது.
அஸ்வந்த் அவளை கண் இமைக்காமல் பார்த்தான்.
எனக்கும் உறவு இருந்தால் நல்லா இருந்துருக்கும். என்னையும் யாராவது அழைச்சிட்டு போனால் எனக்கும் சந்தோசமா இருக்கும் என்று அவள் மெதுவாக தான் புலம்பினாள்.
அந்த மெல்லிய உதட்டின் அசைவுகள் அஸ்வந்த்தை ஏதோ செய்தது. அவளுக்கு யாரும் இல்லையா என்று அவனின் மனமும் கேள்வி கேட்டது.
சுகன்யா கடையை தாண்டி நடந்தாள்.
அவளின் நடை மெதுவாக இருக்க, அவள் அறியாமல் அவளை பின் தொடர்ந்தான் அஸ்வந்த்.
சாலையில் மூன்று வயது குழந்தையை கை பிடித்து அழைத்து செல்லும் தாயை பார்த்தவளின் மனம் மிகவும் ஏங்கியது. நமக்கும் ஒரு தாய் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தவளுக்கு கண்ணீர் வந்தது.
அஸ்வந்த் அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்தான். அவளின் ஒவ்வொரு அசைவுகளும் அவனின் மனதில் பதிந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்திருப்பாள் சுகன்யா. அது வரை அஸ்வந்த்தும் மெதுவாக டூ வீலரை இயக்கி கொண்டு அவள் பின் சென்றான்.
சுகன்யாவின் மனம் உறவுகள் என்ற ஊஞ்சலில் ஆடியதால் தன்னை பின் தொடரும் அவனை அறியாமல் போனாள்.
சுகன்யாவின் நடை தளர்ந்ததும் அஸ்வந்த் அவனின் டூ வீலரை நிறுத்தினான்.
அவள் எங்கு செல்கிறாள் என்று பார்ப்பதற்காக கண்களை இமைக்காமல் அவன் காத்திருக்க, அவனின் பின் வந்த கார் பலத்த ஹாரன் சத்ததோடு அவனை திசை திருப்பியது.
ஹாரன் சத்தத்தில் வேகமாக பின் திரும்பி பார்க்க, காரில் அவன் தந்தையும் நண்பனும் அமர்ந்திருந்தனர்.
ஐயோ என்றவன் திரும்பி பார்க்க, சுகன்யா அங்கு இல்லை. நொடியில் மறைந்து போனாள்.
கார் அவனின் அருகில் வந்து நின்றது. வீட்டுக்கு வர சொல்லி எவ்ளோ நேரமாகுது டா. இன்னும் வராமல் இங்க என்ன டா பண்ற? என்று கோபமாக கேட்டார் சங்கர்.
அது வந்து ப்பா என்று திணறியவனை பார்த்தவர், அப்படியே எனக்கு பயந்துருவ பாரு என்றார்.
உதட்டை கடித்து சிரித்து கொண்டான் அஸ்வந்த்.
ஆகாஷ்ஷை அவனோட வீட்டுல விட போறேன் நீயும் வா என்றார் சங்கர்.
இல்லை ப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்ற நண்பனை உறுத்து பார்த்தான் ஆகாஷ்.
வெட்டியா அலைய வேண்டியது கூப்பிட்டா வேலை இருக்கு சொல்லுறான். என்ன புள்ளையோ என்று கூறிவிட்டு காரை இயக்கினார் சங்கர்.
தந்தையின் கார் சாலையை தாண்டியதும் அஸ்வந்த் அந்த சாலை முழுதும் அவளை தேடினான். ஆனால், சுகன்யா அவன் கண்களில் சிக்கவில்லை.
அச்சோ அப்பா வரலைனா அவள் வீடு எங்க இருக்குனு பார்த்துருப்பேன் என்று புலம்பினான்.
அரை மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று அவள் வருவாளா என்று காத்திருந்து அவள் வராமல் போனதும் பைக்கை முறுக்கி கொண்டு கிளம்பினான் அஸ்வந்த்.
அவள் முகம் ஏன் அப்படி ஒரு சோகத்தை எனக்கு காட்டிச்சு. அவள் நல்லா தான இருக்குறாள். எனக்கும் ஒரு அண்ணன் இருந்தால் நல்லா இருந்துருக்கும்னு புலம்புனாளே அவளுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையோ என்று அவளை பற்றிய எண்ணங்களில் வண்டியை இயக்கி கொண்டு சென்றவன் நல்ல படியாகவே வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டு வாசலில் அவனுக்காகவே காத்திருந்த பாரிஜாதம் மகனை கண்டதும் ஓடோடி வந்தார்.
நல்லா இருக்கியா டா? உனக்கு எதும் ஆகலையே என்று அவனின் உடம்பை தொட்டு பார்த்து பரிதவித்தார் பாரிஜாதம்.
சங்கர் வந்து மகன் செய்த சாகசத்தை அவரிடம் கூறியதும் மகனை கண்ணில் பார்க்கும் வரை பாரிஜாதம் பயத்தோடு இருந்தார். அவனுக்கு ஒன்றும் இல்லை நலமாக தான் இருக்கிறான் என்றதும் தான் அவருக்கு மூச்சே சீராக வெளி வந்தது.
என்னப்பா இந்த வயசுல போலீஸ் ஸ்டேஷன் போய் உன் அப்பாவை இப்படி அசிங்கப் படுத்தணுமா ப்பா என்று கேட்ட தாய்க்கு பதில் கூறாமல் வீட்டிற்குள் சென்றான் அஸ்வந்த்.
என்ன டா பேசிட்டே இருக்குறேன். பதில் சொல்லாமல் போற என்ற தாயின் கத்தலில் பயத்தோடு நகராமல் நின்று விட்டான் அஸ்வந்த்.
நல்லா இருக்குறேன்னு தெரிஞ்சதும் சத்தமா பேசுறாங்களே என்று பயந்தவன், அது வந்து ம்மா ரொம்ப பசியா இருக்குது என்று கூறி சமாளித்தான்.
பசிக்குதா ப்பா. இரு அம்மா சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று அவனை சோஃபாவில் அமர சொல்லிவிட்டு சென்றார்.
அவனும் அமைதியாக அமர, சாப்பாடு எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி விட்டார் பாரிஜாதம்.
அவரின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்க, அரண்டு விட்டான் அஸ்வந்த்.
அம்மா என்றான் கலங்கிய குரலில்.
நான் வச்சிருக்குறது ஒத்தை பிள்ளை. அவனுக்கு ஏதாவது ஆனால், நான் உயிரோட இருக்க மாட்டேன் ப்பா என்றார் பாரிஜாதம்.
அவரின் வார்த்தை உண்மையானதாக இருந்தது.
சாரி ம்மா என்றான் அஸ்வந்த்.
அடி, உதை என்று கொடுத்து வளர்த்தால் இந்த ஆண் பிள்ளைகள் வழிக்கு வர மாட்டார்கள். அதுவே செண்டிமெண்ட்டாக பேசினால் உடனே விழுந்து விடுவார்கள். இதோ பாரிஜாதம் ஒரு துளி கண்ணீரில் மகனின் கண்களில் நீர் வழிய வைத்து விட்டாரே. இது அல்லவோ தாயின் ராஜ தந்திரம்.
ஏன் ப்பா அஸ்வந்த் உன்னைய விடு நீ என்ன தப்பு பண்ணாலும் உனக்காக நாங்க பணத்தை வாரி இறைச்சி என்ன வேணா பண்ணுவோம். ஆனால், உன் உயிர் நண்பன் ஆகாஷ்ஷை யோசிச்சு பாரு. அவன் மிடில் க்ளாஸ் பேமிலி பையன். பையனுக்காக எது வேணா பண்ணலாம்னு நினைக்குற மனசு இருக்கு பெத்தவங்ககிட்டே. ஆனால் பணம் இல்லை. அவனும் அவங்க அப்பா அம்மாக்கு ஒத்தை பிள்ளை. அவனோட எதிர்காலத்தை நம்பி தான் அவங்க குடும்பம் இருக்குது ப்பா. நீ தான் அவனை புரிஞ்சு நடந்துக்கணும். உன்னோட எல்லா விஷயத்துலயும் அவன் உன்னோட இருக்குறான். இதோ இப்போ அவன் எந்த தப்பும் பண்ணாமல் உனக்காக தான போலீஸ் ஸ்டேஷன் வந்தான் என்றார்.
அஸ்வந்த் மிகவும் குழம்பி போனான். மிக பெரிய தவறு செய்து விட்டதாக எண்ணினான்.
இனிமேல் பார்த்து கவனமா வண்டி ஓட்டு ப்பா என்று தான் கூற வந்த விஷயத்தை அழகாக சுற்றி வளைத்து கூறினார் பாரிஜாதம்.
சரி ம்மா இனி கவனமா இருக்குறேன் என்றவன் கூம்பிய முகத்தோடு தனது அறைக்கு சென்றான்.
தன் நண்பனுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டான்.
இப்போதான் மச்சான் அப்பா வந்து என்னைய விட்டுட்டு போறாரு என்று கைபேசியை எடுத்து பதில் கூறினான் ஆகாஷ்.
மச்சான் சாரி டா. உன்னைய போலீஸ் ஸ்டேஷன் வரை வரவச்சிட்டேன் என்று அஸ்வந்த் கூறினான்.
என்ன மச்சான் திருந்திட்டியா? என்று நக்கலாக கேட்டான் ஆகாஷ்.
உனக்கு என்மேல கோபம் வரலையா டா? என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான் அஸ்வந்த்.
கோபப்பட என்ன மச்சான் இருக்கு. நீ என்ன வேணும்னா பண்ணின. ஏதோ விதி அந்த இடத்துல கொஞ்சம் சில்மிஷம் பண்ணிருச்சு என்று கிண்டலாக கூறிய நண்பனின் வார்த்தையில் சிரித்தான் அஸ்வந்த்.
மச்சான் நாளைக்கு என்னைய காலேஜ் அழைச்சிட்டு போக வந்துரு டா என்றான் ஆகாஷ்.
சரி டா உன் வீட்டுல இரு. நான் கிளம்புனதும் உன்னைய வந்து அழைச்சிட்டு போறேன் என்று கூறி வைத்தான் அஸ்வந்த்.
நண்பனிடம் பேசி விட்டு பஞ்சு மெத்தையில் புரண்ட அஸ்வந்த் நினைவலைகளில் வந்து விழுந்தாள் சுகன்யா.
ச்ச மிஸ் பண்ணிட்டோம் அவளை. நாளைக்கு மறுபடி போய் பார்க்கலாமா என்று நினைத்தான்.
நம்ப மச்சானையும் அழைச்சிட்டு போலாம் என்று நினைத்தவன் தன் தலையில் தட்டி கொண்டான்.
அவன் வேணாம். அவனுக்கு நம்மளால எதும் கஷ்டம் வந்துர கூடாது என்று முனு முனுத்து விட்டு அந்த இரவை கழித்தான்.
****
காலை கல்லூரி கிளம்பி விட்டு தோழனின் வீடு சென்றான்.
வயதான தம்பதியர் இருவர் அந்த சிறிய வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க, இவனை பார்த்ததும் வா ப்பா அஸ்வந்த் என்று அன்போடு அவனை அழைத்தார்கள்.
அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் தான் ஆகாஷ்ஷின் தாய் தந்தை.
திருமணமாகி இருபத்தைந்து வருடம் கழித்து வரமாய் கிடைத்த மகன் தான் ஆகாஸ்.
இவர்களை பார்த்தால் ஆகாஷின் தாய் தந்தை என்று எவரும் கூறாமல் ஆகாஷின் தாத்தா பாட்டி என்று தான் கூறுவர் அவர்களின் குடும்பம் பற்றி அறியாதவர்கள்.
நேற்று சங்கர் வந்து இவனை விட்டுட்டு போனான் ப்பா. நீ ஏன் வரல? என்று கேட்டார் ஆகாஷின் தந்தை.
சங்கரையும் மகன் போன்று பார்ப்பதால் உரிமையாக பெயரை கூறி கேட்டார்.
கொஞ்சம் வேலை தாத்தா என்று கிண்டல் செய்தான் அஸ்வந்த்.
டேய் என்று செல்லமாக முறைத்தார் ஆகாஷின் தாய். அவருக்கு என்ன டா வயசான மாதிரி தாத்தா சொல்லுற என்று செல்லமாக அடிகளையும் அவனுக்கு கொடுத்தார்.
ஆகாஷ் தயாராகி சிறிய அறையை விட்டு வெளியே வந்தான்.
சரி ம்மா காலேஜ் கிளம்புறோம் என்று இருவரும் கூறிவிட்டு கிளம்பினர்.
அஸ்வந்த் பைக்கை மெதுவாக இயக்கினான்.
அவனின் வேகத்தின் அளவு எப்படி என்றால் சைக்கிள் அவர்களை ஓவர் டேக் செய்து சென்றது.
ஆகாஷ் தன் நெற்றியில் தானே அடித்து கொண்டான். நண்பனின் திடீர் மாற்றத்தை கண்டு.
மச்சான் இது ரொம்ப ஓவர் டா என்றான் ஆகாஷ்.
இனிமேல் என்னால உனக்கு எந்த துன்பமும் வராது டா என்று தியாகி போல் கூறினான் அஸ்வந்த்.
மச்சான் அந்த துன்பத்தை விட இந்த துன்பம் தான் டா என்னால தாங்கிக்க முடியல என்று கிண்டல் செய்தான் ஆகாஷ்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
