அத்தியாயம்:34
ராகவன் கோபமாக மாலதியை திட்டி விட்டு… டென்ட்டை விட்டு
வெளியே போனான்.
சரிகா “ அம்மா பாருமா அப்பா எப்படி உன்னை திட்டி விட்டு
போகிறார் என்று…இதற்க்கு எல்லாம் காரணம் அந்த மயூரி தான் மா அவள் தான்…
அப்பாவை நம்ம கிட்ட இருந்து பிரிக்க பிளான் பண்ணுகிறாள்…
அந்த பாடி கார்ட் பயல் இவளை காப்பாற்றாமல் விட்டு
இருக்க…
இவள் மேலே போய் சேர்ந்து இருப்பாள் இல்ல ஊர்
முன்னாடி அசிங்கப்பட்டு இருப்பாள்…அவன் தான் ஏதோ சூப்பர் மேன் ரேஞ்ச்க்கு தன்னை நினைத்து… கத்தி குத்து எல்லாம்
வாங்கி இவளை காப்பாற்றி இருக்கிறான்.
மாமா இங்கே பாரு இந்த சரிகாவுக்கு மட்டும் தான் அவர்
அப்பா….மினிஸ்டர் ராகவனின் பெண்ணு நான் மட்டும் தான்
என்று.. ஊர் நினைக்க வேணும் அதற்க்கு நீதான் ஒரு வழி பார்க்க வேணும்.
தேவை என்றால் மயூரியை போட்டு தள்ளி விடு…இல்ல
அவளை கடத்தி வேறு நாட்டுக்கு அனுப்பி விடு…அப்போ தான்
அப்பா அவள் கூட பேச, பழக மாட்டார்…” என்று பாண்டி
மருமகளாக சொன்னாள்.
மாலதி “ சரிகா சொல்வது தான் சரி அண்ணா…இப்போ உன் கண் முன்னாடி தானே பார்த்த எப்படி பேசி போகிறார் என்று..
முன் அந்த சியாமளா இருக்கும் போதே … இவர் ஈகோவை தூண்டி விட்டு நீ காரியம் சாதித்த…
இப்போ அவள் பெத்த பெண்ணால் நமக்கு தலை வலி தான்
வருகிறது…அது வே று தாயை போல கொள்ளை அழகோடு
பிறந்து தொலைத்து இருக்கு நாட்டிய தாரகை வேறு…
அப்போ திரும்ப இவர் நினைவில் சியாமளா ஆட்சி செய்யாமல் இருப்பாளா..?
அது மட்டும் நடக்கவே கூடாது அண்ணா….
நீதான் இதற்க்கு
ஒரு வழி பார்க்க வேணும் சரி பாப்பா சொன்னது
போல…மயூரியை போட்டு தள்ளி விடு இல்ல கடத்தி வேறு
நாட்டுக்கு விற்று விடு…” என குரூரமாக சொன்னாள்.
பாண்டி மாலதி, சரிகாவை ஒரு மாதிரியாக பார்த்தவன்.
“ ஏன் நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா உங்க
இரண்டு பே ருக்கும்..? மயூரிக்கு இருக்கும் பாதுகாப்பு பற்றி
உங்களுக்கு தெரியுமா..?
அந்த சக்ரபாணி தன் பேத்தியின் பாதுகாப்புக்கு என்று தனி படையே வைத்திருக்கிறார்…அந்த அசோக் பயல் அதை விட
ரொம்ப மோசம் தங்கச்சி தங்கச்சி என்று… அவள் மேலே
எப்பவுமே ஒரு கண்
வைத்திருக்கிறான்.
அவன் தானே சக்ரபாணியின் பிசினஸ் எல்லாம் பார்த்து
கொள்வது…அடுத்து குரு மூர்த்தி நம்ம மேலே அவருக்கு இருக்கும்
கோபத்துக்கு…
அவர் மகன் வழி பேத்தி மேலே கை வைத்தேன் என தெரிந்த அடுத்த செக்கன்…
என் கதையை சத்தம் இல்லாது முடிக்க சொல்லி பவதீப்யிடம்
சொல்லி விடுவார்…
அவன் வேறு என் மேலே செம காண்டில் இருக்கிறான்…ஏதோ நான் மட்டும் தான் நாட்டை கெ டுப்பது போல நினைப்பு அவனுக்கு…சந்தர்ப்பம் கிடைத்தது என்னை
ப ோட்டு தள்ளி கொண்டே போய் கொண்டு இருப்பான்.
இதை விட ராகவன் உண்மை யை சொல்ல போனால்…எனக்கே
அவன் மேலே இப்போ நம்பிக்கை குறை ந்து விட்டது…
அவன் குரு மூர்த்தி கூட சேருவது போல தெரிகிறது…அதற்க்கு காரணம் அவன் பெரியம்மா அவன் தங்கச்சி,
குழந்தைங்க தான்…
அவங்க தான் பழசை எல்லாம் இவனுக்கு ஞாபகப்படுத்தி.. இவனை தங்க பக்கம் இழுக்க முயற்ச்சி செய்கின்றார்கள்.
இதை எல்லாம் விட முக்கிய காரணம் மயூரி…
என்ன தான் இருந்தாலும் ராகவனின் மூத்த பெண்ணுஅவள்…ராகவன்
சொன்னது போல அவளுக்கு அவன் ஏதும் செய்வில்லை தான்.
இருந்தாலும் கூட சியாமளாவின் அச்சாக இருப்பவள்… மேலே
அவனுக்கு பிரியம் ஜாஸ்தி…அதை நம்ம கிட்ட அவன் காட்டி
கொண்டது இல்லை ஏன் தெரியுமா..? அவள் உயிருக்கு நம்மால் ஆபத்து
ஏதும் வந்து விட கூடாது என்ற எண்ணம்.
இன்று அவள் உயிருக்கு ஆபத்து என்னும் போது அவனை
மீறி…அந்த பாசம் வெ ளிவந்து விட்டது அவனை உங்க
கடை பிடிக்குள்ளே … வைத்திருக்க துப்பு உங்க இரண்டு
பேருக்குமே கிடை யாது இதில் என்னை தப்பு சொல்லி
கொண்டு…
எனக்கு தெரியும் எங்கே எப்படி காய் நகர்த்த வே ணும்
என்று…தெரியும் நீங்க ரெண்டு பேருமே அமை தியாக
இருந்தால் போதும்…திரும்ப சொல்கிறேன் ராகவனை
கோபடுத்தி பார்க்க வேணாம்…
அவன் உடம்பிலே குரு மூர்த்தி
ரத்தம் ஓடுகிறது.
அது சில நேரம் நம்மை பதம் பார்த்து விடும்…அவன் நம்மை
விட்டு போகாதவாறு நான் அவனுக்கு ஒரு வலை பின்ன
போகிறேன்…சரி வாங்க நம்ம சென்னைக்கு கிளம்பலாம்…”
என்றான்.
உள்ளுர் ஆளுங்களை தவிர தஞ்சைக்கு வந்திருந்த மற்ற
அனைவரையுமே…பாதுகாப்பாக அனுப்பி விட்டு தான் குரு
மூர்த்தி கிளம்பினார்…
அவருக்கு முன்னே அவரிடம் சொல்லிவிட்டு சக்ரபாணி மயூரியை மட்டுமல்ல….மீனா, புவனா,
குழந்தைங்களை அழைத்து கொண்டே கிளம்பி விட்டார்.
சாரதாவும் கண் விழித்தவர் மகனை கண்ட சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது…சாரதாவை கிருபா சக்ரபாணி கூட
அனுப்பி விட்டு பவதீப்புக்கு உதவியாக நின்றான்.
குரு மூர்த்தி வரும் வரைக்கும் தங்கள் பங்களாவில் தான்
இருக்க வேணும் என்று…சக்ரபாணி மீனா, புவனா,குழந்தைங்களை அழை த்து வந்து விட்டார்…
அவர்களுக்கும் பவதீப் வேறு காவலுக்கு இல்லை என்பதால் சக்ரபாணி பங்களாவுக்கு வந்து விட்டார்கள்.
தர்ஷன், தியா தூங்கி இருக்க அங்கே இருந்த ரூம்
ஒன்றில்…அவர்களை தூங்க வைத்து விட்டு காவலுக்கு ஒரு
வேலைகாரியை வைத்து விட்டு…மீனா, புவனாஹாலுக்கு
வந்தார்கள்.
மயூரி தன் ரூம்க்கு போய் இருந்தாள்…தன் நாட்டிய உடை
அலங்காரங்களை களைய
அவள் உதவிக்கு கண்மணி
இருந்தாள்…
யசோதா தன் ரூம்க்கு குளிக்க போய் விட்டாள்…ஹாலில் சக்ரபாணி வெங்கட், அசோக் கூட ஏதோ பேசி
கொண்டு இருந்தவர்…
இவர்களை காண கல்யாணி என அழைத்தார்… என்னங்க என கல்யாணி சமையலறையில் இருந்து வந்தார்.
சக்ரபாணி “ கல்யாணி மீனா, புவனா பசியோடு
இருப்பாங்க…சீக்கிரமாக டின்னரை ரெடி பண்ண
சொல்லு…மீனா குரு எனக்கு கால் பண்ணி இருந்தான் மா
நாளை க்கு காலையில் தான் சென்னைக்கு வருவதாக
சொன்னான்.
அவன் சில வேலைகளை முடித்து விட்டு வர லேட்டாகி விடும்
என்றான்…தஞ்சையில் உங்க பங்களா இருக்கு தானே அங்கே தங்கி இருப்பதாக சொன்னான்…
உன் கிட்ட கால் பண்ணி
பேசுவதாக சொன்னான்.
நான் தான் சொன்னேன் நீ பயப்பட தேவையில்லை …நீ வரும்
வரைக்கும் மீனா, புவனா, குழந்தைங்க என் பொறுப்பு
என்று…
அப்போ தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது…புவனா
குழந்தை ங்க எங்கே தூங்கி விட்டாங்களா..? என கேட்டார்.
கல்யாணி “ என்ன புவனா அவங்க சரியாக சாப்பிட
கூடவில்லை …அவங்களுக்காக தானே அவசரமாக சாப்பாட்டை
ரெடி பண்ண சொன்னேன்…
ஏன் தூங்க பண்ணின பிறகு நடுராத்திரியில் உன்னை தான் தொந்தரவு பண்ணுவாங்க பசிக்குது என்று…” என சொன்னார்.
புவனா “ வரும் போது இரண்டு பேருமே பாதி தூக்கத்தில் தான்
வந்தாங்க ஆன்ட்டி..தர்ஷன் வேறு தூக்கத்தில் அப்பா, அப்பா
என புலம்பி கொண்டே இருந்தான்….
அண்ணன் நாங்க கிளம்பும்
போது ஸ்நாக்ஸ் எல்லாம் இவங்களுக்கு வாங்கி கொடுத்தது…
அதை தர்ஷன் சாப்பிட்டான் பாப்பாவுக்கு தூக்கத்தில் பால்
கொடுத்தால்…சாப்பிடுவாள்
பிரச்சனை ஏதும் இல்லை மயூ
எங்கே ஆன்ட்டி காணோம்…? தூங்கி விட்டாளா..? என
கேட்டாள்.
கல்யாணி “ இல்ல மா டான்ஸ் டிரஸ், மேக்கப் எல்லாம் ரீமூவ்
பண்ண போய் இருக்கிறாள்… ரொம்ப நேரம் அதை எல்லாம்
போட்டு கொண்டு இருந்தால் அரிப்பெடுக்க ஆரம்பிக்கும்…”
என்றார்.
வெங்கட் “ நல்ல காலம் தலைக்கு வந்து தலைப்பாகையோடு போய் விட்டது…அந்த பவதீப் தம்பி அவன் டீம்
எல்லோரையுமே காப்பாற்றி விட்டாங்க…
அதை விட நம்ம கிருபா தர்ஷனை காப்பாற்றி விட்டான்…அசோக் கிருபா வருவதாக நமக்கு தகவல் ஏதும்
சொல்லவில்லையே …!
சாரதா மயூ கிட்ட கூட
சொல்லவில்லை போல… எப்போ வந்தானோ தெரியாது அவன் கூட பேச முடியவில்லை… அவனை வீட்டுக்கு வர சொல்லு…”என்றார்.
அசோக் “ கிருபா அண்ணா சாரதா ஆன்ட்டி கிட்ட கூட
சொல்லவில்லை போல அங்கிள்…அவங்களும் ஷாக்காக தான் அவரை பார்த்தாங்க…
நல்ல காலம் அவர் மட்டும் நம்ம தர்ஷை பார்க்கவில்லை என்றால்…அவனை அந்த தீவிரவாதிங்க கடத்தி போய்
இருப்பாங்க…
அண்ணா குரு அங்கிள் கூட தான் நிற்கிறாங்க…அந்த பாடி கார்ட்டுக்கு ஏதோ உதவி செய்ய போவதாக சொன்னார்…அந்த திமிர் பிடித்தவனுக்கு இவர் எதற்காக உதவி செய்ய
வேணும்…
லீவுக்க வந்தால் அதை என்ஜாய் பண்ண வேண்டியது தானே …சரியான திமிர்பிடித்தவன் அவன்…” என்று பவதீப்பை
திட்டினான்.
கல்யாணி “ அசோக் பார்த்து
பேசு பவதீப் தம்பிக்கு உன் வயது தானே …அவர் பதவிக்கு மரியாதையை கொடு அந்த தம்பி கிட்ட இருப்பது திமிர் இல்ல கண்ணா…
சுயமரியாதை அதிகம் அது உனக்கு திமிராக தெரிகிறது…அவர்
மட்டும் இன்று இல்லை என்று இருக்க உன் தங்கச்சி
இன்று…உயிரோடு இருந்து இருக்க மாட்டாள்.
அந்த நன்றியை நம்ம மறக்க கூடாது…சாரதாவுக்கு இப்போ
தான் நிம்மதியாக இருக்கும் ஒரே மகன்…என்ன தான் பணம்,
வசதி இருந்தாலும் அவன் அருகில் இருப்பது போல வருமா..? என்றார்.
மீனா “ ஓ…அந்த தம்பி சாரதாவின் மகனா..? ஆனால் நான் அவனை ஒரு தடவை கூட சாரதா கூட பார்த்ததே
இல்லை …ஏன் கல்யாணி அந்த தம்பியும் ராணுவத்தில் தானே
இருக்கு இன்னும் கல்யாணம் செ ய்யவில்லையா..? என
கேட்டார்.
கல்யாணி “ நீ வேறு மீனு நாங்க எல்லாம் எவ்வளவு சொல்லி
பார்த்தோம்…ராணுவத்திற்கு போகாதே நம்ம கம்பெனியை…
அசோக் கூட சேர்ந்து பார்த்து கொள்ளு என்று…
எங்க வாயை எல்லாம் சேவை அது எது என பேசி அடைத்து விட்டான்…மயூரிக்கு அவன் ராணுவத்துக்கு போகும் போது பதினெட்டு வயது…அவன் போக கூடாது என ஒரேய அழுகை சாரதா
கூட…
எங்க கிட்ட புலம்பி கொண்டே இருப்பாள்…நானும் அவளும் அவனுக்கு எத்தனை பெண்ணுங்க பார்த்தோம்
தெரியுமா..?
எல்லாம் நல்ல குடும்பத்து படித்த பெண்ணுங்க…ஒரேயடியாக வேணாம் என மறுத்து விட்டான்.
ராணுவம் தான் உயிர் மூச்சு லட்சியம், கனவு என சொல்லி
எங்களை …பெண்ணு பார்ப்பதை தடுத்து விட்டான்
இங்கே அவன் லீவுக்கு வந்தால்…நாங்க அழுது புலம்பி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவோம்… என்ற எண்ணத்தில் வரவே மாட்டான்.
அப்படி வந்தாலும் ஒரு வாரம் இருந்து விட்டு ஓடி
விடுவான்…இப்போ அதிசயமாக வந்து இருக்கிறான் இந்த முறை அவனை விடுவதாக இல்லை …
மயூரியை வைத்து
அவனுக்கு.. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேணும்…”
என்றார்.
சக்ரபாணி “ புவனா மா உனக்கு கிருபாவை தெரியுமா..? என
கேட்டார்.
மயில் ஆடி வரும்….
