அத்தியாயம்:35
சக்ரபாணி புவனாவிடம் கிருபாவை தெரியுமா என கேட்டார்…
புவனா “ உங்க கேள்வி எனக்கு புரியவில்லை அங்கிள்…கிருபாவா…! அவரை இதற்க்கு முன்னே நான் பார்த்தது கூட தெரியாது…சாரதா ஆன்ட்டிக்கு ஒரு மகன் இருப்பது தெரியும்.
சியாமளா அண்ணி பேசும் போது சொல்லி இருக்கிறாங்க…அவன் தன்னை விட சின்ன பையன் தன் தம்பி போல என்று…அதற்க்கு பிறகு அவரை பற்றி எனக்கு ஏதுவுமே தெரியாது.
தர்ஷனை காப்பாற்றிய போது கூட அவர் ஒரு ராணுவ வீரர் என்று மட்டும் தான் தெரியும்…பிறகு நீங்க சொல்லி தான் அவர் சாரதா ஆன்ட்டி பையன் என தெரியும்…” என்றாள்.
கல்யாணி “ எதற்காகங்க தீடிரென கிருபாவை புவனாவுக்கு தெரியுமா என கேட்டீங்க…? என கேட்டார்.
சக்ரபாணி “ இல்லமா கிருபாவுக்கு பரத்தை நன்றாக தெரியும் போல இருக்கு…பரத் தன் கூட படித்தவன் நண்பன் என்றான்…அவன் இறந்ததை சொன்னதும் அப்படியே ஷாக்காகி விட்டான்.
அவனுக்கு சாகும் வயது இல்லை…பெரிதாக நோய் ஏதும் இல்லை அவன் இறக்க காரணம் குருவின் எதிரிங்க சதி தான்…அவரை பழி வாங்க தான் பரத்தை போட்டு தள்ளி விட்டாங்க என்றான்.
எல்லாம் தெரிந்தது போல பேச தான்…சில நேரம் அவனை புவனாவுக்கு தெரியும் என நினைத்தேன்…பரத் ப்ரண்ட் என்றால் தெரிந்து இருக்க வேணுமே…” என்றார்.
புவனா “ ம்… இப்போ தான் ஞாபகம் வருகிறது…அவர் பேசும் போது கூட தன் ப்ரண்ட் ராணுவத்தில் இருப்பதாகவும்…அவனை நேரில் ஒரு தடவை பார்க்க வேணும்.
அவன் லீவுக்கு வரும் போது அவனுக்கு… விருந்து வைக்க வேணும் என்று சொன்னார் பெயர் சொன்னார் தான்…நான் மறந்து விட்டேன் இப்போ தான் இந்த விஷயம் கூட ஞாபகத்துக்கு வருகிறது…” என்றாள்.
மீனா “ ரொம்ப நல்ல தம்பி இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும்…ஒரு நாள் சாரதாவையும் அந்த தம்பியையும்…அழைத்து விருந்து வைக்க வேணும் அது செய்த நன்றியை மறக்க கூடாது…” என்றார்.
கல்யாணி “ யாரை விருந்துக்கு அழைக்க போகிற என்ற மீனு கிருபாவையா…? வந்து விட்டு தான் மறு வேலை பார்ப்பான்…
அவனும் கிட்ட தட்ட பவதீப் தம்பி போல… என்ன ஒன்று மயூ சொன்னால் கேட்டு கொள்வான் நீ மயூரியை வைத்து…. அவனை விருந்துக்கு அழை வருவான்…” என்றார்.
பிறகு மயூரி வந்தும் அனைவருமே சாப்பிட்டு விட்டு தூங்க போனார்கள்…மறுநாள் குரு மூர்த்தி சென்னைக்கு வந்ததும்… தங்கள் வீட்டுக்கு அவர்கள் கிளம்பி விட்டார்கள்…
கிருபா தன் வீட்டுக்கு போய் விட்டதாக பவதீப் சொன்னான்…சரி அவன் கூட பிறகு பேசலாம் என்று மயூரி இருந்தாள்.
சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாக…பாண்டி ராகவனுக்கு ஒரு ஸ்பை போட்டவன்…அடுத்து காலம் கடத்தாது கனகராஜை… சந்திக்க வேணும் என்று கால் பண்ணினான்.
கனகராஜ்க்கு அவனை சந்திக்க விருப்பம் இல்லை..எலக்சன் டைம் இவன் வேறு ஒரு மாதிரி ஆளு.. தன்னை எதிலும் ஒன்றில் கோர்த்து விட்டால் தன் நாற்காலி கனவு… நனவாகி விடும் என்ற எண்ணம்.
ஆனால் ராஜவேலு தான் பாண்டியை சந்திக்க வேணும்…நம்ம கடற்கரை பங்களாவுக்கு வர சொல்லு மற்றதை எல்லாம்….நான் பேசி கொள்கிறேன் என்றான்.
கனகராஜ்க்கு தம்பி சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற எண்ணம்…அவனால் தானே இன்று எதிர்கட்சி தலைவராக அவர் இருக்கிறார்….கனகராஜ் பாண்டியை வர சொல்ல.
அவன் தன் அல்லக்கையும் விசுவாசியான கபாலி கூட..யாரிடமும் சொல்லாது கனகராஜை சந்திக்க போனான்… ஆனால் அவன் தெரியாத ஒரு விஷயம்.
அவனை கண்காணிக்க குருமூர்த்தி பவதீப்பிடம் சொல்லி இருந்தது…அவனும் தன் திறமையான கார்ட் ஒருவனிடம்….பாண்டியை கண்காணிக்கும் வேலையை கொடுத்து இருந்தான்.
கனகராஜ், ராஜவேலு கூடவே அவர்களின்… அல்லக்கைகள் சிலர் பங்களாவில் இருந்தார்கள்…பாண்டியை கண்டதும்.
கனகராஜ் “ வா பாண்டி என்ன அவசரமாக என்னை சந்திக்க வேணும் என்ற…ஏதும் பிரச்சனையா..? இல்ல பணம், அடியாள் ஏதும் தேவையா..? என கேட்டார்.
பாண்டி “ கடவுள் புண்ணியத்தில் பணம் அடியாள் இது இரண்டுமே…எனக்கு தேவைக்கு அதிகமாக இருக்கு தலைவரே…இது வேறு ஒரு விஷயம் என் மாப்பிள்ளை பற்றிய விஷயம்…” என்றான்.
ராஜவேலு “ அது சரி நீ யாரு..? போதை பொருள் கடத்தல் மன்னன்…அரசாங்கத்துக்கு கூட கிடைக்காத சரக்குகள் உன் கிட்ட இருப்பதாக கேள்வி…
அது போல தான் அடியாட்களும் உன் வேலைக்கு அவங்க வேணும் இல்லையா..? என கேலியாக சொன்னான்.
பாண்டி “ என்ன செய்வது ராஜவேலு…உன்னை போல அரசியல்வாதிகளுக்கு எங்க தயவு வேணுமே…நாங்க இல்லை என்றால் நீங்க ஜெயிப்பது எப்படி..?
அதுவும் சனங்கள் ஒத்த வோட்டு கூட உனக்கும் உன் அண்ணுக்கும் போட மாட்டாங்க…உங்க இரண்டு பேர் புகழ் அப்படி உனக்கு ஒரு பெயர் சனங்கள் மத்தியில் இருக்கு…அது என்ன தெரியுமா.?
தூணுக்கு சேலை கட்டி விட்டாலும்…அதை சுற்றி வரும் ரகம் நீ என்று தலைவருக்கு மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் அரக்கன்…என்ற பெயர் இப்படிப்பட்ட உத்தமர்கள் நீங்க இரண்டு பேருமே.
நான் சாரயம் காய்ச்சி விற்பவன் தான்…ஆனால் உழைத்து வாழ்பவன் நான் அதனால் உன்னை விட…எனக்கு தான் பவர் அதிகம்…” என அவனும் நக்கலாக சொன்னான்.
ராஜவேலு முகம் அவன் பேச்சால் கோபமாக மாற…அவன் ஏதோ பேச போக
கனகராஜ் “ ராஜவேலு போதும் கொஞ்சம் அமைதியாக இரு… நம்மளே ஒருவரை ஒருவர் நக்கல், நையாண்டி பண்ணி கொண்டு இருந்தால்…ஆளுங்கட்சிகாரனுக்கு நம்மை வீழ்த்த சந்தர்ப்பம் கிடைத்து விடும்.
பாண்டி இது உனக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்…சரி என்ன விஷயமாக என்னை பார்க்க வேணும் என்ற..? முதலில் விஷயத்தை சொல்லு என்ன ராகவன் விஷயமாகவா..? என கேட்டார்.
பாண்டி “ உங்க தம்பியை விட உங்களுக்கு புத்திகூர்மை அதிகம் தலைவரே…நீங்க சொன்னது சரி என் மாப்பிள்ளை விஷயமாக தான் உங்களை பார்க்க வந்தேன்.
தலைவரே மாப்பிள்ளை இப்போ நம்ம பாதையில் இருந்து… விலகி போவது போல இருக்கு காரணம்… அவர் பெரியம்மா, தங்கச்சி அன்பு.
அது மட்டுமல்ல அந்த மயூரி பெண்ணு வேறு…அந்த சியாமளா போல இருந்து தொலைக்கிறாள்…மாப்பிள்ளை கூட அவளை இப்போ தான் சரியாக பார்த்து இருக்கிறார்.
இத்தனை நாள் அரசியல்,பதவியை காரணம் காட்டி அவரை…என் கைபிடிக்குள்ளே வைத்திருந்தேன்…இந்த தஞ்சைக்கு வந்த பிறகு தான் அவர் தடுமாறியதை பார்த்தேன்.
நீங்களும் பார்த்து இருப்பீங்க தானே அவருக்கு இன்னும் குரு மூர்த்தி மேலே….பயம் கலந்த மரியாதை இருக்கு என்று ஒரு வார்த்தை தான்… அழுத்தமாக சொன்னார்.
நாய் குட்டி போல அவர் பின்னாடி போய் விட்டார்….இத்தனை நாள் மாலதி கூட வாழ்ந்தும் அவளால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரை நான் தூண்டி விட்டு காரியம் சாதித்து எல்லாம்…எங்கே வீணாக போய் விடுமோ என்ற பயம் எனக்கு இப்போ வருகிறது.
மாலதிக்கு அவரை கல்யாணம் பண்ணி வைத்தது கூட ஒரு காரணமாக தான்…அவள் என் தங்கச்சி நல்லா வாழ வேணும் தான்…கூடவே நானும் நல்லா இருக்க வேணும் என்ற ஆசை எனக்கு…
எத்தனை நாள் சாரயம் காய்ச்சுவது, போதை பொருள் சப்ளை செய்வது…கடத்தல் அடி,தடி என இருப்பது நானும் சமூகத்தில் பெரிய மனிதனாக வர வேணாமா..? அதற்க்கு எனக்கு மாப்பிள்ளை முதல்வராக வேணும்.
அப்போ தானே நானும் ஒரு மந்திரியாக முடியும்…கூடவே நாலு காசு சம்பாதிக்க முடியும் நீங்களும்… எந்த தடையும் இல்லாது உங்க இல்லீகல் வேலைகளை பார்க்கலாம்.
ஆனால் இதற்க்கு எல்லாம் இப்போ ஆபத்து வந்து விடும் போல இருக்கு…அது பற்றி கலந்து பேச தான் உங்களை பார்க்க வேணும் என்றேன்…” என சொன்னான்.
ராஜவேலு “ என்ன நீ மினிஸ்டராக வேணுமா..? பாண்டி உனக்கு ரொம்ப பேராசை தான்…
ஒரு கவுன்சிலராக கூட நிற்க உனக்கு முடியவில்லை…என்பதை விட மக்கள் உன்னை ஏற்று கொள்ளவில்லை.
இதில் உனக்கு மினிஸ்டராக வேணும் என்ற கனவு…உண்மையில் நீ தில்லாலங்கடி தான்…” என்றான்.
பாண்டி “ ஏன் நீ மட்டும் என்ன சந்தர்ப்பம் கிடைத்தால்…உன் அண்ணையே போட்டு தள்ளி விட்டு எதிர்கட்சி தலைவராக…வர பார்க்கும் ஆளு நீ உன்னை விட நான் பரவாயில்ல…” என்று திரும்ப கொடுத்து கட்டினான்.
ராஜவேலு “ ஏய்…! மரியாதையாக பார்த்து பேசு பாண்டி…இது என் இடம் சத்தம் இல்லாது உன் கதையை முடித்து விட்டு… கடலில் கட்டி எறிந்து சுறாவுக்கு உன் உடலை விருந்து வைத்து விடுவேன்.
நான் கெட்டவன் தான் ஆனால் என் அண்ணன் எனக்கு சாமி போல…அவருக்கு நான் தான் உயிர் உன்னை போலவா நாங்க..? சொந்த தங்கச்சியே கூட்டி கொடுத்த மாமா பயல் தானே நீ…” என்றான்.
பாண்டி முகம் மாற ராஜவேலு என சத்தம் போட்டான்.
கனகராஜ் “ இரண்டு பேருமே கொஞ்சம் நிறுத்துங்க…பேச வந்ததை பேசாது தேவையில்லாதது… எல்லாம் பேசி கொண்டு.
ராஜவேலு, பாண்டி உங்க இரண்டு பேருக்குமே அறிவு என்பதே கிடையாது…இங்கே என்ன நடக்கிறது நீங்க என்ன பேசி கொண்டு இருக்கிறீங்க..?
பாண்டி நீ சொன்னது சரி தான் அந்த ராகவன் இப்போ முன்னே போல இல்லை…அதற்க்கு காரணம் அவன் பெண்ணு மயூரிகா… அதை நான் நொடியில் புரிந்து கொண்டேன்.
உன் தங்கச்சி உன் மருமகளை சொல்ல வேணும்…அவனை தங்கள் கடைபிடிக்குள்ளே வைத்து இருக்க தெரியாத முட்டாள்கள்…
எப்போ பாரு அலங்காரம் பண்ணி கொண்டு… ஊர் சுற்றி திரிவதை நான் பார்த்து இருக்கிறேன்.
பிறகு ராகவன் அன்பை தேடி போகாது என்ன செய்வான்…?சியாமளா அவன் காதலித்த கல்யாணம் பண்ணிய பெண்ணு…அந்த காதல் இருக்கும் தானே.
அந்த மயூரி பெண்ணு வேறு சியாமளா போலவே இருக்கு…அவளை பார்க்கும் போது எல்லாம் அவன் சியாமளாவுக்கு செய்த துரோகமும்…அதை தொடர்ந்து குற்றணர்வும் வருவது இயற்கை தானே.
ஒன்றை நல்லா ஞாபகம் வைத்து கொள்ளுங்க இரண்டு பேருமே…ராகவன் முதல்வராக வந்தால் தான் நம்ம நினைத்தது எல்லாம் சுதந்திரமாக செய்ய முடியும்…அதற்க்கு வழி பார்க்காது உங்க கதையை பேசி கொண்டா இருக்கிறீங்க..?
உங்க இரண்டு பேரையுமே போட்டு தள்ள வேணும் போல இருக்கு…முட்டாள்கள் சகவாசம் எனக்கு எதற்க்கு முதலில் அந்த ராகவனை நம்ம கைபிடிக்குள்ளே…வைத்திருக்க ஒரு வழியை கண்டு பிடிங்க…” என கோபமாக சொன்னார்.
மயில் ஆடி வரும்….
