சுவாசம் – 8

சத்தியனுக்கு இரவு குடிப்பது வாடிக்கையாகி போக, அக்னியோ மது குவளையை கையில் எடுக்காததால் நண்பன் குடி பழக்கம் தெரியாமல் போனது.

இப்படியே ஒரு வாரமும் கழிந்தது.

இதழுக்கு சற்று வலி மட்டுப்பட்டிருக்க கைகளை சிறிது அசைக்க தொடங்கியவள், காலை கெந்தியப்படியே மெல்லமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.

இஷாவோ இன்று மருத்துவமனைக்கு பரிசோதிப்பிற்கு வரும்படி அழைத்திருக்க, சத்தியனை அழுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பெண்ணவளை தயாராக கூறி தானும் தயாராகி வந்திருந்தான்.

ஆடவன் தனக்காக வாங்கி குமித்திருந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து மாட்டி கொண்டவள், பின்னாடி கயிற்றை கட்ட முடியாமல் தவிக்க, 

“ரெடியா..” என்றபடி அந்நேரம் உள்ளே நுழைந்த அக்னியோ பெண்ணவள் சிரமப்படுவதை கண்டு “அதான் கை பின்னாடி எட்டாதுன்னு தெரியும்ல பின்ன எதுக்கு ரோப் வச்ச சுடிதார் போடுற.. வேற டிரஸ் சேஞ்ச் பண்ணு” என்றதில் உதடை பிதுகிக்க இதழோ “மீண்டு..மா” என்று விழிகளை விரித்து “என்..னால முடி..யாது.. இது..வே கஷ்ட..ப்பட்டு  போட்..டேன்.. கை ரொ..ம்ப வலிக்கு..துங்க 

கொ..ஞ்சம் நீங்க..ளே.. இ..ந்த ரோப் கட்டி..விட்டு உத..வி பண்ணு..ங்க பி..ளீஸ்” என்றப்படி பெண்ணவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றுக்கொள்ள,

ஆடவனின் நிலை தான் அவஸ்தையாகி போனது. 

பின் எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு அவள்மேல் விரல் படாதப்படி கயிறை கட்டிவிட முயற்சித்தும் ஆடவனின் சுண்டு விரல் அவளின் முதுகை தீண்டிவிட, அதில் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் உச்ணமூச்சை வெளியிட்டு தன்னை சமன்படுத்த முயன்றான்.

பெண்ணவளுக்கு அவன் அருகே வரவுமே கூச்சமாகி விட்டது, இதில் அவனின் விரல் தீண்டியதில் உடலில் உள்ள அனைத்து ரோமங்களும் சிலிர்த்து எழ, அவனின் வெட்ப மூச்சுகாற்று முதுகில் பட்டதில் சுயம் இழந்து போனவளோ, மெல்ல அவன் புறம் பார்வையை திருப்பிய நேரம் இருவரின் பார்வையும் மற்றொருவர் இதழில் படர, அதற்கு மேல் முடியாமல் இதழ் கண்களை மூடி கொண்டு மோனநிலைக்கு சென்று விட்டாள்.

அவளின் நிலையில் மேலும் பித்தாகியவனின் கைகள் பெண்ணவளின் கன்னத்தில் பயணித்து அவளின் இதழை நெருங்க முற்பட்டான்.

இருவரின் இதழுக்கு நூலளவு இடைவெளியிருக்க, அதையும் தவிர்க்க நினைத்தவன் பெண்ணவளை நெருங்கவும் ஆடவனின் திறன்பேசி சிணுங்கி இருவரின் நிலையையும் கலைத்து விட்டது.

அதில் தான் அக்னிக்கு தான் செய்ய இருந்த காரியம் விளங்க, பட்டென்று அவளைவிட்டு விலகியவன் “நான்.. நான் கார்ல இருக்கேன் சீக்கிரம் ரெடியாகி வா” என்றுவிட்டு வேகமாக வெளியே வந்த அக்னிக்கோ பிறகு தான் மூச்சே விட முடிந்தது.

இதில் ஆடவனின் உடம்போ சூடேறி பெண்ணவளுடன் இருந்த நெருக்கத்தையே நினைவுப்படுத்த, பின் மண்டையிலையே தட்டிக்கொண்டவனின் என்னமோ அவளின் இதழை கொய்ய சொல்லி தூண்டி விட்டது.

அதில் தலையை அழுந்த பற்றியவன் “அக்னி நீ காஜியா மாறிட்டடா.. இப்படியே போனா இங்கயிருந்து அவ வெளிய போகும் போது வயித்த தள்ளிட்டு தான் போவா போல.. “ என்று சிந்தித்தவனின் மூளையை உணர்ந்து மேலும் நொந்தவன் “அக்னி இத்தன வருஷமா வழிய வந்து வழிஞ்ச பொண்ணுங்ககிட்ட மயங்கமா வீர காளையாயிருந்த நீ.. இப்படி அவ ஒத்த பார்வைக்கு சொக்கி போறியேடா.. இதான் உன் வீரமா.. தூ காஜி புடிச்சவனே” என்று தன்னை தானே கடிந்து கொண்டிருக்க, 

விடாமல் திறன்பேசி அடித்ததில் கடுப்பாகி தரையில் காலை உதைத்து கொண்டு அழைப்பை ஏற்று பேசியப்படி காரில் ஏறி கொண்டான்.

***

அவன் சென்றதும் கண்ணாடியில் தெரிந்த தன்னை பார்த்த இதழ் “அச்..சோ என்..னடி இ .தழ் இப்படி பண்..ணிட்ட.. அவர் உன்..ன எ..ன்ன நினைச்சி..ருப்..பாரு.. நீ அ..வர் மூஞ்..சில எப்படி முளிப்..பேன்” என்று தன்னை தானே கடிந்து கொண்டவளுக்கோ சற்று முன் நிகழ்ந்த காட்சிகளே கண்ணாடியில் படமாக தெரிய, அதில் பெண்ணவளின் முகம் செவ்வானமாக சிவந்து போனது.

பின் கடினப்பட்டு அந்நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு தயாராகி வெளியே கெந்தி நடந்தப்படி காரை நோக்கி வந்தவள், கூடவே ‘நடக்க முடியாதுன்னு தெரியும் தான புடிச்சி கூட்டிட்டு போக தெரியல.. ரூம்ல இருக்கிற ரெஸ்ட் போகும் போது மட்டும் பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிட வேண்டியது.. விவஸ்த்த இல்லாத மனுஷன்’ என்று அவனை உள்ளுக்குள் அர்ச்சித்தப்படி வந்தவள்

தடுக்கி விழ போக, அவள் சிரமப்பட்டு நடந்து வருவதை கண்டு காரைவிட்டு இறங்கி அவளுக்கு உதவ வந்தவன் பெண்ணவள் தடுமாறியதை கண்டு ஓடி வந்து இடுப்போடு தாங்கி பிடித்து கொண்டான்.

அவனின் பிடியில் சற்று முன் திட்டியதை கூட மறந்த இதழோ அவன் கண்களையே இமைக்காமல் பார்த்திருக்க, ஏற்கனவே உணர்வுகளுடன் போராடி கொண்டிருந்தவனுக்கு தான் அவளின் பார்வையில் சிரமமாகி போனது.

‘அய்யோ.. ஏற்கனவே ஒரு மார்க்கமா தான் சுத்துறேன்.. இதுல நிலமை புரியாம இவ வேற உத்து உத்து பாத்து மனுஷன சோதிக்கிறா மை லார்ட்’ என்று மனதிற்குள் நொந்துவிட்டு குரலை செருமி பெண்ணவளின் பார்வை கலைத்துவிட்டவன், தன் பிடியிலிருந்து விடுவித்து அவளை தள்ளி நிறுத்தி “கீழ பாத்து நடந்து வர மாட்டியா” என்று கண்டித்துவிட்டு அவளின் கையை பற்றி கொள்ள, 

பெண்ணவளோ முறைத்து “நா..னே நொண்..டிட்டு இருக்கேன்.. பா..த்து வா பாத்து வா..ன்னு கடுப்படிக்..குறது மட்டு..மில்லாம ரூம்லி..யிருந்து என்ன தா..ங்கி பிடி..ச்சி கூட்..டிட்டு வந்த போல ரொ..ம்ப தான் சளிச்..சிக்கு..றீங்க.. அவ்வளவு கஷ்டப்..பட்டு..லாம் கூட்டி..ட்டு வர வேண்..டாம் கைய விடு..ங்க” என்று பிடித்திருந்த அவனின் கையை உதறி விட, அதில் கேலியாக இதழ் வளைத்த அக்னியோ “கார்க்கிட்டயே வந்தாச்சு.. இனி எதுக்கு கைய பிடிக்க போறேன்” என்று அவளை வாரிவிட்டு காரில் ஏறிக்கொள்ள,

அவனின் பதிலில் பெண்ணவள் முகம் புஷ் என்றாகிவிட, பின் “அய்..யோ” என்று தலையில் அடித்து கொண்டு மறுபக்கம் காரில் ஏறிக்கொண்டவள் முகத்தை அவனை பாராமல் திருப்பி வைத்து கொள்ள, அவளின் குழந்தை செயலை கண்டு தலையாட்டி தாடிக்குள் மர்மமாக புன்னகைத்தவன் மருத்துவமனையை நோக்கி பயணத்தை தொடங்கினான்.

சிறிது நேரம் சாலையில் கவனத்தை பதித்திருந்த அக்னிக்கோ பெண்ணவள் அமைதியாக ஜன்னலை வேடிக்கை பார்ப்பது கடுப்பாகிவிட, 

“இப்போ என்ன உனக்கு” என்றதில் அவனை புரியாமல் பார்த்த இதழோ “என..க்கு என்ன..ங்க”

“முதல என்ன பெயர சொல்லி கூப்பிடு என்னங்க நொன்னங்கன்னு புருஷன கூப்பிடுற போல கூப்பிட்ட செவிப்பற கிழியும்” என்று அவன் கத்தியதில் பெண்ணவளுக்கோ என்னவோ போலாகி விட, அவனிடம் பேசா மனமில்லாமல் மறுபடியும் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பி கொண்டாள்.

அதில் கோபமடைந்த அக்னியோ ‘கூப்பிட்டு கூப்பிட்டு பேசுறதால தான ரொம்ப பண்ற.. சரி தான் போடி’ என்று முணுமுணுத்துவிட்டு காரை இயக்கி கொண்டிருந்தவனுக்கு, ஐந்து நிமடத்திற்கு மேல் பொறுமை போய்விட ‘அய்யோ படுத்துறாளே’ என்று நொந்துவிட்டு குரலை செரும, அவளோ செவிடு போல அமர்ந்திருக்க, பெருமூச்சை இழுத்து விட்டவனோ “மலர்..”  என்று வார்த்தைக்கே வலித்து விடுமோ என்று மென்மையாக அழைக்க,

அவன் முதல்முறை தன்னை பெயர் சொல்லி அழைத்ததில் உடம்பில் சிலிர்ப்பை உணர்ந்தவளுக்கு, அவனின் மலரென்ற செல்லமான அழைப்பில் மனதில் சில்லென்று தென்றல் காற்று வீசுவது போலிருந்தது. அதனை ரசித்தப்படி வேண்டுமென்றே அவனின் புறம் பார்வையை திருப்பாமல் அமர்ந்திருக்க,

அதில் கடியான அக்னி “ஏய் உன்ன தானடி கூப்பிடுறேன்” என்றதை கேட்டு வெடுக்கென்று திரும்பிய பெண்ணவள் “சா..ரி நா..ன் மலர் இல்ல பூ..விதழ்” என்றவளின் பேச்சில் எழும் புன்னகையை இதழ் கடித்து அடக்கியவன் “சோ வாட்.. எனக்கு அந்த நேம் பிடிக்கல இப்படி தான் கூப்பிடுவேன்”

“நீ..ங்க கூப்பிடுறது..னால மலர் என்..னோட பெய..ராகாது”

“அப்படியா.. பூவ மலர்ன்னு கூட சொல்லலாம் இல்லையா.. சோ நான் மலர்ன்னு தான் கூப்பிடுவேன்.. உனக்கு கேக்க பிடிக்கலன்னா காத பொத்திக்க”

“ஓகே.. நான் நோ சொன்னாலும் நீங்க கேக்க போறதில்ல.. சோ கூடயிருக்கிற வரை தான கூப்பிட போறீங்க.. கூப்பிட்டுக்கோங்க ஐ டோண்ட் கேர்” என்றதை கேட்டு விஷமமாக புன்னகைத்தவனோ “நீ என்னோட இருக்கிற காலம் வர” என்று கண்ணடிக்க,

அதன் அர்த்தம் உணர்ந்தும் புரியாதது படி நடித்த பெண்ணவளோ “அத தா..ன நா..னும் சொன்..னேன்..” 

“அத தான நானும் சொல்லுறேன்”

“ஒரு மார்க்..கமாக..வே பேசு..றீங்க மிஸ்..டர் அனல்.. ஆ..னால் உங்களுக்கு நான் எந்த விதத்துலயும் தகுதியில்ல சோ மன..ச என்கிட்ட அல..பாய விடா..தீங்க.. ஏற்க..னவே நான் இழ..ந்தது போ..தும் நினைக்..குறேன்” என்றவளின் குரலில் வேதனையின் சாயல் அப்பாட்டமாகவே தெரிய, அதில் வெளியே வந்த கண்ணீரை ஜன்னல் பக்கம் திரும்பி துடைத்து கொண்டாள்.

அவளே அறியும்படி வெளிப்படையாக தன் மனதை வெளிப்படுத்தியதில் முகம் இறுகிய அக்னியோ “கரெக்ட் தான் மலர்.. தகுதி இல்லன்னு தெரிஞ்சும் மனசு அலைபாய விட கூடாதுன்னு தான் நினைக்கிறேன்.. நான் மட்டும் நினைச்சா போதுமா” என்றவனின் மனது அதனை நினைக்கவில்லை என்பதை தான் சொல்லாமல் சொல்கிறான்.

தான் தகுதியில்லை என்பதை அவன் ஒப்பு கொண்டதில் வலியை உணர்ந்த பெண்ணவளோ மொளமாகி விட, இம்முறை அவளின் அமைதியை கலைக்க விரும்பாத ஆடவனோ இதயத்தில் பெரும் கலவரத்தை சுமந்து கொண்டே மருத்துவமனையில் வந்து சேர்த்திருந்தான்.

ஜன்னலையே சோகமாக வெறித்திருந்த மங்கையோ கார் நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து மருத்துவமனையின் பெயரை பார்த்தவனின் எண்ணத்தில் நண்பனின் குரல் 

“நம்ம படிச்சி டாக்டரானதும் ரெண்டு பேருமே ஒரே ஹாஸ்பிட்டல் தான் வொர்க் பண்ணனும்.. அண்ணன்கிட்ட கூட சொல்லிட்டேன் அவரும் படிச்சி முடிய கட்டிரலாம் சொல்லிட்டார்.. ஹாஸ்பிட்டல் நேம் கூட திங்க் பண்ணி வச்சிட்டேன் ஏபிஎஸ் மருத்துவமனை.. செமயா இருக்குல்ல” என்று பெருமையாக சட்டை காலரை தூக்கி விட்ட நண்பன் சூர்யாவை கண்டு புன்னகைத்த இதழோ 

“அது சரி.. அந்த ஏக்கு சொந்தகாரரான உன் அண்ணாவை எனக்கு தெரியாது.. அறிமுகப்படுத்தி வைக்க சொன்னா டைம் வரட்டும் கதை விடுற.. அம்புட்டு பெரிய அப்பாடக்கராடா உன் அண்ணன் பெயர கூட சொல்லலாமா கண்ணாமூச்சி ஆடுற” என்றவளின் குரல் இறந்த காலத்தில் தெளிவாகவே ஒலித்தது.

“பெயர் எதுக்கு பிளவர் ஆளையே காட்டுறேன் சொல்லிட்டேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு அவர் ரொம்ப பிசி பிசினஸ் மேன்.. அப்பாயின்ட் வாங்கிட்டு சொல்லுறேன்.. அப்படியே உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று கண் சிமிட்டியவனை, 

அவனை ஒரு மாதிரி பார்த்து வைத்தவள் “எனக்கு என்னவோ எங்க நான் உன்ன அண்ணன சுருட்டிருவேனோன்னு பையன் பயப்படுற போல தெரியுது.. ஆனா இந்த இடத்துல நான் ஒரு விஷயத்த பதிவு பண்றேன்.. 

எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் என் ஆள தவிர இந்த பூவிதழ் மனசுல யாருக்கும் அப்பாயின்ட் கிடையாது சொல்லிப்புட்டேன்.. எதுக்கும் உன் அண்ணன்கிட்ட அப்பாயின்ட்மெண்ட் வாங்கும் போது இந்த விஷயத்தை காதுல போட்டே கூட்டிட்டு வா.. நான் வேற அழகாயிருக்கேனா அப்புறம் நான் தான் உனக்கு அண்ணியா வரணும்.. அவர் ஒத்த காலுல நின்னா என்ன பண்றது.. என்னால என் ஆளுக்கு துரோகம் பண்ண முடியாதுப்பா” 

“ஹான்.. ஓவர் ஏத்தம் தான்டி உனக்கு.. ஒத்த காலுல அவர் நிக்க போறாரா இல்ல நீ அவர் அழகுல மயங்கி நிக்க போறியான்னு பாக்க தான போறேன் மச்சி” என்று இருவரும் சவால்விட்ட நாட்களை எண்ணி பார்த்தவளுக்கு மூச்சிரைக்க தொடங்க, 

காரைவிட்டு இறங்கி பெண்ணவள் புறம் கதவை திறக்க வந்த அக்னி, அவள் மூச்சு சிரமப்படுவதை கண்டு பதறியவன் “மலர் இன்ஹேலர் எங்கடி” என்றதுக்கு “பே..க்” என்று திணறிப்படி பின்னே கைக்காட்ட, 

வேகமாக காரில் ஏறி பின்னேயிருந்த பையை எடுத்து தேடியவனின் கைகளில் அது அகப்படாமல் விளையாட்டு காட்ட, இங்கோ பெண்ணவளுக்கோ மேலும் மூச்சு விட சிரமமாகி விட்டதில், தேடி நேரத்தை கழிக்க விரும்பாத அக்னியோ பட்டென்று கார் ஜன்னலை மூடிவிட்டு பெண்ணவளின் கழுத்தை பற்றி, அவள் இதழோடு தன் இதாழணைத்து சுவாசத்தை கடத்த தொடங்கினான்.

சுவாசம் தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page