தம்பியின் புகைப்படத்தை வெறித்தபடியே தம்பி கடந்த காலத்தில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட காதலை பற்றி சத்தியனிடம் கூறினான்.
அக்னி கூறியவையை திகைப்புடன் கேட்டவனோ “அப்போ நீயும் ஸ்வீட் ஹார்ட்டும் ஒருத்தர் ஒருத்தர் அப்போவே பாத்துருக்கீங்க ரைட்?” என்றதும் அந்நிகழ்வை நினைத்து லேசாக இதழ் விரித்தவன் “பாத்துருக்கோம்.. ஆனா நான் தான் சூர்யாவோட அண்ணன் அவளுக்கு தெரியாது”
“அப்புறம் ஏன்டா தெரியாத மாதிரி கேட்ட”
“அது தான் நல்லதுன்னு தோணுச்சு.. ஸ்கூல் படிக்கும் போது பாத்தது.. சோ நான் மறந்துருப்பேன் அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா” என்றவனுக்கு அவளை கண்ட நாட்கள் நினைவில் வந்து இம்சித்ததில் இதழ்களும் மேலும் தாராளமாய் விரிந்தது.
அதை கண்ட சத்தியன் “மச்சி.. டூ யூ லவ் ஹெர்?” என்றதில் திகைத்தவன் “டேய் அவ என் தம்பி லவ்வர்ன்னு சொல்லுறேன்..”
“சோ வாட்?.. உன் தம்பி தான லவ் பண்ணிருக்கான்.. அதுவும் பாஸ்ட் லைஃப்ல..” என்றவன் நண்பன் தன்னிடம் கூறிய கதைகளை வைத்து யூகித்து “அட் த சேம் ஸ்வீட் ஹார்ட் உன் தம்பிக்கிட்ட பிரெண்ட்லியா தான் பழகியிருக்கா.. ஏன் உன் தம்பி லவ் பண்ணின விஷயம் கூட தெரிஞ்சிருக்காது.. ஏன்னா அவன் தான் பற்போஸ் பண்ணலயேடா”
*பாஸ்ட் லைஃப்னாலும் லவ் லவ் தான.. இல்லன்னு ஆகிடாதே.. பைத்தியம் போல கண்டத பினாத்திட்டு இருக்காம போய் கம்முன்னு படு” என்றதை கண்டுகொள்ளாமல்,
அவனின் தோளை தொட்டு தன் புறம் திருப்பிய சத்தியன் “மச்சி.. எனக்கு என்னமோ ஸ்வீட் ஹார்ட்டுக்கு உன்மேல தான் விருப்பம் தோணுது* என்றதை கேட்டு கடுப்பாகி, அவனின் கன்னத்தை பதம் பார்த்தவன் “அவ தம்பி லவ்வர்ங்குற ஒரே காரணத்துக்காக தான் அவளே காப்பத்துனேன்.. இனியும் அவ உயிருக்கு ஆபத்து வராம பாத்துக்க வேண்டியதும் என் கடமை”
“அந்த கடமைல தான்.. உங்க தம்பி லவ்வர் மூச்சு வாங்குறான்னு கிஸ் அடிச்சி காப்பாத்தினியோ” என்றவனின் வார்த்தை கேலியாகவே ஒலித்தது.
இதில் ஒரு நொடி தடுமாறிய அக்னி “அது முதலுதவிடா.. அப்படி நான் பண்ணலன்னா இந்நேரம் அவளுக்கு ரொம்ப சிவியராகி இருக்கும்.. நீ எதுக்கு இப்படி கனெக்ட் பண்ண பாக்குறேன் தெரியுது.. என்னோட செயல்கள் அவள பாதிக்க கூடாதுன்னு தான் தற்காலிகமா இந்த மாற்றம்.. அதுனால என் தம்பி காதலி ஹார்ட்டாகி மேலும் பாதிக்குறது எனக்கு விருப்பம் இல்ல.. இதுவே நிரந்தரம் நம்பாத” என்று அவன் தோளை தட்டியவன் “முத எனக்கு மாமா வேலை பாக்குறத ஸ்டாப் பண்ணிட்டு.. உன் காதல வளக்க பாரு.. குட் நைட்” என்றப்படி அங்கிருந்து நகர்ந்து கொள்ள,
போகும் அவனை பார்த்து கேலியாக இதழ் வளைத்த சத்தியன் “உன்ன நான் அறிவேன் மச்சி” என்றுவிட்டு எதிரேயிருந்த சூர்யாவின் புகைப்படத்தை பார்த்து “உன் அண்ணன் நல்லா கத விடுறான்டி மாப்பிள.. கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வராமலா போயிடும்.. அப்போ பாத்துக்குறேன்” என்று கூறியவன், அந்த அறையை கதவை நன்றாக பூட்டிவிட்டே தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டான்.
***
நண்பனிடமிருந்து விடைபெற்று தன் அறைக்கு வந்த அக்னியோ, உறங்காமல் ஜன்னலில் தெரிந்த நிலா வெளிச்சத்தை வெறித்தப்படி இருந்த இதழை கண்டு குரலை செருமியவன் “இன்னும் தூங்கல” என்றதுக்கு மறுப்பாக தலையசைத்த பெண்ணவள் “வர..ல” என்றவள் பின் ஏதோ கேட்க தயங்க,
அதனை உணர்ந்து நாற்காழியை இழுத்து போட்டு, அவளின் அருகில் அமர்ந்தவன் “என்ன கேக்கணுமோ கேளு”
“அ..து அ..து நிஜ..மா நீங்..க இது..க்கு முன்னா..டி எ..ன்ன பாத்..தது இல்..லையா” என்றதுக்கு ஆடவன் புருவம் சுருக்கி தன்னை அழுத்தமாக பார்ப்பதில் தடுமாறியவள் “அது அ..து பிறந்து..லயிருந்து இ..ந்த ஊ..ருல தான இருக். கீங்க அதான் என்..ன பாத்து..ருக்க வா..ய்ப்பு இருக்..கான்னு கேட்..டேன்” என்று சமாளித்து வைக்க,
அதைக் கேட்டு வில்லாக இதழ் வளைத்து “ஓ..” என்று பெண்ணவளை கேலி பார்வை பார்த்தவன் “அப்போ நீ இந்த ஊர் தானா” என்றதை கேட்டு ஆமென்று தலையாட்டியவள் மறுபடியும் நிலாவை வெறிக்க,
அவள் கடந்தவையை அறிந்து கொள்ளும் நோக்கில் “அது சரி.. பிறந்ததுலயிருந்தே திக்கு வாய் தானா” என்றதுக்கு இல்லை என்று தலையாட்டிய பெண்ணவள் “கொ..ஞ்ச கால..மா”
“ஓ.. ஆனா அவனுங்ககிட்டயிருந்து தப்பிச்சு வரும் போது நல்லா தான பேசின”
“தப்பி..ச்சு வ..ருற நோ..க்கத்..துல எ..ன்ன அறியா..ம பேசியிரு..ப்பேன்.. ப..யம் வந்..தா தா..ன் தி..க்கும்”
“இப்போ அங்கேயிருந்து ரிலீப்பாகி சேப்பான இடத்துல தான இருக்க.. பின்ன எதுக்கு பயம்”
“கரெ..க்ட் தா..ன்.. ஆனா அந்த நினை..வுகள் க..ண் முன்..னாடி வந்து ப..யம் வ..ருது” என்றவள் தன்னை பார்த்து பேசாததில் கடுப்பானவன் “லுக் நான் தான உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீ நிலாவ பாத்து பேசினா என்ன அர்த்தம்.. என்கிட்ட பேச பிடிக்கலன்னா டைரக்ட்டா சொல்லணும் இப்படி இன்சல்ட் பண்ணினா.. எனக்கு பயங்கர கோவம்” வரும் என்றதை கேட்டு பதறி திரும்பிய மங்கை “அ..ய்யோ அப்ப..டிலாம் இ..ல்ல..ங்க.. நீங்..க பேசு..ங்க உ..ங்க முக..த்த பா..த்தே ப..தில் சொல்..லுறேன்”
“குட்.. சரி சொல்லு யாரு அவனுங்க.. எப்படி அவனுங்க கிட்ட மாட்டின” என்றதில் அந்நிகழ்வுகளை மனகண்ணில் கொண்டு வந்தவளுக்கு முடியாமல் மூச்சு வாங்க இன்ஹேலரை எடுத்து அடித்து கொண்டாள்.
அதில் பெருமூச்சை இழுத்து விட்ட அக்னி “இங்க பாரு.. இப்போ நீ என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.. உனக்கு காயம்லாம் சரியாக ஒன் மந்த்தாகும் அதுவரை டைம் எடுத்துக்க.. பட் உன்ன பத்தி நீ சொல்லாம என்கிட்டயிருந்து போக முடியாது.. லைக் நான் உன்ன காப்பாத்திட்டன் நீ இப்போ சேப்பா இருக்க ஆனா பிராப்ளம் இன்னும் முடியல.. என் இதுனால எனக்கும் என்ன சுத்தி இருக்கிறவங்களுக்கு கூட ஆபத்து வர நிறைய சான்ஸ் இருக்கு” என்று அவன் எழுந்து கொள்ள,
அவன் சொன்னதை கேட்டு பயந்த மங்கையோ “ஏ..ங்க நா..ன் சொல்..லிடு..றேன்.. அ..து அ..து” என்று திக்கி தடுமாறியவளின் இதழில் தன் விரல் வைத்து தடுத்தவன் “டைம் எடுத்துக்க.. பட் நீ என்கிட்ட எல்லாத்தையும் சொல்லும் போது பயமே இல்லாம நார்மலா சொல்லணும்..” என்றவனின் பேச்சில் பெண்ணவள் அவனையே இமைக்காமல் பார்க்க, தன் விழிகளோடு உரசி சென்ற பெண்ணவளின் விழிகளில் தடுமாறி போனது என்னவோ ஆடவன் தான்.
பெண்ணவள் சொல்லும் விழி கதையில் தன்னை ஒரு நொடி தொலைத்து நின்றவன்” பின் தலையை இருபக்கமும் ஆட்டி இதழ் குவித்து ஊதி இதழைவிட்டு விரலை விலக்க, அவனின் வெட்ப மூச்சு காற்று முகத்தில் பட்டு பெண்ணவளின் உடல் சிலிர்த்து அடங்க, அவன் விரலை விலக்கியும்,
இன்னும் அவனின் விரல் தன் இதழை தீண்டுவது போன்ற மாய வலையில் சிக்கியவளுக்கு கூடவே தன்னை காக்க அவன் அளித்த இதழ் முத்தமும் நினைவில் வந்து பெண்ணவளின் கன்னத்தை சிவக்க வைத்தது.
அவளின் சிலிர்ப்பை உணர்ந்த ஆடவனின் இதழ்களில் கர்வபுன்னகை எழுவதையும் தவிர்க்க முடியவில்லை,
அதோடு தன் விரலில் அவளின் இதழ் ஈரத்தை உணர்ந்த ஆடவனின் உடலில் ஏதோ ஏதோ உணர்வுகள் அதனை பெருமூச்சு விட்டு அடக்கி கொண்டவன், பெண்ணவளை படுக்க வைத்துவிட்டு தானும் சோஃபாவில் சென்று கண்முடி படுத்து விட்டான்.
***
அக்னியின் பேசிக்கினங்க அங்கேயே தங்கி கொண்ட இஷாவோ முதலில் மறுக்க, ஆடவன் தான் இதழ் தன்னுடன் தனியாக இருக்க சங்கடமாக உணர்கிறாள்.
அவள் இருக்கும் வரை இங்கேயே இருக்க கூறி உத்தரவிட, அவனின் வாக்கை மதித்து பழகிய பாவையோ அதற்கு மேல் மறுக்காமல் மாலை வரும்போதே தன்னுடைய உடமைகளுடன் வந்துவிட்டாள்.
அதனை உணர்ந்து தான் சத்தியன் முதலில் தங்க மறுத்தது, அதன் பின் அவனின் ஸ்வீட் ஹார்ட் கெஞ்சியதில் மனமிறங்கி அங்கேயே இருந்தது.
இதழுக்காக தன் பேபியை தங்க வைக்க நினைத்திருந்தாலும் நண்பனை அடிக்கடி பார்க்கும் பொழுது, அவளின் காதல் கண்டிப்பாக வெளியே வரும் என்ற நோக்கம் தான், அதோடு
நண்பன் ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லவில்லை என்ற விஷயம் அக்னிக்கு முன்னமே தெரிந்தேயிருந்தது. ஆனால் நண்பர்களுடன் தங்கியிருப்பான் என்று நினைத்திருக்க அவனோ விடுதில் அல்லவ்வா இருந்திருக்கிறான்.
அவன் விடுதியிலிருப்பதை விரும்பாத அக்னி, அவனையும் தன்னுடன் இருக்க வைத்துவிட்டான்.
இதில் அவனின் நோக்கம் எதுவும் உணராத இஷாவோ, தன்னவனின் நினைவிலே தூங்காமல் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் உழன்று கொண்டிருக்க, அவனின் காயத்தை நினைவுக்கூர்ந்து அதற்குமேலும் தாக்கு பிடிக்காமல் மருந்தை எடுத்து கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
நண்பனை பற்றி சிந்தனையிலுருந்த சத்தியனோ பெண்ணவள் வருவதை உணர்ந்தும் கண்டுகொள்ளாமல் இருக்க, தயங்கிப்படி உள்ளே நுழைந்த இஷா “கைல காயமா இருக்குல.. இந்த மருந்து போட்டுக்க சீக்கிரம் கியூராகிடும்” என்றப்படி தானே அவனின் அருகே அமர்ந்து கையை பற்றி மருந்திட போக,
அவள் அருகில் வருவுமே மங்கையவள் பேசியதில் கோவம் தலைக்கேற, பெண்ணவளின் கையை தட்டிவிட்டு எழுந்து கொண்டான்.
தன்னவன் கையை உதறி விலகியது வலித்தாலும் தான் பேசியதற்கு, இது தேவை தான் என்று பெரிதாக எடுத்து கொள்ளாதவள் சக்தி என்று அழைத்ததும் தான் தாமதம் பெண்ணவளை இழுத்து வன்மையாக அவளின் இதழை கவ்வி கொண்டான்.
அவனின் தீடீர் செயலில் பெண்ணவள் திகைத்தாலும் ஆடவனை இம்முறை தள்ள முயற்சிக்கவில்லை, அவனோ மேல் உதடு கீழ் உதடு என்று தேன் உறிஞ்சுவது போல் மாறி மாறி உறிஞ்சி கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணவளின் கண்கள் கலங்கி விட, அதையும் பொருட்படுத்தாமல் வன்மாயாக தீண்டியவன் ரத்த கசிவை உணர்ந்துதான் பெண்ணவளின் இதழுக்கு விடுதலை அளித்தான்.
பின் தன் இதழிலிருந்த ரத்தத்தை துடைத்த சத்தியனோ, தன்னையே சலனமற்று பார்த்திருப்பவளை கண்டு “என்னமோ தெரியல இஷா.. உன்ன பாத்தாலே என்ன என்னமோ பண்ண தோணுது.. உன்மேல எனக்கு லஸ்ட் தான் இருக்கு போல.. நான் தான் அத லவ்ன்னு தப்பா நினைச்சிருக்கேன்.. ஒருவேளை உன்ன முடிச்சிட்டா எந்த ஃபீலிங்கும் வராதோ என்னவோ..” என்று நெற்றியை நீவி கொண்டவன் “பேசாம எனக்கு ஒரு வாரம் கம்பனி தரீயா..
உன்மேல இருந்த லஸ்ட்டா தீத்துட்டு என் வீட்டுல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்ல.. தேவையில்லாம குடும்பத்த பகைச்சிட்டு எதுக்கு என் உடம்பையும் பஞ்சராக்கியனும்.. உனக்கும் அதுக்கு அப்புறம் தொந்திரவு கொடுக்க மாட்டேன்.. நீ என்ன சொல்லுற” என்க,
அவன் தன்னை வேண்டுமென்றே காயப்படுத்துகிறான் என்பதை உணர்ந்த பேதைக்கோ, அவனின் பேச்சில் உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு, அதில் அவன் சட்டையை பற்றியவள் “என்னடா சொன்ன லஸ்ட்டா”
“ஆமா இஷா.. எனக்கு உன்கிட்ட கன்ட்ரோல் லாஸ் ஆகுது.. உன்ன பாக்கும் போதெல்லாம் என் உணர்வுகள் கூட சொல் பேச்ச கேட்க மாட்டிக்கு.. ஒன்னு எனக்கு கம்பனி தா.. இல்லன்னு என்னவிட்டு தள்ளி நில்லு அதான் உன் கற்புக்கு நல்லது.. முடிவு உன்னோடது தான்.. இனி என் முன்னாடி வரும்போது ஒரு தடவைக்கு நாலு தடவ திங்க் பண்ணிக்க..
அப்புறம் உன்மேல பாஞ்சிட்டனா நான் பொறுப்பில்ல” என்றதில் தான் பற்றியிருந்த சட்டையோடு அவனையும் உலுக்கியவள் “ஐ ஹேட் யூ சக்தி.. ஹேட் யூ மோர்” என்று கத்திவிட்டு அங்கிருந்து விடைபெற்று தன்னறைக்கு வந்தவள், மெத்தையில் பொத்தென்று விழுந்து தன்னவன் பேச்சை நினைத்தே அழுது கரைந்தாள்.
அவள் மேல் எழும் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதனை அவளிடமே காட்டி காயப்படுத்திய சத்தியன், அவளின் கண்ணீரில் தன்மேலே கோவம் கொண்டு சுவற்றில் காயப்பட்ட கையை நங்கு நங்கென்று குத்தி கொண்டு சமையல் அறையிலிருந்த குளிர் எந்திரத்தில் நண்பன் அடுக்கி வைத்திருக்கும் மது குவளை நான்கு ஐந்தை எடுத்தவன் ஒன்றை மட்டும் வாயினால் திறந்து தண்ணீர் கூட கலக்க திராணியில்லாமல் மட மடவென்று வாயில் சரித்தப்படியே அறைக்குள் வந்து, இரவு முழுவதும் குடிக்கும் பணியில் ஈடுப்பட்டான்.
****
ஒரு வாரம் கழிந்த நிலையில்
இதழை அழைத்து கொண்டு காரில் அக்னி தன்னுடைய மருத்துவமனைக்கு அவளை பரிசோதிக்க வந்திருக்க, காரிலிருந்து இறங்காமல் ஜன்னலில் தெரிந்த மருத்துவமனையை பார்த்த பெண்ணவளின் முகமோ எதையோ கண்டு இறுகி, மூச்சுக்கு சிரமமாகி விட
அடுத்த நொடி ஆடவன் தன்னுடைய முதலுதவியை இதழ் வழி கொடுக்க தொடங்கியிருந்தான்.
சுவாசம் தொடரும்..
