திருக்குறள்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
காமத்துப்பால் குறள் எண் -1289 புணர்ச்சி விதும்பல்
அத்யாயம் -19
இங்கே காரில் காத்திருந்தவனுக்கு சற்று அசதியாக இருந்தது.
“ராஜா உங்களுக்கு அசதியா இருக்க? நான் டீ போட்டுத் தரவா ?”
அந்த சிறு பெண்ணின் குரல் காதில் எதிரொலித்தது.
அவள் பெயர் என்ன தெரியாது. ஏதோ சொல்லி இருந்தாள் . அங்கே பங்களாவில் அனைவருமே சின்ன பொண்ணு என்று அழைக்கவும் அவனுக்கு அந்த பெயர் தான் நினைவில் இருந்தது. எதிர்காலத்தில் நடந்தது தான் அபாரம்.
அவள் தான் அவனுடைய மனைவி இதயத்தாமரை.
முதல் முறை அவளை அவன் பார்த்த போது இருந்த கோலம் தான் என்ன ?
இவன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு விடுமுறைக்கு வந்தான் . இத்தனை வருடங்கள் கழித்து ஹாஸ்டல், நண்பர்கள் பிரிவு உபச்சாரம் எல்லாம் கடக்க கஷ்டமாகத் தான் இருந்தது.
இயல்பாக இருந்த நட்பு தாண்டி இவனுக்கு என்று பெரியதாக நெருக்கமான நண்பர்கள் என்று யாரும் இருந்தது இல்லை. கார்த்திக்கின் பழக்கம் கூட அவனுக்குக் கல்லூரி காலத்தில் வந்தது தானே. “கூடா நட்பு கேடாய் முடியும். நல்ல நட்பு ரொம்ப முக்கியம் ராஜா” சொன்னது சித்தப்பா.
அதுலயும் நீங்க இவ்ளோ பெரிய அரண்மனைக்கே ராஜா . யாரு உங்க மனஸுக்காக வருவாங்க., யாரு உங்க பணத்துக்குகாக வருவாங்கன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். நீங்க நல்லவங்கன்னு நம்பி யாரு கிட்டையும் ஏமாந்துடக் கூடாது. சொல்லித்தானே அனுப்பினார்கள் சித்தியும் சித்தப்பாவும். அன்னை தந்தை இல்லாத இடத்தை நிரப்பியவர்களின் பேச்சை அப்படியே கேட்டு நடந்தவனுக்கு பின்னாளில் மனதிற்குள் எல்லா நேரங்களிலும் அந்த எச்சரிக்கை உணர்வுதான் வந்து நின்றது. அப்போதிலிருந்தே இள வயதிற்கான எந்த கொண்டாட்டங்களையும் அனுபவித்ததில்லை. வந்த உணர்வுகளையும் அடக்கிக் கொண்டே வாழ ஆரம்பித்து விட்டான்.
ஹாஸ்டலில் மிகுந்த கட்டுப்பாடு என்பதால் அவனை சேர்ந்தவர்களும் பெரும்பாலும் ஏதோ ஒரு இறுக்கத்துடனேயே தான் கழித்தார்கள்.
அவன் அன்றுப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு வந்த நேரம்.
வீடே கோலாகலமாக இருந்தது. வீடு முழுவதும் எத்தனையோ அலங்காரங்கள் வித விதமான பலகாரங்கள் என்று மாளிகையை கோலாகலமாக இருக்க, இவளுக்கு ஆசையாக இருந்தது என்னவோ தண்ணீர் மீது தான்.
தேவையே இல்லாமல் நாம் கீழே கொட்டும் தண்ணீர் பலருக்கு வாழ்வுதான் இல்லையா? ராஜஸ்தானில் பாருங்க அங்கே இப்படி இங்கே இப்படி என்று எல்லாம் நான் எங்கோ செல்ல வேண்டிய அவஸ்யம் இல்லை. நான் வசிக்கும் சென்னையே மிகச் சிறந்த உதாரணம் தான் தண்ணீர் கஷ்டத்துக்கு.
இவர்கள் இருக்கும் ஊரில் மகா தண்ணீர் கஷ்டம் என்று சொல்ல மாட்டேன். ஊரில் நல்ல நீருக்கு பெரிய ஆறு உண்டு. அதை தண்ணீர் பழச்சாறு போன்றவற்றை விற்கும் பெரிய கம்பனி காண்ட்ராக்ட் போட்டுக் கொண்டார்கள். லிட்டருக்கு ஒரு பைசா கொடுத்து எடுத்தவர்கள் விற்றது என்னவோ ஒரு லிட்டர் தண்ணீர் இருபது ஐந்து ரூபாய். முதலில் குடி தண்ணீர் என்று சொல்லி எடுத்தவர்கள் பிறகு அதையே மற்ற தொழில்களுக்கும் எடுத்துக் கொண்டார்கள். கூடவே உபகாரமாக மண்ணையும், நீரையும் அசுத்தப் படுத்தினார்கள். நல்ல நீர் கூட கழிவு நீராக மாறியது. செழிப்பாக இருந்த ஆறும் ஆற்று மண்ணும் கண்ணை உறுத்தாமல் இருக்குமா? மழைக்காலங்களில் வெள்ளம். அது முடிந்ததும் தண்ணீர் பஞ்சம். தொழிற்சாலைகள் கட்ட இருந்த மரங்களையும் வெட்டி விட்டார்கள். செழிப்பாக இருந்த ஊர் சிலப் பணப் பேய்களின் இறையாகிப் போனது. அதில் நம்முடைய சித்தப்பாவுக்கு நிறையவே பங்கு உண்டு. பணத்திலும் சரி பாவத்திலும் சரி .
சின்னப்ப பொண்ணு நன்றாக தண்ணீர் குடித்த காலங்களும் உண்டு தான். ஏன் தண்ணீரில் ஆட்டம் போட்ட காலங்கள் கூட உண்டு. இப்போதோ தாகத்துக்கு கூட ஒரு நாளைக்கு அரை லிட்டர் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் தான். அதுவும் பள்ளியில் கிடைத்தால் உண்டு. பள்ளியில் சத்துணவு உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. கலெக்டரிடம் எத்தனையோ மனு கொடுத்து விட்டார்கள். யாரை குறை கூற முடியும்?
“இங்க இந்த தொழிற்சாலை வந்தால் உங்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கும் . கஷ்டம் விடியும் என்றார்கள் முதலாளிகள் . உழவு வேலைக்குப் போயி என்ன பிரயோசனம். நல்ல துணிமணி உண்டா இல்ல வீடு உண்டா?. குடிசையில் இருந்தவர்கள் நல்ல உணவையும் காற்றையும் வி(ட்டு)ற்று விட்டார்கள். இப்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள் . அதில் ஒருத்தி தான் நம் சின்னப் பொண்ணு,
இங்கே அரண்மனையில் அனைவரும் ஊரில் இருந்து வரும் ராஜாவை வரவேற்க முன் பக்கம் இருந்தார்கள். மணக்க மணக்க சமையல் நடந்துக் கொண்டிருந்தது. பூனை போல சென்றவள் அங்கே பானையில் இருந்த தண்ணீரைக் குடித்து விட்டாள்.
பெரியவர் மகனுக்கு ஆர்த்தி எடுத்து திலகமிட்டு சித்தி,
“உள்ள போங்க ராஜா . கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க பயண களைப்பா இருக்கும்” சொல்லி விட்டு ஆர்த்தி தட்டை வேலைக்கார பெண்மணியிடம் கொடுத்துவிட்டு சமையல் தயாரா ? என்று கேட்டுக் கொண்டே வந்தவர் இவளைப் பார்த்தவுடன் அத்தனை கோபம். பளீரென்று அறைந்து கீழே தள்ளியதில் இவளுக்கு முட்டியில் அடி பட்டு விட்டது. அத்தோடு விடாதவர் தண்ணீர் எடுத்து குடித்த கையில் இழுத்து சூடு போட்டு விட்டார் .
“ஏதோ சின்ன பொண்ணா இருக்கியேன்னு வீட்டுல இடம் குடுத்தா நாங்க குடிக்க குடிக்கிற தண்ணியில கைய வப்பியா ? இன்னொரு தரம் உன்னை இங்க பார்க்கக் கூடாது .”
“ஹேய் இவன் குடிச்சா தண்ணி கீழ கொட்டுங்கடா தண்ணிய கீழ கொட்டுங்க” என்று
அதட்டி விட்டு சென்று விட்டார் முதலாளி அம்மா . வலி தாங்காமல் பின் பக்கம் சென்றவளைப் பார்த்தது ராஜா தான்.
“ஹே என்னாச்சு?” குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்பியவன் காலில் ரத்தமும் கண்களில் கண்ணீருமாக வந்த அந்த சின்னப் பெண்ணைத் தான்.
தேம்பி தேம்பி அழுத்தவள் விஷயத்தைச் சொன்னாள் .
“சரி இங்க வா. “அவளை அங்கே இருந்த கல்லில் உக்கார வைத்தவன் தன்னுடைய முதலுதவி பெட்டியை எடுத்து அவளுக்கு மருந்திட்டான்.
சுளீரென்று வலித்தது. ஸ் ஆ என்று அவள் அலறவும் அவள் கையை எடுத்து தன்னுடைய தோளில் வைத்துக் கொண்டான். வலியில் அவனை அழுத்திப் பிடித்ததில் அவன் சட்டை தான் கசக்கியது.
அந்த பிஞ்சுக் கை அழுத்திப் பிடித்தது அவனுக்கு என்ன செய்து விடும்?
“இனிமே எப்பவும் எதுவும் யாருகிட்டயும் கேக்காம எடுக்கக் கூடாது. சரியா ?”
சரி என்று சிறுப் பிள்ளை அழகாக தலையாட்டியது.
முன்னே இருந்த தலை முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டே அவள் தலையாட்டியது அவனுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். லேசாக கன்னம் கிள்ளினான்.
“நான் போறேன் ” காலில் கட்டுப் போட்டிருந்தாலும் துள்ளிக் கொண்டு சென்றவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.
“என்ன ராஜா! இந்த பிள்ளைக்கு நீங்க தொட்டு..” என்று சித்தி ஆரம்பிக்கவும், “அதுனால என்ன சித்தி? அதுதான் க்லௌஸ் போட்டுருக்கேனே ?”
“சரி சாப்பிட வாங்க ராஜா.” என்று சித்தி அழைக்கவும்
கைகளை நன்றாக கழுவிக் கொண்டு வந்தவன்,
“நீங்களும் என்ன ராஜா ராஜா சொல்லி அன்னியப்படுத்தாதீங்க சித்தி” என்று சொல்லிக் கொண்டே சித்தியின் அன்பில் மனம் மகிழ்ந்து விட்டான். கை கழுவ சென்ற போது சித்தியின் கோபப்பார்வை சின்ன பொண்ணை துளைத்ததை இவன் அறியவில்லை .
வந்து அமர்ந்தவன் சித்தியிடம் கேட்டான் ,
“எதுக்கு சித்தி இவ்ளோ ஐட்டம்ஸ் ?”
“பின்ன இந்த ஊருக்கே ராஜா , இப்பதான் லீவு முடிஞ்சு வந்துருக்கீங்க. இத்தனை வருஷம் ஒரே இடமா தங்கியாச்சு. இப்ப அடுத்து காலேஜு எந்த ஊருல கிடைக்குமோ? வெளியூரோ இல்ல வெளி நாடோ எங்க இடம் கிடைக்கப் போகுதோ. எங்க ராஜாவுக்கு இது கூட இல்லாம எப்படி?”
இப்போதும் நீ இங்கே தங்க கூடாது. (மறைமுகமாக அவர் சொன்னதை அவன் தான் புரிந்துக் கொள்ளவில்லை. கோயம்புத்தூரில் இல்லாத பொறியியல் கல்லூரிகளா?)
சொல்லிக் கொண்டே அவன் இலையில் முதலில் பாதம் அல்வாவை வைத்ததும் சூர்யாவின் மனம் அன்பில் நெகிழ்ந்தது. மறு நாள் முதல் சின்னப் பொண்ணு வேலைக்கு வரவில்லை.
“சின்ன பொண்ண எங்க?”
அவள் அன்னையிடம் கேட்டான்.
“இல்லங்கையா. அது ரொம்ப வாலா இருக்குதுன்னு இனி இங்க கூட்டிட்டு வர வேண்டான்னு ..”
“குழந்தைங்கன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க. நாளைக்கு கூட்டிட்டு வாங்க “
அதற்கு அடுத்த நாள் காலையில் அவளை ஆளைக் காணோம். மாலையில் தான் தான். வந்ததும் ராஜாவிடம் தான் வந்து நின்றாள்.
“ராஜா ! ராஜா !”
அவளின் குரலைக் கேட்டுக் கொண்டே தன்னுடைய நூலகத்திலிருந்து பெரிய புத்தகத்தோடு வெளியில் வந்தான்.
“சொல்லுங்க மகாராணி i” சின்னப் புன்னகையுடன் அவன் அவளை அழைத்தது அவளுக்கு என்னவோ போல இருந்தது.
“நான் ராணி எல்லாம் இல்ல. நீங்க தான் மகாராஜா.” கிளிக்கி சிரித்தவள், “காலில் காயம் ஆறிட்டுதே ” போட்டிருந்த சட்டையை லேசாக தூக்கி காட்டினாள் .
“ஆஹாங் அப்படியா?” கட்டுப் போட்டிருந்த இடத்தில லேசாக பொறுகு தட்டி இருந்தது .
“சூப்பர் சின்ன பொண்ணு . காங்கிராஜுலேஷன்ஸ் “
கை நீட்டினான் அவன். அவளுக்கு அதன் அர்த்தம் என்ன புரியாமல் அவளது வலது கையை பிடித்து தானே உலுக்கினான் அப்போதுதான் அவள் கையை கவனித்தான் அவள் கையில் அவன் சித்தி போட்டு இருந்த சூடு .
இது என்ன என்று அவன் கேட்ட போது வீட்டில் சாப்பாடு வடிக்கும்போது சுட்டுக்கிட்டேன் என்று பொய் சொன்னாள்.
” இங்க பாரு பாப்பா! அவங்க எல்லாரும் நமக்கு முதலாளி . அவங்கள பத்தி நீ சின்ன முதலாளி கிட்டயும் இல்ல வேற யாருகிட்டயும் வாயை திறக்கக் கூடாது சரியா?”என்று அன்னை சொன்னதன் விளைவு என்று அவள் பொய் கூறி நிற்கிறாள் ராஜாவிடம் .
அவளை முறைத்தவன் வேண்டும் தனது முதலுதவி பெட்டியை எடுத்து அவளுக்கு கையில் ஒரு கிரீமை தடவி விட்டான் . எரிந்தது .
“ஆ!” ரொம்ப எரியுது என்று கையை உதறினால் அவள் இப்போது அவள் உள்ளங்கையை பிடித்து அவன் லேசாக அதில் ஊதினான் . இப்போது அவளுக்கு எரிச்சல் கொஞ்சம் மட்டுது போல இருந்தது
சின்ன பொண்ணு, “ஆர் யூ ஆல்ரைட் இப்ப பரவாயில்லையா எரிதா?” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய பெட்டியை எடுத்தது வைத்தான் அவன் .
துடிக்கும் இதயம் …….
