சுவாசம் – 9

அவனின் எதிர்பாரா முத்த தாக்குதலில் பெண்ணவள் கண்கள் விரிந்தாலும், இம்முறை மயங்காமலே மூச்சு சீராகியிருக்க, அதனை உணர்ந்து மெல்ல அவளை விட்டு விலகிய அக்னி “ஆர் யூ ஓகே” என்று வினவ, தலையை கவிழ்த்தப்படியே பெண்ணவள் ஆமென்று தலையாட்ட, 

“குடிக்க கூல் ஆர் ஹாட்டா.. எதாவது வாங்கி வரவா” என்றதுக்கு இல்லையென்று அவள் தலையாட்டினாள்.

பின் அவளை கை தாங்கலாக பிடித்து கொண்டு மருத்துவமனை வாசல் வந்தவனுக்கு வழக்கமாக கேட்கும் தம்பியின் குரல் 

“அண்ணா உங்க தம்பிக்காக பெரிய ஹாஸ்பிட்டல் கட்டி தரணும்.. கட்டி தருவீங்க தான” என்றவனின் தலையில் செல்லமாக தட்டிய அக்னி “டேய் முதல 12த் முடிச்சி டிகிரி வாங்குடா.. அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் கட்ட போயிட்டான்”

“அண்ணா டிகிரி வாங்குற வேலைய நான் பாத்துக்குறேன்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றதை கேட்டு அவன் சமதித்ததும் மருத்துவமனைக்கான பெயரையும் கூற,

அதில் புருவம் உயர்த்திய அக்னி “அது என்னடா ஏபிஎஸ்”

“A – agni dhevan, p – poo idhazh, s – surya dhevan” என்று விளக்கமளித்த சூர்யாவோ தமயனை கண்டு கண்சிமிட்டி தோளை குலுக்கி “நீங்க கட்டி கொடுக்குற ஹாஸ்பிட்டல்ல தான்.. நானும் பூவும் டாக்டர்ஸா இருப்போம்.. அதுபோக உங்க இன்பியுளன்ஸ் பயன்படுத்தி தேவைப்பட்டா மத்த டெப் டாக்டர்ஸயும் தூக்கிடலாம்” என்று கெத்தாக கூறியவனின் காதை திருக்கிய அக்னி “ஏய் ஆராத்து.. அது என்ன உனக்கு அவ அவ்வளவு முக்கியமா?.. உன்னோட பெயர கடைசில போட்டுட்டு அவள முன்னால போட்டுருக்க” என்க,

அதில் புன்னகைத்த சூர்யா “உங்களுக்கு அப்புறம் நான் ரொம்ப லைக் பண்ணின பெர்சன் அவ தான்.. எப்படி நீங்க என் லைஃப்ல முக்கியமோ அதே போல அவளும் முக்கியம்” என்று ஃபீல் செய்து கூறியவனை கண்டு விரகத்தியாக சிரித்து கொண்டான் அக்னி தேவன்.

தம்பியின் நினைவுகளோடே உள்ளே நுழைந்தவனின் மனமோ ‘உனக்கு முக்கியமான ரெண்டு பேருமே இருக்கோம்டா.. எங்களவிட்டுட்டு நீ எங்கடா போன’ என்று கதற, மூளையோ அவனா விட்டுட்டு போனான் என்று எதிர் கேள்வி கேட்டு ஆடவனின் முகத்தை இறுக்கமாக்கியது.

பின் அங்கே பணிபுரியும் இஷாவிடம் பரிசோதிப்பதற்காக பெண்ணவளை அக்னி அழைத்து செல்ல, அவர்கள் வருகையை கண்டு இன்முகமாக வரவேற்ற இஷாவோ “அண்ணா ஃபைவ் மினிட்ஸ்” என்றபடி ஏற்கனவே பரிசோதித்து கொண்டிருந்த நோயாளியை கவனித்து முடித்தவள் இதழை அழைத்து போய் எடுக்க வேண்டிய பரிசோதனைலாம் எடுத்துவிட்டு “மிஸ் இதழ்.. முன்ன இருந்ததுக்கு இப்போ கால் அசைக்க முடியுது தான” என்றதுக்கு ஆமென்று இதழும் “ஆ..னா.. பெயி..ன் இரு..க்கு” 

“ம்ம்.. அது அப்படி தான் இருக்கும்.. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம மெல்ல மெல்ல நடந்து பாருங்க..” என்று அவளின் கை கால்களிலிருந்த காயத்தை ஆராய்ந்து “காயம் முன்ன விட நல்லாவே ஆறிடுச்சு.. இனி கைக்கு கட்டலாம் வேண்டாம் காத்தோட்டமா ஃப்ரீயா விட்ருங்க.. ஆய்ன்ட்மென்ட் தரேன் நைட் அண்ட் மார்னிங் போட்டுக்கிட்டா போதும்.. காலுக்கு பேண்டேட் போட்டு தான் இருக்கணும்.. உங்களுக்கு அன்கம்பாட்டபிளா ஃபீல் பண்ணினா ஸ்லீபிங் டைம் ரிமூவ் பண்ணிக்கலாம் டூ ஆர் த்ரீ வீக்ஸ்ல இன்னும் முழுசா கியூராகிடுவீங்க” என்றுவிட்டு சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்க, இருவரும் அவளிடம் தலையாட்டி விடைபெற்று காரை நோக்கி வந்தனர்.

அவளை காரில் ஏற கூறிவிட்டு கொஞ்சம் தள்ளி சென்று பெண்ணவளுக்கு பழச்சாறு வாங்கி வந்தவன், அவளிடம் குடிக்க கொடுக்க, அதனை வாயில் வைத்து உறிஞ்சியப்படியே மருத்துவமனை பெயரை பார்த்தவள் “இ..ந்த ஹாஸ்..பிட்டல் உங்க..ளோட..தா” 

“ம்ம்.. ஏன் கேக்குற” என்றதை கேட்டு விரகத்தியாக சிரித்த இதழோ “சூர்யா..வுக்கு இ..தே பெ..யருல ஹாஸ்..பிட்டல் கட்ட..ணும் ஆ..சை.. என் அண்..ணன் கட்டி தரு..வார்.. ந..ம்ம இங்க தான் டா..க்டரா இருக்..கணும் சொல்லு..வான்” என்றதில் பெண்ணவளின் கண்களும் கலங்கி விட,

அவளின் கண்ணீரை பார்க்க பொறுக்காமல் பெண்ணவளின் கன்னத்தை கையில் ஏந்தியவன், தன் முரட்டு விரல்களால் அவளின் கண்ணீரை துடைத்து விட, 

அவனின் ஸ்பரிசத்தில் மனதில் இதத்தை உணர்ந்த இதழுக்கு பிறகு தான் தன்னை அறியாமலே தன் மனகஷ்டத்தை அவனிடம் கொட்டி விட்டோம் என்று புரிந்தது.

சட்டென்று தன்னை சுதாகரித்தவள் பேச்சை மாற்றும் பொருட்டு மருத்துவமனை பெயர் பலகை கைக்காட்டி “ஆ..மா ஏ வந்..து உங்க பெய..ருல.. எஸ் கூட ச..த்யா பெயரா..யிருக்..கும் பி யா..ரு உங்க ஃபே..மிலி மெம்..பர்ஸா” என்றவளின் பார்வை இவனின் மேல் பதிவேயில்லை.

அவளின் சுதாகரிப்பை உணர்ந்த ஆடவனுக்கு அவளின் கண்ணீரில் தானும் உணர்ச்சி வசப்படுகிறோம் என்று புரிய, சட்டென்று பெண்ணவளின் கன்னத்திலிருந்த தன் கையை விலக்கியவன், தம்பி நினைவை இதழ் கடித்து அடக்கிவிட்டு முகத்தில் விறப்பை தத்தெடுத்து கொண்ட அக்னியோ “அது உனக்கு தேவையில்லாதது.. என்னோட பெர்சனல் தெரிஞ்சிக்குறளவு உனக்கு நான் ரைட்ஸ் கொடுக்கலன்னு நினைக்கேன்” என்றதை கேட்டு, அவன் புறம் திரும்பிய பாவையோ “அது..வும் சரி தா..ன் மிஸ்..டர் அனல்..” என்று இதழ் சாதாரணமாக தோளை குலுக்கி கொள்ள,

அதுக்கு முன்னே உணராத அழைப்பை இப்போது தான் கவனித்த அக்னி “வாட்.. அனலா?”

“ஆமா.. அக்னி..ன்னா நெ..ருப்பு.. நெரு..ப்புல அன..ல் வரும்..ல அத உ..ங்க கண்..ணுல பாக்கு..றேன்.. சோ என..க்கு நீங்..க அன..ல் தான்” என்று விளக்கம் கொடுத்த பெண்ணவள் அவனை பார்த்து கண்சிமிட்டி வைக்க,

அவளின் விளக்கத்திலும் சிமிட்டலிலும் சருகும் மனதை இழுத்து பிடித்து கொண்டவனோ, பெண்ணவளை போலியாக முறைத்து வைத்து காரை இயக்கினான்.

***

இப்போது எல்லாம் இதழ் உணவு மேஜையில் மூவருடன் இணைந்தே உணவு உண்பது வாடிக்கையாகி போக, சத்யன் இதழின் பேச்சை தவிர, மற்ற இருவரும் ஊமை போல் தான் இருப்பார்கள். 

அதிலும் பேச்சு சத்தத்தை அறவே வெறுத்து தனிமை விரும்பும் அக்னி கூட, அவள் பேச்சில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தடுக்கவும் இல்லை. சில நேரங்களில் அவளின் பேச்சில் கவரப்படுவதில் வரும் எரிச்சலை காட்ட முடியாமல் தவிக்கும் நண்பனை உணர்ந்து சத்யன் வேண்டுமென்றே அவனை சீண்டி வாங்கி கட்டி கொள்வான்.

சாப்பிட்டு முடித்ததும் பெண்ணவளின் உடலில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த காயத்துக்கு மருந்திடுவது இஷாவின் பகல் மற்றும் இரவு வாடிக்கைகளில் ஒன்றாகி போனது. 

அதிலும் உடலிருக்கும் ஆற மறுத்த தழும்புகளை கண்டு ஒரு பெண்ணாக இஷாவின் மனது அவளின் காயங்களை கண்டு வேதனையடும் ஆனாலும் அவளின் மூச்சு பிரச்சனையை கருத்தில் கொண்டு அவளே கடந்த கால கொடுமைகளை பற்றி கூறாமல் கேட்க மறுத்தவள், ஆடவர்களின் முன்னிலையில் அவளின் காயத்தின் நிலையை பற்றி கூறி வேதனையை புலம்பி தீர்த்து கொள்வாள்.

இன்றும் கனத்த மனதுடன் மருந்திட்டு வெளியே வந்தவள், அக்னியை அணைத்து “அண்ணா.. எனக்கு அவங்க காயத்த பாக்கும் போதெல்லாம் ஒரு பொண்ணா எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா அண்ணா.. பொண்ணுனாலே கஷ்டம் மட்டும் தான் படணும்ல.. எல்லா வலிகளும் பழிகளும் பொண்ணுங்களுக்கு மட்டும் தான்ல” என்றவளுக்கும் கடந்த கால நினைவும் கண்முன் வந்து சோர்வாக்கி விட,

அதனை உணர்ந்து, அவளின் தலையை தடவி கொடுத்த அக்னியோ “என்ன பேபி இது.. நீ டாக்டர்டா நீயே சோர்ந்துட்டா அவள எப்படி சரி பண்றது” 

“எனக்கு புரியுது அண்ணா..” என்று நிறுத்தி அவனின் அணைப்பிலிருந்து விலகியவள் “நான் இதுவரைக்கு உங்ககிட்ட இது வேணும்ன்னு கம்பெல் பண்ணி கேட்டதில்ல.. நீங்களே எனக்கான தேவைகளை ஒரு அண்ணானா பூர்த்தி செஞ்சிருக்கீங்க.. ஆனா இப்போ எனக்காக ஒன்னு பண்ணுவீங்களா”

“சொல்லு பேபி.. ஐ வில் டிரை டூ மை பெஸ்ட்” என்றதை கேட்டு புன்னகைத்த இஷாவோ “எனக்கு தெரியும் அண்ணா.. உங்களுக்கு அவங்க மேல விருப்பம் இருக்குன்னு.. அதே சமயம் நீங்க அவங்கள ஏத்துக்க முடியாம வேதனைப்படுற காரணமும் ஐ கேன் அண்டர்ஸ்டண்ட்..” என்றதில் விருட்டென்று எழுந்த அக்னியோ “ஸ்டாப் இட் இஷா” என்று கர்ஜிக்க,

அதில் பயம் எழுந்தாலும் தைரியத்தை இழுத்து பிடித்த பெண்ணவள் “ஐ னோ.. அவங்க பாஸ்ட்ல உங்க தம்பி காதலியா இருந்துருக்கலாம்.. பட் உங்க தம்பி திரும்ப வர போறதில்ல.. 

சோ நீங்க நித்தமும் குற்றயுணர்சில தவிச்சிட்டு இருக்காம.. அதுக்கு பிராயச்சித்தமா இதழ கல்யாணம் பண்ணி.. அவங்க கடந்த காலத்துல கடந்து வந்த வலியைலாம் போக்கி அவங்கள சந்தோசமா வச்சி நீங்களும் ஏன் சந்தோசமா வாழ கூடாது..” என்றதில் ருத்ரமூர்த்தியாகிய அக்னியோ அங்கிருந்த டீ பாயை எத்தி உதைத்து “ஸ்டாப் இட் இஷா.. சத்யா என் ஃபேமிலியாவே இருந்தாலும் என்னோட பெர்சனல் தலையிடுற ரைட்ஸ் அவனுக்கே கிடையாது.. சோ யூ சுட் நாட் கிராஸ் தே லிமிட்” 

“ஐ னோ மை லிமிட் அண்ணா.. ஆனா எனக்காக நீங்க நிறைய செஞ்சிருக்கீங்க இந்த உலகத்துலயே எனக்காக இருக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும் தான்.. உங்க வேதனைய நான் கூடயிருந்து பாத்துருக்கேன்.. இந்த ஒரு வாரமா இதழ தள்ளி வைக்க முடியாம நீங்க தவிச்ச தவிப்ப கண்ணால பாத்தேன்.. 

அதுனால ஒரு தங்கச்சியா நீங்க சந்தோசமா இருக்கணும் நினைக்கேன்.. நான் மட்டுமில்ல அஸ் அ ப்ரெண்ட் அண்ட் ஃபேமிலி மெம்பரா சக்திக்கு கூட உங்கள ஒய்ஃப் பேபிஸ் கூட சந்தோசமா பாக்க ஆசை தான்.. ஏன் உங்க தம்பி ஆன்மா கூட அத பாத்து தான் சந்தோசப்பட்டு சாந்தியடையும்” என்றவளின் கண்கள் அக்னியின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீரை இறக்கி விட,

அவளின் கண்ணீரில் கோபத்தை அடக்கி பேச்சிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்து பெண்ணவளின் கையை பற்றி “ஐ அம் சாரி பேபி.. உன்ன ஹார்ட் பண்ண பேசல பட் என்னால நீ சொன்னத ஒரு காலத்துக்கும் பண்ண முடியாது.. ஆனா அவள மீட்டு எடுத்து நல்ல லைஃப் அமைச்சி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. உனக்கு எப்படி சத்யாவ ஏத்துக்க முடியாதோ.. 

அதே போல என்னாலயும் மலர என் வாழ்க்கைக்குள்ள சேத்துக்க முடியாது.. பிளீஸ் பேபி இனி இதபத்தி என்கிட்ட பேசாத ஐ கெட் மோர் பெயின்” என்றவன் அருகே அமைதியாக நின்ற சத்தியனையும் அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றான்.

அப்பார்வையே சொல்லியது இதை பற்றி என்னிடம் பேச வந்து விடாதே என்று, அதில் பெருமூச்சு விட்ட சத்தியன் இஷாவை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.

தன்னவன் நிகாரித்து சென்றதே பாவை அவளுக்கு வலியை கொடுத்தது, அதற்கு தான் அன்று அதிகப்படியாக பேசியதே காரணமென்று தெரியவே செய்ய, அவ்வப்போது தன்னை காயப்படுத்துக்கிறேன் என்று தான் அருகில் சென்றால் இதழை வன்மையாக 

தீண்டி, லஸ்ட் என்ற வார்த்தையை உபோகப்படுத்துவது வலித்தாலும் கூட அவனின் பாராமுகத்திற்கு அவ்வலியே போதுமானதாக இருந்தது.

***

சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு அறைக்குள் நுழைந்த அக்னியோ, முகத்தை இறுக்கமாக வைத்திருந்த இதழை கண்டு அருகில் சென்றவன் “என்னாச்சி” என்க,

அதற்கு பெண்ணவள் இல்லை என்று தலையாட்டியதும் கட்டிட்ட காலை பார்த்தவன் “கால் வலிக்குதா” என்று கேட்க,

அதற்கும் பெண்ணவள் இல்லையென்று தலையாட்டியதும் “அப்புறம் எதுக்குடி மூஞ்ச தூக்கி வச்சிருக்க”

“தெரி..யல.. ஆனா மன..சு ரொ..ம்ப வலி..க்குது” என்று அவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தவள் “நீங்..க த..ப்பா நினைக்..கலன்..னா.. நான் உங்க..ள கட்டி புடிச்சி..க்கிட்டு..மா” என்று முடிக்கவுமே பாவையவள் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

அவளை அணைத்திருந்த ஆடவனுக்கு பெண்ணவள் சிந்தும் கண்ணீர் தன் கழுத்தில் பட்டு, அதின் வெப்பம் உணர்ந்த அக்னிக்கு பெண்ணவளின் வலியில் ஆடவனின் கண்களும் கலங்க, அவளறியா வண்ணம் துடைத்து கொண்டான்.

பின் அவளை தன் அணைப்பிலிருந்து பிரித்தவன் “தூங்கு” 

“நா..ன் உ..ங்க மடி..ல படுத்து..க்குறேன் பிளீஸ்” என்று அவனை ஏக்கமாக பார்த்திருக்க,

அதில் வெளியே பேசியவை கூட மறந்த அக்னியோ, அவளை மடியில் சாய்த்து அன்னையாகி போனான்.

சுவாசம் தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page