ஆடி வரும் வண்ண மயிலே-37

அத்தியாயம்:37 

காதல் என்ற வார்த்தை கூட இந்த வீட்டில் நான் கேட்க கூடாது என்று…கோபமாக சக்ரபாணி சொன்னார்.  

கல்யாணி “ என்னங்க இது விஷயம் என்ன என தெரியாமல்…எதற்காக உங்களுக்கு எவ்வளவு கோபம்..? கிருபா அப்படிப்பட்ட பையன் இல்ல.  

அவன் காதலித்து இருக்க எப்போவோ… அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொண்டு வந்திருப்பான்…கொஞ்சம் பொறுமையாக இருங்க உங்களுக்கு பிறகு ப்ரஷர் கூடி விடும்…” என்றார்.  

உண்மையில் மயூரிக்கு இப்போ தான் பயம் அதிகமாக இருந்தது…பவதீப்பை அவள் கல்யாணம் பண்ண முடியாமல் போய் விடும் என்று…கிருபாவுக்கே இப்படி கோபமாக பேசுபவர்.  

அவரின் சொந்த பேத்தி நான் எப்படி நடந்து கொள்வாரோ…தெரியாது என நினைத்தாள் கொஞ்ச நேரத்தில் கிருபா, சாரதா… ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.  

கிருபா பைக் வைத்து இருக்கிறான் தான்…ஆனால் சாரதாவுக்கு அதில் ஏற பயம் சும்மாவே விபத்து அதிகம்…எதற்காக ரிஸ்க் என்று அவனை வற்புறுத்தி ஆட்டோவில் அழைத்து வந்து விட்டார்.  

கல்யாணி அவனை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்…மயூரி அண்ணா என அழைத்தவள் அவன் அருகில் ஓடி போய் அவள் கையை பற்றி கொண்டாள்… 

கிருபா அவள் தலையை தடவி விட்டவன்… அவளை மெல்ல அணைத்து கொண்டவன்.  

“ இப்போ உடம்பு எப்படி பாப்பா இருக்கு..? வலி இன்னும் இருக்கா டாக்டரை போய் பார்த்தாயா..? அவர் என்ன சொன்னார்..? என கேட்டான்.  

கல்யாணி “ போனோம் கிருபா நம்ம குடும்ப டாக்டர் சேதுபதி தானே…கழுத்து காயம் ஆற கிரீம் ஒன்று கொடுத்து இருந்தார்…அது போல கால் சுளுக்கு பேண்ட் போட்டு விட்டார்… 

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறாங்க…சரி சாரதா நீ எப்படி மா இருக்க..? என கேட்டார்.  

சாரதா “ இப்போ ஓகே ஆன்ட்டி எனக்கு மயூ கழுத்தில் அந்த பாவி கத்தி வைத்ததும்…பயந்து போய் விட்டேன் அது தான் கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டது…புகை வேறு சுவாசிக்க முடியாமல் போய் விட்டது…” என்றார்.  

சக்ரபாணி “ சரி கல்யாணி நீ போய் சாரதா, கிருபாவுக்கு சாப்பிட…ஏதும் எடுத்து வா கிருபா வா இப்படி வந்து உட்காரு… ஏதோ என் கிட்ட பேச வேணும் என்று சொன்ன என்ன விஷயம் பா..? 

என்ன காதல் விஷயமா..? அது என்றால் நீ ஒத்த வார்த்தை கூட பேச கூடாது…” என்றார்.  

சாரதா “ என்னபா அங்கிள் சொல்வது உண்மையா..? நீ யாரையும் விரும்புகிறாயா…? அது தான் நாங்க பெண்ணு பார்ப்பதை தடுத்தாயா..? அம்மா கிட்ட ஏன் சொல்லவில்லை பா..? என கேட்டார்.  

கிருபா “ நீ வேறுமா அது எல்லாம் எனக்கு சரிபட்டு வராது…சியாமளா ஆன்ட்டி விஷயத்தில் பட்டது எல்லாம் போதாதா…? அதை முறைக்கு அதை ஆன்ட்டி என்று தான் அழைப்பேன்…ஆனால் அது எனக்கு என் சொந்த அக்கா போல.  

அது வாழ்க்கை பட்டு போனது போதாதா..? நான் பேச வந்த விஷயம் வேறு… அங்கிள் நான் ஜெனரல் பதவியை ரிசைன் பண்ணலாம் என நினைக்கிறேன்…. இத்தனை நாள் நாட்டுக்கு சேவை செய்தேன்.  

அதை சரி வர செய்து விட்டேன் இனி என்னை பெத்தவளுக்கு கடமை செய்ய நினைக்கிறேன்…நான் இனி அம்மா கூட இருக்க போகிறேன் அது தான்… விருப்ப ஒய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன்…” என்றான்.  

சாரதா, மயூரி முகம் மலர்ந்தது சாரதா.. கிருபாவின் கையை பற்றி கொண்டவர்… 

“ உண்மையாகவா கிருபா இனி என் கூடவா இருக்க போகிற…?நான் கும்பிட்ட சாமி கை விடவில்லை உன் மனசை அது தான் மாற்றி விட்டது…” என்றார்.  

மயூரி “ ஹை…ஜாலி இனி அண்ணா என் கூட தான் இருக்கும்…அது கூட பைக்கில் ஊரை சுற்றி பார்க்கலாம்…” என சந்தோஷமாக சொன்னாள்.  

சக்ரபாணி “ ரொம்ப சந்தோஷமாக இருக்கு பா…எனக்கும் வயதாகி விட்டது இனி கம்பெனியை நீயும், அசோக்கும் பார்த்து கொள்ளுங்க…இனி நான் மயூரியின் கல்யாண விஷயம் பற்றி பார்க்க வேணும்…” என்றார்.  

கிருபா “ அங்கிள் தப்பாக நினைக்க வேணாம்…உங்களுக்கு தெரியும் தானே எனக்கு பிசினஸில் இன்ட்ரஸ்ட் இல்லை என்று….நான் ஒரு ராணுவ பயிற்ச்சி நிலையம் வைக்கலாம் என நினைக்கிறேன்.  

எதிர்கால சந்நிதியை நாட்டை காக்க உருவாக்குவது என் கடமையாக நினைக்கிறேன்…உங்களுக்கு அப்படி என்ன பெரிய வயதாகி விட்டது… நானும், அசோக்கும் உங்களுக்கு உதவி செய்கிறோம்…நீங்க கம்பெனியை ரன் பண்ணுங்க…” என்றான்.  

சக்ரபாணி யோசித்து விட்டு அவன் முடிவுக்கு சம்மதம் சொன்னார்.  

கல்யாணி “ பயிற்ச்சி நிலையம் வைப்பது இருக்கட்டும்…முதலில் நீ கல்யாணம் பண்ணி கொள்ளு அதற்க்கு பிறகு.. நீ என்ன செய்தாலும் எங்களுக்கு பரவாயில்ல…” என்றார்.  

கிருபா ஏதோ பேச வாய் திறக்க போக…அவர்களின் கேட் அலார சத்தம் கேட்டது தெரிந்தவர்களை தான்… 

கேள்வி கேட்காது உள்ளே விடுவார்கள்… வாசலில் கார் வந்து நிற்கும் சத்தமும்…அதை தொடர்ந்து சித்தி என… மழலை மாறாத குரலும் கேட்டது. 

அவைவருமே நிமிர்ந்து பார்க்க புவனா தியாவை தூக்கி கொண்டு வர…தர்ஷன் முன்னால் மயூரியை அழைத்து கொண்டு ஓடி வந்தான்… 

வந்தவன் கிருபாவை காண முகம் மலர… அப்பா என அழைத்து கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தான்…கிருபாவும் சின்ன புன்னகையோடு அவனை தூக்கி கொள்ள…தர்ஷன் அவன் கழுத்தை கட்டி கொண்டவன்.  

“ ஏன் பா நீ என்னை பாப்பாவை பார்க்க வரவில்ல…நான் அம்மா கிட்ட கேட்டேன் அம்மா சொன்னாங்க நீ சாமி கிட்ட போய் இருக்க…வர ரொம்ப நாளாகும் என்று இனி நீ சாமி கிட்ட போக வேணாம்…. 

நீ போனால் நானும் உன் கூட வருவேன்…” என்றவன் வாயை… சட்டென கிருபா மூட தர்ஷா என புவனா சத்தமாக அழைத்தாள்.  

அவள் சத்தத்தில் தியா அழ தொடங்க அவளை ஓடி போய்…மயூரி தூக்கி கொண்டவள் சமாதானப்படுத்த தொடங்கினாள்.  

புவனா “ தர்ஷா மரியாதையாக இங்கே வா…ரொம்ப பெரிய பேச்சு எல்லாம் பேசி கொண்டு இருக்க… 

அவர் உன் அப்பா இல்ல தர்ஷா அம்மா நீ கேட்க சொன்னேன் தானே…”என்றவள்…கிருபாவை பார்த்து ஆங்கிலத்தில்.  

“ ஐ யம் ஸாரி சார் அவன் சின்ன பையன் தெரியாமல் உளறி கொண்டு இருக்கிறான்…உங்களுக்கும் சங்கடம் தானே அவர் இருக்கும் போது உங்களை பற்றி சொல்லி இருக்கிறார்.  

உங்களை ஒரு தடவை பார்க்க வேணும்…வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்க வேணும் என ஆசைபட்டார்…அவர் ஆசை நிராசையாக போய் விட்டது.  

பாருங்க விதியை அவர் இல்லை…ஆனால் நீங்க இங்கே வந்திருக்கிறீங்க அவர் இல்லை என்றால் என்ன..? அவர் மனைவி நான் உயிரோடு இருக்கிறேன் தானே.  

அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என் கடமை…நீங்க மறுக்காமல் ஒரு தடவை என் வீட்டுக்கு வர வேணும்… 

என் கையால் நான் சமைத்து உங்களுக்கு விருந்து பரிமாற வேணும்…” என்றாள்.  

ஒரு தடவை கண்களை மூடி திறந்தவன் கிருபா… 

“ ஸாரி மிஸஸ் பரத் உங்க கோரிக்கை… என்னால் ஏற்று கொள்ள முடியாத நிலையில் நிற்கிறேன் …நான் பரத்தை போட்டோவில் பார்க்க விரும்பவில்லை… 

இதோ என் கையில் சின்ன உருவில் இருக்கும்… பரத்தை பார்த்து விட்டேன் அது போதும்…” என்றான்.  

மயூரி “ என்ன அண்ணா நீ ஆசையாக புவா அக்கா அழைக்கும் போது…வர முடியாது என சொல்கிற அது தான்.. மாமா ஆசை என்று சொல்கிறாங்க தானே.  

அவர் ப்ரண்ட் நீ இதை கூடவா அவருக்காக உனக்கு செய்ய முடியாது..? நீ எதுவுமே சொல்ல தேவையில்லை எனக்காக வா நானும் உன் கூட வருகிறேன்… 

அக்கா விருந்து எப்போ என சொல்லு… நாங்க வருகிறோம்…” என்றாள் முகம் மலர …புவனா  

“ இந்த வீக் எண்ட் மயூ நீங்க எல்லோருமே வர வேணும்…இன்று தர்ஷனுக்கு ஸ்கூல் லீவு உன்னை பார்க்க வேணும் என தொந்தரவு பண்ணினான்… 

அது தான் அழைத்து வந்தேன்… நல்ல வேலை நீங்க எல்லோரும் இங்கே இருக்கிறீங்க…” என்றாள்.  

புவனா எவ்வளவு சொல்லியும் கிருபாவை தர்ஷன் அப்பா என அழைப்பதை மாற்றவில்லை…அது மட்டுமல்ல மயூரி கையில் இருந்த.. தன் தங்கையிடம் அப்பா பாரு அப்பா பாரு என சொல்ல… 

அவளும் மெல்ல ப்பா என அழைக்க தொடங்க…கிருபா அவளை ஆசையாக தூக்கி கொண்டான்… 

சாரதாவுக்கு கண்கள் கலங்கியது… இப்படி குடும்பமாக தன் பையன் எப்போ நிற்பான் என்று.  

இதை எல்லாம் சக்ரபாணி, கல்யாணி பார்த்து கொண்டு இருந்தார்கள்… 

பாண்டிக்கு தீராத தலைவலியை ஏற்படுத்திய ராஜவேலு மேலே கொலை வெறி வந்தது…படுபாவி ஆதாரம் எல்லாம் கையில் வைத்து கொண்டு… இத்தனை நாள் அமைதியாக இருந்து இருக்கிறான்.  

நான் உண்மையில் ஒரு முட்டாள் தான்…இந்த நாய்கள் பற்றி தெரிந்தும் இதுகளை கண்காணிக்காது விட்டது என் தப்பு…இவன் கெட்ட கேட்டுக்கு மயூரி வேணும் என சொல்கிறான்.  

இப்போ இது பற்றி எப்படி ராகவனிடம் பேசுவது…அவன் வேறு ஒரு மாதிரியான ஆளு என்ன செய்வது பேச தான் வேணும்…இல்லை என்றால் ராஜவேலு ஆதாரங்களை இவனுக்கு அனுப்பி விடுவான்.  

அவன் அனுப்பிய அடுத்த செக்கன் இவன் என்னை போட்டு தள்ளி விடுவான்…சரி ஒரு முயற்ச்சி செய்து பார்க்கலாம் என வீட்டுக்கு போனால்…ஹாலில் ராகவன் நாதன் கூட பேசி கொண்டு இருந்தான். 

மாலதி, சரிகா இருவரையுமே வீட்டில் இல்லை…ராஜவேலு சொன்னது உண்மை தான் இரண்டுமே ஊர் சுற்றி கழுதைங்க… 

முதலில் வந்த வேலையை பார்க்கலாம் என நினைத்தவன்… மாப்பிள்ளை என அழைத்து கொண்டு போனான்.  

ராகவன் நிமிர்ந்து அவனை பார்க்க நாதன் மனதில்…இந்த விஷ ஜந்து எதற்க்கு இப்போ பம்மி கொண்டு வருகிறது..விஷயம் ஏதும் இல்லாது வராதே என நினைத்தான்.  

பாண்டி “ மாப்பிள்ளை பிஸியாக இருக்கிறீங்களா..? உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்தேன்…உங்க பெண்ணுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு.  

மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடம் பார்க்கவும் நல்லா இருப்பான்…உங்களுக்கு தெரிந்தவர் கூட அது பற்றி தான் பேச வந்தேன்.  

அவங்க முதலில் இது பற்றி பேச என் மூலமாக தான்…தூது விட்டு இருக்கிறாங்க நீங்க சம்மதம் என சொன்ன அடுத்த செக்கன்…அவங்களை பெண்ணு பார்க்க வர சொல்லாம்…” என்றான்.  

ராகவன் “ சரிகாவுக்கா இப்போ கல்யாணம்…?அவள் முதலில் இன்னும் சரியாக படிப்பை கூட முடிக்கவில்லை…ஒரு டிகிரி எடுக்கட்டும் பிறகு இது பற்றி பேசலாம்…” என்றான்.  

பாண்டி “ அய்யோ…! மாப்பிள்ளை சரிகாவுக்கு இல்ல…உங்க மூத்த பெண்ணை கேட்டு தான் மாப்பிள்ளை வீடு தூது அனுப்பி இருக்கு…” என்றான். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page