தூரிகை 34❤️

அவன் எது செஞ்சாலும் அவள் குறைக் கூறிக் கொண்டே இருக்க அவனால் அதை வெளியில் சொல்லவும் முடியாமல், அவளின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தவித்து இருந்த வேளையில்  நீலன் தன் நண்பனை பார்த்து விட்டு செல்ல வந்தவனுக்கு தன் நண்பன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிலும் வந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது கடினமாக இருக்க, “ஒரு ஆளை வீட்டு வேலைக்கு வச்சுக்கோ எந்த நம்ம ஊர்ல இருந்து யாராவது கூட்டிட்டு வரலாமா” என்று கேட்டான்.

அவன்  “சரி டா ஆனால், அவங்களுக்கு கொடுக்க நமக்கு காசு வேணும்ல, அதுக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இயர்ன் பண்றேன்டா ஒரு மாசம் கழித்து பார்த்துக்கலாம்” என்றான்.

“அதுதானே உனக்கு நான் மட்டும் தான் வேணும் எனக்கு தேவையானதுக்கு மட்டும் நீ எப்படா வந்து எனக்கு பிச்சை போடுவன்னு  நான் தட்டை வச்சு உனக்காக ஏங்கிட்டே இருக்கணும் எல்லாம் என் நேரம், என் முத்துவை மட்டும் நீ உயிரோட விட்டு இருந்தால் நானும் நிம்மதியா இருந்திருப்பேன் நீயும் நிம்மதியா இருந்திருப்ப” என்றாள்.

தன் தங்கை எப்படி ஆவேசமாக பேசியதை கேட்ட நீலன், “நீலா என்ன பேசுற அந்த முத்து செத்ததுக்கும் அமுதனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை அதுவும் இல்லாம அந்த முத்து உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான் அது தெரியாம நீ உன் வாழ்க்கையும் கெடுத்துக்கிட்டு அமுதனோட வாழ்க்கையும் சேர்த்து கொடுத்துட்டு இருக்க ” என்றான்.

“நான் ஒன்னும் இவன் வாழ்க்கையை கெடுக்கல இவன் தான் என் வாழ்க்கையும் கெடுத்துட்டான். அதுக்கு அவனுக்கு வாழ்க்கை முழுக்க தண்டனை தான்” என்றாள்.ஆவேசமாக!!

“ஏய்… லூசு மாதிரி பேசாதடி” என்று கர்ஜித்தான் நீலன் 

“யாரு லூசு மாதிரி பேசுறது, இதோ பாரு இது என்னோட வாழ்க்கை இதில் நீ ஒன்னும் தலையிடத் தேவையில்லை, இனிமே நீ இந்த வீட்டுக்குள்ள வந்தா உனக்கு மரியாதை கெட்டுப் போய்டும்” என்றாள்.

தன் தங்கையிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததை அவனால் தாங்க முடியாமல் அப்படியே நிலை குலைந்து நிற்க.. தன் நண்பனின் இந்த கோலத்தை பார்த்து அமுதனுக்கு முதல் முறையாக கோபம் வந்து அவள் கன்னத்திலே ஒரு ஓங்கி ஒரு அடியை விடுத்து “யாரை பார்த்து என்ன சொல்ற”என்று கேட்டான்.

“இவ்வளவு ரோஷமும் ஆம்பளைங்கற கர்வமும் இருந்தா சம்பாதிச்சு வந்து பணத்தை குடுடா ” என்றாள்.

“உனக்கு பணம் தானடி வேணும் இனி உனக்கு பணம் கண்டிப்பா கிடைக்கும்,” என்று அவளிடம் கூறிவிட்டு தன் நண்பனிடம் திரும்பி “இனிமே உனக்கு நான் வேணும், என்னை நீ பார்க்கணும்னா நான் எப்ப ஊருக்கு வரணோ அப்ப பாரு, இல்லை காலேஜில் பாரு நான் சொல்லாம என்னை நீ இங்க வந்து பார்க்க கூடாது இது நீ அம்மாகிட்டயும் சொல்லிடு மாமா கிட்டயும் சொல்லிடு இப்ப நீ கிளம்பு” என்று அவனை அனுப்பி வைத்தான் அன்றிலிருந்து, அவனுடைய இலக்கு பணமாக மட்டுமே இருந்தது.

அவளுக்கு 9 மாதம் வளைகாப்பு வேண்டும் என்று அடம் பிடிக்க  அதையும் செய்தான் ஆனால், அது ஊரில் தான் என்ற ஒரே ஒரு நிபந்தனையுடன் கோலாகலமாக நடத்தினான்.

நலங்கிருக்கு  அவனை பக்கத்தில் அமர சொல்ல அவளோ அவன் காதோரத்தில் “நீ என் பக்கத்துல உட்காரவது எனக்கு அறுவறுப்பா இருக்குது எழுந்து முதலில் போடா அந்த பக்கம்”  என்றாள் அவன் “முடியாது ” என்றுக் கூறியதற்கு,

“அப்போ சபையில் எல்லாரும் கூடி இருக்கும்போது இந்த குழந்தைக்கு நீ  அப்பன் இல்லைன்னு கத்தி சொல்லுவேன் உன் மாமனோட மானம் தான் போகும் பரவாயில்லையா? ” என்றாள்.

தன் மாமனின் பெயரை சொன்னதால் அவனும் வேறு வழி இன்றி அவள் பக்கத்திலிருந்து எழுந்து விட்டான்.

 அவன் மாமன் வந்து ஏன்பா எழுந்திட்ட என்று கேட்டதற்கு கூட “இல்ல மாமா என்னால ரொம்ப நேரம் உட்கார முடியல ஒரு மாதிரியா இருக்கு” என்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டான்.

தன் மனைவியுடன் கை பிடித்து தனித்து நடக்க வேண்டும்  குழந்தை வயிற்றில் வளர்வதை தொட்டுப் பார்த்து ஆசைப்பட்டு கொள்ள வேண்டும் இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு வளையலையும் சந்தனத்தையும் பூச வேண்டும் என்று ஆசைகள் அவனுக்கும் இருக்க  தான் செய்யுது ஆனால், செஞ்சோற்று கடனுக்காக வாழ்க்கையே அடகு வைத்து விட்டான்.

ஆனால், அவள் ஆசைப்பட்டது போலவே எல்லாம் நல்லபடியாக நடந்தது முதல் முறையாக ‘என்ன பெண் இவளை என் வாழ்நாள் முழுவதும் ஒரு கணவனாக தொடவே மாட்டேன்’ என்ற உறுதிமொழி எடுத்தான்.

அன்று இரவே அவளுக்கு பிரசவ வலி எடுக்க தூக்க போன அமுதனை தட்டி விட்டவளை எப்படியோ திட்டி மருத்துவமனையில் சேர்க்க இரண்டு ஆண் குழந்தைகள் ஒன்றாக பிறந்தன, அதை முதல் முறை கையில் ஏந்த அவன் கையில் வைத்திருந்ததை பார்த்தவுடன் அதையும் பிடுங்கி கொண்டாள் நீலா!!

அவன் மனதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த அன்பும் பஞ்சு பஞ்சாகப் பறந்து போக, தன் அன்னையிடமும் மாமனிடமும் 3 மாதம் இவளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றவன் இரண்டு வருடங்கள் கழித்து நல்ல கம்பெனியில் வேலை மற்றும் பண வசதியுடன், எப்படியும் அவள் தன்னுடன் நல்ல முறையில் வாழமாட்டாள் என்று தெரிந்தும், வாழ்ந்து விட்டால் என்று ஏதோ ஒரு நப்பாசையில் வந்தவன் கண்டது, அவள் தன்னைக் கொடுமைப் படுத்த முடியாததையெல்லாம் தன் அன்னையை கொடுமைப்படுத்தி அதில் இன்பம் கண்டிருக்கிறாள். 

அதன் விளைவு அவனுடைய அன்னை நோய்வாய்ப்பட்டு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியைப் போல் இருந்தார்.

இவன் வந்த இரண்டே நாளில் அவர் அன்னையும் இறந்து விட்டார். அந்த நிகழ்வை மட்டுமா அவனால் சகித்து கொள்ளவே முடியவில்லை…

அவன் இதயத்தை யாரோ ஈட்டியால் குத்தியது போன்ற வலி அந்த வலியோடவே நீலாவை அடிபட்ட பார்வை பார்க்க அவளோ, அவனை பழி வாங்கிய வெற்றிக் களிப்பில் பார்த்தாள்.

அவனுக்கு இவள் என்ன மாதிரியான பெண் என்று தோன்றியது. சில பேருக்கு சொன்னால் புரியும் சில பேருக்கு என்ன சொன்னாலும் செய்தாலும் எதுவும் பண்ண முடியாது, என தெரிந்து கொண்டவன் எல்லா சடங்கும் முடிந்த பின்பு தன் மாமாவாவது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தான் அதன் பிறகு, அவள் கேட்ட பணம் அத்தனையும் அவளிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டான்.

ஒரு சக மனிதனாக அந்தப் பிள்ளைகளை கொஞ்சும் போது கூட அவள் தடுத்துக் கொண்டே இருக்க உழைத்து போடும் ஒரு இயந்திரமாக மாறி விட்டான். தனக்கு யாராவது துரோகம் செய்தால் கொன்று விடும் அளவுக்கு மாறி போனான்.

காலச்சக்கரம் வேகமாக சுழல அவளுக்கு புற்றுநோய் தொற்று வந்துவிட அதில் படாத பாடு பட்டாள். அப்போது தான் பொன்னாம்மாவை அழைத்து வந்தான். அவருக்கு எல்லாம் தெரியும் என்பதால் அப்படியே சென்றது. அந்நேரம் அவள் அன்புக்கு ஏங்கித் தவித்தாள்.அன்பு யாரிடம் இருந்தும் கிடைக்கவே இல்லை குறைந்தபட்சம் தன் தந்தையிடமாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு “நீ எப்போது சாவாய்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவள் தந்தை 

அப்போது உணர்ந்தால் தன் தந்தைக்காக தன்னை சகித்துக் கொள்ளும் இவன் முத்துவை கொன்றிக்க மாட்டான் என்று ஆனால், இப்போது புரிந்து என்ன பயன்..

 அவள் இறந்த செய்தியை தன் மாமனுக்கு சொல்ல அவர் பெத்த கடனுக்காக அவளுக்கு கொல்லி போட்டுவிட்டு சென்றுவிட்டார். இவன் அந்த சடங்கிருக்கு இருந்தால் நேரம் விரயமாகும் என்று பணத்தை சம்பாதிக்க சென்று விட்டான்.

இதை அத்தனையும் அவர் சொல்லி முடித்த வேளையில் குழலியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வந்தது, யாருடைய வாழ்க்கையையும் வெளித்தோற்றத்தை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக அல்லது கொடுமையானவர்கள் என்று நாமே நினைத்துக் கொள்ள கூடாது என்பதை புரிந்து கொண்டாள். தமக்காவது குறைந்தபட்சம் தன்னை நாடும் நேரமாவது தனக்கு பிடித்ததை  வாங்கி தருவான், சில நேரங்களில் கொஞ்சுவான் தன் கணவன் அது அவளுக்கு பிடிக்கவில்லை என்று நினைத்தது உண்டு ஆனால், இப்போது அது கூட இல்லாமல் ஒருவர் தன் வாழ்க்கையையே இழந்து இருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தவளை 

 

” இப்போ என்னம்மா சொல்ற ” என்று கேட்டு கலைத்தார் அமுதனின் மாமன் 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஐயா எதுவும் தெரியாம பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க நான் அவர்கிட்டயும் போய் மன்னிப்பு கேக்கிறேன்,” என்று கூறி எழுந்தவளை ” நான் ஒன்னு சொல்ற அத கேட்டுட்டு உள்ள போகுமா” என்றார்.

“சொல்லுங்கய்யா எதுவா இருந்தாலும் கேட்கிறேன்”

“உனக்கு”  என்று அவர் இழுக்க…

“நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியுது ஐயா என் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு இப்ப நீங்க என்ன சொல்லணும் அதை சொல்லுங்க” என்றாள்.

அவர் நீலணையும் இவளையும் மாறி மாறி பார்க்க… “ எதுவாக இருந்தாலும் சொல்லுங்க”

 

அவர் ஒரு பெருமூச்சு எடுத்துவிட்டு “நீ ஏஏன்மா அமுதனோட சேர்ந்து வாழ கூடாது” என்றார்.

“நான் அவருக்கு தகுதியானவள் நீங்க நினைக்கிறீங்களா!! அதுவும் இல்லாம இப்ப எங்களுக்கு வாழ்க்கையை தொடங்குற வயசு இல்லையே எல்லாமே முடிஞ்சு போச்சு” என்றாள் விரக்தியாக 

“அவன் எனக்காக கல்யாணம்  பண்ணிக்கிட்டான் நீ யாருக்காக பண்ணிக்கிட்டேன்னு தெரியல, சில பேருக்கு மட்டும் தான் மா வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும் எனக்கு தெரிஞ்சு அவனுக்கு உன் மேல ஒரு அன்பு இருக்கு, உன்கிட்டயும் அந்த அன்பை எதிர் பார்க்கிறான் தயவுசெய்து அவங்க அம்மா கிட்ட, இழந்த அன்பை திருப்பிக் கொடும்மா” என்றார்.

“இது எல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும் ஆனால், வாழ்க்கைக்கு நல்லா இருக்காது” என்றாள்.

அவர் அமைதியாகி விட

நீலன் பொறுமையாக, “சில பேருக்கு 45 வயசுல கூட கல்யாணம் ஆகுமா  ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்களேன்” என்றான்.

“அதுக்கு அவர் ஒத்துக்கணுமே” என்றாள் ராகமாக இழுத்து…

“அவன்  மரணப்படுக்கையில் போகும்போது கூட உன்னை காப்பாத்தணும்னு நினைத்தவன் கண்டிப்பா அவனுக்குள்ளும் ஆசை இருக்கும் நீ எந்த முடிவு எடுத்தாலும் ஒரு அண்ணானா உன் கூட நான் இருப்பேன். ஆனால், ஒன்னு எந்த உறவுமே இல்லாம நீங்க ஒண்ணா இருக்கிறதும் நல்லா இருக்காதுமா அதையும் சொல்லிட்டேன். ” என்று கூறிவிட்டு உள்ளே சென்று பார்க்க… அவன் நல்ல உறக்கத்தில் இருந்தவனை தொட்டுப் பார்க்க காய்ச்சல் காய்ச்சல் அடிக்க வெளியே வந்து, “சித்தப்பா அவனுக்கு காய்ச்சல் இருக்கு நைட்டு மருந்து கொடுக்கணும்” என்றான்.

“சரிப்பா கொடுத்துக்கலாம் இவங்களை உன் பொண்டாட்டி கூட தங்க வச்சிடு” என்றுக் கூறி அவரும் சென்று விட்டார். 

குழலிக்கு தான் என்ன முடிவு எடுப்பது தெரியாமல் குழம்பி நின்றாள்.

இங்கு பொன்னம்மா கூறியதை எல்லாம் கேட்டவர்கள், வேகமாக சென்று அங்கு மாட்டி இருக்கும் தன் அன்னையின் ஆள் உயர புகைப்படத்தை கீழே தள்ளி விட்டு, ” தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் செஞ்ச உன் வயிற்றிலேயே நாங்க பிறந்தோம் “என்று இருவரும் கதறி அழுதனர்.

அவர்களை அங்கு ஆற்றுவதற்கும் ஆளில்லை தேற்றுவதற்கும் ஆளில்லாமல் முதல் முறையாக அனாதைகளாக எண்ணினர்.

இதைவிட என்ன கொடுமை இருக்க போகிறது தன் அப்பா யார் என்று தெரியாது தான் வளர்ந்த ஒருவனும் அப்பா இல்லை என்ற நிலைமை என்பது கொடுமையான விஷயம் தானே அதில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தவர்களை  ” முடிந்ததை பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை அடுத்து ஆக வேண்டியதை பாருங்க ” என்றுக் கூறினார். பொன்னம்மா 

அதில் தெளிந்தவர்கள் அமுதனை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கிளம்ப அவர்களை பொன்னம்மா தடுத்து, “இதுவரை அவரு எதுக்காக யாருக்காக வாழ்ந்தாருன்னே தெரியாமல் ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டாரு இனிமேல் வாழற கொஞ்ச நாளாவது அவருக்கு புடிச்ச மாதிரி வாழட்டுமே” என்றார்.

அதற்கு மூத்த மகனோ அங்கு நடந்ததை எல்லாம் கூற பொன்னம்மா ஒரு நிமிடம் அதிர்ச்சினாலும், “அவருக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது நீங்க பயப்படாம போய் தூங்கி எழுந்து நாளைக்கு ஆபீஸ் போற வழிய பாருங்க உங்க அப்பாரு வந்தார்னா நான் பேசி சமாதானம் படுத்துறேன் ” என்று கூறியவர்களை சமாதானப்படுத்தி மேலே அனுப்பி வைத்தார்.

அவர்களும் இதுவரை தவறாக புரிந்து கொண்ட தன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தனர்.

இங்கு குழலி என்ன செய்வது என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பிறகு அவனுக்கு மருந்து கொடுத்து அவனும் உறங்கி விட இரண்டு நாட்கள் கழித்து அவனுக்கு காயங்கள் மெல்ல ஆறியது ஆனால், மன காயங்கள் மட்டும் ஆறாமல் இருவருக்கும் இருந்தது.

ஆறுமா பார்க்கலாம்..…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page