மாயோன் 17
இனியா அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்க அவளைத் தடுத்த கார்த்திக் அவளை சுண்டி இழுக்க அவளும் பூமாலையாய் அவனின் மீது விழ அவளை தூக்கி நிறுத்தியவன் “ஹே அம்மு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி”
என்றவனை பார்த்தவள்
வெட்கப் புன்னகையுடன் உதட்டை கடித்து கீழே குனிந்து “ஆமாம்” என்று தலையசைக்க
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றவன்
பெண்ண
வளை நிமிர்த்தி அவளின் இதழை வருடியவன் ,” ஏன்டி இதைப் பாடா படுத்துற விட்டுடு .அப்போ இன்னும் கொஞ்ச நாள் பொறுடி உன் கழுத்துல தாலி கட்டிட்டு, முறையா என் மனைவியா அழைச்சிட்டு வரேன் சரியா”
“என்ன சொல்றீங்க கார்த்திக் அதுக்குள்ளவா”
“இல்லடி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். மேற்கொண்டு படிக்கிற வேலையைப் பாரு அப்புறம் திருமணத்தை பத்தி யோசிக்கலாம் சரியா ?அது வரை நாம இரண்டு பேரும் அடிக்கடி சந்திச்சிக்கலாம்”
“ம்ம் சரி.”
“சரி வா “என்று அவளை சமையலறை அழைத்துச் சென்றவன் அவளை மேடையின் மீது அமர வைத்து அவளுக்கு சுடசுட தோசை ஊற்றியவன் அவளுக்கு ஊட்டிவிட ,”கார்த்திக் நீங்க என்ன பண்றிங்க யாராவது பார்த்துடப் போறாங்க. நானே சாப்டுக்கறேன் ப்ளீஸ் கார்த்திக்’
“ஏய் என்னடி பேசற நீ.. நாம என்ன ஒன்னும் தெரியாத சின்ன பிள்ளைகளா..நமக்கு எப்படி நடந்துக்கணும் தெரியாதா.?அவனவன் தப்பு செய்துட்டு சுத்துறான் .நான் தைரியமா என் வீட்ல என் பொண்டாட்டிக்கு ஊட்டி விடறேன் .இதுக்கு ஏன்டி இப்படி பயந்து சாகற.”என்று அவளை முறைத்தவன் அவளை சாப்பிட வைக்க அங்கே பலமான கைத்தட்டல் கேட்க வானரப் படைகளுடன் சரவணராஜன் ,கல்பனாவும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.
இனியா அங்கிருப்பவர்களை பார்த்த உடனே சமையல் மேடையிலிருந்து வேகமாக கீழே இறங்கியவள் கீழே விழப் போக கார்த்திக் அவளை தாங்கிப் பிடித்தவன்,” இனியா இப்போ எதுக்கு இவ்ளோ வேகமா இறங்கிற “என்றவனை விட்டு விலகிய இனியா
“ஆன்ட்டி, அங்கிள்” என்று வார்த்தைகள் வராமல் தடுமாறியவள் கண்கள் கலங்கி நிற்க.
கல்பனா இவ்வளவு நேரம் இந்த காட்சியை பார்த்தவர் மனதார அவர்களை வாழ்த்தினார். இவளின் கலக்கம் அவரை வருத்தமடையச் செய்ய ,”ப்ச்ச் இனியா இப்போ எதுக்கு இப்படி அழற’
“ஆன்ட்டி அதுவந்து சாரி .நான் வேண்டாம் தான் சொன்னேன் கார்த்திக் தான் கேட்கல. தப்புதான் ஆன்ட்டி நான் தடுத்திருக்கனும்” என்று பெரிய கொலைக்குற்றத்தை பண்ணியது போல் பேசியவளை அவரின் நண்பர்கள் முறைத்தனர்.
அபிஷேக் ,’ இவள் திருந்தவே மாட்டா ‘என்று நினைத்து கார்த்திக்கை பார்க்க அவனோ கோபம் தலைக்கேறியவனாய் கோபத்தை கட்டுப்படுத்த கைகளை இறுக்க அதைப்பார்த்த அபிஷேக்கு பயம் அதிகமாக,, “இனியா “என்றவனை தடுத்த கார்த்திக்
“ஏய் இப்போ என்ன நடந்தது சொல்லி இப்படி அழுது வைக்கிற. என் உண்மையான காதலை அசிங்கப்படுத்தாதடி.
உன்னை எல்லாம் விரும்பினேன் பாரு என்னை சொல்லனும்.போ போயி இதுங்கக்கூடவே சுத்து நீ அதை மட்டும் தான் செய்வ…என்னோட உண்மையான காதலை புரிஞ்சிக்காத நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம்”என்றான்.
“டேய் கார்த்திக் இப்போ எதுக்கு நீ அவசரப் படற” என்ற அபிஷேக்கை முறைத்தவன்,
“ அபி வேண்டாம் உன் வேலைய மட்டும் பாரு .இந்த விஷயத்தில் தலையிடாத ..என்றவன் அம்மா இனி அவளை என் முகத்தில் முழிக்க வேண்டாம் சொல்லுங்க”
என்றவன் வேகமாக தனது அறைக்கு சென்றான்.
இனியா வேறு எதுவும் கூறாமல் அழுது கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.
ஸ்ருதி அவளின் பின்னே செல்ல கல்பனா தேவி ,”என்னங்க இது
ஒரு பிரச்சனை போனா இன்னொரு பிரச்சனை வருது.நீங்க கண்டும் காணாத மாதிரி நிக்கிறீங்க.எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குதுங்க”
“கல்பனா நாம அவங்க விஷயத்தில் தலையிட வேண்டாம் .அவங்களே அதை பேசி சரி பண்ணிக்குவாங்க புரியுதா.? என்ற சரவணராஜன் டேய் பசங்களா உங்களுக்கும் தான் போங்க போயிட்டு வேலைய பாருங்க.அபி அண்ணா ஏதோ கோபத்தில் பேசிட்டான்.நீ எதுவும் தவறா எடுத்துக்காதடா”
“இல்லப்பா எனக்கு சந்தோஷமா தான் இருக்கு, என்னை விடவும் கார்த்திக் அவளை ரொம்ப கேர் பண்றான் எனக்கு அது போதும் பா”என்றவன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
இனியா அழுது கொண்டிருக்க,” ஸ்ருதி ஏண்டி இப்படி பண்ண அண்ணா உன் மேல இருக்கிற உரிமையில் தானே உனக்கு ஊட்டி விட்டார்.அது உனக்கு சந்தோஷமா இல்லையா?”
“இல்ல ஸ்ருதி நான் வேண்டாம் சொன்னேன். கார்த்திக் கேட்கல
அப்போ நீங்க எல்லாம் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு .அவர் ஊட்டி விடும் போது எனக்கும் ஆசையாத்தான் இருந்துச்சு.ஆனால் ஒருவித பதட்டமாகவும் இருந்துச்சு.நான் என்ன செய்யட்டு.ம்”என்று அழுதவளை சமாதானப் படுத்தினாள் ஸ்ருதி.
கார்த்திக்கும் இனியாவும் ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை ..கார்த்திக் அவள் இருக்கும் பக்கமே திரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
பார்ப்பவர்களுக்கு இது சிறிய பிரச்சனையாக இருந்தாலும் ,கார்த்திக்கை பொருத்தவரை இனியாவை தன் மனைவியாகவே நினைத்தவன் அவள் இப்படி தேவையில்லாமல் பயந்ததும் ,ஏதோ தவறு செய்து விட்டதைப் போல நடந்து கொண்டதும் அவன் மனதை வெகுவாக பாதித்தது.
இனியா ஸ்ருதி இல்லாத நிலையில் அறையில் இரவு தனியாக உறங்கினாள் .ஸ்ருதி எங்கே சென்றால் பார்க்கலாம்.
இனியா இரவு தனியாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க விளக்கை போட்டவள் அங்கே தண்ணீர் இல்லாமல் இருக்க அறையிலிருந்து வெளியே வந்தவள் தண்ணீர் எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குத் திரும்ப யாரோ தன்னை பின் தொடர்வது போல் உணர்வு தோன்ற , வேகமாக நடக்க முயற்சி செய்தாள்.
அவளின் காலை யாரோ நகராமல் பிடித்துக்கொள்வதைப் போல் தோன்ற பயத்தில் வார்த்தை வராமல் தத்தளித்தவள் காலை உதற அது முடியாமல் போக வேகமாக உதறிவள் அங்கிருந்த கதவின் மீது மோதி கீழே விழுந்தவள் “அம்மா “என்று கத்தியவளை ஒரு கரம் எழுப்பி நிற்க வைக்க இவளோ எழுந்து நின்றவள் எதிரில் இருப்பவரை பார்த்து கத்த ஆரம்பித்தாள்..
உதட்டில் இருந்து ரத்தம் சொட்ட தரை முழுவதும் ரத்தம் படர்ந்து ஒருவன் கோர முகத்துடன் நின்று கொண்டிருந்தவன் அவளை” வா “என்று அழைக்க இனியா பயத்தில் உடல் வியர்க்க நடுங்கியவளாக நின்றவள் ‘கார்த்திக் என்னை காப்பாத்துங்க …’என்று மனதினில் கூறியவளை,” இனியா வா நாம போகலாம் இங்கே உனக்கு இடமில்லை “என்று அவன் மீண்டும் கூற…
” என்னால வர முடியாது நீ போ”என்று கண்மூடி கத்தினாள் இனியா.
” இனியா கண்ணத்திற .கண்ணை மூடாத சொல்லி எத்தன தடவ சொல்றது” என்று அவன் கத்த
இவள் பயத்துடனே கண்ணை திறக்க அவனும் தரையில் சிந்தியிருந்த ரத்தத்தை ருசித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து பெண்ணவள் மயங்க ஒரு கரம் அவளை தாங்கி அறைக்குள் அழைத்துச் சென்றது.
கார்த்திக் அவளை தன் மடி மீது கிடத்தியவன் அவளின் தலை கோத இனியா எழுந்து அமர்ந்தவள் ,”கார்த்திக் வெளிய வெளியே அவன் இருக்கான்.. தரை முழுவதும் ஒரே ரத்தமாயிருக்கு” என்று அரற்றியவளை எப்படி தேற்றுவது என்று தெரியாதவன் அவளை இறுக்கி அணைக்க அவளும் அவனுடன் புதைந்தவளின் உடல் நடுங்கிக் கொண்டிருக்க அதை உணர்ந்த கார்த்திக் அவளின் முதுகை நீவியவன் சிறிது நேரத்தில் அவளை விடுவித்து அவளை பூப்போல தூக்கி வெளியில் அழைத்து வந்தான்.
“கார்த்திக் நான் வெளியே வரல ,எனக்கு பயமா இருக்கு நீங்க என்கூடவே இருங்க” என்றவளின் வாயில் விரல்வைத்து ,”ஷ்ஷ்ஷ் பயப்படாத அம்மு நான் இருக்கே தானே?”என்றான் கார்த்திக்.
‘இவன் சொன்னா கேட்க மாட்டானே?’ என்று அவனை உள்ளுக்குள் வறுத்தெடுத்தவள் கண்களை இறுக மூடி அவனின் சட்டை காலரை பிடித்து அவனை இறுக்கமாக அனைத்துக்கொண்டாள்.
“இனியா கண்ணைத் திற டி..
இங்க எங்க ரத்தம் இருக்கு காட்டு”
இவளோ பொறுமையாக கண்ணை திறந்தவள் அங்கே தரை முழுவதும் தண்ணீர் இருப்பதை பார்த்தவள் ஒன்றும் புரியாதவளாக கார்த்திக்கை பார்க்க ,”என்னடி அம்மு அப்படி பாக்கற .தண்ணி தான் கொட்டி இருக்கு இரத்தமில்ல புரியுதா?”
“இல்ல கார்த்திக் நான் நான் பார்த்த கார்த்திக் நான் பொய் சொல்லல என்னை நம்புங்க கார்த்திக்” என்று அழுதவளை மீண்டும் அறைக்கு தூக்கிச் சென்றவன் அவளை படுக்க வைக்க அவளோ தாயின் சேலையை பிடித்து அடம்பிடிக்கும் குழந்தை போல் அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அவனுடனே ஒன்றினாள்.
கார்த்திக் அவளின் செயலில் அவளின் மனநிலை புரிந்தவனாக தனக்குத் தெரிந்த மருத்துவத்தை செயலாற்றினான். அவளின் இதழோடு இதழ் அணைக்க அவளும் அவனுக்கு கட்டுப்பட்டவனாக அவன் உயிர் மூச்சினில் கலந்தாள்.
