தாரகையின் மாயோன்

மாயோன் – 18

கார்த்திக் சிறுது நேரத்தில் அவளை விடுவித்தவன் அவளின்  முகம் பார்க்க அவளோ கண்ணை மூடி அதே மோனநிலையில் இருந்தவள் உதடு துடிக்க கண்களில் கண்ணீர் கோடாய் இறங்கி  தலை முடி  கலைந்து

அழகோவியமாய் காட்சி தந்தவளை

மெதுவாக படுக்க வைத்தவன் தான் படுத்து அவளை தன் மார்பினில் சுமந்தவன் அவளின் தலைகோதி அவளை தட்டிக் கொடுக்க அவளோ மாயவனின் மஞ்சத்தில் சுகமாய் கண்ணயர்ந்தாள்.

அந்த அறையில் உணர்வுகள் உயிரோட்டமாய் வலம்வர இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இன்றி ஒருவரின் அணைப்பு மற்றொரருவருக்கு தேவைப்பட கார்த்திக் அவளின் மீது இருந்த கோபம் முற்றிலும் அகன்றவனாக அவளை மீண்டும் மீண்டும் இறுக்கமாக அணைத்தான்.

இப்படியே சிறிது நேரம் செல்ல கார்த்திக் அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான். அதில் கண்விழித்த இனியா தான் இருக்கும் நிலையை பார்த்தவள் பதறியவளாக எழுந்து அமர்ந்தவள் கார்த்திக்கை பார்த்தவளுக்கு அன்று நடந்த நிகழ்ச்சி மனதில் நிழலாட கண் கலங்கியவள்  வெளியே செல்ல எத்தனிக்க கார்த்திக் அவளின் கையை பிடித்தவன் “இப்போ நீ எங்கடி போற”என்றான்.

“என்னை விடுங்க கார்த்திக்.நான் எங்கேயாவது போறேன் .அதை நீங்க எதுக்கு கேட்கறீங்க”

“நான் கேட்காம வேற யாருடி கேட்பா”

“நீங்க யார் எனக்கு, என்னை எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்ல”

“நான் யார் உனக்கு அது தெரியாதா ?என் மனைவியை  கேள்வி கேட்க எனக்கு உரிமை கிடையாதாடி”

“யாருக்கு யார் மனைவி நானும் வேண்டாம் ,என் காதலும் வேண்டாம் என்று நொடியில் சொன்னவர் தானே நீங்க. அப்படி சொன்ன நீங்க  நாளைக்கு திருமணம் முடிஞ்ச பிறகு என்னை வேண்டாம் சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.”

“ஏய் என்னடி பேச்சு பேசற. நான் கோபத்தில் ஏதோ பேசிட்டேன்.

கோபத்தில் பேசினதை எல்லாம் அப்பவே மனசிலிருந்து அழிச்சிடனும்டி அம்மு “

“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது கார்த்திக் .நீங்க காதலை சொன்ன உடனே நான் சம்மதம் சொன்னதால நான் உங்களுக்கு இளக்காரமா போயிட்டேனா? என் மனசில் நீங்க இருந்து இருக்கீங்க .

அதனாலதான் என் மனசு உங்கள உடனே அக்செப்ட் பண்ணுச்சு

இல்லனா திரும்பிப் பார்க்காம போயிட்டே இருந்திருப்பேன்”

‘அச்சோ நான் உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் அம்மு.  உன்னை அந்தக் கனவிலிருந்து வெளியே கொண்டுவர தானே நான் இவ்வளவு செய்யறேன்’என்று நினைத்தான் கார்த்திக்.

கார்த்திக் மருத்துவர் கூறிய அனைத்தையும் அனைவரிடமும் கூறினாலும் தன் அப்பாவிடம் ,”அப்பா அவளை அந்த நினைப்பில் இருந்து கொண்டு வரனும்னா அவளுக்கு அந்த கனவின் நினைவு வராத  படி , அதாவது அவள் அந்த யோசனையில் இருந்து வெளியே வரனும். அதாவது ஒரு பிரச்சனை மனதில் ஓடிக் கொண்டிருக்க அடுத்த பிரச்சினை வந்ததும் அதை மறந்து விடுவோம் இல்லையா? அப்படி ஏதாவது செய்யனும் அப்பா .. நான் அதை பார்த்துக்கிறேன். அம்மாவும் ,மத்தவங்களும் ஓவர் ரியாக்ட் பண்ணாமல் நீங்க பார்த்துக்கோங்க”என்றான் கார்த்திக் .

அதன் வெளிப்பாடுதான் அவளை இரண்டு நாட்களுக்கு முன் சமையல் அறையில் நடந்த நிகழ்வுக்கு அவளின் மனம் நோகும்படி தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு திட்டினான்.கார்த்திக் அப்படி பேசியபோது சரவணராஜன் அப்போது சிரித்தார்.

“உன் மேல உரிமை இருக்கவே தான்டி அப்படி பேசற.நீ நேத்து நடந்தத கொஞ்சம் யோசிச்சு பாரு .நாம அப்படி ஒண்ணும் தப்பு செய்யலையேடி ஏண்டி அதை புரிஞ்சிக்க மாட்டேங்கற”

“அச்சோ கார்த்திக் எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு.அதுவும் திடீர்னு எல்லாரும் வரவும் எனக்கு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு ,அதனாலதான் அப்படி நடந்துகிட்டேன்”

“ஏதே புதுசா இருந்துச்சா .அடியேய் அப்போ எனக்கு மட்டும் இதெல்லாம் பழகின விஷயமாடி?”

“யாருக்கு தெரியும் இருந்தாலும் இருக்கலாம்” என்றவளை பார்த்து சிரித்தவன்

“பார்றா அந்த நினைப்பு வேற  இருக்குதாடி உனக்கு. இங்க பாரு இனியா இந்த கட்டை வேகும் வரை உன் நினைவோடு மட்டும் தான் இருப்பேன்.அதை புரிஞ்சுகோ டி அம்மு”

“நீங்க எப்படி கார்த்திக் என் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க.

நானும் உங்ககிட்ட இப்படி ஒட்டிக்குவேன்னு எதிர்பார்க்கவே இல்ல. ஆனால் உங்க அன்பை என்னால முழுசா அனுபவிக்க முடியல கார்த்திக்.எனக்கு இருக்க இந்த பிரச்சனை எப்போ முடியுமோ தெரியல கார்த்திக்”என்று கலங்கினாள் இனியா.

“அம்மு உனக்கு எதுவும் இல்லடி தேவையில்லாம கலங்காத . உன்னை இந்த பிரச்சினையில் இருந்து வெளிக்கொண்டு வருவது தான் என்னுடைய முதல் வேலை ஓகேவா எங்க சிரி பார்க்கலாம்”

“நீங்க சொல்றது நடக்குமா கார்த்திக் .நிம்மதியா உங்க கூட வாழனும் . அதுதான் என்னோட ஆசை”

“கண்டிப்பா இனியா அதில் உனக்கு சந்தேகமே வேண்டாம் சரிடா விடிஞ்சிடுச்சி நீ ரூமுக்கு போ”என்றதும்..இனியா அறைக்குச் சென்று தூங்க அபிஷேக் அவளுக்கு காபி எடுத்துக்கொண்டு வந்தவன் அவளை எழுப்பினான்.

“டேய் என்னடா அபி சீக்கிரம் எழுந்துட்டியா? ஹே காபியா குடுகுடு தலை வலிக்குதுடா”

“ ஏய் ரௌடி பேபி நீ சந்தோஷமா இருக்கியாடி”

“ஏண்டா உனக்கு இந்த திடீர் சந்தேகம் எருமை.”

“உன் முகம் திடீர்னு நூறு சூரியனோட வெளிச்சம் போல பிரகாசிக்குதே அதான் கேட்டேன்’

“ஓஹோ அப்படியாடா தெரியுது?”

“அஹான்”

“ஹான்”

“ஏய் சமாளிக்காத சொல்லுடி”

“அதெல்லாம் எதுவும் இல்ல டா. ஆனா நீ கேட்கிற மாதிரி சந்தோஷமா இருக்கேன் போதுமா?”

“இனியா நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் தானே?”

“என்னடா இப்படி கேட்கற.எனக்கு இருக்க பிரச்சனைக்கு நீயும் நம்ம வானரங்களும் இல்லனா நான் எப்பவோ மர்கயா தான்” என்று சிரித்தவளை முறைத்தவன்

“ஏய் பைத்தியம் உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல டி ஏதாவது உளராத , சரி சொல்லு கார்த்திக் உன் கிட்ட பேசினானா?”

“ஆமாண்டா பேசினார்”என்றவள் இரவு அவளுக்கு நடந்ததை மட்டும் கூறினாள்.

“என்ன சொல்ற இனியா.அதெல்லாம் உன் பிரம்மைடி  லூசு என்றவன் நாங்க தூங்குற வரைக்குமே அவன் தூங்கல .எங்க இடத்திலிருந்து இனி அவன் உன்னை கவனமா பார்த்துப்பான் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் நான் நிம்மதியா தூங்கினேன்.அப்படி இருந்தும் ஒரு தடவை நான் எழுந்து பார்த்தேன்

கார்த்திக் அறையில் லைட் எரிஞ்சது. உன்னோட அறை மூடி இருந்தது எது எப்படியோ இரண்டு பேரும் பேசிட்டிங்களே அது போதும் எனக்கு தெரியும் எப்படியும் கார்த்திக் தூங்காம உன்னை பாதுகாப்பான் அந்த நம்பிக்கை இருக்கவே தான் நான் நிம்மதியா இருந்தேன்” என்றான்.

‘ஆமாண்டா உன் அண்ணா இல்லாம  என்னால வாழ முடியாது போல ..அவர் பாசத்தால் என்னை கட்டுப்போடுறாரே டா .என்னோட அறையில் நான் இருந்தா தானே?’ என்று நினைத்தவள்,” அபி எனக்கு ரொம்ப பசிக்குது டா “என்று பேச்சை மாற்றினாள்‌.

“ஏய் குளிச்சிட்டு வாடி  சாப்பிடலாம் “என்றவன் வெளியேறினான்.

‘ஆமா இவன் சமைச்சு வச்சிருக்கிற மாதிரியே பேசுவான்’ என்று நினைத்தவள் குளித்து முடித்தவள் சமையலறை செல்ல அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.

சமையலறையை அலங்கோலமாக இருக்க ,”டேய் என்னங்கடா இது?”என்று கத்தியவள் அப்போதுதான் கார்த்தியை பார்க்க அவனோ தலையில் துண்டு கட்டிக் கொண்டு கையில் கரண்டியுடன் காட்சியளித்தான்.

“ அம்மு வா வா  வந்து சாப்பிட்டு பாரு ஐயாவோட சமையல் எப்படி இருக்குன்னு சொல்லுடி”

“என்ன நீங்க சமைச்சீங்களா?”

“ஆமாண்டா வா சாப்பிடலாம்”என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த பாலாஜி

“இனியா பெண் பிள்ளையா லட்சணமா சீக்கிரமா எழுந்து சமைக்கனும் அது உனக்கு தெரியாதா”என்று கேட்க …

அவனைத் தலையில் அடித்த கார்த்திக் “ஏன்டா ஒரு நாளைக்கு காய்கறி கட் பண்ணி கொடுத்தது உனக்கு சலிச்சு போச்சா?

அவளை வேலை செய்ய சொல்ற ..என் அம்மு எதுவும் செய்ய மாட்டா போடா ,இது எல்லாம் எடுத்துட்டு போய் டேபிள் மேலே வைங்க” என்றதும் பாலாஜி , அன்பு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட வர்கள் ,”டேய் இதுங்க இரண்டும் எப்படா பேச ஆரம்பிச்சுதுங்க.”என்று அன்பு கேட்க 

“தெரியலையே டா “என்றான் பாலாஜி.

“டேய் அங்க என்னடா பேச்சு”

“ஒண்ணும் இல்ல அண்ணா போறோம்” என்று இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

இனியா கார்த்திகை பார்த்துக்கொண்டிருந்தவளை நெருங்கியவன் ,”என்னடி சைட் அடிக்கிறியா சாப்பிட்டு முடிச்சிட்டு பொறுமையா செய்யலாம் வா”

“ ஐயாவுக்கு ஆசையைப் பாரு”

“என் ஆசைக்கு என்னடி குறைச்சல் என் பொண்டாட்டி”

“கார்த்திக் சும்மா இருங்க எல்லாரும் இருக்காங்க தானே?சரி அபி எங்க கார்த்திக்”

“அதோ இருக்கான் பாரு உன் ஃப்ரண்ட்  தீனி பண்டாரம் என்ன செய்றான் பாரு”என்றதும் இவளும் திரும்பிப்பார்க்க அபிஷேக் அனைத்து பதார்த்தங்களையும் ருசி பார்த்துக் கொண்டிருந்தான்.

“கார்த்திக் என்ன பேசுறீங்க நீங்க கண்ணு வைக்காதீங்க விடுங்க”

“பார்றா உங்க அலப்பறை தாங்க முடியலடி சரி வாடி சாப்பிடு”என்று இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க

ஸ்ருதி அங்கே வந்து சேர்ந்தாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!