அத்தியாயம் 01 (ANK)

அத்தியாயம் 01 

 

விடியலை நோக்கி வானம் செவ்வண்ணம் பூசிக் கொண்டிருக்கும் சமயம் ஆங்காங்கே பனி மூட்டம் படர்ந்து சூர்யோதத்தை மேலும் அழகாக்கி கொண்டிருந்த தருணம் ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை போலும்,

 

“சேன தவ கொச்சர வெலாவாக்கின் அபி யன்ன ஓண தென தியென்னே?”

 

[சேன, இன்னும் எவ்வளவு நேரத்தில நாம போக வேண்டிய இடமிருக்கு?] என்றான் கேள்வியாக அவன்,

 

அதற்கு கான்ஸ்டபிள் சேனாநாயக்கவோ, “தவ பெய பாகெக்கின் யன்ன புளுவன் ஸார்”

 

[இன்னும் அரைமணி நேரத்துல போயிரலாம் ஸார்] என்று பவ்வியமாக கூற அவனோ மெதுவாக தன் கன்னத்தை தடவ புதிதாக முளைவிடும் தாடியின் சொரசொரப்பை உணர்ந்தவன், “சைக் இது வேற” என்று அலுத்தும் கொண்டான்.

 

என்ன நினைத்தானோ அப்படியே இருக்கையில் கண்மூடி சாய அவனது அழைப்பேசி மெல்லிய ஒலியை எழுப்ப அதை கேட்டவனோ, “ப்ச்” என்று சலித்தபடி அதையேற்று காதில் வைக்க அப்பக்கம் வேறு யாருமில்லை அவன் ஆரூயிர் தாய் தான்

 

“நகுல் இன்னும் ஒன் மன்த்ல உனக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கா இல்லையா? இன்னைக்கு நாம ஷாப்பிங் போகணும் நதிக்கு வேற சாரி எடுக்கனும்”

 

என்றதும் அவனோ நெற்றியை சுருக்கியபடி, “ப்ச் அம்மா யாரு அந்த நதி அவளுக்கு சாரி எடுக்குறது பத்தி என்கிட்ட என்னத்துக்கு சொல்லுறீங்க?”

 

என்று எரிச்சலாக கேட்க தன் நெஞ்சில் கை வைத்த மீனாட்சி அம்மாளோ, “டேய்! அவ தான்டா உன்ன கட்டிக்க போற பொண்ணு அபர்ணதி அவ பேரு கூடவா உனக்கு நினைவில்ல?”
 

என்று கூறியதும் காற்றை குவித்து ஊதியவனோ, “ஓ ஓகே மொட்டையா நதின்னு சொன்னா எனக்கென்ன தெரியும்? அவளுக்கு விருப்பமான சாரிய பர்ச்சஸ் பண்ணுங்க நான் மனிய ட்ரான்ஸ்பர் பண்ணி விடுறேன்”

 

என்றதும் மீனாட்சி அம்மாளோ, “யப்பா டேய் உன்ன ஷாப்பிங் பண்ண தான் கூப்பிட்டோமே தவிர உன்கிட்ட காசு கறக்க இல்லடா தம்பி, என் புருஷன்கிட்ட தேவைக்கு அதிகமாவே பணமிருக்கு நாங்களே எங்க மருமகளுக்கு இல்ல என்னோட மகளுக்கு சாரி எடுத்து கொடுக்குறேன்”

 

என்று பட்டென அழைப்பேசியை அணைத்து போட நகுலனோ எரிச்சலுடன், “இப்போ யாரு எனக்கு கல்யாணம் வேணும்னு துடிச்சது இவங்கள ஒன்ன பார்த்து என் தலையில கட்டுறாங்க இதுல ஷாப்பிங் மண்ணாங்கட்டி தான் குறைவு”

 

என்று முணுநுணுக்க அதே சமயம் அவனது அழைப்பேசி மீண்டும் ஒலிக்க அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவன்,

 

 

 

“ஹலோ! ஸர் மம கருணாதாச நுவெரெலிய போலீஸியே ஓஐசி.. எஸ்.பி சர் த மே” [ஹலோ! சார் நான் நுவரெலியா ஓஐசி கருணாதாஸ கதைக்கிறேன், இது எஸ்.பி சார் தானே] என்று சற்று பிசிறு தட்டிய ஆண் குரல் ஒலிக்க,

 

“யெஸ், கியன்ன கருணாதாச மங் எஸ்.பி நகுலன் கதாகறன்னே”

[ யெஸ், நான் எஸ்.பி நகுலன் தான் கதைக்குறேன்]

 

{இனி வரும் உரையாடல்கள் தமிழில் காண்போம்}

 

என்று கம்பீரமான ஆண்குரலில் இருந்த கடுமையை கண்டு ஒரு நிமிடம் அப்பக்கம் தடுமாறிய கருணாதாசவோ,

 

“ஸார் க்ரைம் ஸ்பாட்டுக்கு எல்லா யூனிட்சும் வந்துட்டாங்க நீங்க மட்டும் தான்”

 

என்று தயங்க நகுலனோ சற்று பெருமூச்செறிந்தபடி, “ஐயம் ஒன் மை வே”

 

என்றபடி அழைப்பை துண்டித்து விட்டு சிம்மக் குரலில், “இன்னும் எவ்வளவு நேரம்?” என்று கர்ஜிக்க ஸ்டியரிங்கை நடுக்கத்துடன் அழுந்த பற்றிய சேனவோ,

 

“இப்போ இப்போ போயிரலாம் ஸார்” என்று தட்டு தடுமாறி கூற அவர்களது ஜீப்

 

மலைகளாலும் தேயிலை தோட்டங்களாலும் சூழப்பட்ட அழகிய மலைப்பிரதேசத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தது, அது வளைந்து நெளிந்து செல்லும் அழகிய வழுக்குப்பாதைகள் அதிலும் ஆங்காங்கே தெருவோரத்தில் பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் கையில் புதியதாய் பூத்துக் குலுங்கிய மலர்களை செண்டுகளாக கோர்த்து கையில் வைத்து அதை ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தியும் வெளிநாட்டவர்களிடமும் விற்றுக் கொண்டிருக்க

 

அதை பார்த்த நகுலனுக்கு முகம் மேலும் இறுகி தான் போனது. அதே இறுக்கத்துடன் சேனவிடம், “இந்த கிட்ஸ்க்கு டிசிப்ளின் கொஞ்சம் கூட இல்ல செவனுக்கு ஸ்கூல்ல நிற்கணும் இப்போவே டைம் சிக்ஸ் போர்ட்டிபைவ் எத்தன மணிக்கு இந்த ஸ்டப்ஸ் எல்லாம் சேல் பண்ணிட்டு ஸ்கூலுக்கு போவாங்க ?” என்று கடுகடுக்க

 

சேனவோ வரவழைக்கப்பட்ட தைரியத்துடன், “ஸார் செவன் தர்ட்டிக்கு தானே ஸ்கூல் ஸ்டார்ட் அதுக்கு முன்ன ஸ்கூலுக்கு போயிருவாங்க ஸார்” என்று பவ்யமாக கூற

 

நகுலனோ அதற்கும் திருப்தியடையாது, “நானும் அப்படி கரெக்ட் டைம்க்கு டியூட்டிக்கு வந்தா உங்க கமிஷனர் சார் ஓகே சொல்லுவாரா?”

 

என்றதும் சேனவோ, ‘டேய் நீயும் இந்த குட்டி பசங்களும் ஒண்ணாடா?’ என்பது போல் அதிர்ச்சியாக பார்த்து வைத்தவர்,

 

‘எதுக்கு இந்த மனுஷன் இப்டி காயிறார் சரி தான் அம்மா, கட்டிக்க போற பொண்ணுன்னு எல்லார்கிட்டயும் இப்டி தானே நெருப்ப அள்ளி கொட்டுனா போல நடந்துக்குறார் இதுல மூணாவது மனுஷன் எம்மாத்திரம்’

 

என்று பெருமூச்செறியவும் அவர்கள் வந்து சேரவேண்டிய ‘ட்ரிபிள் ஏ’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘பெலிங்டன்’ எஸ்டேட்டும் வந்து சேர்ந்திருந்தது.

 

அவர்கள் வந்து சேர முதலே எப்படியோ மோப்பம் பிடித்து இலங்கையின் அத்தனை ஊடகங்களும் நான் நீ என மாறி மாறி நேரடி ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருக்க,

 

அங்கு நெடுநெடுவென வளர்ந்து உருண்டு திரண்ட புஜங்களுடன் கூர்நாசியும் கபில நிறக் கண்களும் கிளீன் ஷேவ் செய்த முகத்தில் புதிதாக அரும்பியிருந்த தாடியை மெல்ல தேய்த்துக் கொண்டே நடந்து வந்த நகுலனை நோக்கி தான் அனைவரும் ஓடி வந்தனர்.

 

அவர்களை கண்டதும், “இவனுக ஒரு ***ண்டி கூட்டம்” என வாயிற்குள் சாதாரணமாக கெட்ட வார்த்தை போட்டு திட்டியபடி ஒரு வித துள்ளலுடனேயே குற்றம் நடந்த இடத்தை அடைய,

 

அங்கு வந்த பத்திரிகையாளர்களோ, “சார் இது கொலையா? தற்கொலையா? அப்படியே கொலையா இருந்தாலும் முன்பகை தான் காரணமா?”

 

என்று கேட்க நகுலனோ நக்கலாக சிரித்துக் கொண்டே, “ஓஹோ! அப்படியா சங்கதி?

சூரசேன இந்த சாருக்கு கொலைய பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு இவர உடனே நம்ம கஸ்டடிக்கு எடுங்க”

 

என்று உத்தரவிட கேள்வி கேட்ட பத்திரிகையாளரோ, “ஸார் ஸார் என்ன ஸார் இது அநியாயமா இருக்கு” என்று துள்ள துடிக்க அவர் தோளில் கைப்போட்டபடி,

 

அவரை அழைத்து கொண்டு தோட்டத்தின் புறமாக சென்றவன் அவரது பெயரை வாசித்து விட்டு, “மிஸ்டர் விக்ரமசிங்க, ரைட் உன் வேலைய பார்க்க விடாம நான் தடுக்குறேனா?” என்று துப்பாக்கியை நீவிக் கொண்டே கேட்க

 

விக்ரமசிங்கவுக்கோ அத்தனை குளிரிலும் வியர்வை அரும்பியது. ஏனென்றால் நகுலனின் வரலாறு அப்படி, அவனது வெறித்தனமான தாக்குதலினால் மூன்று குற்றவாளிகளின் உயிர் லாக்கப்பில் பிரிந்தது.

 

இது வரை பத்து என்கவுண்டர், அவன் விசாரிக்கும் விதத்தை கேட்டாலே மக்களுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் எடுக்கும் அத்தனை மூர்க்கத்தனம் கொண்டவன், அவனிடம் தனியாக சிக்கிக் கொண்டோமே என்ற பயமே விக்ரமசிங்கவின் தொடையை நடுங்க செய்தது.

 

இருந்தும் தைரியத்தை வரவழைத்தபடி, “ஸாரி சார் இனி நான் கேஸ் முடியமட்டும் வாயே திறக்கல”

என்று காற்றுக்கு கூட கேட்காத குரலில் கூற அதை குனிந்து காது கொடுத்து கேட்ட நகுலனோ,

 

“குட் இனி உன் கூட்டத்துல எவனாச்சும் என் பின்னாடி வந்தான் உன் வாயில தான் ரெண்டு புல்லட்ட இறக்குவேன்”

 

என்று மிரட்ட விக்ரமசிங்கவோ விட்டால் போதுமென ஓடியே விட்டார்., அவர் மட்டுமில்லை அவருடன் வந்த அனைத்து பத்திரிகையாளர்களும் களைந்து ஓடி விட

 

நகுலனோ, “பெர்பெக்ட் அட்மாஸ்பியர்” என்றபடி நடக்க அவனது வேகத்துக்கு ஈடுக்கொடுத்தபடியே, “ஸார் ஸார்” என்று கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தார் தடயவியல் நிபுணர் ஹன்ஸா,

 

நகுலனோ, “சொல்லுங்க மேடம் புட் ப்ரிண்ட் கிடைச்சதா? வெப்பன்ஸ்? பிங்கர்ப்ரிண்ட்ஸ் இப்படி ஏதாவது யூஸ்புல்லா ஏதாவது கிடைச்சதா?”

 

என்று கேட்க அதற்கு ஹன்ஸாவோ, “ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா மர்டர் பண்ணி இருக்காங்க சார்”

 

என்றதும் நகுலனோ, “எத்தனை பேரோட பாடிய ரெக்கவர் பண்ணீங்க?”

 

அதற்கு ஹன்ஸாவோ, “கிட்டத்தட்ட பதினைஞ்சு பாடி ஸார்” என்றது தான் தாமதம் நகுலனின் கால் ஒரு கணம் நடையை நிறுத்தியது.

 

அவனோ மெதுவாக திரும்பி “வாட்?!, கம் அகைன்” திருதிருவென விழித்த தடயவியல் நிபுணர் ஹன்ஸாவோ, “யெஸ் சார், இப்போதைக்கு பதினைஞ்சு பாடிஸ் ரெக்கவர் பண்ணி இருக்கோம்”

 

என்றதும் நகுலனோ ஒரு கணம் தன் ஷர்ட்டை சரி செய்தபடி ஒற்றை புருவமுயர்த்தி, “அப்போ இன்னும் பாடிஸ் இருக்கலாமா? இல்ல கண்டிப்பா இருக்கும்னு உறுதியா சொல்லுறீங்களா மிஸ் ஹன்ஸா?”

 

என்றான் சற்றே அழுத்தமாக, “பிப்ட்டி பிப்ட்டி ப்ரோபபிலிட்டி சார்”

 

என்றதும் ஒரு கணம் புருவத்தை தேய்த்தவன், “இந்த பங்களாவுக்கு பின்னாடி பெரிய லேக் இருக்குல்ல அங்க ஏதாவது கிடைக்குதான்னு சர்ச் பண்ண சொல்லுங்க”

 

என்று உத்தரவிட்டபடி உள்ளே நுழைந்தவன் கண்களில் முதலில் பட்டதென்னவோ நடுஹாலில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞனின் சடலம் தான் அதை பார்த்த நகுலனுக்கே குமட்டிக் கொண்டு வந்தது அந்த பிணத்தில் அத்தனை கொடூரம்,

 

அச் சடலத்தின் வலக்கையும் காலின் விரல்களும் வெட்டி அகற்றப்பட்டிருக்க இமைகள் இரண்டும் தைக்கப்பட்டு ஒரு வித குரூரத்தின் உச்சகட்டமாக தொங்கிக் கொண்டிருக்க நகுலனோ,

 

“கருணாதாச” என்று குரல் கொடுக்க அவன் குரலில் தெரிந்த கொதிப்பை கண்டு அங்கு ஓடோடி வந்த கருணாதசாவோ,

 

“ஸார்! என்ன சார் ஏதும் பிரச்சனையா?” நகுலனோ முறைத்தபடி,

 

“இது என்ன திருஷ்டி பூசணிக்காயா? பாடிய அடாப்ஸி பண்ண அனுப்பாம எதுக்கு தொங்க விட்ருக்க? நீயெல்லாம் படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ணி தான் ஜாப்புக்கு வந்தியா?

 

இல்லன்னா அப்பன் பேர வச்சு ஓஐசி பதவில உட்கார்ந்திருக்கியா மேன்?

ஏன் இன்னும் ரெக்கவர் பண்ண பாடிஸ ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பல?”

 

என்று காட்டுக் கத்து கத்தியவன் அதனை தொடர்ந்து சூரசேனவிடம், “அந்த பாரன்சிக் ஆபிஸர் ஹன்ஸாவ கூப்பிடு” என்று எரிச்சலாக மொழிந்தவன்,

 

ஹன்ஸாவிடம், “நீங்க ப்ரொபெஷனல் தானே மிஸ் ஹன்ஸா உங்களுக்கு கூடவா சென்ஸ் இல்ல பாடி ஏற்கனவே ரொம்ப டேமேஜ் ஆகிருக்கு இதுல இப்டியே தொங்க விட்டா இன்னும் டேமேஜ் ஆகாதா? என்ன வேலை பார்க்குறீங்க?”

 

என்று லெஃப்ட் ரைட் வாங்க ஹன்ஸாவோ சற்றே தைரியத்துடன், “சார் நீங்க வந்ததும் தான் பாடிஸ அடாப்ஸிக்கு அனுப்பணும்னு ஐ.ஜி சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் அதான்”

 

என்று இழுக்க அவனோ பல்லை நறநறவென கடித்தபடி, “பிளடி இடியட்ஸ், ஆமா நான் வந்து ரிப்பன் வெட்டி ஓபன் பண்ணா தான் வேலை நடக்கும் சீக்கிரம் பாடிஸ ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்புங்க”

 

என்றபடி முன்னேறியவன் சட்டென, “டூ ஆர் த்ரீ பாடிஸ் தான் ரெக்கவர் பண்ணி இருக்கோம் அதுவும் ட்ரிங்க்ஸ் பாய்சன் ஆகி தான் இறந்திருக்காங்க புரிஞ்சுதா? இப்டி தான் நியூஸ் போகணும் இங்கே என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியக் கூடாது”

 

என்றபடி பங்களாவின் சமையலறைக்குள் நுழைய அங்கு உணவு சமைத்து உண்டதற்கான தடயங்கள் இருக்க அதை உற்று பார்த்தவன், “பிரெஷ், இவங்க இறந்து எப்படியும் டென் டூ டூவெல்வ் ஹார்ஸ் இருக்கலாம் ஆனா இந்த பூட் அதோட டெக்ஷர் ஸ்மெல் எல்லாம் பார்த்தா பைவ் ஹவர்ஸ்க்குள்ள குக் பண்ண மாதிரி இருக்கு”

 

என்று அங்கிருந்த நம்பகமான போலீஸ் அதிகாரியும் அவனது நண்பனுமான வைகர்த்தனிடம் கூற, அவனோ “நகுல் இங்க குளிர் அதிகம் அதனால கூட அப்டி இருக்கலாமில்ல இங்கே பார்ட்டி பண்ணவங்க கூட சமைச்சு சாப்பிட்டிருக்கலாமில்ல”

 

என்று தன் சந்தேகத்தை கேட்க நகுலனோ, “இல்ல தனா, பார்ட்டி பண்ண எல்லாரும் ஒன்னு அரைபோதையில இருந்திருக்கணும் இல்லன்னா அதே வைப்ல இருந்திருக்கனும் யாரவது பார்ட்டி பண்ற நேரம் இவ்ளோ நீட்டா கிளீனா ஆர்கனைஸ் பண்ணுவாங்களா? நைப்ஸ் எல்லாம் ஹோல்டர்ல இருக்கு குக்கிங் பண்ணதும் எல்லா டிஷசையும் கிளீன் பண்ணிருக்கான்”

 

என்று கூறிக் கொண்டே வைகார்த்தனை பார்த்து கண்ணுக்கெட்டாத முறுவல் புரிந்தான் நகுலன்,

 

வைகர்த்தனன் நகுலனின் நெருங்கிய தோழன் மட்டுமில்லை தடயவியல் துறையில் பணி புரியும் உயரதிகாரியும் கூட, நச்சுயியல் துறையில் தலை சிறந்தவன் (toxicology expert) ஆனால் நகுலனை போல் மூர்க்கமானவன் கிடையாது அளவாக நறுக்கிய தாடி மீசை நீட்டாக டர்க்கின் செய்த ஷார்ட் முகத்தில் எப்போதும் புன்னகை கூர்நாசி என்று கூறமுடியாது ஆனால் அளவான அழகான நாசி கண்ணில் எப்போதும் குறும்பும் துள்ளலும் அளவுக்கதிகமாகவே காணப்படும்.

 

அவன் வேலை பார்க்கும் துறைக்கும் அவனுடைய நடத்தைக்கும் அத்தனை வித்தியாசம் உண்டு. அவனது ஆரூயிர் காதலி தான் ஹன்ஸா எனும் மாநிற அழகி

நண்பனுடன் அதிக நேரம் செலவழிக்கிறாள். என்பதாலேயே நகுலனுக்கு அவள் மீது கொஞ்சமே கொஞ்சம் கோபம் அந்த கோபத்தை தான் அவ்வப்போது வேலையில் காட்டி தீர்த்துக் கொள்வான்.

 

 

இப்படியாக உரையாடியபடியே சமையலறையிலிருந்து நீர்நிலைக்கு செல்லும் கதவை திறக்க,

 

முற்பட்ட சமயம், “ஸார்” என்று அலறல் சத்தம் மாடியிலிருந்து கேட்க அந்த அலறல் வந்த திசையை நோக்கி சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

ஆம், அங்கு நகுலனும் வைகர்த்தனனும் கண்ட காட்சி அவர்களை மென்மேலும் குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் தான் ஆளாக்கியது. அங்கு உயிருடன் அமர்ந்திருந்தது. வேறு யாருமில்லை ‘ட்ரிபிள் ஏ’ கம்பெனியின் முன்னாள் உரிமையாளரான,

 

ஆரியநாதன் தான் அவருடைய பேரன்களான ஆதித், ஆர்னவ், ஆரோன் ஆகிய மூவரும் தான் தற்போது ‘ட்ரிபிள் ஏ’ நிறுவனத்தை எடுத்து நடத்தும் உரிமையாளர்கள்

 

நகுலனோ அவரிடம் நீரை பருகும்படி சைகை செய்தவன் அவரது பாவனையை தான் ஆராய்ந்துக் கொண்டிருந்தான். பேரன்கள் மூவருக்கு தாத்தா என்று சொல்லுமளவுக்கு அவ்வளவாக முதிர்ந்த தோற்றமில்லை அவரிடம்,

 

குரலை செறுமியபடி, “ஸார் உங்க கிட்ட கொஞ்சம் கேள்வி கேட்கலாமா?”

 

என்று நகுலன் நிதானமாக வினவ அவரோ ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு,

 

“ஸார் இது வழமையா ஒவ்வொரு வருஷமும் நடக்குற கெட் டூ கெதரா? இல்லன்னா ஆபீஸ் பார்ட்டி சம்திங் லைக் தட்”

 

என்றதும் ஆரியநாதனோ, “இது ஒவ்வொரு வருஷமும் நடக்குற பேமிலி கெட் டூ கெதர் தான் ஸார் ஏன் பசங்க மியூஸிக் ஏதும் சத்தமா வச்சு பிரச்சனை பண்ணிட்டாங்களா?”

 

என்று கேட்டவரை பார்த்து மறுமுறையும் அதிர்ந்து போனது என்னவோ நகுலனும் வைகார்த்தனும் தான்.

 

                              தொடரும்…

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!