மலர்-12
அது தாத்தா இவன் இப்போதைக்கு சொல்ல மாட்டான் என்று ரெஜிதாவுக்கு எரிச்சல் வந்தது.
ஒண்ணுமில்ல தாத்தா, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கோம். ஆப் கிட்டயும் பேசியாச்சு. அதான் உங்ககிட்டயும் சொல்லிடலான்னு . எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.எ வால் மட்டும் அவர்களின் காலி தொட்டுக் கொண்டாள் . அந்த சமயத்தில் பேரனை ஆச்சர்யமாக பார்த்தார்கள் வயதானவர்கள்.
குனிந்த ரெஜிதாவின் உடை ஏராளமாக தாராளமாக அனைத்தையும் காட்டியது. ஒரே நொடிதான் என்றாலும் அமிர்தா முகத்தை திருப்பிக் கொண்டாள் . அங்கே இருந்த ஆண் வேலைக்கு காரர்கள் அவளின் மேனி அழகை ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவள்தான் கை இல்லாத குட்டி டாப்சும் மினி ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாளே . பார்ப்பதற்கு யாருக்கும் எந்த சிரமமும் அவள் வைக்கவில்லை. பாட்டிக்கு ஏதாவது தேவைப்படுமா என்று இவர்கள் பேசுவது கேட்காத வண்ணம் சற்று தள்ளி நின்றிருதாள் அமிர்தா. அதைப் போலவே மற்றவர்களும். ஆனால் அதற்கே இந்த கூத்து.
சரிப்பா அதான் சொல்லிடீங்களே? வேற என்ன?
சொல்லிக் கொண்டே எழுதிருந்தார் தாத்தா. அதை புரிந்து கொண்ட அமிர்தாவும் சட்டெனெ ஓடி வந்து பாட்டியையும் தூக்கி மெதுவாக அறைக்கு அழைத்துச் சென்றார்.
வா வா ஆனந்த் உன்னோட வீட்டை சுத்தி காட்டு. உன்னோட ரூம் எங்க இருக்கு? சொல்லி கொண்டேஅவனை இழுத்துக் கொண்டு போனாள் .
தாத்தாவும் பாட்டியும் தலைமையில் பேச வேணி இருந்தது.
தாத்தா உங்களுக்கு பாட்டி க்கும் நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன். நீங்க பேசிகிட்டு இருங்க. சொல்லி விட்டு வெளியில் வந்தவளை சொடக்கிட்டு அழைத்தால் புது முதலாளி .
எங்க ரெண்டுபேருக்கும் பைனாப்பிள் ஜூஸ். போ சீக்கிரம் அதட்டினாள். அத பார்த்த ஆனந்தும் அவளை ஒன்றும் சொல்ல வில்லை. பெரியவர்களுக்கு காப்பியை கொண்டு கொடுத்துவிட்டு இவர்களை தேடினால் காணவில்லை. அங்கிருந்த கமலா அக்காவிடம் கெடுக்க கொண்டு ஆனந்தின் அறைக்கு சென்றாள் . கதவை தட்டிவிட்டு காத்திருந்தாள். ரெஜிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவர்கள் இருவரும் அத்தனை நெருக்கமாக இருந்தனர். இவளுக்கு மூச்சு முட்டியது. ஜூஸை வைத்து விட்டு ஒட்டி வந்தவளுக்கு மூச்சு வாங்கியது. தாத்தாவின் குறளி கேட்டவள் அறைக்குள் செல்லாமல் காத்திருந்தாள்.
என்னங்க இது அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா?
எனக்கென்னடி தெரியும்?
எனக்கு என்னமோ பயமா இருக்குங்க. இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிடலாமா ?
ஏண்டி இவ ஒருத்தி ! அவன் நம்மகிட்டா பர்மிசன் கேட்கல. பண்ணிக்க போறேன்னு இன்பர்மேஷன் சொல்லறேன். “ என்னதாதான் இருந்தலும் அவன் நம்ம குழந்தை. அவன் அப்பன் நம்மகிட்டத்தானே பொறுப்பை குடுத்துருக்கான் . மகராசன் போய் சேர்ந்துட்டான். அவனுக்குத்தான் வாழ்க்கைல எந்த சுகமும் இல்லாம போச்சு. இவனாவது நிம்மதியா இருக்க வேணாமா?
அந்த ஓடுகாலினாலே இத்தனை நாள் கலயாணமே வேண்டான்னு இருந்தான். ஏதோ இப்போதான் ஒரு பொண்ணோட வந்துருக்கான். அவனுக்கு புடிச்சுருக்குன்னா பண்ணிக்கட்டுமே. அந்த வர்மாவும் நல்ல குடும்பம்தான். இந்த காலத்துல எல்ல பிள்ளங்களுமே இப்படித்தான் ட்ரெஸ் பண்ணுதுங்க. நீதான் இன்னும் பத்தாம் பசலியாவே இருக்க. எனக்கு அவன் கிட்ட பேச ஒன்னும் இல்லை . அதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல வாயை அழுத்தமாக மூடிக் கொண்டார்.
கணவனின் பேச்சுக்கு எப்போது எதிர் பேச்சு பேசாதவர் இப்போதும் வாயை மூடிக் கொண்டார்.
இதை கேட்ட அமிர்தாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனோ ஆனந்தின் அன்னையை பற்றி அவளுக்கு அப்படி நினைக்க முடியவில்லை. அதனால் தான் அவர்கள் வீட்டில் அவன் தந்தை பட்டம் மட்டுமே மாட்டி இருந்தது அதுவும் அவன் அறையில் மட்டும். அதிர்ச்சியில் அங்கு நின்று கொண்டிருந்தவளை ஒரு உயிராக கூட மதிக்காமல் சென்றனர் மாடியில் இருந்து வந்த ஜோடிப் புறாக்கள்.
பேரன் முதலில் நுழையவும் பின்னோடே அவளும் நுழைந்தாள்.
ஆனந்த் வீட்டை விட்டு வெளியேறும்போது பார்த்தது அவள் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைத்தான்.
செல்லும்போது அங்கு இருந்த வேலையாளிடம் சொல்லி அவளை வரவழைத்துவிட்டேப் போனான்.
பாதிக்கும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் வந்திருந்தது. அருணும் அவ்வபோது வந்து பார்த்து விட்டுப் போனான். பிசியோ தெரபியில் அந்த பெண் சொல்லித் தரும் பயிற்சிகளை அமிர்தா பாட்டியை செய்ய வைத்தாள் . ஆனந்திற்கும ரெஜிதாவிற்கும் நிச்சயிக்கப் பட்டது. இதற்க்கு நடுவில் இனியாவிற்கும் விக்ரமிற்கும் கூட காதல் மலர்ந்திருந்தது.
அடிப்பாவி கொஞ்ச நாள் உன் கூட பஸ்சுல வரலைன்னா அதுக்குள்ள வேற ஆள் புடிச்சுட்ட ? எப்படிடி இந்த காதல்?
ப்ச் அதுவா, அதெல்லாம் பெரிய கதை அலுத்துக் கொண்டாள் இனியா.சொல்லுடி! ஆர்வத்துடன் கதை கேட்க தயாரானாள் அமிர்தா.
இல்லடி உன்ன நேர்ல பார்த்தாதான் சொல்ல முடியும். உன்ன ரொம்ப மிஸ் பண்ணறேண்டி .
“நீயாவது பரவால்ல. உனக்கு ஆள் இருக்கு. என் நிலைமையை பாரு”
“சரி நாம எப்ப மீட் பண்ணலாம்?”
“சண்டே ? இருவரும் அந்த ஞாயிற்று கிழமை பார்ப்பது என்று முடிவானது.
வீட்டில் சொன்ன போது விக்ரம் தாயார் உடனே ஓகே சொல்லி விட்டார். அவர்தான் இனியா மருத்துவமனையில் தன் மகனை பார்த்துக் கொண்ட விதத்தை நேரில் கண்டு மனம் மகிழ்ந்தவறாயிற்றே.
அந்த வாரம் புதன் கிழமை இனியாவை பெண் பார்க்க வருவதாக இருந்தார்கள். என்னதான் விக்ரமிற்கும் அவன் அன்னைக்கும் தெரியும் என்றாலும் மற்ற நெருங்கிய சொந்தங்கள் பார்க்க வேண்டி இருந்தது. முக்கியமாக அவன் சித்தப்பா. அவர் ஏதாவது சொல்லி விட்டால். இந்த எண்ணம்தான் இனியா வீட்டில் அனைவருக்குமே எதாயோ பயமும் பதற்றமும் இருக்கத்தான் செய்தது. இனியாவிற்கு அடுத்து ஒரு தங்கையும் இருக்கிறாள். இவளும் இப்போதுதான் கல்லூரியில் நுழைந்திருக்கிறாள்.
இனியாவின் தந்தையும் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் சாதாரணம் தான். இவளுக்கு முடித்த பிறகே அடுத்து அவளுக்கு பார்க்க முடியும்.
போனில் பேசியபடியே அன்றைய ஞாயிறு அன்று இருவரும் பார்த்துக் கொண்டார்கள். இல்லை இல்லை இனியாவும் ஆனந்தும் மோதிக் கொண்டார்கள்……….…
