உருத்திரா ❤️ 14

 

நிலா வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குள், அறைக்குள் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது.

“ஐயோ! என்ன சத்தம் இது?” பார்வதி பதறியபடி அறைக்குள் செல்ல முயன்றார்.

அபிராமி அவரைத் தடுத்தார்.

“பார்வதி, கொஞ்சம் பொறுமையா இரு பத்ரன் பார்த்துப்பான். விழிக்கு இப்போ கையை அசைக்க முடியாத வருத்தம் இருக்கும். கொஞ்ச நேரம் அவளைச் சமாதானப்படுத்தட்டும் அப்புறம் நாம போகலாம்”

ரூம் உள்ளே டேபிளில் இருந்த பொருட்களை தட்டிவிட்ட திகள் தன் கை கட்டைப் பார்த்து அழத் தொடங்கினாள்.

பொறுக்குமா பத்ரனுக்கு அவளை தனக்குள் பொதித்துக்கொண்டான்.

“என்னை விடுங்க மாமா! எவ்வளவு ஆசையோட காத்திருந்தேன் எல்லாம் போச்சு. கை வலிக்குது, முத்திரை பிடிக்க முடியாது என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

“அழாத குட்டச்சி! அடுத்த வருஷம் கலந்துக்கலாம். உன் கை சரியானதும் இதைவிடப் பெரிய அகாடமியில உன்னைச் சேர்த்து விடுறேன். அங்க நடக்கிற போட்டிகள்ல எல்லாம் கலந்துக்கலாம்”

அவன் சமாதானங்கள் எதுவும் காதில் ஏறவில்லை அவளுக்கு,

“நான் ஜாக்கிரதையாதான் இருந்தேன் மாமா! வேணும்னே அந்தப் போர்டை என் மேல தள்ளி விட்டிருக்காங்க”

அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் பத்ரனின் கண்கள் கூர்மையடைந்தன “சரி யாருன்னு நான் பார்த்துக்கிறேன். நீ இப்போ அமைதியா படு”

ம்ம்ம் என்று அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள். பத்ரன் கைகளோ அவள் முதுகை மெதுவாக வருடிக்கொடுத்தது.

சில நிமிடங்கள் இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் இல்லாத மௌனம்…

அவளுடைய அழுகை மெல்ல அடங்கியதும், அவன் அவளுடைய தலையை வருடியபடியே “இரண்டு வாரமா என் கூட பேசல குட்டச்சி” என்று கேட்டான்.

“அதை நான் கேட்கணும் மாமா! ஒரு போன் இல்லை, ஒரு மெசேஜ் இல்லை நான் இருக்கேனா, செத்தேனானு கவலை இல்லை. இப்போ மட்டும் வந்து கட்டிப்பிடிச்சுட்டு நிக்கிறீங்க!” கோபத்தில் அவனுடைய மார்பில் முகத்தைத் தேய்த்தவள், சட்டென்று நெஞ்சில் கடித்துவைத்தாள்.

அதை சுகமாய் ஏற்ற பத்ரன் “நான் திரும்பக் கடிச்சா தாங்குவியா?”

“டபுள் மீனிங்க்ல பேசாதீங்க! என்னை கெட்ட பொண்ணா மாத்தாதிங்க, 

இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கோபம் இருக்கும் மாமா? நான் தினமும் போனைப் பார்த்துட்டே இருந்தேன். நீங்க ஒரு மெசேஜ்கூட அனுப்பலொ”

“நீ எனக்குக் கால் பண்ணியிருக்கலாமே விழி!”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் முகத்தைச் சுளித்தாள்.

“உன்னைவிட எனக்கு ஈகோ பெருசு இல்லை விழி, இப்போ கூட நான் தான் உன்னைத் தேடி வந்திருக்கேன்”

“இனிமேல் கொஞ்சம் பார்த்துப் பேசணும் விழி. உனக்கு எங்க மேல கோபம் இருக்கலாம். ருத்ரா பண்ற காரியங்களுக்கு என் வீட்டுல யாரும் சப்போர்ட் இல்ல முக்கியமா நான்!

அப்படியிருந்தும் நிலாவை கல்யாணம் பண்ணிவைக்க நினைக்குறதுக்கு காரணம் இருக்கு, ஒருவேளை நிலாவால் ருத்ராவை குணப்படுத்த முடிஞ்சா, என் அண்ணன் எனக்கு திரும்ப கிடைச்சிடுவான் விழி.

நீங்க இப்போ பார்க்குற, வெறுக்குற ருத்ரா உண்மை இல்ல! அவன் வேறமாதிரி எல்லாருக்கும் பிடிச்சவனா இருந்தான்” என தனிவாக அவளுக்கு விளக்கினான் பத்ரன்.

“அப்போ நான் வாய் திறக்கக்கூடாதா? கோணூசி வச்சுத் தைச்சிடவா?” என்று சிடுசிடுத்தவளிடம்,

“அந்த வாய் பேச்சு என்கிட்ட மட்டும் இருக்கணும்”

விழியுடைய முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவன், “உனக்குப் பிடிக்காத விஷயங்களையும், உன் கோபத்தையும், பிடிவாதத்தையும் என்கிட்ட சொல்லு நான் கேட்கிறேன். ஆனா பொது இடத்துல எல்லாரையும் காயப்படுத்துற மாதிரி பேசாதே புரியுதா?”

ம்ம்ம்…

அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட பத்ரன் “ரெஸ்ட் எடு விழி! ஈவ்னிங் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்க, நான் கிளம்புறேன்” என்றதும், முகம் சுருங்கிப்போனாள் பெண்ணவள்.

“என்கூட நம்ம வீட்டுக்கு வந்திடுறியா? கல்யாண வேலைகளைப் பெரியவங்க பார்த்துப்பாங்க. நான் உன்னைக் கவனிச்சுக்கிறேன்.

அவன் கண்கள் காட்டும் காதலில் மயங்கிப்போனாள் திகள்விழி.ஆனாலும் உள்ளே குறுகுறுப்பு.

“மாமா… நான் ஏதாவது தப்பு பண்ணா? உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது காரியம் செஞ்சா?  என்னை வெறுத்து ஒதுக்கிட மாட்டீங்களே?”

“காதல்னு சொல்லி என்னை நெருங்கி ஆசைக்காட்டிட்டு, கோபம் வந்ததும் என்னைத் துரத்திட மாட்டீங்களே?”

அவள் குரலில் அப்பட்டமான தவிப்பை பத்ரன் உணரவில்லை ஏதோ விளையாட்டுக்கு கேட்கிறாள் என்று நினைத்தவன் “அதெப்படி உன்னை விரட்டிவிட முடியும் குட்டச்சி?

நீ என் குட்டச்சி! என் பொண்டாட்டி! உன் மேல கோபம் வந்தா திட்டுவேன், சண்டை போடுவேன், அடிப்பேன். அடிச்சாலும் கூடவே வச்சு கொஞ்சுவேனே தவிர விட்டு போகமாட்டேன்”

“சரி மாமா உங்களை நம்புறேன்!” என்றவள் தன் முகத்தில் உரசிப் போகும் அவன் செயினை இழுத்து, “இது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது… ‘பத்ரா’என்று எழுதியிருந்த டாலரை வருடியவள் “அழகா இருக்கு!” என்றாள்.

தன் செயினைக் கழற்றி திகள் கழுத்தில் மாட்டிய பத்ரன் “இது என்னைவிட உனக்கு ரொம்ப அழகா இருக்கும். என்னோட லக்கி செயின் விழி! பல வருஷமா என்கூடவே இருந்தது. இப்போ உனக்கு லக்கியா இருக்கட்டும்” என்றான்.

“நான் கிளம்புறேன் விழி மீட்டிங் இருக்கு” என்று மனமே இல்லாமல் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.

பத்ரன் நினைவில் பொழுதை கழித்தாள் விழி.

இங்கு வீட்டுக்கு கோவமாக வந்த நிலா, ருத்ராவை தேடிட, அவனோ ஹாயாக பெட்ரூமில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தான்.

“யூ ராஸ்கல்!” என்று கத்தியபடி வந்தவள், அவன் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு கண்களை மூடித் திரும்பினாள்.

“நாதாரிப் பயலே! எப்பவும் என்னைப் பாரு, என் அழகைப் பாருன்னு திறந்து போட்டுத்தான் உட்கார்ந்திருப்பியா? ஒழுங்கா டிரஸ் போடுடா, நான் சண்டை போடணும்” என்று கத்தினாள்.

பின்னே எப்போதும் சட்டையில்லாமல் சுற்றுவான். இன்று பேன்ட் முதற்கொண்டு கழற்றிவிட்டு, துண்டோடு அமர்ந்திருந்தால் அவளும் என்ன செய்வாள்?

“பாருடா அதுக்குள்ள என்னை தேடி வந்துட்ட மஃபின்! உன் அப்பனுக்கு வேலை போனதும் தான் வருவேன்னு நினைச்சேன்”

அவனுடைய நக்கல் பேச்சில் அவளுக்குச் சுரீரெனக் கோபம் ஏறியது.

“வேண்டாம் ருத்ரா! திரும்பத் திரும்ப அவங்களை காயப்படுத்துறதா நினைச்சு என்னைக் காயப்படுத்துற! அப்பா பாவம் அவரை விட்டுடு. கொஞ்ச நேரம் அவங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சது என் தப்பு. எனக்குத் தண்டனை கொடு, அவங்களை விட்டுடு ப்ளீஸ்”

அவனைக் கொன்றுபோடும் அளவுக்குக் கோபம் இருந்தாலும், காரியம் ஆக வேண்டும் என்பதற்காக கெஞ்சிக்கொண்டு நின்றாள்.

“உன் சாரி எனக்குத் திருப்தியா இல்லை ஆரலி. எனக்குப் பிடிச்ச மாதிரி சாரி கேளு, மன்னிக்கிறதைப் பத்தி கன்சிடர் பண்றேன்” என்றவன் அவள் முகத்தில் இருந்த மறுப்பைக் கண்டு,

“கமான் மஃபின்! உன் அப்பாவுக்கு டைம் கம்மியா இருக்கு” என கடிகாரத்தை காட்டினான்.

‘எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு நாள் உனக்கு இருக்கு!’ என்ற புகைச்சலோடு அவன் மடியில் அமர்ந்தவள், “சாரி! இனி உன்னைவிட்டு போக நினைக்க மாட்டேன். நீ பாத்ரூம் போனா கூட வாசல்லையே நிக்குறேன் போதுமா?” என்றாள்.

அவளை முறைத்த ருத்ரனின் பார்வையில் ஜெர்க் ஆன நிலா மெதுவாக அவன் இதழ்களைத் தன் இதழ்களால் தீண்டிட, மென்முத்தத்தை வன்முத்தமாக மாற்றினான் அந்த மாயவன்.

ஏற்கெனவே அவளை பிச்சுத் தின்னும் அரக்கன் அவன். பச்சைப்புல் நாறுங்காரிகை மணம் அவனைப் பித்தம் கொள்ள வைத்தது. 

முத்தத்தினூடே தன் லேப்டாப்பை மூடிவைத்தவன், அவளைத் தூக்கி வாகாக தன் இடுப்பில் அமர்த்திக்கொண்டவன் கைகளோ நிலவுப் பெண்ணவளின் தேகத்தில் விளையாட ஆரம்பித்தன.

அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களைக் கடினப்பட்டு விடுவித்துக்கொண்டவள், “சோ பிஸினஸ்மேன் புத்தியை எல்லா இடத்திலும் காட்டுறியா? இப்போ நீ பண்றதுக்குப் பேரு என்ன தெரியுமா ருத்ரா? 

அசிங்கம் பிடிச்சவனே! என் குடும்பத்தைப் பணயமா வச்சு உன்னோட படுக்கைக்கு என்னைக் கூப்பிடுற!”

அவளுடைய ஆவேசத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவன்போல அமைதியாகத் தன் போனிலிருந்து சில மெசேஜ்களை அனுப்பியவன்,

“உன் அப்பனை விட சொல்லியாச்சு. அப்புறம் உன் லூசுத் தங்கச்சி… அதிகமா வாய்பேசுற அவளைப் பயமுறுத்த ஏற்பாடு பண்ணேன். அதுவா கையைக் கொண்டுபோய் போர்டு அடியில கொடுத்தா நான் பொறுப்பாக முடியாது, ஆரலி”

“கேவலம் அவங்களைப் பணயம் வச்சு உன்னோட உறவாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கேட்டா நீ கொடுக்க மாட்டியா? 

என் கண்ணைப் பார்த்து, தீர்க்கமா ‘முடியாது’னு ஒரு வார்த்தை சொல்லு. உன் குடும்பத்தை உன்னை விட்டுடுவேன். நான் செத்தாலும் நீ திரும்பி வர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா உண்மையைச் சொல்லிட்டு கிளம்பிப் போகலாம்”

அவள் எதிர்பார்த்த வாய்ப்பை அவனே கையில் தருகிறான். ‘ஒரு வார்த்தை, நீ வேண்டாம்னு சொல்லிட்டுக் கிளம்பு!’ என்று அவளுடைய மூளை கத்திட, அவள் மனமோ ‘ருத்ராவை நீ விரும்பவில்லையா?’ எனக் கேள்வி கேட்டது.

அவன் காதலை எப்படி மறுக்க முடியும்?

அந்த நொடி தடுமாறிய அவள் மனதைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டான் ஏகதச வில்லாளன்.

அவளை வளைத்து மீண்டும் இதழ்களில் கவிதை படிக்க, சண்டை போட வந்தோம் என்பதை மறந்து நிலாவின் கைகள் அவன் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.

முத்தமிட்டபடியே முன்னேற ஆரம்பித்தான் ருத்ரா! யோசிக்க நேரம் கொடுத்தால் சுதாரித்துவிடுவாளே அந்த ராட்சசி! 

ஆழிப்பேரலையாக அவனுள் மோகம் முகிழ்ந்தெழந்தது. நிலா அணிந்திருந்த சுடிதாரின் ஜிப் பகுதியைப் பின்னாலிருந்து கழற்றிட, தோள் விலகும் மேலாடையை உணர்ந்த பெண்ணவளின் கைகளோ அதை இறுகப் பற்றின.

அதில் சிறுகோபம் முளைக்க, ஆடவனோ அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான். வெற்றிகரமாக அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்தவன்

பெண்ணின் வெற்றுத் தேகத்தைத் தன் கைகளால் உரசிட, இருவருக்கும் இடையே எழுந்த தணலை வியர்வை கொண்டு அணைக்கப் பார்த்தனர். அணையும் சுடரா அது? அணைத்திடத் தூண்டும் காட்டுத்தீ அல்லவா!

அவளைத் தூக்கிக்கொண்டு மெத்தையில் விழுந்த ருத்ரா, இத்தனை வருடங்களாக அவள் மீது சேர்த்து வைத்த காதலைக் காட்ட ஆரம்பித்தான். அவளை ரசித்து விழுங்கிடும் அவனுடைய பார்வையைக் கண்டு நிலாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

கைகளால் தன் தேகத்தை மறைக்க முயன்றவளின் செயலில் கோபம் கொண்டவன், பெண்ணவளின் நெஞ்சின் நடுப்பகுதியில் வலிக்கும் படி கடித்து வைத்தவன் தன் காதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்திட, துடித்துப்போனாள் நிலாஞ்சி.

“ருத்ரா மெதுவா வலிக்குது” என்று அவள் முகம் சுளித்தாலும் விட்டான் இல்லை.

“நீ ஏன் மறைக்குற? எல்லாம் எனக்குனு இருக்கும்போது மறைக்குறது தப்பு மஃபின்” என்று மேலும் முன்னேற ஆரம்பித்தவனை தடுக்கவில்லை நிலா.

குடைக்குள் மழையாக அவன் நிகழ்த்தும் அதிசயங்களைக் கண்டு அவள் பெண்மை மலர்ந்தது. நிகழும் கணத்தின் அதிர்வை தாங்காமல் துடித்த பெண்ணவளுக்கு, ஆரம்பம் மட்டுமே நடப்பது தெரியவில்லை.

“படுத்துறடா… என்னால தாங்க முடியல…” என அவன் இதழ்களில் தன் சுகவேதனையைக் காட்டினாள் நிலா.

அது இன்னமும் அவனை கிளர்ந்தெழச் செய்ததை தாமதமாக உணர்ந்து தன்னை நொந்துகொண்டாள்.

முற்றும் முழுதாய் அவளோடு மறித்து எழுந்தான் மெத்தையில், ஒருமுறை போதும்! திகட்டிவிடும் என விலக்கிவைக்க அவள் என்ன அமிர்தமா!

அவனைக் காதலால் கொல்லும் ஆலகால விஷம்!

அவளை எத்தனை தடவை பருகினாலும் இறப்பைத் தொடாத ஆலகாலனாய் மாற எண்ணம் கொண்டான் போல ருத்ரா!

மீண்டும் தொடங்கிவிட்டான் அடைமழைக் காதலை! பகல் முடிந்து இரவே வந்துவிட்டது. அவன் காதலிடமிருந்து மட்டுமல்ல, அவன் மோகத்திடமிருந்தும் அவளுக்கு விடுதலை இல்லை என்பதை நேரில் காட்டினான்.

சுகமாய் தன் கழுத்தில் ஊறும் அவன் மீசை முடிகளைப் பற்றியிழுத்தவள், “போதும் அரக்கா! விட்டா செத்துருவேன் போல பசிக்குது, எந்திரிச்சுத் தொலை!” என அவனை தள்ளினாள்.

அதில் சிரிப்பு வர, “ஓகே! ஓகே!” எனப் பின்வாங்கிக்கொண்டான். பல வருடங்கள் கடந்து அவன் முகம் நிர்மலமாக இருந்தது. அவனை ஒரு பார்வை பார்த்தவள் எழுந்து நிற்க முயன்றாள், கால்கள் தள்ளாடிட அவன் மீதே விழுந்து வைத்தாள்.

“விடுனு சொல்லிட்டு நீயே டெம்ப்ட் பண்ணா எப்படி ஆரலி?” அவன் குரலில் கிறக்கம் கொட்டிக்கிடந்தது! அவளை சுவைத்த கிறக்கம் அது, எச்ச சொச்சமாய் இதழ்கள் சப்புக்கொட்டி மீண்டும் அவளை தேகம் தேடியது.

அவன் நெஞ்சில் அடித்த நிலா “ஆரலி சொல்லாத, மஃபின் சொல்லு!” என்றாள்.

“நீ எப்பவும் என் ஆரலிதான் பொண்ணே!”

“இல்லை நான் எப்பவும் நிலாஞ்சிதான் ருத்ரா! கண்ணு முன்னாடி இருக்குற என்னை ஏத்துக்க மாட்டேங்கிற, எப்பவோ செத்த ஒருத்தியை நினைச்சுக்கிட்டா என் கூட பெட்ல ஒன்னா இருந்த…”

இவ்வளவு நேரம் இருந்த சுகம் மறைந்துபோய் அவள் நெஞ்சில் வேதனை சூழ்ந்தது. ஒரு நொடி கூட ஆரலியை மறந்து தொலைய மாட்டானா? என்ற ஆற்றாமையில் பொங்கினாள் நிலா.

“நீ ஆரலியா இல்லாத பட்சத்தில் என் படுக்கையில மட்டும் இல்ல, பக்கத்துல நிற்கக்கூட உனக்கு உரிமை இல்லை”

“அப்போ நிலாஞ்சி உனக்கு வேண்டாமா ருத்ரா? என் உணர்வுகளைத் தெரிஞ்சே கொல்றியே! இந்த வேதனை தாங்க முடியல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ காட்டுன காதல் எனக்கு இல்லையா?”

பதில் தெரிந்துகொண்டே அவனிடம் கேட்பது முட்டாள்தனமல்லவா! ஆனாலும், ஒரு தடவை அவன் வாயால் ‘உனக்காக’ எனச் சொல்லிவிட மாட்டானா! என்ற தவிப்பு அவள் விழிகளில் கொட்டிக்கிடந்தது.

“இப்போ இல்ல, எப்பவுமே ஆரலி ஒருத்திக்கு மட்டும் தான் என் வாழ்க்கையில் இடம். நீ என்னோட ஆரலி. நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் சோ, நீ பேசுன பேச்சுக்கு உனக்கு தண்டனை கிடையாது” என்றவனை உயிரை வெறுத்துப் பார்த்தாள் நிலா!

அவன் மேலிருந்து எழுந்தாள். அவனுக்காக இனி ஒரு துளி கண்ணீரோ, இரக்கமோ, நேசமோ காட்டினாலும் அவள் மனம் அவளை மன்னிக்காது. ‘இவன் எனக்கு வேண்டாம்’ எனத் தெளிவாக மனதைத் திருத்திக்கொண்டவள், பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

என்ன முயன்றும் அழுகை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வாயை மூடி தரையில் அமர்ந்து அழுது கரைந்தாள் நிலா. பின் தன்னைச் சமன் செய்துகொண்டவள் குளித்து வெளியே வர, அமைதியாகப் படுத்திருந்தான் ருத்ரா.

அவனை உயிரற்ற பார்வை பார்த்துவிட்டு வெளியே போனாள். பசிகூட மறந்துபோனது, இவ்வளவு நேரம் அவனோடு சல்லாபித்த அறை இப்போது மூச்சு முட்ட தோட்டத்தில் போய் அமர்ந்துகொண்டாள்.

நடுநிசி என்பதால் வானத்து நிலவும், நட்சத்திரங்களும் அவள் தனிமைக்கு ஆறுதலாக இருந்தது. லேசான தென்றல் காற்றில் மனம் சமாதானம் அடையத்தொடங்க, அதைக் கெடுக்கவென வந்தான் ருத்ரா. 

அவன் கையிலிருந்த தட்டில் சாண்ட்விச் இருந்தது கூடவே ஜூஸும் எடுத்துவந்திருந்தான்.

அவளுடைய கோபமும் சரி, அமைதியும் சரி, அவனைப் பாதிக்கவில்லை என்பதே நிலாஞ்சியை மேலும் மன உளைச்சலுக்குத் தள்ளியது. அதில் ஆத்திரம் வந்தாலும் பதில் பேச மனமற்று விருட்டென எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

பகலிலிருந்து மேற்கொண்ட கூடலும், பசியும் வதைக்க நிலா கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது, கீழே விழப்போனவளைத் தாங்கிப்பிடித்தன ருத்ராவின் கைகள்.

அந்த நிலையிலும் அவன் கைகளிலிருந்து விலகிட நினைத்தாள்.

நினைக்க மட்டுமே முடிந்தது… அழுத்தமாக அவளை பிடித்துத் தூக்கி தன் மடியில் அமர்த்தியவன், ஜூஸை அவள் வாயருகே நீட்டினான்.

தன் முகத்தைத் திருப்பிய நிலா, அமைதியாக அவனை புறக்கணித்தாள்.

“இரண்டாவது தடவை வேணுமானு கேட்க மாட்டேன்!” என்றவன் உறுமலில்,

“நான் செத்தாலும் குடிக்க மாட்டேன்! உன் தேவை முடிஞ்சதுல கிளம்பு! என்னை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்” என பதில் காரமாக வந்தது.

அவளை அழுத்தமாக பார்த்தவனோ, நிலாவின் தாடையைப் பிடித்து ஜூஸை வலுக்கட்டாயமாக வாயில் திணித்தான்.

“விடு! விடுடா” என அவன் நெஞ்சில் அடித்து தள்ளியதில் புரை ஏறியது தான் மிச்சம்.

“சைக்கோ நாயே செத்துத் தொலை!” என்று ருத்ராவின் கன்னத்தில் சப்பு சப்பென அடித்தவள், 

பின் மூச்சு வாங்கிட, தன் பங்கு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது அந்த ருத்ரா பைத்தியம்.

“நல்லாக் கேட்டுக்கோ ருத்ரா! நீ தண்டனை மயிரு கொடுத்தாலும் எதுவும் மாறாது. இந்த ஜென்மத்துல ஆரலி உனக்கு இல்லைனு ஆகிடுச்சு, நான்… இந்த நிலாஞ்சிதான் உண்மை. என்னை ஏத்துக்காம உனக்கு எதிரா மாத்திட்டு இருக்க” அவள் பேச்சில் கூர்மையாக அவளை பார்த்தான் ருத்ரா.

“சோ…”

“சோ ஆரலி உனக்கு இல்லடா ஈனாவானா! உன்னால முடிஞ்சதைப் புடுங்கு” என்று திமிராகச் சொல்லிவிட்டு, அவன் கையிலிருந்த உணவை இவள் வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள்.

பெருசா ஏதாவது ரியாக்ட் செய்வான் என நினைத்தால் “சரி வா போகலாம்!” என்று அவளைத் தூக்கிக்கொண்டான்.

“எங்க போக? ஒழுங்கா தூங்கவிடு இல்ல, தலைகாணியை மூஞ்சில அமுக்கிக் கொன்னுடுவேன். உடம்பு வலிக்குது எருமை” என்று சலித்தவளை கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தவன், அவளை மெத்தையில் கிடத்தி முன்னேற ஆரம்பிக்க நிலா வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டாள்.

சோமசுந்தரம் அப்பாவியாக வீட்டில் நின்றிருந்தார்.

‘எதுக்கு வரச் சொன்னாங்க? ஏற்கெனவே செத்துப்போன கணக்கை நோண்டிப் பார்த்துட்டு, ஒன்னும் பிரச்சனை இல்லை போய்ட்டு வானு அனுப்புறாங்க, கடவுளே!’ என நொந்துகொண்டு தன் மனைவி, மகளைப் பார்த்தார்.

மாலைதான் மகளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்குக் கூட்டிவந்தார்கள்.

பத்ரன் குடும்பம் மருத்துவமனையிலேயே கிளம்பிவிட்டது. வீட்டுக்கு வந்து உஷ் என மூச்சுவிடவில்லை பாட்டியும் மருமகளும் கூடையோடு வந்துவிட்டார்கள்.

‘மகளுக்குச் செல்லம் கொடுக்குறதுல நாம பரவாயில்ல போலயே!’ என்று நினைத்தார் சோமசுந்தரம்.

அபிராமியும் சாம்பவியும் திகள்விழியை கொஞ்சுவது மட்டுமல்லாமல், குட்டிச் சுவராக்கிவிடுவார்கள் போல! மூவரும் பேச ஆரம்பித்தால் சுற்றம் மறந்துபோகும். அவர்களின் பிணைப்பைக் கண்டு பெண்ணைப் பெற்றவர் உள்ளம் சந்தோஷம் கொண்டது.

“நீ மோசம் அபி! எனக்கு ஆப்பிள் பழம்கூட வாங்கிட்டு வரல”

“உனக்கு ஆப்பிள் பிடிக்காதே தங்கம். இங்க பாரு” என வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவந்த உணவுகளை அடுக்கினார் சாம்பவி.

“சூப்பர் பவி! எனக்கு நீயே ஊட்டி விடு” என்று சொன்னவள், சிக்கன் பீஸை எடுத்து வாயில் அடைக்க ஆரம்பித்தாள்.

சரியாக அவளுடைய மணவாளன் வீடியோ கால் செய்தான்.

“மாமா!” என்று வாய் நிறைய உணவோடு போனை எடுத்தவளையும், அவளுக்கு ஊட்டிவிடும் அம்மாவையும், ‘இன்னும் சாப்பிடு’ எனத் தட்டில் அடுக்கிய பாட்டியையும் கண்டு தலையில் அடித்துக்கொண்டான்.

“நைட் நேரம் விருந்து சாப்பிடுற நேரமா? நீங்க வீட்டுக்குக் கிளம்பலையா? அம்மா அவ ஏற்கெனவே சேட்டை பண்ணுவா, இதுல நீங்களும் கூடச் சேர்ந்து வயசை மறந்து சேட்டை பண்றீங்க!” எனக் கடிந்துகொண்டான் பத்ரன்.

திகள் விழியின் அம்மா, அப்பா இருவருமே அவர்கள் குடும்பமாகப் பேசுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்.

“அவங்களை ஏன் திட்டுறீங்க? எனக்கு பிடிச்ச சாப்பாட்டை ஆசையா கொண்டுவந்திருக்காங்க, நீங்க வேஸ்ட் இந்த செயினை குடுத்துட்டுப் போறிங்க” என உதட்டை சுளித்தாள் பெண்ணவள்.

“அவன் கிடக்குறான் நீ சாப்பிடு விழி. நாளைக்கு அத்தை என் கையால மட்டன் சுக்கா சமைச்சு எடுத்துட்டு வரேன்” என்றார் சாம்பவி.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!