மலர்-31

மலர்-31

இந்த உலகத்தில் எதுவுமே நினைவு இல்லாதவள்  ஆனந்தனை மட்டும் நினைவில் வைத்திருக்கிறாள்.  யாருடனோ சென்றவள் எதற்கு ரவிச்சந்திரன் என்று கணவனின் பெயரை இந்த குழந்தைக்கு போட வேண்டும்? அதுவும் அவர்கள் இருவருக்கும் தொடர்பே முற்றிலும் அறிந்திருந்த போது ? கேள்விகள் பல உண்டு. அதற்கு விடை சொல்ல போவது யார்? 

இவளுக்கு எப்படியாவது ஆனந்தனை பார்த்து விட வேண்டும் என்று தோன்றிக்  கொண்டே இருந்தது. அவன் எத்தனை தான் தவறு செய்திருந்தாலும் இனி அவனை அப்படியே விட்டு விடக்  கூடாது. அவனை நல்ல விதமாக மாற்றியே ஆக வேண்டும். அவனுக்கென்று ஒரு குடும்பம். அவன் சிறு வயதில் மன நிலை பாதிக்கபட்டதை விட அதிகமாக செந்தில் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனை எதை பற்றியும் சிந்திக்க விடக் கூடாது. அவன் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். அதற்கு முரளியும் கயலும் உதவி செய்தனர். அவன் பள்ளியில் சேர்ந்திருந்தாலும் பெரிய பரீட்சைக்கு இன்னும் நாட்கள் தூரமில்லை. அதனால் அவன் இப்போது பெரியதாக இல்லாவிட்டாலும் அனைத்திலும் பாஸ் மார்க்காவது எடுக்க வேண்டும். 

 கயலும் அவனுக்குத் தேவையான முக்கியமான கேள்விகளை கொடுத்து படிக்க சொன்னாள் . முரளி இரவில் அவனை பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தான். நாட்கள் நகர நகர அன்னை, தன்னுடைய பிரச்சனைகள் இதெல்லாம் மறக்க கூட நேரமில்லை செந்திலுக்கு. எப்போது கேட்டாலும் அவன் மண்டையில் கால்குலஸும் இன்டெகிரஷனும் சுத்தி வளைத்துக்  கொண்டிருந்தது. இரவில் சைன் டீடா மூலையில் சைன் பண்ணிக் கொண்டிருந்தது. பகலில் ஆய்லரின் பாய்லரில் இவன் இருந்தான். 

 ஆனந்தை கண்டுவிட மாட்டோமா என்று இவள் தவித்திருக்க மனைவியை பார்க்காமல் அவன் நிலை வேறு விதமாக இருந்தது. பைத்தியம் பிடித்தவன் போல வேலை செய்து கொண்டிருந்தான். அதன் பலன் சிறந்த இளம் தொழில் அதிபருக்கான விருதுகள்.. ஆனாலும் அவன் வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமோ அதை அடையவில்லையே ? தொழில்முறை இதழ்களில் அவன் படம் பேட்டி எல்லாம் வரும். தன்னவளிடமிருந்து ஒரே ஒரு முறை அழைக்க மாட்டாளா என்றே மனம் ஏங்கியது.

 எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டின் வயதானவர்களிடமிருந்து ஓடி ஒளிவது? அமிர்தாவை பற்றி பேசக் கூடாது என்று சொல்லி விட்டான். அவர்கள் அப்படியே விட்டு விடுவார்களா? 

 

என்னதான் தமக்கை வெளியில் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவள் முகத்தில் இருக்கும் இயல்பான புன்னகை மறந்து போய் இருந்ததை  முரளி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். உடல் மெலிந்திருந்தாள் . உணவில் நாட்டம் இல்லை . இதை அன்னையும் மகனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். மாமாவிடம் சென்று பேசுவது என்று  முரளி முடிவு செய்திருந்தான். 

ஒரு நாள் மனசு சரி இல்லை என்று மருத்துவமனையில் இருந்து நேரே கடற்கரைக்கு சென்றிருந்தாள் . இனியாவுக்கும் சொல்லவில்லை. இப்போதெல்லாம் மனதின் தேவையை விட உடலின் தேவை அதிகமாகவே இருந்தது. ஏனோ அவனின் சின்ன சின்ன தீண்டல்களும், உதட்டின் ஊர்வலமும் அவளை நோகடித்துக் கொண்டிருந்தன. இதை பற்றி யாரிடம் என்ன சொல்ல முடியும்? இருபத்து நான்கு வயதில் 

இதெல்லாம் தவறு என்று சொல்ல முடியுமா? அதுவும் திருமணமான பெண்! கணவனை நினைத்து? மனதில் ஏதோதோ  எண்ணங்கள்,ஆசைகள் தறிகெட்டு ஓடின. மனதும் உடலும் அவனுக்காகவே ஏங்கி கொண்டிருந்தது. மனதை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து தொலைக்காட்சியை போட்டால் அதிலும் எல்லாம் காதல் ம(மா)யம் . அல்லது சீரியல் என்ற பெயரில் மற்றவர்களின் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். 

இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்றுதான் அவள் கடற்கரைக்கு வந்துவிட்டாள் . ஓடி ஓடி வரும் கடல் அலைகள் மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தும். அமைதியாக உட்கார்ந்து அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளை ஒட்டி வந்து அமர்ந்தது ஒரு உருவம். 

பயத்தில் இவள் திரும்பி பார்த்தாள் . அது ஆனந்தன்தான் . அவனின் நினைவுகளிலே இருப்பதால் அப்படித் தோன்றியதோ ? மீண்டும் நன்றாக உத்து பார்த்தாள் . 

“நான்தாண்டி பொண்டாட்டி! ” அவனுடைய வசீகரமான சிரிப்புடன் அவள் நெற்றியை லேசாக முட்டினான். அவன்  எப்படி இத்தனை பெரிய இடத்தில்  சரியாக அவளை  அடைந்தான்? இந்த நொடி அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள் .

அப்போது அருகில் இருந்த தள்ளு வண்டியில் இருந்து ரேடியோ பாடல் இவர்களுக்காகவே ஒலித்தது போல இருந்தது.

அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா  என்ற பாடல் வரிகள் காதில் விழுந்தது

அதிலும்,

 

உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

என்ற வரிகள் அவனுக்காகவே எழுதப் பட்டதா ?

“ஒற்றை சிறகில் ஊனப் பறவை எத்தனை தூரம் பறப்பேன்” என்ற வரிகள் வந்த போது அமிர்தா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் . அமிர்தாவின் கண்ணீரா அல்லது பாடலின் வரிகளா ? ஏதோ ஒன்று அவன் மனதை நொடியில் மாற்றியது. அப்போதே அவன் முடிவு செய்து விட்டான். இவளுக்காக அன்னையை ஏற்பது என்றுஅந்த நொடியே முடிவெடுத்துவிட்டான்

 அன்னையை மட்டும் அல்ல எந்த உறவையும் அவன் ஏற்கத் தயாராகி விட்டான். இதுதான் காதல். தான் தான் அவனின் உயிர். வாழ்க்கையின் ஜீவன் என்பதை தன்னுடைய அன்பினால், காதலினால், பொறுமையினால் உணர்த்தி விட்டாள். இந்த நொடி அவன் அவளை கையில் ஏந்தி வீட்டுக்குச் சென்று விடுவான். அப்படித் தான் நானும் நினைத்தேன் .

 நாம் நினைப்பது நடக்குமா? என்னைத் தொடர்ந்து வாருங்கள். அவர்களுடன் நாமும் செல்வோம். 

 முதலில் அவன் அவளைச் சமாதான படுத்த முயலவில்லை. அவள் தானாகவே சமாதானமாகட்டும் என்று விட்டு விட்டான். அவன் மனமும் தாபங்களால் தவித்துக் கொண்டிருந்தது. 

“காலில் விழு டீ” என்று சொல்லி அவளின் சூடான கண்ணீரில் இன்பம் கொண்டவன் இப்போது நொடியும் அவள் கண்ணீரை தாங்க முடியாதவனாகிப் போனான்.

 அவளைத் தோளோடு அணைத்து தலையில் முத்தமிட்டு எல்லாம் செய்தான். “அழாத வரு! ப்ளீஸ் டீ ! நான் தான் இருக்கேனே! நான் பார்த்துக்கறேன்.” 

ஆனந்தனுக்குக் கூட அத்தனை மென்மையாகப் பேசத் தெரியுமா? குரல் குழைந்தது. உடன் வருகிறேன். அவனின் கைகளும் உடல் மொழியும் கூடச் சேர்ந்து கச்சேரி வாசித்தார்கள். 

 அவனின் எந்த வார்த்தையும் அவள் காதில் விழுந்ததா என்றுத் தெரியவில்லை. இதேப் போலத் தான் அன்று ரெஜிதா சம்பவம் நடந்த போதும் அவனின் முகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று தனிமையில் வந்து ஒரே ஒரு சிறு அணைப்புக் கொடுத்திருக்கலாம். ஏனோ அப்போது கண்டுக்  கொள்ளாதவன் இப்போது அவளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறான். அதுவும் கடற்கரையில் அனைவரும் பார்க்கும் இடத்தில்..

அவர்கள் இருவரும் தனிமையில் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு கூடல் நடந்திருக்கும். இருவரின் மனமும் உடலும் துணைக்காக ஏங்கி கொண்டிருக்கிறது.

“வா வரு! இருட்ட ஆரம்பிச்சுடுச்சு”

இருவரும் மெதுவாக கை கோர்த்து நடந்தனர். அவன் பழைய நினைவில் அவளை பார்த்தான். இன்று அவள் சுடி போட்டிருந்தாள். தனக்கு தானே மனதார மண்டையில் தட்டிக் கொண்டான். 

” வரு! எங்கையாவது சாப்பிட்டு போகாலாண்டி. ரொம்ப பசிக்குது ” குழந்தையை போல சொல்லும் கணவனை பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது. 

இருவரும் அங்கே வழியில் இருந்த சரவணபவனுக்கு சென்றார்கள். 

கண்ணாடியில் தலையை சரி படுத்திக்  கொண்டாள் . தண்ணீர் அடித்து முகத்தைக் கழுவிக் கொண்டாள் . அவன் கை குட்டையை முகம் துடைக்க நீட்டுவதற்குள்  துப்பட்டாவினால் முகத்தை  துடைத்துக் கொண்டிருந்தாள் (அட பக்கி)அவ்வளவு எளிதில் விட்டு விடுவானா நம் நாயகன்? கோணலாக இருந்த பொட்டை சரிபடுத்திவிட்டான்..

உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர். 

“அப்புறம் என்ன சார்? லைப் எப்படி போகுது? தாத்தா பாட்டி  எப்படி இருக்காங்க?”

“ஏன் வரு நீ ஏன் அவங்களையும் வேண்டான்னு ஒதுக்கி வச்சுட்ட ?”

“என்னால அவங்கள என்னிக்குமே ஒதுக்க முடியாது சார். அதே சமயம் நீ ஏன் இங்க வரலன்னு? அவங்க கேட்கற கேள்விக்கு பதில் இருந்தும் சொல்ல முடியாது. என்னோட பதில் அவங்கள ரொம்ப காயப்படுத்திடும்”

“நீ எப்பப்பாத்தாலும் எங்க அம்மாவை பத்தியே பேசரியே? அவங்கள தாத்தா பாட்டி எப்படி ஏத்துப்பாங்கன்னு நினைக்கற ?”

“அவங்க ஒத்துக்கறது ஒரு பெரிய விஷயமே  இல்ல சார். நீங்க  ஓகே சொன்னீங்கன்னா அவங்களும் ஓகே சொல்லிடுவாங்க. அந்த மன பக்குவம் அவங்களுக்கு இருக்கு. அதுக் கூட உங்கம்மா சாதாரணமா இருந்தா நடக்குன்னு சொல்ல முடியாது. இப்ப மன நிலைமை சரியா இல்லாததால இருக்கலாம். எதுவா இருந்தாலும் அவங்க தான் சொல்லணும்.”

அவன் அவளை மறுத்து எதுவும் பேசப் போவதில்லை. அவன்தான் மனதில் முடிவெடுத்துவிட்டானே? அவளை அவளுக்காக ஏற்றுக் கொண்டவன் தான். இனி பிடிக்கவில்லை என்றாலும் அந்த பெண்மணியையும் சேர்த்தேதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன ஆனாலும் சரி அவனால் என்றுமே அமிர்தாவை விட முடியாது. அவளுக்காக மனம் ஏங்கியது. உடலுக்கு தேவை பெண் தானே அதற்கு அமிர்தா வேண்டியதில்லையே. ஆனால் குல வாரிசுகளுக்கு அவள் தான் தேவை.  

 அதோடு அவனின் உடலும் அத்தனை கேடு கெட்டது  அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பதற்கு. அவனின் மனம், உடல், கற்பு அவளுக்கானது. அதை அவளுக்கு என்றே கொடுப்பதற்காக பொத்தி  பொத்தி  வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவளிடம் தனது மனதை காட்ட வேண்டும். ஆனால் இங்கு இல்லை. அவளிடம் தனிமையில் அவள் வீட்டில். 

அவளே தொடர்ந்தாள் . 

“பொண்டாட்டி தொல்லை இல்லாம சாரு  நிறைய அவார்ட்ஸ் வாங்கறீங்க போல ?”

“ம்! நீ கால் பண்ணுவன்னு நினச்சேன். நீ ஒரு தடவ கூட கூப்பிடவே இல்ல. அட்லீஸ்ட் வாழ்த்துக்களாவது சொல்லி இருக்கலாம். சரி போ எந்த பொண்ணும்  திரும்பி கூட பாக்க மாட்டான்னு  மனச தேத்திக்கிட்டேன்.”

“என்ன உங்கள ஒருத்தியும் திரும்பி பாக்க மாட்டாளா ?” புருவங்களை ஆச்சர்யமாக தூக்கினாள், “சரி! எனக்கு பின்னாடி சில பொண்ணுங்க உட்கார்ந்திருக்காங்களா ?”

“ம்ம் “

“அவங்க எல்லாரும் அங்க உட்கார்ந்ததே உங்கள பாக்கத்தான்”

“என்ன பாக்கவா ? “

“சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க”

“என்னடி நடிக்கிறேன் ? “

“நீங்க காரை  நிறுத்தினதுலேர்ந்து அவங்க உங்களைபாலோ பண்ணது தெரியாது?”

“தெரியாதுடி.”

“ம்! நான் நம்பிட்டேன்”

கைகளை விரித்து தோளை  குலுக்கினான். ‘மயக்காதடா!” மனதில் உரிமையாய் கணவனை திட்டினாள்.

அந்த பெண்கள் பேசியது இவளின் காதில் தெளிவாக விழுந்தது. அல்லது இவளுக்கு காதில் விழத்தான் இவளுக்கு கேட்கும்படி பேசினார்களா?

“ஏய்! செம்ம ஆளு டி “

 “என்னடி இப்டி இருக்கான்” என்றாள்  இன்னொருத்தி.

“நல்ல வேளை  இவன் சினிமால நடிக்கலை . இல்லனா பல பொண்ணுங்க  இவனுக்காகவே உசுர விட்டுருப்பாங்க” என்றாள் மற்றொருவள் .

“என்ன கலருடி இது? வெள்ளையும் இல்லாம கருப்பும் இல்லாம?” இது முதலாமவள். 

“என்ன ஹாண்ட்ஸாம்  பார்ட்டி “

“ஏய் ஜொள்ள துடடி . அப்பட்டமா தெரியுது”

“பார்த்தாலே பாரின் எம் பி ஏன்னு தெரியுதுடி”

“இவன பார்த்தாலே மானேஜ்மெண்ட் ஆளுன்னு தெரியுது. கண்டிப்பா பிஸ்னஸ்மேன் தான்”

“சே சே ஏதாவது ஐ டி கம்பெனில டாப்  போஸ்ட்ல இருப்பான்.”

“என்ன மான்லியா இருக்கான் இல்ல”

“வாய்ஸ் கூட சூப்பரா இருக்குடி” இவர்களின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்போது தான் அவனை கவனிக்க ஆரம்பித்தாள். அந்த பெண்கள் சொன்னது உண்மைதான். போனில் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் அத்தனை கம்பீரமாக இருந்தது. மனைவியின் பார்வையை கவனித்தவன் வேகமாக பேசி போனை வைத்தான்.

“ஏய் அவன் ஆர்ம்ஸ் பாரேன். புல்  ஹாண்ட்  ஷர்டுல கூட எப்படி தெரியுது!” இவர்கள் பேச பேச இவளுக்குத்தான் முகம் சிவந்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை போலும்.

“கண்டிப்பா சிக்ஸ் பேக்ஸ் தான்”

“இல்ல எயிட் இருக்கும்”

“நீங்க சிக்ஸ் பாக்கா இல்ல எயிட்டா ?”

“புருஷன பார்த்து பொண்டாட்டிக்கு எவ்ளோ பெரிய டவுட்டு?” தலையில் அடித்துக் கொண்டான்.

“பதில் சொல்லுங்க. சீக்கிரம்.”

“எட்டு” கண்டிப்பாக முகத்தில் கோபம் வழிந்தது.

“ஏய் அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா ?”

“இருக்காதுடி “. 

“ஆள பார்த்தா அப்டி தெரியலையே” 

‘அது எப்படி கண்டு பிடிப்பார்கள்?’ இவள்தான் பல்பு வாங்கினாள் .

“கட்டினா  இந்த மாதிரி ஒருத்தன கட்டணும்”

“ஏண்டி?”

“அவன் கைக்குள்ளயே காலம் பூரா இருக்கனும். இந்த மாதிரி ஒரு ஆள்  ஹக்  பண்ணா  எப்படி இருக்கும்? “

அவர்களின் பேச்சு இவளுக்கு பிபி யை ஏற்றியது.

அதுவரை பொறுத்திருந்தவள்,

முள் மலரும் ..

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!