மலர்-35

 

மலர் -35

ஒரு நாள் ரவியின் கடைக்கே அவளை அழைத்து சென்றான்.

“என்ன ரவி எப்படி இருக்க? எமனோட வீட்டு கதவை தட்டிட்டு வந்துட்ட போல?”

“சரி இருக்கட்டும். இவதான் என்னோட புது வ*******. உனக்கு கூட நல்லா  தெரியுமே ? உன்னோட பொண்டாட்டி தான். மேடத்துக்கு புது வீடு கட்டி குடுக்கப் போறேன். நீ துணிக் கடை எரிஞ்சு டைல்ஸ் கடை ஆரம்பிச்சதும் நல்லதுக்குத்தான். உன்கிட்டத்தான் டைல்ஸ் வாங்கனுன்னு ஒரே அடம். “வாடி வேற பெரிய கடைக்கு போக்கலான்னா கேட்கவே இல்ல. மேடம் என்ன கேட்கறாங்களோ பார்த்து எடுத்துக் குடு. விலையெல்லாம்  பத்தி பிரச்சனை இல்ல. என் தங்கத்துக்கு நான் எவ்ளோ வேணுன்னாலும் செய்வேன். என்னடி தங்கம்.”அவனின் அசிங்கமான பேச்சும் கணவனின் வெறுப்பான பார்வையும் தாங்க முடியாதவளாக உதட்டை கடித்து கண்ணீர் சிந்தினாள் .

அவளை ஒட்டி நின்ற ரங்கன், “ஏய்! அதக் கடிக்காதடி, அது என்னோடது” என்றான். காதலனாக கணவன் மாறி இந்த வார்த்தைகளை சொல்லும்போது வெட்கத்தினால் முகம் சிவந்தவள் இன்று அதே கணவனுக்காக,கொண்டவன் எதிரிலேயே கண்டவனும்  பேசும் பேச்சை கேட்டு இன்னும் எதற்காக உயிரோடு  இருக்க வேண்டும் என்று மனதில் கதறினாள். பாவம் அவளின் கண்ணீர் கணவனையும் கரைக்கவில்லை. அந்த காமுகனையும் அழிக்கவில்லை.

டைல்ஸ் காட்டினான். “இதை பாருங்க மேடம்! அது” என்று வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட்டான்.

அனைத்தும் முடிந்த பின், “சரி ரவி! வேணுன்னா அப்புறம் ஆள அனுப்பறேன். “

அவன் எங்கே இவளுக்கு வீடு கட்டி தருவான்? அவளின் அழகு இருக்கும் வரை அல்லது அலுக்கும் வரை அனுபவித்து விட்டு வேறு எங்காவது அவளை நல்ல விலைக்கு விற்று விடுவான்.

  ஒரு நாள் ரங்கனும்  இவளும் காரில் செல்லும்போதும் லாரி ஒன்று மோதி ரங்கன் மட்டும் சம்பவ இடத்திலேயே கொடூரமாக இறந்து கிடந்தான். மோதிய வேகத்தில் இவளுக்கு காற்று பை வெளி வந்து காப்பாற்றியது. அவனுடையது வேலை செய்யவில்லை. 

 மருத்துவர்கள் இவள் நான்கு மாத கர்ப்பம் என்றார்கள். இருந்த துக்கத்தில் நாட்களை பார்க்காமல் விட்டிருந்தாள். ரங்கன் இறந்தது நல்லதா கெட்டதா ? இவளுக்கு தெரியவில்லை. ரங்கனின் மனைவி துளியும் அழவில்லை. இவளை அங்கு வரக் கூடாது என்று  ரங்கனின் சொந்தங்கள் அடித்து துரத்தினார்கள். 

அப்போது ரங்கனின் மனைவிதான் அனைவரையும் தடுத்தாள் .

“எதுக்கு எல்லாரும் இவளை அடிக்கறீங்க? இதோ படுத்துகிடக்கானே இது ஊர் பொறுக்கின்னு தெரியாது? குச்சிக்கு புடவை கட்டி இருந்த கூட மேயறவன்தானே. புருஷன் புள்ளையோட இருந்தவளை தூக்கிட்டு வந்து வச்சிருந்தானே? இவளை தொடலியா? உன்ன? உன்ன? அங்கிருந்த பெண்களை ஒவ்வொருவராக காட்டினாள். “என் புருஷன் ஒருத்திய பார்த்தான்னா கண்ணாலேயே கற்பழிச்சுடுவான்.” இவளை? ஏற இறங்கப் பார்த்தவள் “எத்தனை மாசம்?”

“நாலு”

“இங்க பாரு! நீயி இனிமே இங்க தான் இருக்கனும். வீட்டு  வேலைக்காரியா . இவன் உன் மேல விழுந்ததுக்காக உன்ன எனக்கு சமமா நடத்த முடியாது. வேணுன்னா இரு. இல்ல வேற வழிய பார்த்துகிட்டு போ.”

பிறகு அவள் அங்கேயே இருந்து கொண்டு பாத்திரங்களை கழுவும் வேலை செய்து கொண்டிருந்தாள்.

நாட்கள் ஓடின. ரங்கனின் மனைவிதான் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்  .இவளுக்கு குழந்தை பிறந்தது. அங்கே பக்கத்து வார்டில் இருந்த தனது தங்கைக்காக உதவிக்கு வந்திருந்தவர் தான் மீனா. யாரும் இல்லாமல் தனியாக  தவிக்கும் இவளுக்கு அப்போது அவர்தான்  முழுக்க முழுக்க உதவி செய்தார். அதற்கு பிறகும் தன்  வீட்டிலேயே அழைத்து வந்து பத்து நாட்கள் வைத்துக் கொண்டார். ரங்கன் இறந்த பிறகு ஒரு நாள் கணவனிடம் எப்படியாவது எல்லா  உண்மைகளையும் சொல்லி விட வேண்டும் பார்க்க வந்த போது  அவர்கள் அவமானம் தாங்காமல் அங்கிருந்து வேறு இடம் சென்றிருந்தனர். கடையையும் கதிரேசன் விற்றிருந்தார் . அதற்குப் பிறகு இவர்களும் அவர்களும் பார்த்துக் கொண்டதே இல்லை .

முதலில் எல்லாம் ஆனந்துக்காக உயிரை பிடித்திருந்தவள் பிறகு வந்த நாட்களில் செந்திலுக்காக உயிரை வைத்திருந்தாள். எறும்புகளிடம் பேசும் வழக்கம் வைத்திருந்தவளால் எப்படி குழந்தையை அழிக்க முடியும்? “இதுக்கு அப்பா யாரு? இது என்னோட குழந்தை. என்னோட உயிரை கிள்ளி இதுக்கு கடவுள் குடுத்துருக்காரு. என்னோட பொறுப்புல  குடுத்துருக்காரு  . என்ன ஆனாலும் இதை அழிக்க மாட்டேன்.”

  குழந்தை வளர ஆரம்பித்தான். ரங்கனின் மனைவி நல்லவராகவே இருந்தார். செந்திலை அவரகள் நடத்தும் பள்ளியிலேயே சேர்த்துக் கொண்டார்.

   குழந்தைக்கு ஐந்து வயதானபோது ஒரு நாள் ரங்கனின் மச்சினன் ரங்காவின் போனில் என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான்.’ எதுக்கு இதனை வருசமா தூக்கி போடாம வச்சுருக்காங்க? சரி என்ன இருக்குன்னு பாப்போம். ‘

இவளின் கெட்ட நேரம் அது வருடங்கள்  ஆகியும் நன்றாகவே வேலை செய்தது. அதில் ரங்கன் இவளை வன்புணர்வு செய்தது எல்லாம் வீடியோ எடுத்திருந்தான் . அதை பார்த்தவனுக்கு போதை ஏறியது. அதை  தன் நண்பர்களிடமும் காட்டினான். பிறகு மீண்டும் இவள் வாழ்க்கையில் நரகத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள். இந்த பிரச்சினையினால் கோதை வீட்டை விட்டு விரட்டப்பட்டாள் . அப்போதும் முதலாளி அம்மா,

“உன்ன எவ்ளோ நம்பினேன்? இப்டி பண்ணிட்டியே? எங்க வீட்டுல ஒரு ஆம்பளைய கூட விட மாட்டியா ?  நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்” பளீரென கன்னத்தில் அறைந்தாள் .

“போய் தொலை .  என்னிக்கும் என் கண்ணு முன்னாடி வந்துடாத. உன்னோட குழந்தையை படிக்க வைக்கறேன்னு வாக்கு குடுத்துருக்கேன்.  அவன் ஸ்க்கூல்  படிக்கறவரைக்கும் பீஸ் இல்லாம படிக்கட்டும். என்கிட்டேர்ந்து வேற எதுவும் எதிர் பாக்காத”

ரங்கனின் மச்சினனும் அவன் கூட்டாளிகளும் கையில் குழந்தையை வைத்து மிரட்டி மிரட்டியே இவளை வன்புணர்வு செய்து கொண்டிருந்தனர். அதுவும் மிக மிகக் கொடூரமாக. அனைவருமே குடி, கஞ்சா  என்று வருபவர்கள். அவர்களின் இடத்திற்கு இவளை எடுத்து சென்று விட்டால் அன்று அவளுக்கு உயிருடன் நரகம்தான். மீனாதான் இவளுக்கு உடல் எங்கும் மருந்திடுவார்.

“ஏண்டி! இப்டி நரக  வேதனையை அனுபவிக்க எதுக்குடுடி உசுரோட இருக்கனும்”

” இல்ல அக்கா! எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா இதை யாரு பார்த்துப்பா?  எப்படியாவது இவனைக் கொண்டு போய் எங்க வீட்டுகாரர் கிட்ட ஒப்படைக்கணும் . யார் யாரோ பண்ண தப்புக்கு இந்த புள்ள அநாதையாகிட கூடாது. ரங்காவுக்கு  இவன் பிறந்தா என்ன?அவன் என்ன? ஒவ்வொரு முறை எனக்குள்ள  வரும்போதும் நான் என்னோட வீட்டுக்காரரை தான் நினச்சேன். அப்போ இவன் யாரு புள்ள? எனக்கு சோறு போடுங்கன்னு நின்னு என் புள்ள பிச்சை எடுத்துடக் கூடாது. எப்படியாவது அவருகிட்டையும் என்னோட ஆனந்துகிட்டயும் உண்மைய சொல்லணும்.” 

“அப்போதும் எங்களை நம்பினியா மா?” மீனாம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தன் அர்த்தத்துடன் அன்னையைப் பார்த்தான். அப்போதும் மகனுக்கு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு ஈ என்று பல்லைக் காட்டினார். 

அருகில் அமர்ந்திருந்த அன்னையை தோளில் சாய்த்து இடுப்போடுக் கட்டிக் கொண்டான்.

“ஏண்டி! நீ சொல்லறதை எல்லாம் அவங்க நம்புவாங்கன்னு நினைச்சியா?”

“இல்லக்கா! உங்களுக்கு தெரியாது. என்னோட வீட்டுகாரர் ரொம்ப நல்லவரு. அவரு என்ன எவ்ளோ விரும்பினார் தெரியுமா? நான் அவருக்கு துரோகம் பண்ணிட்டேன்னு தான் நினச்சுருப்பாரு. இல்லங்கறத அவருக்கு நான் சொல்லணும். இந்த உலகத்துல யாரு நம்பினாலும் நம்பலைனாலும் அவரும் என்னோட புள்ளையும்  என்ன நிச்சயமா நம்புவாங்க. அவங்க கிட்ட சொல்லி எப்படியாவது இந்த புள்ளைக்கு ஒரு வழி பண்ணனும். அதுக்கு அப்புறம் ஒரு நிமிஷம் கூட நான் இந்த உலகத்துல உயிரோட இருக்க மாட்டேன்” இப்படியே அவள் சொல்லிச் சொல்லி வருடங்கள்தான் கழிந்தன. 

கடவுளும் இவளின் அழுகைக்கு  செவி சாய்த்தார். இவளின் அழகு மங்க ஆரம்பித்தது. அவர்களின் ரத்தமும் சுண்ட ஆரம்பித்தது.

கயவர்களும் அவ்வபோது வேலை முடிந்தவுடன் இவளுக்கு கையில் வந்த காசை விட்டெறிந்து விட்டு போவார்கள். அதில் கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருந்தாள் . அதைக் கொண்டு ஒரு இட்லி கடை ஆரம்பித்தாள். வந்த வருமானத்தில் அன்னையும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். தான் ஒரு பாவப்பட்ட ஜென்மம். தன்னுடைய தொடுகை கூட மகனை ஆட்கொண்டு விடுமோ என்று அவள் பயந்தாள். மற்றவர்கள் தொட்ட இந்த சாக்கடையை மகன் தொட்டு விடக்  கூடாது என்றுதான் அவர் என்றுமே செந்திலை தொட விட்டதில்லை.  

ஒரு நாள் கதிரேசன் காரில் செல்வதை பார்த்து பின் தொடர்ந்து வந்துதான் இந்த வீட்டை கண்டு பிடித்தாள்  கோதை. அப்போதில் இருந்து ரவியை பார்க்க பழியாக வாயிலில் கிடப்பாள். யாரும் அவளை கண்டு கொண்டதே இல்லை. வாட்ச் மேன் கட்டையால் அடித்து துரத்தினான். அது கணவனின் கட்டளை என்பது பாவம் அவளுக்குத் தெரியாது. 

பல வித துன்பங்களை அனுபவித்தவளுக்கு இது போதும் என்று கடவுள் நினைத்தார். இவளுக்கு என்றுமே துன்பங்களில் இருந்து விடுதலை கிடையாது. அவள் ஒரு ஆயுள் கைதி. ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லாமல் இருந்தால்? இவள் ரோட்டை கடந்து போகும்போது வேகமாக வந்த வேன்  மோதி தலையில் அடிபட்டு இப்படி ஆகி விட்டாள் . அப்போதுதான் செந்தில் பன்னிரண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தான்.

பாவம் செந்திலு. இவளை வச்சுக்கிட்டு படாத பாடுபட்டான்.. எந்த புள்ளைக்கும் அந்த மாதிரி ஒரு நிலைமை வரக் கூடாது. அவன் வயசுல இருந்த புள்ளைங்க சந்தோசமா சிரிச்சுக்கிட்டு நின்னப்போ ஒரு காய்ச்சலுக்கு கூட அம்மாக்காரி தொட்டு பார்த்ததில்லை. இவ பைத்தியமாகி ஓடி ஓடி போய்டுவா. நானும் அவனும் தான் தேடி தேடி புடிச்சுகிட்டு வருவோம்.

நான் தொடர்ந்து பத்து  நாள் வேலைன்னு போய்  இருந்தேன். அப்ப, அம்மா புள்ள ரெண்டு பேரையும் காணும். நான் தேடாத இடமில்லை. 

“இங்க பாருப்பா! உங்கம்மா மாதிரி ஒரு உத்தமிய எங்கையும் பாக்க முடியாது. அவ பண்ண ஒரே தப்பு அழகா புறந்ததுதான். அவளுக்கு நினைவு இருந்த வரைக்கும் உன்னையும் உங்கப்பனையும்தான் நினைச்சுகிட்டு இருந்தா. ஏதோ கடவுளா பார்த்து உன்கிட்ட இவளையும் இவ புள்ளயையும் அனுப்பி இருக்கான். இனிமே இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு”

 

 இந்த உலகத்தில் தனக்கே பெரிய துன்பம், கடவுள் தன்னை  மட்டும் இப்படி செய்து விட்டார் என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்திருந்தவன் தான் ஆனந்த் . தான்  தன்னுடைய தந்தை, தாத்தா பாட்டி இவர்களின் துன்பம், மற்றவர்களின் கேலி, கிண்டல் இதிலேயே கூனி குறுகி போனவன். இத்தனை வருடங்களாக அன்னை விட்டு விட்டு போய் விட்டாள் என்ற சுய பரிதாபத்திலேயே உழன்றவனுக்கு செந்திலின் நிலை எத்தனை மோசமானது என்று புரிந்தது.  அவன் அன்னையின் ஸ்பரிசத்திற்காக எத்தனை ஏங்கி இருந்தால் தன்னை கட்டிக் கொண்டு தூங்குவான் என்பது அமிர்தாவுக்கு புரிந்தது. 

 அனைத்தையும் சொல்லி முடித்து கண்களை துடைத்துக் கொண்டவர் ,

“ஏதோ கெட்டதுல  நல்லதா உங்க அம்மாதான் என்ன இங்க அனுப்பி இருக்கா போல”

ஆனந்தும் அமிர்தாவும் அவருக்கு  கை  எடுத்து கும்பிட்டனர்.

மீனாவை பார்த்த செந்தில் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

“என்னடா ராசா? ஒரு தடவ வந்து என்ன பார்த்து விவரம் சொல்லி இருக்கலாமில்ல?”

செந்திலுக்கு அப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது.

“என்ன மன்னிச்சுடுங்க பாட்டி “

அன்று இரவு இவர்களுடன் இருந்த ஆனந்த் தூக்கம் இல்லாமல் தவித்தான். மனைவியின் மடியில் இருந்தால் தூக்கம் வருமோ?

சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி. செந்தில் அவளின் முதுகை கட்டிக் கொண்டும் கயல்  மார்பை கட்டிக் கொண்டும் உறங்கி கொண்டிருந்தார்கள்.

அமிர்தாவுக்கும் வயது ஒன்றும் பெரிய வயது இல்லை. இருந்தாலும் அவளின் மன முதிர்ச்சியினால்  இவர்களை குழந்தைகளாகாவே பார்த்தாள் . 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!