“விழி, ஐ அம் சாரி” என்று கொஞ்சம் தணிவான குரலில் சொன்னான் பத்ரன்.
அவனுடைய குரலில் தெரிந்த தயக்கமும், கண்களில் தெரிந்த குற்றவுணர்ச்சியும் திகள்விழியின் கோபத்தைத் துளியும் குறைக்கவில்லை. மாறாக, இத்தனை நாட்களாக அவளுக்குள் அடக்கி வைத்திருந்த வலிகள் எல்லாம் ஒரே நேரத்தில் பொங்கி எழுந்தன.
“அவ்வளவுதான் வந்ததே கோபம்! என்ன சாரி? எத்தனை தடவை உங்ககிட்ட சாரி கேட்டு வந்தேன்? நான் பண்ணது தப்புன்னு கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். யாரோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு என் மனசை உடைச்சு அனுப்புனிங்களே!”
அவன் பேசுவதற்காக வாய் திறந்த நொடி, அவனைப் பேச விடாமல் கையை உயர்த்தினாள் திகள்விழி.
“என்ன சமாதானம் பண்ணப்போறிங்களா?” என்று கேட்டவள் குரல் கோபத்தில் நடுங்கியது.
“ஒருவேளை உங்க மேல இருந்த காதல் தந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாம நான் செத்துப்போயிருந்தா… அப்போ இந்த சாரியை என் கல்லறை முன்னாடி வந்து கேட்டிருப்பிங்களா?”
கடைசி வார்த்தையில் அவளுடைய குரல் உடைந்துபோனது.
அவளுடைய கேள்வி பத்ரனின் நெஞ்சில் ஈட்டியாக இறங்கியது.
“விழி…”
“என்ன விழி?” கிட்டத்தட்டக் கத்தினாள் திகள்விழி.
அவன் பதில் பேசவில்லை. அவள் மனதில் இருக்கும் கோபத்தைக் காட்டிவிடட்டும் எனப் பொறுமையாக நின்றிருந்தான்.
“என்ன அமைதியா நிக்குறிங்க சார்? உங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆகிருக்குமோ, நாளைக்கு கல்யாணம் ஆகுமோன்னு இத்தனை நாள் பயந்து பயந்து நான் செத்துட்டு இருந்தேன்”
தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டவள், “இங்கதான் நீங்க இருக்கிங்க! நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் உங்களை வெளியே தூக்கி எறிய முடியல. என்னை நானே வெறுக்கிற அளவுக்கு உங்களை நினைச்சுத் தவிச்சிருக்கேன்!”
“அப்படி என்ன கோபம் என்மேல? நடிச்சேன், நடிச்சேன்னு விரட்டுனிங்களே! உங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்திட்டு வந்திருந்தா நான் சந்தோஷமா இங்க சுத்தியிருப்பேன். தனியா இருந்தா உங்க ஞாபகம் கொல்லுதுன்னு பயந்து ராத்திரி, பகலா வெளியே சுத்தியிருக்க மாட்டேன்”
“எங்க தனியா உட்கார்ந்தாலும் உங்க முகம்தான் ஞாபகத்துக்கு வரும். எங்கே போனாலும் உங்க குரல்தான் காதுல கேட்கும். என்னை நானே சமாளிக்க முடியாம தவிச்சிருக்கேன்”
“ஆனா நீங்க? ஒரு வார்த்தைல என்னைத் தூக்கி எறிஞ்சுட்டீங்க!”
அவளுடைய வலிநிறைந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பத்ரன் செய்த தவறுகளை அவன் முன்னால் நிறுத்தின.
அவளை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவளைத் தேடி வந்திருந்தவன், இப்போது அவளுடைய காதலை மீண்டும் பெறுவது எத்தனை கடினம் என்பதைப் புரிந்துகொண்டான்.
மன்னிப்பு கேட்க அவன் தயாராக இருக்கிறான். ஆனால், அந்த மன்னிப்பால்கூட அவளுடைய காயங்கள் ஆறாது எனத் தெரிந்து அவனுக்குள் குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமானது.
அவளுடைய வலிநிறைந்த வார்த்தைகள் திகள்விழியின் உள்ளக் காயத்தை வெளிப்படையாகச் சொன்னது. கண்களில் யாசிக்கும் பார்வையோடு நின்றான் பத்ரன்.
“என் பேரனை கல்யாணம் பண்ணிக்கோன்னு அபி சொல்லும்போது உங்க மேல எனக்கு எந்த ஆர்வமும் வரல. ஏமாத்த வந்தவங்களை மட்டும் தானே ஏமாத்துனேன்? நானா உங்களைக் காதலிக்க சொல்லி வற்புறுத்துனேன்?”
“நீங்கதானே மடியில போட்டு முத்தம் கொடுத்து ஏதேதோ பண்ணிங்க!” என்ற விழி குரல் இப்போது வலியில் சற்றே தாழ்ந்திருந்தது.
“நான் பாரின்ல படிக்கிற பொண்ணுதான். ஆண் நண்பர்கள் இருக்காங்க, பிரெண்டா அவங்க தொடுகை எனக்குப் பரிட்சயம். பட் காதலா என்னைத் தொட்டது நீங்க மட்டும்தான். இருந்தாலும் அக்காவுக்காக வந்திருக்கோம்னு ஒதுங்கிப் போனேன்”
“நீங்களா வலுக்கட்டாயமா என்னை உங்ககூட சேர்த்திங்க?”
“ருத்ரா மாமா அக்காவைத் தூக்கிட்டு போகும்போது, தெரிஞ்சே உங்களைக் காயப்படுத்தி என்னை விட்டு விலக்கி வைக்க நினைச்சேன்”
“மறுபடியும் மறுபடியும் நீங்களா வந்து என்னைக் காதலால சாகடிச்சிங்க!”
அவள் எவ்வளவு முயன்றும் அழுகை வந்துவிட, தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு கீழே அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவளுடைய வேதனையைப் பத்ரனால் ஏற்க முடியாமல், “விழி…” என அவளை நெருங்கியவனைத் தீயாக முறைத்தாள் திகள்விழி.
“நீங்க கேட்டும் நான் உண்மையை சொல்லலைன்னு உங்க கோபம் நியாயமானது. அதான் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டேன். எப்போ என்னைத் தூக்கி எறிஞ்சுட்டு வேற ஒருத்தியை உங்க மனைவியா கொண்டு வர நினைச்சிங்களோ, அப்பவே நம்ம காதல் செத்துப்போச்சு…”
“இல்ல, விழிமா…”
“ஆமாம். நான் உங்களை விரும்பல சார். கிளம்புங்க…” என முகத்தைத் திருப்பினாள்.
அவள் வெறுப்பைத் தாங்க முடியாத பத்ரன் ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டான்.
“விடு… விடு…” என்று அவன் மார்பில் கைகளை வைத்து விலக்க முயன்றாள்.
“விடுங்கன்னு சொல்றேன்ல!” என்றவளுடைய எதிர்ப்பையும் மீறி அவன் அணைப்பு இறுகியது.
“இல்ல! நீ என்னை அடிச்சாலும் சரி, திட்டினாலும் சரி… உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்!”
“எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கல!”
“பரவாயில்ல, நான் பக்கத்துல இருக்கேன்”
“உங்களை வெறுக்கிறேன்!”
“வெறுத்துக்கோடி! ஆனா என்னை விட்டுட்டுப் போயிடாத… இங்க பாரு விழி, கோபத்துல முட்டாள்தனமா பேசுனது உண்மை. அதுக்காக வேற ஆளை மாத்திட்டு போக நான் இடியட் இல்ல”
அவனை முறைத்த திகள், “சும்மா கதை விடாதிங்க! என்கிட்ட உங்க ஃபியான்ஸே பேசுனாங்களே…”
“அன்னைக்கு வந்த பொண்ணு பாட்டி ஏற்பாடு பண்ண செட்டப் டி செல்லம், மாமா பாவம் மன்னிச்சிடு!” என்றவனைத் தன்னைவிட்டு தள்ளிவிட்டாள் விழி.
“மாமாவா! உங்களுக்குத்தான் நான் மாமான்னு சொன்னா பிடிக்காதே! மூஞ்சிலேயே முழிக்காதன்னு சொல்லிட்டு என் மூஞ்சியை தேடி வந்திருக்கிங்க. நல்ல கதையா இருக்கு!”
“போதும் உங்களைக் காதலிச்சதும் போதும். நான் நொந்து போனதும் போதும். முதல்ல வெளியே போங்க இது ஷேரிங் ரூம். என் பிரெண்ட் ஹாலிடே போயிருக்கா!”
“நாளைக்கு ரிட்டர்ன் வந்திடுவா, நீங்க கிளம்புங்க!” என கண்களைத் துடைத்தபடி பெட்டில் படுத்துக்கொண்டாள் திகள்விழி.
பாவமாக அறை வாசலில் நின்று அவளை பார்த்த பத்ரனுக்கு, தன் தவறின் அளவும், திகள்விழியின் கோபத்தின் அளவும் புரிந்தது.
படுத்திருந்த விழிக்குத் தூக்கம் கண்களை எட்டவில்லை. அன்று விரட்டிவிட்டான் இன்று மீண்டும் காதல் என்கிறான்.
நான் என்ன விளையாட்டுப் பொம்மையா? என உள்ளம் கொதித்துக்கொண்டிருக்கிறதே! இதில் தூக்கம் எப்படி வரும்?
எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ பத்ரன். கதவை அடைத்துவிட்டு விளக்குகளை அணைத்தவன், விழி அருகே போய் அவளை அணைத்ததுபோல படுத்துக்கொண்டான்.
அது ஒற்றை ஆள் படுக்கும் பெட் அதில் இடித்துக்கொண்டு அவனும் படுக்க, கோபமாகப் பேசத் திரும்பியவளின் நெஞ்சில் தலை வைத்தவன், “டயர்டா இருக்கு குட்டச்சி! நாளைக்குச் சண்டை போடலாம். ஜெட் லேக் ஆக இருக்கு” என்றான்.
பேச்சு பேச்சாக இருந்தாலும் அவன் மீசை முடிகள் பெண்மையின் மென்மையை சோதித்தன. “ம்ச்…” என சலித்தவள், தன் பெட்சீட்டை அவனுக்கும் சேர்த்துப் போர்த்திவிட்டாள்.
சுகமாக அவளை இறுக அணைத்துக்கொண்டு, வெகுநாட்களாக ஆட்டம் காட்டிய தூக்கத்தைப் பிடித்துத் தூங்க ஆரம்பித்தான்.
அவன் மட்டும் எதுவுமே நடக்காததுபோல அவளை இறுக அணைத்துக்கொண்டு வசதியாகப் படுத்துக்கொண்டான்.
அவனுடைய முகத்தில் தெரிந்த களைப்பை கண்டு அவனை விலக்க மனமில்லை, பத்ரனீ அவளை எவ்வளவு காயப்படுத்தியிருந்தாலும், அவன் அருகில் இருக்கும்போது தன் மனமும் நிம்மதியா அல்லவா உணர்ந்து தொலைக்கிறது!
விழியின் கைகள் பத்ரன் தலையைக் கோதியபடி இருந்தன.
‘இந்த மானங்கெட்ட காதலை தூக்கிப்போடு. அப்போதான் நீ உருப்படுவ!’ என மனசாட்சி திட்டிவிட்டுப் போக, ‘அதைச் செய்ய முடியாம நான் தவிக்கிறது இவனுக்கு சுலபமா போயிடுது!’ என்ற பெருமூச்சோடு தூங்கிப்போனாள்.
காலை தூக்கத்திலிருந்து முதலில் கண்விழித்தாள் திகள்விழி. ஜன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் ஊடுருவிய சூரிய ஒளி அவளுடைய முகத்தில் விழுந்தது.
கண்களைத் திறந்தவள், சில நொடிகள் எங்கே இருக்கிறோம் என்பதை உணராமல் படுத்திருந்தாள்.
பத்ரனின் மார்பில் தலைவைத்துப் படுத்திருப்பதைக் கண்டு தன்னையே நொந்தவள், ‘திகள்விழி உனக்கு ரோஷமே இல்லையா? நேத்து என்னென்ன பேசின? இப்போ பாரு, எப்படி அவன் மேல சாஞ்சு படுத்திருக்க!’ எனத் தன்னையே திட்டியபடி வேகமாக அவனைவிட்டு எழுந்து கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பித்தாள்.
குளித்து தயாராகி வந்தவள் காபி போட்டுக்கொண்டிருக்க, தூக்கத்தில் எழுந்து வந்து அவளைப் பின்னிருந்து அணைத்தான் பத்ரன்.
“ம்ச்… விடுங்க…” என அவனைத் தள்ளிவிடப் பார்த்தாள்.
சிரித்தபடியே விழியின் காதில் முத்தமிட்டவன் கைகளோ அவள் போட்டிருந்த ஷர்ட் பனியனின் வழியாக தெரிந்த இடையில் விளையாடிக்கொண்டிருந்தன.
“என்னடி டிரஸ் ஒரு மார்க்கமா இருக்கு! சேலைல இழுத்துப் போர்த்திட்டு இருந்தப்பவும் டெம்ட் பண்ண, இப்போ அதைவிட டெம்ட் பண்ற குட்டச்சி!”
“என் டிரஸ்ஸிங் ஸ்டைல் இப்படித்தான் இருக்கும். நடிக்க வந்ததுனால காஸ்ட்யூமும் அதுக்கேத்தாப்புல போட்டேன்” என காஃபியைப் போட்டு அவன் கையில் திணித்தாள்.
“உங்களுக்கு பிடிக்கலைன்னா அது என் பிரச்சினை இல்லை. ஈவினிங் வரை டைம் இருக்கு. நான் காலேஜ் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள நீங்க கிளம்பியிருக்கணும்!” என்று கறாராகச் சொன்னவளை அமைதியாக பார்த்தான் பத்ரன்.
தன் பேக், கோர்ட் எடுத்து மாட்டியவள், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை நோக்கி நகர்ந்த அடுத்த நொடி, வேகமாகச் சென்று அவளை அணைத்துக்கொண்டான்.
“குட்டச்சி…”
“விடுங்க!”
“கோபத்துல என்ன வேணும்னாலும் பேசு. என்னை அடி, திட்டி, என்ன வேணுமோ பண்ணு. ஆனா உன்னை விட்டு போயிடுன்னு மட்டும் சொல்லாத!”
விழி அசையாமல் நிற்பதை கண்டு, அவளைத் தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளுடைய தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
“நீ என்னை மன்னிக்கிற வரைக்கும் நான் உன்கூடவே இருப்பேன். உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன், என்னை நீ நம்புற வரைக்கும் காத்திருப்பேன்”
“மாமா உனக்காக இரண்டு வருஷம் வெயிட் பண்ணத் தயாரா இருக்கேன்” என்றவன் பேச்சில் அவளுக்கு அழுகைதான் வந்தது.
இரண்டு வருடங்கள் அவளுக்காகக் காத்திருக்கத் தயாராக இருக்கிறானாம்.
நேற்று வரை அவனை மறக்க முடியாமல் தவித்த அவளுடைய மனம், இப்போது அவன் சொல்லும் வார்த்தைகளை நம்ப ஆசைபடுகிறது! மீண்டும் ஏமாற்றிவிட்டாள்?
பழைய நினைவு வந்ததும், இது எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வியும் தோன்ற, அவனைவிட்டு விலகினாள் திகள்விழி.
“உங்க காதல் வார்த்தைகளை கேட்டு நம்பிக்கை வரல. அடுத்து எப்போ மாறிப் பேசுவிங்களோன்னு பயமா இருக்கு.
இன்னைக்கு நீங்க எனக்காக இரண்டு வருஷம் காத்திருப்பேன்னு சொல்றிங்க. நானும் உங்களை நம்பி வருவேன், நாளைக்கு ஏதாவது ஒரு விஷயத்துக்காக மறுபடியும் மாறி பேச மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?”
“குட்டச்சி…” என பத்ரன் பேச முயன்றான். அவனைத் தடுத்த விழி,
“எனக்குத் தெரியும், நான் தப்பாகக்கூட நினைக்கலாம். நீங்க உண்மையாவே என்னை காதலிச்சுத் தேடி வந்திருக்கலாம். ஆனா என்னால சட்டுன்னு மனசை மாத்திக்க முடியலையே!”
“நான் பலவீனமா உணர்றேன் சார். உங்களைப் பார்த்தா கோபப்படணும்னு நினைக்கிற நானே உங்களை விட்டு விலகும்போது வலிக்குதுனு அழுகுறேன். நீங்க பக்கத்துல இருந்தா சந்தோஷமா இருக்கு. அதே நேரம், மறுபடியும் என்னை விட்டு போயிடுவிங்களோன்னு பயமா இருக்கு”
பத்ரன் அவளுடைய கண்ணீரைப் பார்த்தபடி நின்றான்.
அவள் வேண்டும் என்று ஆசையாய் ஓடிவந்த மனம், அவளை இப்படி உடைந்து நிற்க வைத்துவிட்டோமே என்று துடித்தது.
“விழிமா நான் அப்படியெல்லாம்…”
“ப்ளீஸ்! என்னை விட்டுட்டுப் போயிடுங்க சார்!” என்றவள் வார்த்தைகளில் பத்ரனின் முகம் இறுகியது.
போன்னு சொன்னா உடனே போயிட முடியுமா?
“பேசி முடிச்சுட்டியா? கிளாஸ்க்குப் போயிட்டு வா. வந்ததும் பேசலாம்!” என்று பழைய டோனுக்கு மாறியவனை முறைத்தாள் திகள்விழி.
“அப்புறம் ஜோன் உன்னோட நண்பன். அவன்கிட்ட ஸ்ட்ராங்கா சொல்லிடு. இனி ப்ரப்போஸ் பண்றேன்னு உன் முன்னாடி மண்டிபோட்டா, கால் இருக்காது. அதுவும் என் மாமா வெட்டி எடுப்பாருன்னு சொல்லு!” என அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட பத்ரன், “பாய்!” என்று டாட்டா காட்டினான்.
‘ஆரம்பிச்சுட்டான்! அதானே, இவனாவது திருந்துறதாவது!’ எனச் சலித்தபடி கல்லூரிக்குக் கிளம்பினாள்.
ருத்ரா வீட்டில் டென்ஷனாக தாத்தாவிடம் கத்திக்கொண்டிருந்தான்.
“பாட்டி இதே போல பண்ணிட்டு இருந்தா, மஃபினை கூட்டிட்டு என் வீட்டுக்குப் போயிடுவேன் தாத்தா!”
பாவம், அவனே சரியான ஆரலி பைத்தியம். கொள்ளுப்பேரனைப் பார்த்துக்கொள்கிறேன் என அவன் மனைவியை அவனுக்கே தராமல் கையோடு வைத்துக்கொண்டால் கடுப்பாகுமா ஆகாதா?
“நீ ஆபீஸ் போடா!” என்று துரத்திவிட்டாலும், போக மாட்டேன் என அவள் பின்னே சுற்றுபவனோடு பாட்டிக்குச் சண்டை.
உன் பொண்டாட்டியை என்னன்னு கேளு? என சிம்பாளிக்காக தாத்தாவை மிரட்டிக்கொண்டிருந்தான்.
“ஏகரா பெரியவங்ககிட்ட ஏன் கோபமா பேசுற? நீ ஆபீஸ் கிளம்பு” என்றவளை திரும்பி முறைக்க, வாயை மூடிக்கொண்டாள் நிலா.
“அவன் கிடக்குறான். இந்தா பாதாம் பால் குடி தங்கம்!” என்ற அபிராமியை முறைத்த ருத்ரா, “இருங்கடா, ஆபீஸ் போயிட்டு வந்து உங்களைப் பார்த்துக்குறேன்!” எனக் கோபமாகக் கிளம்பிப்போனான்.
தன் கிளாஸில் அமர்ந்திருந்த திகளின் நினைவு மொத்தமும் பத்ரன் மீதுதான். அவனை வெறுத்து ஒதுக்கி இங்கு வரவில்லையே!
காதலால் தன்னை ஆளும் உரிமையை அவனைத் தவிர யாருக்கும் அவள் தரப்போவதில்லை, இருந்தும் ஒரு தயக்கம். வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாள்.
மாலை வரை நேரத்தை ஓட்டியவள், முதல் ஆளாக கிளாஸ் முடிந்ததும் வெளியே வர, வாசலில் நின்ற பத்ரனைக் கண்டு வாயைப் பிளந்தாள்.
ரேம்ப் வாக் அழகனுக்குப் போட்டியாக ஆணழகன் கெட்டப்பில் காரில் சாய்ந்து நிற்பவனை, அவள் கண்கள் மட்டுமல்ல நிறைய பெண்களின் கண்களும் விழுங்கின. வயிறு வாய் எரிய வேகமாக அவனிடம் வந்தவளைத் தடுத்து நிறுத்தினாள் திகளின் தோழி ஒருத்தி. அவளும் தமிழ்ப் பெண்ணே!
“திகள் உன்னைத் தேடி அந்த ஹேண்ட்சம் வந்தாருடி. நான் தான் கூட்டிட்டு வந்தேன் உனக்கு இப்படி ஒரு அழகான மாமா இருக்குறதை ஏண்டி சொல்லாம விட்ட?”
“எதே!” என்று அவளை முறைத்தாள் திகள்விழி.
அவள் எங்கே விழியைப் பார்த்தாள்? கவனம் மொத்தமும் தங்களைப் பார்க்கும் பத்ரன் மீதுதான்!
“ஐயோ பார்க்குறானே! எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணிவை திகள்…”
அவ்வளவுதான் பொங்கிவிட்டாள் பத்ரனின் குட்டச்சி!
“ஏய் அது என்னோட புருஷன். அவரை ஏன் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கணும்?”
“என்னது ஹஸ்பண்டா? உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று அவள் நம்பாமல் திகளைப் பார்த்தாள்.
“இரண்டு மாசம் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு, நீ நம்பலையா? இப்போ காட்டுறேன்!” என வேகமாகப் பத்ரனை நெருங்கி, அவன் சட்டைக் காலரைப் பிடித்து இதழில் முத்தமிட தொடங்கினாள்.
‘வடை போச்சே!’ என அந்தப் பெண் மட்டுமல்ல, பத்ரனை ஆர்வமாகப் பார்த்த மற்ற பெண்களும் கலைந்து செல்ல, அம்மணி மட்டும் முத்தத்தை நிறுத்தவில்லை.
அவளுக்கோ, ‘மாமா எனக்கு மட்டும்தான்!’ என்ற பிடிவாதம். பொது இடத்தில் வைத்து என்ன செய்கிறோம் என உணராமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.
நம் ஊராக இருந்தாலாவது பத்ரன் அவளை அவசரமாக விலக்கியிருப்பான். இங்கு முத்தக் காட்சிகள் சகஜம். அதுபோக, மேடம் கோபம் குறைந்து கொடுக்கும் முத்தமல்லவா! சுகமாக அனுபவித்தான் கள்ளன்!
முத்தம் கொடுக்க உயரம் தடையாக இருக்க, பெண்ணவளின் இடையைப் பிடித்து தன் உயரத்திற்கு தூக்கிவிட, அவளோ தோதாக அவன் கழுத்தை சுற்றி கைகளால் அணைத்து தொங்கியபடி முத்தத்தைத் தொடர்ந்தாள்.
சுற்றிலும் கேட்ட கைதட்டல் சத்தத்தில் அவசரமாக அவனைப் பிரிந்த திகள், சுற்றத்தை கவனிக்க, ஜோன் நண்பர்களோடு கைகளைத் தட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டு நின்றான்.
‘என்ன பண்ணி வச்சிருக்க திகள்! பப்ளிக்கா முத்தம்… ச்சே!’ எனத் தன்னையே நொந்துகொண்டு பத்ரனை பாவமாகப் பார்க்க, அவளை மெதுவாக இறக்கிவிட்டவன், விழி உடைகளை சரிசெய்து தன் ஜாக்கெட்டை அவளுக்குப் போர்த்திவிட்டான்.
“கங்கிராட்ஸ் திகள்! ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ!” என்றான் ஜோன்.
சிறு சிரிப்போடு தலையை ஆட்டியவளை, இதற்கு மேல் தவிக்க விட வேண்டாம் என மற்றவர்களிடம் பத்ரன் தலையசைத்துவிட்டு காரில் ஏறி அவளோடு கிளம்பினான்.
தலையை அவன் பக்கம் திருப்பாமல், ஜன்னலைத் துளைத்து வெளியே விழுபவள் போல வேடிக்கை பார்த்தவளைக் கண்டு பத்ரனுக்கு சிரிப்பாக இருந்தது.
சத்தமாகச் சிரித்தால் கோபித்துக்கொள்வாளே! என்று ஊமையாகச் சிரித்தபடி வந்தான் பத்ரன்.
அப்போதுதான் பாதை மாறிப் போவதை கவனித்தாள் திகள்விழி.
“இது என் அப்பார்ட்மெண்ட் போற வழி இல்லையே! எங்க போறீங்க?”
“பரவாயில்ல, வாய் திறந்துட்ட குட்டச்சி! அங்க போனதும் சொல்றேன் வெயிட்… என் மேல இருந்த கோபம் போயிடுச்சா?”
இல்லை எனத் தெரிந்தே கேட்டான்.
“இல்லை போகல! முத்தம் கொடுத்ததும் நான் கன்வின்ஸ் ஆகிட்டேன்னு நினைக்காதிங்க சார். உங்களை யாரு அழகா கிளம்பிக் காலேஜ் வர சொன்னா?” என்று அவனையே பதில் கேள்வி கேட்டவளைக் கண்டு கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டான்.
“சாரி விழி! உனக்குப் பொறாமையா இருக்கும்னு எனக்குத் தெரியாது.”
“ஹலோ யாருக்குப் பொறாமை! நீங்க ஒன்னும் பெரிய அழகன் இல்ல. ஏதோ நாலு பேர் பார்த்துட்டா சாருக்கு ஆணழகன்னு நினைப்போ? எனக்குக்கூடத்தான் பத்து ப்ரப்போஸல் வருது!” என முகத்தைச் சுளித்துக்கொண்டு திரும்பினாள் திகள்விழி.
“சரிங்க மேடம்! நான் சுமார் மூஞ்சியாவே இருந்துக்குறேன். எனக்கு இந்த அழகு சுந்தரியைத் தவிர யாரும் வேண்டாம். அதனால கொஞ்சம் மன்னிப்பை கன்சிடர் பண்ணுங்க!” என்றான்.
அவள் கோபம் நீண்ட நாட்கள் தாங்காது என்ற நம்பிக்கை!
அதன்பின் இருவரும் அமைதியாக வர, கார் ஒரு தனி வீட்டின் முன் நின்றது.
யூனிவர்சிட்டி அருகிலேயே புதுவீடு வாங்கியிருந்தான் பத்ரன்.
“இறங்கு விழி. இனி நீ இங்கதான் தங்கப்போற!”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு புதுவீடு என்று முழித்தபடி இறங்கினாள்.
