பூவாய் ஏந்திய பூங்காற்றே
சின்ன வயதில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுத் தன் பழைய நினைவுகள் அனைத்தையும் இழக்கிறாள் நாயகி. இந்த சூழ்நிலையில் சொந்தக் குடும்பத்தையே தன் தங்கைக்காக உதறி தள்ளி அவளைக் காப்பாற்றி அழைத்து வரும் அண்ணன், அவளுக்குத் தந்தையாக மாறுகிறான்.
தன் அண்ணனை தகப்பனாகவும் அவன் திருமணம் செய்யும் 'ஷர்மி'யை தாய் என்றும், அவர்களின் மகனைத் தம்பி என்றும் நம்பி ஒரு அழகான குடும்பமாக வாழ்கிறாள்.
கடந்த கால அதிர்ச்சியால் நாயகி வளர்ந்த பிறகும் மனதளவில் ஒரு சின்னக் குழந்தையைப் போலத்தான் நடந்துகொள்கிறாள்.
நாயகியின் 9 வயதில் இருந்து 10 வருடங்களாக அவளை முழுமையாகப் பார்த்துக்கொள்வது, அவளுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து அரவணைப்பது அவள் அண்ணியின் தம்பியான நாயகன் தான். இவர்களுக்கு இடையே ஒரு ஆழமான அன்பும் பிணைப்பும் உருவாகிறது.
இப்படிச் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய கிராமத்துக்கே செல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது. அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் திருமணம் மற்றும் அதற்குப் பிந்தைய சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை விவரிக்கும் கதை
