விரகதாபம் தீருமோ விதுரா?
பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.
