Mr&Mrs.Arjun
விழித்திரை கண்ணீரால் மறைக்க கண்களை சிமிட்டி திரையில் தெரிந்த கணவனின் பிம்பத்தை உற்றுப் பார்த்தாள் என்னைக் காப்பாற்றேன் என்பது போல்.
அவள் விழிமொழியை வலுக்கட்டாயமாய் ஒதுக்கித் தள்ளியவன் அவளைப் பார்த்து இகழ்ச்சியாய் உதட்டை வளைக்க அவள் மனம் காயம்பட்டுப் போனது மணாளன் செய்கையில்...
அவள் செய்தது துரோகமாகவே இருந்தாலும் மனைவியை இன்னொருவன் கடத்தி வைத்திருப்பது தெரிந்தும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவன் நிதானத்தை என்னவென்று சொல்வது?
“அடடே என்னடி மை பொண்டாட்டி... சாரி சாரி மை எக்ஸ் பொண்டாட்டி... எப்படி இருக்க..?” அவன் அருகில் வருவது தெரிந்தாலும் அவள் கண்கள் திரையிலேயே நிலைத்திருந்தது.
கழுத்தில் மின்னிய தாலியை இழுத்து அவள் முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்தவன் திரும்பி திரையில் தெரிந்தவனை நக்கலாய் ஒரு பார்வை பார்த்தான்.
