3.ராட்சசனின் காதல் பாவை

3. ராட்சசனின் காதல் பாவை

போன பகுதியில்:

“கேகே குரூப்ஸ் குகன்தான் பண்ணியிருக்காரு” என்று சொன்னான் சுனில்.

இவன் சொல்லி முடிக்கவும், விதுரனின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. அந்தத் திரையில் ‘கேகே குரூப்ஸ்’ என்று இருக்க, அதை அனல் பறக்கும் பார்வையுடன் பார்த்தவன், அந்த காலினை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

எதிர் முனையில் இருந்து…

இனி..

“ஹலோ, எப்படி இருக்கீங்க மிஸ்டர் விதுரன்? என்ன, நீங்க கொடுக்க வேண்டிய மெட்டீரியல்ஸ் ஒன் ஹவர் லேட்டா டெலிவரி பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன்” என்று சொன்னான் குகன்.

“ஏய்…” என்று சிங்கம் போல் விதுரன் சீற.

“வெயிட், மிஸ்டர் விதுரன். எதுக்கு நீங்க டென்ஷன் ஆகுறீங்க? இது சின்ன சாம்பிள் தான். இன்னும் நிறைய இருக்கு. வெயிட் பண்ணு” என்று கிண்டலாய்ச் சொன்னான் குகன்.

இவன் சொல்லியதைக் கேட்டு கோபம் வந்தாலும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதிரில் நிற்கும் சுனிலிடம் கண் ஜாடையில் ஏதோ சொல்ல, அவனும் அடுத்த நிமிடம் யாருக்கோ மெசேஜ் செய்தான்.

“எனக்கு ஜஸ்ட் 50 கோடிதான் லாஸ் இந்த ஒன் ஹவர்ல. எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. எனக்கு நீ சின்ன சாம்பிள்தானே காமிச்ச? நானும் உனக்கு ஒரு சின்ன சாம்பிள் காமிச்சிருக்கேன். பாரு” என்று சொன்னான் விதுரன்.

இவன் சொன்னதைக் கேட்ட குகனுக்கு ஒன்றும் புரியாமல், அவன் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க, அந்த நொடி அவனின் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அதை உணர்ந்தவன்,

“எஸ், கமிங்” என்று சொன்னான் குகன்.

இவன் அனுமதி வழங்கிய உடன், வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு அவனின் பி.ஏ. உள்ளே நுழைந்தவன், பதற்றமாக அவனிடம் பேசத் தொடங்கினான்.

“சார், நம்மளோட ஃபேக்டரில ஃபயர் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சார்” என்று அவன் பதட்டமாகச் சொன்னான்.

அதைக் கேட்ட குகன் ஒரு நிமிடம் அதிர்ந்தவன்,

“என்ன சொல்ற?” என்று அதிர்ச்சியோடு கேட்டான்.

“எனக்குமே ஒன்னும் புரியல சார். போனாதான் எதுவா இருந்தாலும் தெரியும்” என்று இவன் சொல்லிவிட,

இவன் சொல்லியதில், ஒருவன் தன்னிடம் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததே மறந்து விட்டான். ஆனால் விதுரனோ…

“என்ன மிஸ்டர் குகன், என்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட் எப்படி இருக்கு? நீ எனக்கு ஜஸ்ட் 50 கோடி லாஸ் பண்ண. நான் இப்போ உனக்கு கொடுத்த கிஃப்ட் 500 கோடி” என்று சொன்ன விதுரன் போனை கட் செய்தான்.

இவன் சொல்லியதைக் கேட்ட குகனுக்கு கோபம் எல்லையைத் தாண்ட, அவன் அறையில் இருந்த அத்தனையையும் போட்டு நொறுக்கித் தள்ளியிருந்தான்.

அதைப் பார்த்த அவனின் பி.ஏ., இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

ஆனால் விதுரனோ மெல்லச் சோம்பல் முறித்தவன்,

“சுனில், அடுத்து ஷெட்யூல் எதுனா இருக்கா?” என்று கேட்டான் விதுரன்.

“இன்னிக்கு நைட் 8 ஓ கிளாக் ஃபாரின் கிளையன்ட் கிட்ட மீட்டிங் இருக்கு. நாளைக்கு ஃபேக்டரி விசிட் போகணும். ஆப்டர்நூன் லஞ்ச் முடிச்சுட்டு ஸ்பான்சர் மீட்டிங் இருக்கு” என்று சொன்னான் சுனில்.

“இன்னிக்கு இருக்கிற மீட்டிங்கை நாளைக்கு சேஞ்ச் பண்ணிக்கோ” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான் விதுரன்.

இதை கேட்ட சுனிலுக்குத்தான் ஐயோ என்று இருந்தது.

இன்று இருக்கும் மீட்டிங் மிகவும் முக்கியமான மீட்டிங் என்பதால், அதைத் தள்ளிப்போட முடியாது. இதை எப்படி இவரிடம் சொல்வது என்றே அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவன் மனமோ,

“அது அவருக்குத் தெரியாதா? நீ சொல்லித்தான் தெரியணுமா?” என்று கவுண்டர் கொடுப்பது போல் சொல்லியது.

அதைக் கேட்டவன்,

“எனக்கு அது தெரியாம இருக்குமா?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அவன் பின்னால் சென்றான்.

இல்லை… இல்லை… ஓடினான்.

அவனின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவன் ஓட, இவன் ஓடியும் அவனைப் பிடிக்க முடியாமல் போக, அங்கிருந்து விதுரன் மின்னல் வேகத்தில் கிளம்பினான்.

இருபது நிமிடங்கள் கழித்து…

அவனின் கார் ஒரு பப்பின் முன்பு வந்து நின்றது.

இவன் காரில் இருந்து இறங்கவும், இவனைச் சுற்றி கருப்பு உடை அணிந்த பாடிகார்டுகள் அவனுக்குப் பாதுகாப்பாக வந்து நின்றனர்.

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாதவன், அந்த பப்புக்குள் நுழைந்தான்.

இவன் பப்புக்கு வந்த நியூஸ் சுனிலுக்குச் சென்றது.

பப்புக்குள் நுழைந்தவன், எப்பொழுதும் அவனுக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்திற்குச் சென்று அமர, அவன் முன்பு பல ரக மதுபானங்களை எடுத்து வந்து வைத்தார்கள்.

மெல்ல அவன் மதுவை அருந்திக் கொண்டிருந்தாலும், அவனின் எண்ண ஓட்டத்தில் குகன் மட்டுமே இருந்தான்.

அவனைப் பற்றி யோசிக்க யோசிக்க, அவனுக்குக் கோபம் எட்டிப் பார்க்க, அந்தக் கோபத்தை மதுவைக் கொண்டு மறைப்பது போல் முழு பாட்டில் மதுவை எடுத்து வாய்க்குள் சரித்தான்.

அடுத்த நொடியே அது காலியாகியிருக்க, அடுத்தடுத்து என்று பத்து நிமிடத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை அவன் காலி செய்திருந்தான்.

அப்பொழுதுதான் அங்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி வந்து நின்றான் சுனில்.

அங்கு வந்து நின்ற சுனிலின் கண்களில் அங்கு இருக்கும் பாட்டில்கள் கண்ணில் பட, ஐயோ என்று இருந்தது.

உடனே தனது போனை எடுத்து சில மெசேஜ்களைச் செய்தான். அதிலிருந்து உடனே ரிப்ளை வர, அதில் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், மீண்டும் ஒரு மெசேஜ் செய்தான்.

ஆனால் இந்த முறை ரிப்ளை வருவதற்கு சிறிது நேரம் இருந்தது.

அதில் விதுரனைப் பார்க்க, அவனும் அடுத்தடுத்து என்று சென்று கொண்டே இருந்தான்.

அந்த சமயம் மீண்டும் சுனிலின் போனில் ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் வர, அதை பார்த்தவன் உடனே விதுரனிடம் நெருங்கியவன்,

“பாஸ், ரெடி. பார்க்கிங் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று சொன்னான் சுனில்.

இவன் சொல்லியதை அவன் கேட்டிருந்தாலும், கையில் இருந்த மது பாட்டிலை மொத்தமாக வாய்க்குச் சரித்தவன், அதை காலி செய்து அங்கிருந்து எழுந்தான்.

எழுந்தவனின் நடையில் சிறு தள்ளாட்டம்கூட இல்லை.

யாராக இருந்தாலும் போதை தலைக்கேறி, கால்கள் தடுமாறித்தான் இருக்கும். ஆனால் இவனோ சிங்கம் போல் நடக்க, அதைப் பார்த்த சுனிலுக்கே இவன் மனிதனா இல்லை வேறு ஏதாவது என்பது போல் இருந்தது.

அதே சமயம் அந்தக் கார் பார்க்கிங்கிற்கு ஒரு பெண் வேகமாக வெளிவாசல் வழியாக உள்ளே ஓடி வந்தவள், ஒரு காரின் முன்பு நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஒரு வலிமையான கரம் அவள் கையைப் பிடித்து இழுக்க, அதில் பதறியவள் பயத்தில் யார் என்று திரும்பிப் பார்த்தாள்.

எதிரில் புதிதாக நிற்பவனைப் புரியாமல் பார்த்தாள்.

ஆனால் அவனோ,

“எதுக்கு இன்னும் அப்படியே நிக்கிற? கம்போஸ்ட்?” என்று சொல்லியவன், அவள் இடுப்போடு கை போட்டு தன் அருகே இழுக்க, அதில் பதறியவள்,

“ஏய் மிஸ்டர், என்ன விடு” என்று அவனிடம் துள்ளிக் குதித்து விலகியவள், அவன் யோசிக்கும் முன்பே கன்னத்தில் ஒரு அறை விட்டிருந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன், சற்றென்று அவள் கழுத்தைப் பிடித்து தூக்கியிருந்தான்.

“ஏய்! ஏய்! யாரு மேல கைய வச்சிருக்கேன்னு தெரியுமா?” என்று அவன் கோபமாகக் கேட்க, அந்த நொடி அவனைச் சுற்றி சில ஃப்ளாஷ் வெளிச்சம் மின்னத் தொடங்கியது.

அது வேறு யாருமில்லை. இவனின் ஒரு போட்டோவாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவனின் ருத்ரமூர்த்தி அவதாரமே கிடைத்துவிட, அனைவரும் போட்டோக்களை எடுத்து குவித்திருந்தனர்.

ஆனாலும் அவனின் கோபம் அவள் மீது இருக்க, அதை எதையும் பொருட்படுத்தாதவன், அவள் கழுத்தை இன்னும் இறுக்கமாகப் பிடிக்க, உடனே அவனின் பாடிகார்டுகள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

சுனிலும் அங்கு வந்து விட, அங்கு இருக்கும் ரிப்போர்ட்டர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கும் வேலையில் இறங்கினான்.

அவர்களோ விதுரனை வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்துக் கொண்டே சென்றார்கள்.

அதில் இன்னும் கோபம் கொண்டவன், அவளின் கழுத்தை இன்னும் பிடிக்க, அதில் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, அவள் மீண்டும் தன் கைகளால் அவனை அடிக்கத் தொடங்கினாள்.

அதில் அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தலைக்கேற, அவனின் பிடியோ இறுகிக் கொண்டே சென்றது.

ரிப்போர்ட்டர்களை அப்புறப்படுத்திவிட்டு திரும்பிய சுனிலுக்கு, அந்தப் பெண்ணின் நிலை கண்ணில் பட, பதறி அடித்துக் கொண்டு அவனிடம் வந்தவன்,

“பாஸ்… பாஸ்… அந்த… அந்தப் பொண்ணை விட்டுருங்க பாஸ்” என்று சொன்னான் சுனில்.

இவன் சொன்னதில் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தான்.

அதில் சுனில் தன் வாயை மூடிக்கொள்ள, அவள் நிலைதான் ஐயோ பரிதாபமாக இருந்தது.

மீண்டும் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் சுனில்.

அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து, ஏனென்றால் இன்னும் சிறிது நேரம் அவன் பிடியில் இருந்தால் அவள் பரலோகமே சென்று விடுவாள் என்பது போல் இருந்தது அவளின் நிலை.

“பாஸ்… பாஸ்… ரிப்போர்ட்டர்ஸ் இப்பதான் இங்க இருந்து வெளியே அனுப்பி இருக்கோம். மறுபடியும் அவங்க வர வாய்ப்பு இருக்கு. நீங்க இங்க இருந்து உடனே கிளம்பியாகணும். ப்ளீஸ் பாஸ்” என்று சொன்னான்.

அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடும், அதே சமயம் விதுரனுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகவும் அவன் சொல்லியிருந்தான்.

அதைக் கேட்டவனுக்கு இன்னும் தலைக்கேறியது.

இவர்களைப் பார்த்துதான் பயப்பட வேண்டுமா என்பது போல் இருந்தது அவனுக்கு.

ஆனால் ஏனோ அவன் பிடி தளர்ந்து விட, அவளை அவன் பிடியிலிருந்து விடுவித்திருந்தான்.

அவளோ அவன் விடுவித்த வேகத்தில் கீழே விழுந்தவள், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த விதுரன்,

“இதுக்கப்புறம் உன்னை நான் பார்த்தேன்… உன்னோட நிலைமை இதைவிட மோசமா இருக்கும்” என்று சொல்லியவன், அங்கிருந்து தன் காரில் ஏறிக் கிளம்பியிருந்தான்.

யார் இந்தப் பெண்? எங்கிருந்து வந்தாள்? மீண்டும் இந்த அரக்கன் கண்ணில் இந்தப் பெண் படுவாளா? அப்படி மீண்டும் இந்த அரக்கன் பார்த்தால் என்ன நேர்ந்திடும் இந்தப் பெண்ணுக்கு?

அவன் அங்கிருந்து கிளம்பியிருக்க, சுனில் அங்கேயே நின்றிருந்தான்.

அவன் செல்லும் வரை அவன் காரையே பார்த்திருந்தவன், திரும்பிக் கீழே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான்.

இந்தப் பெண் இங்கே எப்படி வந்தாள் என்று யோசனையாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

காதல் பாவை தொடரும்..

இப்படிக்கு,

உங்கள் அன்பு தோழி

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!