ராட்சசனின் காதல் பாவை
நம் கதையின் நாயகன் விதுரன். மிகப்பெரிய பிஸ்னஸ் மேன், இவனைப் பார்த்தாலே அனைவரும் பயந்து நடுங்குவார்கள் யார் எதிர்த்து நின்றாலும் அவர்களின் உயிர் அடுத்த நிமிடம் அவர்கள் உடலில் இருக்காது அது மட்டுமல்ல அவனைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே இச்சைக்கு மட்டும் தான் பணம் கொடுத்தால் போதும் பின்னாலே வந்து விடுவார்கள் என்று நினைப்பவன். அது மட்டுமல்ல பணம் கொடுத்தால் எது வேணாலும் வாங்கிவிடலாம் என்று நினைப்பவன். ஆனால் இவன் நினைப்பை தவிடு பொடியாக்குவது போல் வருகிறாள் நம் கதையின் நாயகி ஸ்ரீனா.. ஒரு ஈ எறும்பை கூட தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்த கூடாது என்று கொள்கை உடன் இருக்கும் ஸ்ரீனா…. விதுரனிடம் மாட்டிக்கொண்டால் அவளின் நிலை..? அப்படி அவள் மாட்டிக்கொண்டால் மனித ரூபத்தில் இருக்கும் ராட்சசனின் இடம் மாட்டி கொண்டாள் மான் குட்டியவள் எப்புடி தப்பிப்பால்…? இவளின் வரவால்.. பெண்களின் மீது இருக்கும் வெறுப்பு.. அதிகரிக்குமா.?.. இல்லை அவளின் மீது காதல் அதிகரிக்குமா..? என்பதே ராட்சசனின் காதல் பாவை..
