அத்தியாயம் – 1

‘ஹைதற்காட்டு வீரன் தான் குதிரை ஏறி வருவானோ  ,  காவல்  காத்து என்னைத்தான் கடத்திக் கொண்டு போவானோ  ‘ என்ற   அந்த பாட்டு கேத்தார் போல் தேன் நிலாவை அப்படியே அளேக்காக  ஒற்றை கையால் தூக்கி தன் தோள்மேல் போட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றான்    அவன்.

“யாருடா?   நீ என்னை விடு,     என்னை விடு” என கத்திக் கொண்டிருந்தாள்   அவள்.

“ஏய்     தேனு    விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க எந்திரிடி”  என கத்தி     கொண்டிருந்தார் அவள் பாட்டி     .

       அந்த   சத்தில்   கண் விழித்தவள் “ஏய்,    கிழவி காலங்காத்தால எதுக்கு இப்படி வந்து எழுப்பிவிட்டுட்டு      இருக்க,   நல்ல கனவு கண்டுட்டு   இருந்தேன்    ,  இப்டி    பாதியில வந்து எழுப்பிவிட்டயே ”     என்றாள் கோவமாக   தேன் நிலா   (   நம் நாயகி  )

    ”  நான் என்னை, உன்னை என் இடுப்புலயா     தூக்கி வச்சிருக்கேன்   ,   இறக்கிவிடு,  என்னை இறக்கி விடு னு       கத்திட்டு    இருக்க      எந்திரிச்சு வேலைய பாரு”.

” அது வந்து என்ன ஒருத்தன் கடத்திட்டு போனானா அதனாலதான் நான் இறக்கிவிடு  னு     கத்துனேன்   ”  என்றாள்    தேன் நிலா      வெட்கத்துடன்.

அதைக் கேட்ட பாட்டி சிரிக்க.

“ஏய்  !கிழவி இப்ப எதுக்கு  ?  சிரிக்கிற”.

” யாரு ?   உன்னையா ஒருத்தன் கடத்திட்டு போறானா  ?    நீ எவனையாவது கடத்திட்டு   வராம   இருந்தா சரி “என்றார்.

அவள் பாட்டியை  முறைக்க.

   ”   இதுக்கு தான் சொல்றது கால காலத்துல கல்யாணம் பண்ண இப்படி கனவு வருமா?,,” என்றவர் அடுப்பை பற்ற வைக்க.

” பண்ணிக்கிறேன் எனக்கேத்த ராஜகுமாரன் வரும்போது கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்குவேன்,   அவனை கல்யாணம் பண்ணி 16 புள்ள குட்டி பெத்துக்குவேன்” என்றவள் முகம் கழுவி விட்டு குளிக்கச் செல்ல.

“அந்த தரகர் மாரியப்பன் பொண்ணு போட்டோ வாங்கிட்டு போயி ரெண்டு வாரம் ஆகுது இன்னும் மாப்பிள்ளை     இன்னும் பார்த்துக்கிட்டு இருக்கான்  ,   வரட்டும் இன்னைக்கு அவன்  ” என நானே திட்டிக் கொண்டிருக்க.

 குளித்துவிட்டு வந்தவள்  ” இப்ப யார? திட்டிக்கிட்டு இருக்க    ”    என கேட்க.

“அது வந்து அந்த தரகர்”.

 “ஆரம்பிச்சிட்டியா , இந்த தேவையில்லாத வேலை பார்க்காத ன்னு நான் எத்தன தடவ சொல்லிட்டு இருக்கேன்”.

 “எதுடி ?   தேவையில்லாத வேலை,    ஒரு நல்ல    பையனை   பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நான் தனியா தவிச்சுக்கிட்டு இருக்குது உனக்கு தேவையில்லாத வேலையா”?.

 “எனக்கு கல்யாணம் வேண்டாம்  ,  உனக்கு ஆசையா இருந்தா நீ பண்ணிக்கோ” என்றவள் , தன்   தாவணியை கட்டி தலையை சீவிக் கொண்டிருக்க.

“வர  வர உனக்கு வாய் கொழுப்பு கூடி போச்சு”.

 “எனக்கு     வாயில தான் கொழுப்பு,     உனக்கு உடம்பெல்லாம் கொழுப்பு கூடிப்போச்சு “என்றாள்    தேன் நிலா .

 “அடி கழுத “என    பாட்டி   அவளை  அடிக்க குச்சியை     ஓங்க  மூலிகை   கூடையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்   நிலா.

 “சாப்பிட்டு போடி சோறாக்கி கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன்”.

அப்பொழுது வாசலில் வந்து நின்ற   பரமு,  “ஏ      தேனு  வாடி நா   ஆத்துக்கு துவைக்க போறேன் நீ மூலிகை பறிக்கனும்னு சொன்னேல.”

“இதோ வந்துட்டேன்     க்கா”  ,  என்றவள் “பாட்டி நான் போய் சீக்கிரமா   மூலிகை படிச்சுட்டு வந்து சாப்பிடுறேன்”.

 “பாத்து கவனமா போ,     ரொம்ப தூரம் போகாத சீக்கிரம் வந்துரு”.

 “சரி  ”  என்றவள்      பரமுவிடம்      பேசிக்கொண்டே நடந்து வர.

“எதுக்குடி? காலையிலேயே அந்த வயசான காலத்துல பாட்டியை  இப்டி கத்த விடுற”.

“யாரு ?    நானா கத்த    விடுறேன்   ,      நீ வேற அது தான் காலையில எந்திரிச்சதிலிருந்து மாப்பிள்ளை பார்க்க போட்டோ கொடுத்து இருக்கேன் இன்னும் வரலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கு”.

 “நல்ல விஷயம் தானடி”.

எது?   .

” கல்யாணம் பண்ணிக்கிறது தான்”.

“நான் உன்னை  ஒன்னு   கேட்கவா? க்கா”.

 

“கேளு “.

“நீ கல்யாணம் பண்ணி என்னத்த?  கண்ட”.

“அது” என அவள் தடுமாற.

“கல்யாணம்   பண்ணி, புள்ள குட்டிகளை பெத்து    நீ என்ன பாடுபடுறேன்னு நானும் பாத்துகிட்டு தானே இருக்கேன்” என்றாள்   தேன் நிலா

 “அடியே கல்யாணம்  ங்குறது      எல்லாரு வாழ்க்கையிலும் ஒரே மாதிரி இருக்காது,      என் புருஷன் என்ன கொடுமை படுத்துறானா அது என் தலை எழுத்து நீ உன் மனசுக்கு ஏத்த மாதிரி உனக்கு அழகான நல்லவனா புருஷன்     கிடைப்பார்”.

“அமைஞ்சா சந்தோசம் தான்,    அவன்    நல்லவனா இருந்தா தான் போச்சு இல்லனா?”.

” இல்லைனா    என்ன  ?   சொல்லு  தேனு, என்ன மாதிரி   குடிகார புருஷனை கட்டிட்டு நீயும் கஷ்டப்படனுமான்னு   பயப்படுறியா?” என அவள் கேட்க.

அமைதியாக வந்தாள்  தேன் நிலா.

“இங்க பாரு  தேனு   ,   கடவுள் ஒவ்வொருத்தர் தலையிலயும்   ஒவ்வொரு மாதிரி எழுதி இருப்பாரு,    நம்ம வாழ்க்க இப்படி ஆகிடுச்சுன்னு     நெனச்சு   கவலைப்படுறதை     விட இதுதான் நமக்கு கிடைச்ச வாழ்க்கை   னு  நெனச்சு    சந்தோஷமா   ,    வாழனும்      அது தான் வாழ்க்கை,   ”   என்றாள் பரமு.

“சரி   அத   விடு    அதெல்லாம் பேசாதக்கா   நான் உன்னை    ஒன்னு   கேட்கவா”?.

 “என்ன   ” ?.

 வேணாம் விடு.

 சும்மா கேளுடி.

“இல்ல உனக்கு உன் புருஷனை பிடிக்காதுன்னு சொல்ற”.

 “ஆமா”.

“அப்புறம் எப்படி? ரெண்டு புள்ள வந்துச்சு” என  கேட்ட தேன் நிலா சிரிக்க.

“அடியே  ,        அது அப்டி தான்,      நீயும்   கல்யாணம் பண்ணி பாரு உனக்கு தெரியும்”.

 “புருஷனை      புடிக்காது    ஆனா   ! 4 , 5    அந்த புள்ள குட்டி பெத்துக்கணும்”  என கேலி செய்தாள்.

“அது    அப்படித்தான் “என     வெட்க பட்டு  சிரித்தாள்   பரமு.

 இருவரும் பேசிக்கொண்டு    ஆத்தங்கரைக்கு     வர துணிகளை துவைக்க   ஆரம்பித்தால்  பரமு.

  ஆத்து   நீரில் காலை விட்டபடி   விளையாடி    கொண்டே   அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள்     நிலா.

 இங்கு சற்று தூரம் தள்ளி காரில்    வந்த நான்கைந்து பேர் காரில் இருந்து ஒருவனை  தூக்கி வீச அவன்       உருண்டு வந்து ஒரு முட்புதரில்    விழுந்தான்.

மீண்டும் காரில் ஏறியவர்கள் , ”  நம்ம சார் சொன்ன வேலையை முடிச்சிட்டோம்”  என்றான் ஒருவன்,

“ஆமா டா  ,    நம்ம சார் குடுத்தத்துலயே இது தான்   பெரிய வேலை, அப்போ  அமௌன்ட்ம்    பல்க்கா தான்  தருவார், ”    என்றான் மற்றவன்.

“இந்த காச   வாங்கிட்டு நம்ம   கொஞ்ச நாள்   செம்மையா     வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் ”  என  சிரித்தனர்,

“டேய் முதல்ல  சாருக்கு   போன்   பண்ணி விஷயத்தை   சொல்லுவோம்” ,

“சரி”   என    யாருக்கோ போன் செய்து,   ”  சார் நீங்க சொன்ன மாதிரி அவன் கதையை முடிசிட்டோம்”   என்றார்கள்.

 “என்னடா?சொல்றீங்க அவனை உயிரோடு வச்சு    கொளுத்துட்டீங்களா?”.

 “இல்ல சார்”.

“கண்டம் கண்டமா வெட்டி போட்டீங்களா”.

” இல்ல சார்”.

” பின்ன என்னடா? செஞ்சீங்க” என அவன் பதறி       கோவமாக     கேட்க.

“அவன நாங்க மலையிலிருந்து உருட்டி விட்டுட்டுட்டோம் சார்,   இந்நேரம்   அவன் செத்துருப்பான்,    என   சொல்லி    சிரிக்க.

 “அடே அறிவுகெட்ட முட்டாளுங்களே,   நீங்க    என்ன? காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுமாடா    ? ”   என   கத்தினான்.

“சார்,அது வந்து ”  ,

“எதும் பேசாதீங்க டா  ,    நான்   உங்க கிட்ட    என்ன?டா   சொன்னே”  என கேட்டான்.

அவர்கள்    அமைதியாக  இருக்க ,  

“உங்ககிட்ட அவர   கொன்னுடுங்கன்னு    தானடா சொன்னேன்,    அதை விட்டுட்டு இப்படி உயிரோட    மலையில் இருந்து உருட்டி விட்டு இருக்கீங்களே  ”  என்றான் ஆத்திரத்துடன்.

“சார்    அது பெரிய மலை,     அங்க இருந்து விழுந்தவங்க   ,    யாரும் பொழைக்க வாய்ப்பு இல்லை “என்றான்   ஒருவன்.

அதை கேட்டவன் அவனை கேட்ட வார்த்தையால் திட்டி  விட்டு     , “வாயை மூடு டா,      அவனை   இல்ல  அவரை     பத்தி உங்களுக்கு தெரியாதுடா,   அவர்     பீனிக்ஸ் பறவை மாதிரி     கண்டிப்பா உயிரோடு வந்துருவாரு டா    ,    உங்ககிட்ட இந்த வேலையை கொடுத்ததுக்கு உங்களால என்ன செய்ய முடியுமா செஞ்சிட்டிங்க,      இப்ப அவர்     கண்டிப்பா வந்து உங்களோட சேர்த்து என்னையும்     உயிரோடு   வச்சு    கொளுத்திடுவாரே  ”    ,     என்றான்    நடுங்கிய குரலில்.

 

அதை கேட்ட  அந்த அடியாட்களுக்கும்   உள்ளுக்குள்  பயம் வர,   ”   சார்   இப்ப என்ன?  பண்றது ”      என      மெதுவாக  கேட்டனர்.

“நீங்க என்ன? பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களா தெரியாது ஒழுங்கா போய் அவரை     தேடி கண்டம்   துண்டமா வெட்டி போடுங்கடா இல்லன்னு வைங்க உங்கள நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்றவன்        ஆத்திரத்துடன்    இரண்டு வார்த்தை  திட்டி விட்டு  போனை வைக்க.

“டேய் ,    இதென்ன டா   வம்பா  போச்சு,  நம்ம சாரே  இப்படி   பயப்படுறாரு,       வாங்கடா  இப்ப வாச்சும் அவர் சொன்ன  வேலையை ஒழுங்கா செய்வோம் ”   என    அவர்கள் காரை திருப்பிக் கொண்டு அவனை தூக்கிப் போட்ட இடத்திற்கு வந்து  கொண்டிருந்தனர்.

இங்கு துணி துவைத்து கொண்டு துவைத்து முடித்த பரமு   நிலாவை  பார்க்க,

 

பிறை நெற்றி    , நீண்ட அழகிய கூந்தல்,     முந்திரி மூக்கு  ,     பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும்      அவளது  பேசும் கண்கள்,      மேக கூட்டம் போல  பஞ்சுபோன்ற   பொசு பொசு  கன்னம்,      அரஞ்சு பழ சுலைகளை   ஓட்ட வைத்தது போல  உதடு,    பால் போன்ற நிறம்,     சங்கு கழுத்து  , கொடி இடை,     வானிலிருந்து    மண்ணுலகிற்கு வந்த  வெண்ணிலவு போல      இருந்தாள் தேன் நிலா.

     பேசி கொண்டே     , ” என்னக்கா   நான் பாட்டுக்கு  பேசிட்டு இருக்கேன், பதில் சொல்ல மாட்ற  ”  என்றவள் திரும்பி பார்க்க.

தன்னையே பார்த்து கொண்டிருந்த  பரமுவை பிடித்து உழுப்பினால்,

“ஆ  “என  சுயவுனர்வுக்கு   வந்தாள்  .

“என்ன?அப்டி பாக்குற” என கேட்க.

“ஒன்னுல்ல,       உனக்கு தேன் நிலானு  பொருத்தமான பேரு தா வச்சிருக்காங்க” .

“ச்சீ   போக்கா”  என வெட்கப்பட்டாள்  நிலா.

“சரி  நா  தொவச்சிட்டேன்,     நீ வரியா?”.

” இங்க பக்கத்துல இருக்க   இலை எல்லாம் பறிச்சிட்டேன்,      இன்னும     ரெண்டு மூலிகை மட்டும் கொஞ்சம் தள்ளி போய் பறிக்க வேண்டியது இருக்கு”,  

“என் புருஷன் வர நேரம் ஆயிடுச்சு டி,   நைட்டு வேலைக்கு போனவர்  இப்ப வந்துருவாரு”.

 “அப்போ நீ வேணா போக்கா நான் இந்த ரெண்டு மூலிகையை பறிச்சிட்டு வரேன்”.

 “நீ மட்டும் எப்படி?     தனியாக வருவ”.

 அதை  கேட்டு  சிரித்தவள்    ,   “இந்த காடு எனக்கென்ன         புதுசா நீ போக்கா நான்  சீக்கிரம் வந்துடுறேன் பாட்டி கிட்ட சொல்லிடு”.

” சரிடி,   பார்த்து  வா”   என     பரமு தன் துணிகளை எடுத்துக்கொண்டு      செல்ல.

பாட்டு பாடி கொண்டு அந்த காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தாள்    தேன் நிலா.

“ஒயிலா   பாடும் பாட்டுல    ஆடுது ஆடு,   குயிலே நீ  ஏ    பாட்டுல சங்கதி   போடு “என பாடிக்கொண்டே    வந்தவள்   காலில்   திடீரென ஏதோ தட்டப்பட.

“என்னது    ?    என்ன குனிந்து பார்த்தாள்   ஐந்து கை விரல் தெரிந்தது.

“இது என்னது   “என  உற்று பார்த்தாள்    நிலா.

அந்த   மனித கைவிரல்லில்    ரத்தமாக இருந்தது  ,      பயந்து     இரண்டடி   பின்னால்    சென்றவள் தன்னை சரி செய்து கொண்டு  மூச்சை இழுத்து வாங்கியவள்  ,    மெதுவாக அந்த கையருகே வர அந்த கையின்    நடுவிரல் மெதுவாக அசைந்தது.

 “நல்லவேளை     உயிர் இருக்கு” என்றவள் சற்று எட்டி பார்க்க முகம்,    உடல் எல்லாம் ரத்த காயங்களோட மயங்கி கிடந்தான் அவன்.

 அவன் யாராயிருக்கும்?  மெல்ல அவன் அருகில் வந்தாள்   தேன் நிலா  .

♥️  இது அழகான காதல் கதை, மிஸ் பண்ணாம படிங்க    , 

          கதை எப்படி?   இருக்குன்னு   மறக்காம    கமெண்ட் பண்ணுங்க     பிரண்ட்ஸ்   ❤️

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!