வணக்கம் நட்பூக்களே உங்கள் நான், திக்ஷிதா லட்சுமியின் அடுத்த கதை. எழுத்தாளர் போட்டி நான்குக்கு கொடுக்கவிருக்கும் கதை. மைடியர் மாமியார்.
இக்கதையில் வரும் சில நிகழ்வுகள் நடப்புக்கு சாத்தியம் இல்லை என்று நீங்கள் கருதலாம்.
ஆனால் என் மனதில் பல காலமாக சுழன்றுக் கொண்டு இருக்கும் விடயம் இது.
ஏன் இவ்வாறு நடக்க கூடாது என்று யோசனை.
நான் நினைப்பது முட்டாள் தனமாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதை நான் என் மகன் மற்றும் என் மகள் வளர்ந்து திருமணம் செய்யும் வயதில் நான் போடும் இக்கதையின் நிபந்தனைகள் படி தான் நடந்துக் கொள்வேன்.
என் பிள்ளைகளையும் அதன் வழியே நடக்க வைப்பேன்.
ஏன் மாமியார்கள் என்றால் வில்லியாக தான் இருக்க வேண்டுமா?
வில்லியாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு மனம் இருக்கும் தானே.
தான் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழ்வது ஒரு தாய்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமையோ அதே போல் தான் மாமியார்களுக்கும்.
இங்கே நான் எழுத போகும் இக்கதை ஒரே ஒரு கருத்தை மட்டுமே வைத்து எழுத போகிறேன். மீதும் அனைத்தும் அதன் போகில் செல்லும்.
கண்டிப்பாக காதல் இருக்கும். காமெடி இருக்கும். சண்டைகள் இருக்கும். பழிவாங்கும் எண்ணம் இருக்கும். வலிகள் இருக்கும்.
அனைத்தையும் கடந்து இக்கதையில் என்னுடன் பயணிக்க இருக்கும் நட்ப்பூகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
வாருங்கள் முதல் அத்தியாத்திற்குள் செல்வோம்.
அத்தியாயம் -1
பல வண்ணங்கள், பூக்களாக அலங்கரிக்கப்பட்ட அந்த அழகிய வீடு, சிறியதாக இருந்தாலும் பார்ப்பவரின் கண்ணை கவரும் அளவிற்கு அழகாகவே காட்சியளித்தது.
மனிதர்களின் நடமாட்டம் அங்கும் இங்கும் பரப்பரப்பாக சுற்றிக் கொண்டு இருந்தது.
இன்று அவ்வீட்டின் இளைய மகளுக்கு நிச்சியத்தார்த்தம் நடக்கும் நிகழ்வு போல்.
அதற்கு தகுந்தார் போல் அனைத்து வேலைகளும் கட்சிதமாக நடந்துக் கொண்டு இருக்க. மாப்பிளை வீட்டாரின் பிரமாண்டமான பெரிய கார் அலங்கரிக்க பட்ட, அவ்வீட்டின் வெளியே போட பட்டு இருந்த பெரிய கோலத்தின் மீது வந்து சடன் பிரேக் போட்டு நின்றது.
அதை பார்த்த இருவரின் மனம் ஏனோ பெரும் வலியை உணர்ந்தது போல் பிரமை. அந்த பெரிய கோலத்தை இவர்கள் இருவர் தான் கஷ்டப்பட்டு போட்டு இருப்பார்கள் போல. அப்பட்டமாக அது அவர்கள் முகத்திலே தெளிவாக தெரிந்தது.
அதற்குள் பின்பக்கம் சமையல் வேலைகளை சரியாக செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்த தில்லைநாதனின் காதில் மாப்பிளை வீட்டார் வந்த செய்தி விழ,
அவசரம் அவசரமாக தன் மனைவி கௌசல்யாவுடனும் மூத்த மகன் ரகுபதியுடன் அவர்களை வரவேற்க வெளியே வந்தார்.
அதே நேரம் காரிலிருந்து இறங்கிய நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தன் காரின் ஓட்டுநரை செய்கையால் அவர் அருகில் அழைத்தார் தாட்சாயிணி.
அவரோ எச்சிலை கூட்டி முழுங்கிக் கொண்டு பயத்துடன் அவர் அருகில் சென்று “அம்மா நான் சரியா கவனிக்கல” என்று சொல்லி முடிக்கும் முன் அவர் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட, பார்த்துக் கொண்டு நின்று இருந்த அனைவருக்குமே நா வறண்டு போனது.
தன் கம்பீரமான குரலில் “கண்ணை என்ன வானத்திலயா வச்சி காரை ட்ரைவ் பண்ற. இவ்வளவு பெரிய கோலத்தை போட எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. எவ்வளவு நேரமாகி இருக்கும். ஆனா நீ ஒரே நிமிசத்துல இதை வீணாகிட்டியே. இந்த அலோங்கோலத்தை பார்த்தா இதை கஷ்டப்பட்டு போட்டவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும். அதெல்லாம் யோசிக்க மாட்டியா கருப்பு” என்று கர்ஜீனையாக வந்து விழுந்தது அவரின் வார்த்தைகள்.
கருப்பனோ “அம்மா மன்னிச்சிடுங்கம்மா. சரியா கவனிக்காம வந்து நிறுத்திட்டேன். இனி இது போல தப்பு நடக்காது” என்று சொல்லியவர் அவரின் முறைப்பை கண்டு தானாக பெண் வீட்டாரிடம் “ஐயா இந்த கோலத்தை போட்டது யார்?” என்று கேட்டார்.
தில்லைநாதனோ சற்று அதிர்வுடன் தன் தம்பி மகள்களை பார்த்து விரல் நீட்ட, அங்கே நடந்ததை பார்த்துக் கொண்டு அதிர்வுடன் நின்று இருந்த இரு பெண்களிடம் மனதார மன்னிப்பு கேட்டார்.
அவர்களோ “அய்யோ அண்ணா வயசுல பெரியவங்க நீங்க. நீங்க போய் சின்ன பசங்க கிட்ட மன்னிப்பு கேட்கலாமா? கோலம் தானே விடுங்க” என்று சொல்லியவளை ஆழமாக பார்த்த தாட்சாயிணி,
“பெரியவங்களோ சிறியவங்களோ தப்புனா மன்னிப்பு கேட்டு தான் ஆகனும்” என்று தன் கம்பீரம் குறையாமல் பேசியவரை எதிர்த்து பேச என்ன.. நிமிர்ந்து பார்க்க கூட யாருக்கும் அங்கே தைரியமில்லை.
அதற்குள் காரிலிருந்து மற்றவர்கள் இறங்கி விட. நிலைமை சரி செய்யும் பொருட்டு “அட அம்மா விடுங்க. கருப்பன் தான் மன்னிப்பு கேட்டார்ல. வாங்க உள்ளே போலாம் நல்ல நேரம் போகுது. அண்ணா வேற பொண்ணை பார்க்க காலையிலிருந்து ரொம்ப பரப்பரப்பா இருக்கான்” என்று மெல்லிய குரலில் இருபத்து ஒன்று வயதுடைய ரதிபாலா தன் அன்னையின் கரத்தை மென்மையாக பிடித்துக் கொண்டு புன்னகை முகமாக பேசினாள்.
ரதியின் புன்னகை முகத்தை கண்டதும் காளி போல் கொதிக்குக் கொண்டு இருந்த தாட்சாயிணி சற்று சாந்தமடைந்தார்.
ரதியின் பின்னால் பட்டு வேஷ்டி சட்டையுடன் இறங்கிய கேஷவ் “ஏய் வாலு நான் எப்போ அப்படி சொன்னேன்” என்று தங்கையின் காதை பிடித்து கில்லியவன் மாம் லிவ் விட், காம் டவுண்” என்று அவனும் புன்னகையை முகத்தில் சுமந்துக் கொண்டு தன் அன்னையின் மற்றைய பக்கம் வந்து நின்றான்.
தன் இரு பிள்ளைகளையும் பார்த்த தாட்சாயிணிக்கு மொத்த கோபமும் அடங்கி போனது.
மெல்ல அவரும் புன்னகைத்ததும், தான் அங்கே நின்று இருந்த மற்றவர்களுக்கு மூச்சே வந்தது.
பின் தில்லைநாதன் தன்னிலை அடைந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார்.
அவர்களும் சிரித்த முகத்துடனே உள்ளே செல்ல. அங்கே சிலையாக இன்னும் நின்றுக் கொண்டு இருந்த, கோலம் போட்டவளை இழுத்துக் கொண்டு அவர்கள் பின்னால் சென்றனர் மற்ற தோழிகள்.
இதை அனைத்தையும் தனதறையில் இருக்கும் ஜன்னலின் உதவியோடு பார்த்துக் கொண்டு நின்று இருந்த சௌந்தர்யாவிற்கு பயம் ஏற்பட தொடங்கியது.
“என்ன இந்த அம்மா சின்ன கோலம் கலைஞ்சதுக்கே கையை நீட்டிடுச்சி. அப்போ நம்ம ஏதாவது தப்பு ண்ணிட்டா அவ்வளவு தான் போல. அய்யோ நமக்கு இந்த இடம் செட்டாகது போல. நம்மளால எல்லாம் மாமியாருக்கு அடங்கி இருக்க முடியாது. நம்ம கிட்ட அடங்கி போற மாமியார் தான் நமக்கு நல்லது” என்று குறுக்கும் நெடுக்குமாக அறையில் நடந்துக் கொண்டு இருந்தாள்.
மாப்பிளை வீட்டாரை சபையில் அமர வைத்த தில்லைநாதன் மனைவி கௌசல்யாவிடம் வந்தர்களுக்கு நீர் பருக கொடுக்கமாறு சைகை செய்தார்.
அவரும் புரிந்துக் கொண்டு, வந்து இருந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க.
தாட்சாயிணியோ கௌசல்யாவை தில்லைநாதன் அருகில் அமரும் படி கூறியவர், அங்கே வெளியே பார்த்த பெண், தள்ளி நின்று இருந்தவளிடம், தண்ணீர் கொடுக்கும்படி கூறினார்.
அவளோ சரியென்று தலையை ஆட்டிவிட்டு தண்ணீர் கொடுத்தவள் அடுபறையில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிற்றுணவையும் எடுத்து வந்து வைத்தாள்.
அவளின் செயலில் ஏனோ தாட்சாயிணிக்கு மனநிறைவு ஏற்பட்டது.
எந்த பகட்டும் இன்றி அடக்கமாக அமைதியாக இருந்தவளை பார்த்து “உன் பெயர் என்னம்மா” என்று கேட்டார் தாட்சாயிணி.
அவளோ “ஆராதனா” என்றாள் மென்மையாக.
அவரும் மெல்லிய புன்னகை ஒன்றை சிந்த அதற்குள் தில்லை நாதன் குறுக்கே புகுந்து “இவ என் தம்பியோட மூத்த பொண்ணு. இப்போ தான் செகண்ட் இயர் பி.ஏ படிக்கிறா. ஆராதனா பின்னாடி நிக்கிறாளே அவ சின்ன பொண்ணு அபர்ணா. இப்போ தான் பிளஸ் டூ படிக்கிறா. என் தம்பி வெளியூர்ல வேலை பார்க்கிறான். தம்பி சம்சாரம் மூன்னு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டாங்க. அப்போதிலிருந்து இவங்க இரண்டு பேரும் எங்க கூட தான் இருக்காங்க. நீங்க அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்த சமயம் இரண்டு பேரும் பெரியவ காலேஜிம் சின்னவ ஸ்கூலுக்கும் போய்ட்டாங்க. அதான் அப்போ உங்களால இவங்களை பார்க்க முடில” என்று விவரங்களை கூறினார்.
கௌசல்யாவோ மனதிற்குள் ‘இப்போ இவரோட தம்பி குடும்பத்தை பத்தி கேட்டாங்களா? சும்மா பேரை கேட்டிட கூடாதே, அப்படியே தம்பி புராணத்தை சொல்ல ஆரம்பிச்சிடுவாரு’ என்று கணவனை மனதில் திட்டிக் கொண்டு இருந்தார்.
கௌசல்யாவின் முகதிருப்தியின்மையை கண்ட தாட்சாயிணி பேச்சை மாற்றும் பொருத்து “நேரமாகுது நிச்சியத்தை ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்டார்.
“தாராளமா சம்மந்தி” என்று முகம் முழுவதும் புன்னகையோடு சொன்னவர் ஐயரிடம் சம்பிரதாயங்களை ஆரம்பிக்க சொன்னார்.
ரதிபாலா தன் அண்ணன் கேஷவ்வை சீண்டிக் கொண்டே அமர்ந்து இருந்தவளை அவ்வபோது நோட்டமிட்டு கொண்டு இருந்தான் ரகுபதி.
ஏனோ அவனுக்கு ரதிபாலாவை பார்த்தவுடனே பிடித்து விட்டது. தங்கையின் திருமணம் முடிந்ததும் அவன் மனதின் ஆசையை பற்றி கூறலாம் என்று முடிவெடுத்து இருந்தான்.
கௌசல்யாவோ “ஆராதனா நீயும் அபர்ணாவும் போய் சௌந்தர்யா கூட இருங்க. குரல் கொடுத்ததும் அவளை அழைச்சிட்டு வாங்க” என்று முதல் வேலையாக அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார்.
அவர்களும் “சரி பெரியம்மா” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல..
போகும் இருப்பெண்களின் மீது
கேஷவ் விழிகள் சாதாரணமாக ஒரு கணம் படிந்து மீண்டது.
பின் அங்கே நிச்சியத்திற்கு தேவையான நிகழ்வுகள் நடக்க. பெண்ணை அழைத்து வர சொல்லவும், சில நிமிடங்கள் கடந்தும் அவர்கள் வரவில்லை.
சிறிது நேரம் பொறுத்து பார்த்த கௌசல்யா தானே அழைத்து வருவதாக கூறி மகளின் அறைக்கு சென்றார்.
அதன் பின் ஆராதனாவும் அபர்ணாவும் சௌந்தர்யாவை அழைத்து வர, அவர்கள் பின்னால் கௌசல்யா வந்தார்.
சௌந்தர்யாவிற்கோ படப்படப்பாக இருந்தது. எப்படியாவது இந்த நிச்சியத்தை நிறுத்திட வேண்டும் என்று முனைப்போடு இருந்தாள்.
அவளால் அனைவரையும் அடக்கி ஆளும் தாட்சாயிணிக்கு மருமகளாக நிச்சியம் இருக்க முடியாது என்று முடிவெடுத்தாள்.
எங்கே இருந்தாலும் அவளின் குரலே உசந்து இருக்க வேண்டுமென்றும். அனைவரும் தனக்கு கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பவளுக்கு ஏனோ தாட்சாயிணியை பிடிக்காமல் போனது.
சௌந்தர்யாவின் குணமும் அது தான். எப்போதும் அனைதிலும் அதிகாரம் செய்து பழகியவளுக்கு அடங்கி போவது கஷ்டம் தானே.
அது மட்டுமில்லாமல் பெண் பார்க்கும் படலம் அன்று தாட்சாயிணி போட்ட நிபந்தனை வேறு அவள் மனதில் அரித்துக் கொண்டே இருந்தது.
‘இந்த அம்மா வேற அன்னிக்கு நிறைய கண்டிஷன் போட்டுச்சி. அதெல்லாம் நமக்கு செட்டாகது. என்ன கண்றாவி கண்டிஷன் அதெல்லாம்’ என்று நினைத்தவள் கேஷவ் அருகில் நின்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
‘அச்சோ செம ஹண்ட்சமா இருக்கான். இவன் கூட ஜோடியா வெளியே போனா செம கெத்தா இருக்கும். ஆனால் அதுக்கு நம்ம அந்த பொம்பளைக்கு அடிமையா இருக்கனுமே. இல்ல வேணாம் சௌந்து, இது நமக்கு செட்டாகது. அழகான பையனுக்கு ஆசைப்பட்டு நீ அடிமையா போயிடாதே. இந்த கேஷவ் இல்லனா வேற எவனோ அழகானவன் இந்த ஊருல இல்லையா என்ன?’ என்று பலவேறாக யோசித்தவள் ஒரு முடிவோடு நிமிர்ந்து தன் பெற்றோரை பார்த்தாள்.
அதே சமயம் ஐயர் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ள சொல்ல… மோதிரத்தை அவர்கள் கரங்களில் கொடுத்தாள் ரதி.
மோதிரத்தை வாங்கிய சௌந்தர்யாவோ பதற்றத்துடன் கேஷவ்வை ஒரு தரம் பார்த்துவிட்டு தாட்சாயிணிடம் சென்ற பார்வையை பயத்துடன் விலகிக் கொண்டு தன் பெற்றோர் தில்லைநாதனிடமும் கௌசல்யாவிடம் நிலைத்து நிறுத்தினாள்.
கௌசல்யாவோ கண்சாடையால் மிரட்ட, விருப்பமே இல்லாமல் கேஷவ் விரலில் மோதித்தை அணிவித்தாள் சௌந்தர்யா.
கேஷவ் புன்னகையுடன் சௌந்தர்யாவின் விரலை மாட்டி விட்டான்.
காதல் எல்லாம் இருவருக்குமே இல்லை. ஏன் திருமணத்திற்கு முன் வரும் காதல் மீது கேஷவிற்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அதனாலயே அவன் அம்மா பார்த்து வைக்கும் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் நல்லது என்றும் அதன் பின் மனைவியின் மீது தோன்றும் காதல் உண்மையானது என்றும் முழுமையாக நம்பினான்.
சௌந்தர்யாவிற்கோ இந்த காதல் திருமணம் மீது எல்லாம் பெரிய நாட்டமேயில்லை. எங்கே போனாலும் வசதியாக வாழ வேண்டும். தனக்கு பணிவிடை செய்ய பல பேர் இருக்க வேண்டும். அதனாலையே தாட்சாயிணி வீட்டில் சம்மந்தம் பேச வரும் போது சரியென்று ஒப்புக் கொண்டாள்.
தாட்சாயிணி தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டு இருந்த நேரம் தான் புரோக்கர் மூலமாக தில்லைநாதன் குடும்ப விவரம் கிடைக்க.. நல்ல குடும்ப பின்னணியாக இருப்பதால் மகனுக்கு இந்த இடமே பார்த்து முடித்து விடலாம் என்று நினைத்தார்.
ரதிபாலாவிற்கோ தன் அண்ணனிற்கு நல்ல பெண் மனைவியாக அமைய வேண்டும் என்பது மட்டுமே வேண்டுதல்.
ஆனால் தில்லைநாதனுக்கும் கௌசல்யாவிற்கும் அடங்காபிடாரி மகளை எப்படியாவது திருமணம் செய்து அவளை அனுப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான்.
இதில் மாப்பிளை வீட்டாருக்காக பாவம் பார்த்தது என்னவோ ஆராதனாவும் அபர்ணாவும் மட்டும் தான்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
வாசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை கூறிவிட்டு செல்லுங்க நட்பூக்களே.
