அத்தியாயம் 1 

காலேஜில் அமர்ந்திருந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் நன்னிலா.. 

அமைதியாக நடந்துக் கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென்று போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது..

“போனை சைலண்ட்ல போட சொன்னேன் தானே.. யார் போன் அது?..” என கர்ஜித்தார் பேராசிரியர்.. 

“சாரி மேம்.. என் போன் தான்..” என நன்னிலா எழுந்து நிற்க, 

“அவுட்..” என கோபத்தில் கத்தினார் அவர்.. 

“சாரி மேம்..” என்றபடி, வெளியே சென்றவள், வந்த அழைப்பைப் பார்க்க.. 

அது அவளின் தந்தை பூபதி நம்பர்.. 

புருவம் சுருக்கினாள்..

அவளின் தந்தை சாதாரணமாக அவளை அழைத்ததே கிடையாது.. ஏதாவது அர்ஜென்ட் என்றால் கூட வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணுவார்.. 

அதனால் வாட்ஸப் மெசேஜ் நோட்டிபிகேஷன் மட்டும் சைலண்டில் போட்டிருப்பாள்.. 

இன்று ஏன் அழைத்திருக்கிறார் என நினைத்தபடி, மறுபடியும் அவருக்கு அழைத்தார்.. 

எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில், தன் காதோரம் உறவாடிக் கொண்டிருந்த போன் நழுவி தரையில் சில்லு சில்லாக உடைந்தது.. 

போன் தரையில் உடைந்த சத்தத்தில் பேராசிரியர் திரும்பி வாசலைப் பார்க்க.. 

“அப்பாஆஆஅ..” என அலறியபடி, தொப்பென வாசலிலேயே விழுந்தாள் நன்னிலா.. 

“நிலா..” என அழைத்தபடி அவர் வேகமாக வந்து அவளை எழுப்ப முயன்றார்.. 

“மேம்ம்.. மேம்.. அப்பாஆஆஆ.. அப்பாஆஆஅ.. “

“அப்பாவுக்கு என்னாச்சி ம்மா?.. எனிதிங் சீரியஸ்..” என்றார், அவளின் அழுகையை சற்று பயத்துடன் பார்த்துக் கொண்டே, 

“அப்..அப்பா.. மேல.. லாரி ஏறிடுச்சு மேம்..” என அழுகையும், கண்ணீரும் கலந்து சொன்னவளைப் பார்த்து, வகுப்பே எழுந்து வந்து அவளின் அருகில் நின்றது.. 

அவளின் தோழி மானசா, “ஹேய்ய்ய். என்னாச்சி டி.. அப்பாவுக்கு?..” என்றாள் தோழி அழுவதை தாங்க முடியாமல், 

“அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சாம்.. வேதா ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம்?..” என கண்ணீர் மல்க சொன்னவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டாள் மானசா… 

“மேம்..” என அவரைப் பார்த்தாள் மானசா.. 

“அழைச்சிட்டுப் போ மானசா?..” என்றார் அவரும், மனிதாபிமானம் உள்ள மனிதராக, 

அழுதுக் கொண்டிருந்தவளை தாங்கி எழுப்பி நிற்க வைத்தது, அவளின் உள்ள தோழன் கெளசிக் தான்..

“நிலா வா போகலாம்..” என வேகமாக அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.. 

அதற்குள் மானசா, செக்யூரிட்டிடம் சொல்லி ஒரு ஆட்டோவை பிடித்து வந்தாள்.. 

“ஏறு நிலா..” என்றதும் ஆட்டோவில் மூவரும் ஏறினார்கள்.. 

ஆட்டோவில் வந்து சேர்ந்தனர் மூவரும்.. 

கண்முன்னே தெரிந்த மிகப்பெரிய கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்தாள் நன்னிலா.. 

வேதா ஹாஸ்பிட்டல் என கம்பீரமாக எழுந்து நின்றது அந்தக் கட்டிடம்.. 

தன் தந்தையின் உயிர் இங்கே அல்லவா துடித்துக் கொண்டிருக்கிறது.. 

அதை நினைக்கும் போதே கண்கள் கலங்கியது.. 

அழுதுக் கொண்டே நின்றிருந்தவளின் கரம் பிடித்து இழுத்துச் சென்றான் கெளசிக்.. 

“வா டி.. நாம போய்ப் பார்க்கலாம்.. அங்கிள்க்கு எதுவும் ஆகியிருக்காது.. சின்ன ஆக்சிடெண்டா தான் இருக்கும்.. வா போகலாம்.. நாம வரும் போது, அங்கிளையும் கூட்டிட்டுப் போகலாம்” என தைரியம் சொல்லி அழைத்துச் சென்றான்.. 

“ஆமா நிலா.. கெளசிக் சொல்லுறது தான் கரெக்ட்.. அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்காது.. வா போகலாம்..” என்றவள், தோழியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் வாசலில் நின்றிருந்தாள்.. 

அவர்கள் சொன்ன ஆறுதல் அனைத்தும், நிழலுக்கு இறைத்த நீர் போன்றானது.. 

நன்னிலாவின் காதுகளில் எதுவுமே விழவில்லை.. 

உடல் நடுங்க அந்த ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தாள் நன்னிலா.. 

வரவேற்பறையில் ஓடிச்சென்று நின்றாள்.. 

“சிஸ்டர்.. இங்கே ஆக்சிடெண்ட் கேஸ்..” என கண்ணீர் தளும்ப கேட்டாள் நிலா.. 

“ஆக்சிடெண்ட்..” என இழுத்த அந்த நர்ஸ், “ஓஹ்.. அந்த லாரி ஆக்சிடெண்ட்..” 

“ஆ.. ஆமா.. சிஸ்டர்.. லாரி தான்.. என் அப்பா தான்.. அவருக்கு ஒன்னுமில்லையே.. நான் அவரை அழைச்சிட்டுப் போகலாம் தானே..” என தவிப்பும், பயமும், படபடப்பும் கலந்து கேட்டாள் நிலா.. 

“இருங்க மேம்.. அவுங்க இன்னும் சீரியஸ் கண்டிசன்ல தான் இருக்காங்க.. அவுங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணணும்.. ப்ளட் ரிலேஷன்க்காக வெய்ட்டிங்க..” என சுருக்கமாக சொல்லி முடித்தாள் அந்தப் பெண்.. 

துடித்துப் போனாள் நிலா.. 

“என்னஹ்?.. சீரியஸா இருக்காரா?..” என அழுதுக்கொண்டே கேட்டாள் நிலா.. 

“ஆமா சீரியஸா தான் இருக்கார்.. நீங்க தேர்ட் ப்ளோர் போங்க.. அங்கே தான் டாக்டர் இருக்காங்க..” என்றாள் அந்தப் பெண், 

லிஃப்ட் என்பதை அறவே மறந்து, விறுவிறுவென படிகளில் ஏறினாள் நிலா.. 

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க.. எதிர்ப்படுபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?.. என எதையும் அறிந்துக் கொள்ளாமல், தவிப்பும், பயமும் கலந்து ஓடினாள் நிலா.. 

மூன்றாவது தளத்தில் வந்து நின்றவளின் நேர் எதிரே தெரிந்தது ஐசியூ வார்ட் தான்.. 

கண்கள் கலங்க, நேராக அந்தக் கதவின் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தாள்.. 

“ஆஆஆஆஆஆஆ.. அப்பாஆஆஆஆ..” என தன்னையும் மீறி அலறி விட்டாள்.. 

அவளின் அலறல் சத்தத்தில் வேகமாக அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் நர்ஸ் ஒருத்தி.. 

“ஹலோ.. யாரும்மா நீ?.. ஐசியூ வார்ட் முன்னாடி அலறிட்டு இருக்க?.. உள்ளே இருக்கிறவர் நிலைமை என்னன்னு தெரியுமா?.. பார்த்தா படிச்சப் பொண்ணு மாதிரி தெரியுற?..” என சிடுசிடுத்தாள் அந்தப் பெண், 

அவரின் அருகில் வேகமாக ஓடிச்சென்றாள் நிலா.. 

“அவர்.. அவர்.. என்.. என்..னோட.. அப்பாஹ்.. தான்..” என தடுமாறிய நாக்கைக் கட்டுப்படுத்தி சொன்னாள் நிலா.. 

“ஓஹ்.. நீதான் அவர் பொண்ணா?.. வாங்க டாக்டரைப் பார்க்கப் போகலாம்?..” என்றதும், அவளை ஒரு அறைக்கு முன்பாக நிறுத்தினாள் அந்தப் பெண்.. 

வாசலில் நின்றிருந்த பெண், அவள் வந்து நின்றதுமே உள்ளே சென்று அறிவித்து விட்டு வெளியே வந்தாள்.. 

டாக்டரைப் பார்ப்பதற்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் நரகமாக கழிந்தது அவளுக்கு.. 

சில நிமிடங்களில் அந்தப் பெண் கதவை திறந்து, “டாக்டரை உங்களை மட்டும் உள்ளே வரச்சொன்னாரு?..” என்றாள் அந்தப் பெண்.. 

பயத்தில் திருதிருவென விழித்தாள் நிலா.. 

“என்னைஹ் மட்டுமா?..” என தவிப்பாக அவள் கேட்க, 

“ஆமா மேம்.. உங்களை மட்டும் தான் வரச் சொல்லியிருக்காரு..” என்றாள் அவள்.. 

“ம்ம்..” என தள்ளாடிய கால்களை, கடினப்பட்டு உள்ளே இழுத்துச் சென்றாள் நிலா.. 

அவளுக்கு முன்னால் இருந்தவர், தன் முன்னால் இருந்த கோப்புகளை திருப்பி, திருப்பி பார்த்துக்க கொண்டிருந்தார்.. 

“டாக்டர்..” என்றாள் நலிந்த குரலில், 

“யாஹ்.. சிட் டவுண்..” என்றவன், மீண்டும் அந்தக் காகிதத்தை தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. 

அதைப் பார்த்தவளின் முகம் பயத்தில் வெளிறியது.. 

அவன் திருப்பிப் பார்க்கும் பொழுது அதன் முகப்பில் இருந்து பூபதி என்ற பெயரை அவளை அச்சுறுத்தியது.. 

“டாக்டர்.. என்.. அப்பாஹ்?..” என்றாள் அழுத குரலில், கண்களை துடைத்தபடி.. 

“லாரி அவர் மேல ஏறியிருக்கு..” என்றதும், 

“அப்பாஆஆஆஆ.. அப்பாஆஆ..” என வாய்விட்டு கதறியழ, 

“ஸ்ஸ்ஸ்.. இது என்ன ஒப்பாரி வைக்கிற இடமா?.. அப்பா.. அப்பாஆன்னு அழுதுக்கிட்டு இருக்க?.. இது ஹாஸ்பிட்டல்.. கீப் கொய்ட்..” என்றான் அதிகாரமாக, 

சட்டென்று தன் வாயை இறுக்க மூடினாள் நிலா.. 

“ம்ம்..” என உறுமியவன், 

“உங்கப்பாவை இந்த ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வரும் போதே அவருக்கு வலது கால் இல்லை..” என்றதும், அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்.. 

சிறு பெண் அவளால், அவன் சொல்லும் வார்த்தைகளை கேட்க தெம்பு வேண்டுமே?.. 

தன் தந்தைக்கு ஆக்சிடெண்ட் என்பதிலேயே உடைந்துப் போனவள், இப்பொழுது காலை இழந்து நிற்கிறார் என்பதைக் கேட்டதும் தன்னையும் மீறி மயங்கி விழுந்து விட்டாள்.. 

தன் சுழற் நாற்காலியை லேசாக இழுத்து, தரையில் மயங்கி கிடந்தவளின் அழுத்தமாக பார்த்தவன், 

“இதுக்கே மயங்கிட்டா.. இன்னும் நாம சொல்லுறதைக் கேட்டா.. அவ அப்பாவுக்கு பதிலா இவ தான் பெட்ல அடமிட் ஆகணும் போல..” என்றான் சற்று இரக்கமின்றி.. 

தன் டேபிளில் இருந்த பெல்லை தட்டினான்.. ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. 

“இந்தப் பொண்ணுக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணு..” என்றான் மிக சாதாரணமாக, 

அவன் சொன்ன பின்பு தான் கீழே குனிந்துப் பார்த்தாள் அந்தப் பெண்.. 

நிலா மயங்கி தரையிலேயே கிடந்தாள்.. 

கீழே விழுந்துக் கிடந்தவளைக் கண்டு பயந்து, “அச்சோஓஒ.. என்னாச்சி சார்?..” என்றாள் அவளையும் மீறி.. 

சட்..சட்.. கைகள் சொடக்கிடும் சத்தத்தில் வேகமாக அந்தப் பெண் நிமிர்ந்துப் பார்த்தாள்.. 

“என்னஹ்?.. எமோசனல் டிராமாவா?.. சொன்ன வேலையை மட்டும் செய்.. அதிகப்பிரசிங்கத்தனம் பண்ண, ஐ வில் பனிஷ் யூ..” என்றான் அதிகாரக்குரலில்.. 

“சாரி டாக்டர்..” என்றவள், அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் கொண்டு தெளித்தாள்.. 

லேசாக அல்லி மலர்களை விரித்தாள் நிலா.. 

நிலாவிற்கு சிறிது, சிறிதாக தண்ணீரை புகட்டினாள் அந்தப் பெண்.. 

தண்ணீர் தொண்டைக்குழிக்குள் சென்ற பின்பு தான் அவளுக்கு தான் இருக்கும் நிலையே புரிந்தது..

வேகமாக எழுந்தவள், அவனின் முன்பாக சென்று நின்றாள்.. 

“என் அப்பாவுக்கு, வேற ஏதாவது பிரச்சினையில்லையே?..” என்றாள் அதீத பதட்டத்தில்..

“உட்காரு.. சொல்றேன்..” என்றான் அவன்.. 

“இல்லை சார்.. நான் நிக்கிறேன்..” 

“ஏன், அடுத்து மயங்கி விழவா?.. சிட் டவுண்..” என்றான் கர்ஜனையாக, 

வேகமாக சென்று அவன் முன்னே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள்.. 

“இங்கே பாரு, உங்கப்பாவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு..” என்றதும், மறுபடியும் அழத் தயாரானாள் நிலா.. 

“ஹேய்ய். இடியட்ட்ட்.. அழுதேன்னு வை.. அப்படியே சங்கை நெறிச்சிருவேன்.. நான் சொல்லி முடிக்கிறதெல்லாம் அமைதியாக் கேட்டுட்டு.. அப்புறம் மயங்கி விழுந்துத் தொலை..” என்றவனை கண்கள் கலங்க பார்த்தாள் நிலா.. 

“உங்கப்பாவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு.” என்றதும், அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் ஆறாய் ஓடியது.. 

முதுகெலும்பும் உடைஞ்சிருக்கு.. வலது காலை எடுத்தே ஆக வேண்டி கண்டிசன்.. ஆங்காங்கே காயம், எல்லாமே இருக்கு.. எழுந்து நடக்கவே அவருக்கு ஆறு மாசம்.. இல்லை ஒரு வருஷம் ஆகலாம்.. 

அது அவரோட முயற்சியைப் பொறுத்து.. 

“இப்போ சொல்லு.. நான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கவா?..” என்றான் அவன்.. 

“சார்.. ஆரம்பிச்சிடுங்க.. நான் காசு கட்டியிடுறேன்.. எங்களுக்கு வீடு இருக்கு அதை வித்தாவது கட்டியிடுறேன்..” என்றாள், எப்படியாவது தன் தந்தையைக் காப்பாற்றிவடும் நோக்கில், 

“அப்போ ஓகே பைன்..நீ வீட்டை வித்துட்டு வருவீயோ?.. இல்லை காட்டை வீத்துட்டு வருவீயோ?.. சிக்கீரமா வந்திடு?.. அதெல்லாம் உன் பிரச்சினை.. முழுசா 40 லட்சத்தோட சாயிந்திரம் வந்திடு..” என்றவன், தன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை ஸ்டைலாக மாட்டியவன், 

“சாயிந்திரம் 6 மணிக்குள்ள 40 லட்சத்தோட என்னை வந்துப் பாரு..” என்று விட்டு அவன் நகர்ந்து விட்டான்.. 

பேயறைந்தாற் போன்று அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள் நிலா.. 

விழிகள் கூட அசைய மறுத்தது.. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page