“40 லட்சமா?..” என அதிர்ந்து விழித்தாள் நிலா..
திருதிருவென விழித்தபடி அமர்ந்தவளின் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது..
திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.. அங்கு மானசா தான் நின்றிருந்தாள்..
“என்னாச்சி டி?.. டாக்டர் என்ன சொன்னாங்க?.. அப்பாவுக்கு ஒன்னுமில்லை தானே.. அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்களா?..” என்றாள் தவிப்புடன்..
‘இல்லை..’ என்பதாய், இடவலமாய் தலையாட்டினாள் நிலா..
“அப்போ என்ன சொன்னாங்க?..” என்றாள் மானசா சற்று தவிப்பாக,
பூபதியின் உடல்நிலையை பற்றி ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் நிலா..
“என்னடி என்னவெல்லாமோ சொல்லுற?.. டாக்டர் எவ்வளவு செலவு ஆகணும்னு சொல்லுறாங்க..” என்றாள்..
“40 லட்சம் ஆகுமாம்?..” என்றாள் வலி நிறைந்த குரலில்,
“40 லட்சமா?..” என வாயை பிளந்து விட்டாள் மானசா..
“ஆமா டாக்டர் அப்படித்தான் சொல்லிட்டுப் போறாரு..” என்றவளை கண்ணீர் ததும்ப பார்த்தவள்,
“என் அப்பாவை என்னால காப்பாத்த முடியாம போயிடு மானசா?..” என்றாள் பயத்தில் படபடவென அடித்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்,
“லூசு மாதிரி உளறாதே?.. ஏதாவது செய்து அப்பாவைக் காப்பாத்தலாம்.. வா..” என்றவள், அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
“அப்பாவை பார்க்கப் போறீயா?..” என்றாள் மானசா..
“இல்லை.. இல்லை.. அப்பாவை அந்த மாதிரி கோலத்துல, மறுபடியும் பார்க்கிற துணிச்சல் எனக்கு இல்லை டி..” என மானசாவின் தோளில் சரிந்து கண்ணீர் வடித்தாள் நிலா..
“சரி விடு.. இப்போ 40 லட்சத்தை ரெடி பண்ணுவோம்..” என்ற பின்பு தான் அவளுக்கு ஒரு ஞாபகம் வந்தது..
“வீடு வரைக்கும் போயிட்டு வரலாம் வா..” என்றவள், கெளசிக்கையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..
“என்னடி பண்ண போற?.. உன் அப்பா ஏதும் காசு சேர்த்து வச்சிருக்காரா?..” என்றான் கெளசிக் வீட்டையே அளந்தபடி,
“இல்லை.. அப்பாவுக்கு காசு சேர்த்து வைக்கிற அளவுக்கெல்லாம் தெம்பில்லை. இந்த வீடு, அம்மாவோட 20 பவுன் நகை மட்டும் தான் எங்களுக்குன்னு இருக்கு.. அதைக் கொடுத்து தான் இப்போ அப்பாவைக் காப்பாத்த போறேன்..” என்றவள், நொடியும் தாமதிக்காமல் தன் தந்தையின் பீரோவை திறந்தாள்..
அதில் உள் பக்க லாக்கரில் 20 பவுன் நகை பளீச்சென்று மின்னியது.. அவளின் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த சொத்து..
அது மட்டுமில்லாமல் அதில் தன் அன்னையின் மூச்சுக்காற்றும் இருக்கிறதே..
அதை நினைக்கும் போதே வலித்தது..
ஆனால் இன்று தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற பயன்படப் போகிறது என மனதுக்குள் ஒரு வித நிம்மதிக் கொண்டது..
வேகமாக பணத்தை எடுத்து ஹேன்ட்பேக்கில் போட்டுக் கொண்டாள்.. வீட்டோட பத்திரத்தையும் எடுத்து பேக்கில் வைத்துக் கொண்டாள்..
“வீட்டோட பத்திரம் எதுக்கு?..” என்றாள் மானசா,
“இல்லை.. 40 லட்சத்துக்கு 20 பவுன் நகை மட்டும் எப்படி பத்தும்?.. அதான் வீட்டை வித்துடலாம்னு இருக்கேன்..” என்றாள் கண்களில் கண்ணீருடன்..
எப்படியாவது தனக்கென்று உயிர் வாழும் தன் தந்தையை காப்பாத்தி விட்டால் போதும் என்று மட்டுமே நினைத்தாள்..
“சரிடி வா போகலாம்..” என மூவரும் மறுபடியும் ஹாஸ்பிட்டலை நோக்கி புறப்பட்டனர்..
வரும் பொழுது தனி ஆட்டோவில் வந்தவர்களுக்கு, செல்லும் போது தனி ஆட்டோ கிடைக்கவில்லை.. ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறினார்கள்..
தன் தந்தையின் நிலையை எண்ணி அழுதுக் கொண்டே இருந்தவள், அருகில் இருந்தவர் தன்னை நோட்டமிடுவதைக் கூட கவனிக்கவில்லை..
நிலாவின் கெட்ட நேரமோ?.. என்னவோ?.. அவள் கவனம் சிதைந்த நேரம், அவளின் ஹேன்ட்பேக் திருடப்பட்டு விட்டது..
அதை அவள் கவனிக்கவேயில்லை..
ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கியவள், பணத்திற்காக ஹேன்ட்பேக்கை தேட, அவளின் தோள்வளைவில் அது இல்லை..
அதிர்ந்து விட்டாள்..
“பை.. பை.. ஹேன்ட்பேக்கை காணும் மானசா?..” என்றாள் அழுதபடி,
எத்தனை பவுன்?.. வீட்டின் பத்திரம் அனைத்தும் அதில் அல்லவா இருந்தது..
அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள்.. அடுத்து என்னவென்று கூட யோசிக்க முடியவில்லை..
“அண்ணா.. அண்ணாஆஆ.. என் ஹேன்ட்பேக்கை காணும்..” என்றாள் பதட்டத்துடன்..
“சாவுக்கிராக்கி ஓசி சவாரியா நீ?.. போய்த் தொலை..” என அவரும் அவர் பங்குக்கு திட்டிவிட்டுச் சென்றார்..
இவளுக்கோ வாழ்வே இருட்டிக் கொண்டு வந்தது..
“மானசா?..” என கண்ணீருடன் நடந்ததை சொல்ல, அவளுக்கோ தன் தோழியின் மீது தான் கோபம் வந்தது..
எவ்வளவு சிக்கலான சூழ்நிலை.. இந்த நேரத்தில் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருக்கிறாள்..
“அறிவில்லை உனக்கு?. அங்கே உன் அப்பா வாழ்வா?.. சாவான்னு? போராடிட்டு இருக்காங்க.. நீ கொண்டு வந்த காசை பத்திரமா வச்சிக்க மாட்ட?..” என சீறினாள் மானசா..
“சத்தியமா நான் என் மடியில தான்டி வச்சிருந்தேன்.. ஆனா எப்படி மிஸ் ஆச்சின்னு எனக்குத் தெரியலை..” என கண்ணீர் மல்க கேட்டாள்..
“இனி பணத்துக்கு என்ன பண்ண போற?.. அப்பாவை எப்படிக் காப்பாத்த போற?..” என எரிச்சலுடன் கேட்டாள் மானசா..
கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக்கூட மனமின்றி நின்றாள் நிலா..
அவளுக்கு எல்லா பக்க கதவுகளும் அடைத்த உணர்வு.. கண்களும் இருட்டிக் கொண்டு வந்தது..
“ப்ளீஸ் மானசா.. எப்படியாவது என் அப்பாவைக் காப்பாத்தணும்.. இன்னும் 3 மணி நேரம் தான் இருக்கு..” என்றவளுக்கு, தன் தந்தையின் அவல நிலையை நினைத்து மேலும் கண்ணீர் வந்தது..
“சரி.. வா.. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணுவோம்..” என அங்கு செல்ல, அவர்களுக்கு இவள் பத்தோடு பதினொன்று தானே..
கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர்.
“அப்பா.. அப்பா..” என அரற்றிக் கொண்டு வந்தாள்..
போலீஸ் கம்ப்ளைன்ட் காப்பியையும் எடுத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்து நின்றாள் நிலா..
வேறு வழியில்லையே.. யார் காலில் விழுந்தாவது, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றி விடும் நிலையில் தான் அவள் இருந்தாள்..
டாக்டரை பார்க்க வேண்டும்?.. என அவள் அமர்ந்திருக்க.. சிறிது நேரத்தில் அவள் அழைக்கப்பட்டாள்..
சரியாக அவனைப் பார்க்கும் பொழுது மட்டும் நிலா தனியாக தான் சென்றாள்..
அதற்குக் காரணம் உடன் வந்த மானசா, கெளசிக் இருவரையும் மூன்றாம் தளத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஒருவனின் உத்தரவால்..
குளுமையூட்டப்பட்ட அறையில், வேர்த்து விறுவிறுக்க அமர்ந்திருந்தாள் நிலா..
அவளின் எதிரே இருந்த சேரில் கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் பார்வையோ, எதிரில் இருந்தவளை கூர்மையாக பார்த்தது..
“பில் செட்டில் பண்ணிட்டீயா?..” என்றான் கம்பீரமாக,
அமைதியாக அமர்ந்திருந்தாள் நிலா..
“என்னாச்சி?.. நீ பில் செட்டில் பண்ணிட்டா, நான் போய் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணுவேன்.. ஏற்கனவே உன் அப்பாவோட பாடி கண்டிசன்க்கு ரொம்ப சிரமப்படுறாரு..”
“அப்பாவுக்கு என்னாச்சி?.. நல்லா இருக்காரா??..” என்றாள் தவிப்பாக,
“லாரி ஏறியிருக்குமா?.. வலிக்காம?.. மயிலிறகு தடவிக் கொடுக்கிற மாதிரி சுகமா இருக்குமா?.. உயிர் இன்னும் வர இருக்கிறதே பெரிய விஷயம்.. நீ காசைக் கொடு.. நான் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணணும்..” என்றான் அவளையே உற்றுப் பார்த்தபடி,
அவனின் முன்பாக ஒரு பேப்பரை நீட்டினாள்..
“ஓஹ்.. பில் செட்டில் பண்ணிட்டீயா?.. அப்போ ஏன் எனக்கு போன் வரலை?..” என கேட்டபடி, அந்த பேப்பரை விரித்துப் படித்தான்..
அதில் இருந்தவற்றை படித்தவனின் இதழ்க்கடையோரம் சிறு மர்மப்புன்னகை..
அதை அறியாமல் போனது யார் பிழையோ?..
“ஓஹ்.. அப்போ எல்லாத்தையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிற?..”
“ம்ம்ம்..” என்றாள் அழுதுக் கொண்டே,
“நீ அழுதா மட்டும் காசு திரும்பக் கிடைச்சிடுமா?.. லிசன்.. நான் உனக்கு அந்தக் காசு கொடுக்கிறேன்..” என்றவனைப் பார்த்து, மனதில் அப்படியொரு நிம்மதி..
காசுக்காக அவள் அலைந்த அலைச்சல் அவளுக்குத் தெரியுமே.. வரும் வழியெங்கும் அவளுக்கு அறிந்தவர், தெரிந்தவர் என அத்தனை பேரிடமும் காசுக்காக போன் போட்டு அழுதாளே..
யாரும் அவளுக்கு துணையில்லையே..
சட்டென நாற்காலியை விட்டு எழுந்தவள், நேராக அவனருகில் சென்று, அவளின் காலிலேயே விழுந்து விட்டாள்..
“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.. என் அப்பாவை எப்படியாவது காப்பாத்திக் கொடுத்துடுங்க.. எனக்கு என் அப்பாவை தவிர வேறு யாருமில்லை..” என விம்மியழுதபடி தன் காலில் விழுந்து கெஞ்சிய சின்னஞ்சிறு பெண்ணவளை விழுங்கி விடுவதை போல் பார்த்தான்..
“முழுசா சொல்லுறதுக்கு முன்னாடியே ரியாக்ட் பண்றது எனக்கு சுத்தமாக பிடிக்காது.. உன் அப்பாவைக் காப்பாத்தணும்னா, நான் சொல்லுற விஷயத்துக்கு நீ சம்மதிக்கணும்..” என்றான் அழுத்தமாக,
திருதிருவென முழித்தாள் நிலா..
அவளுக்கு அவன் சொல்ல வருவதே புரியவில்லை..
“போய் சேர்ல உட்காரு..” என்றான் அதீத எரிச்சல் குரலில்,
எதற்கெடுத்தாலும் அழுபவளின் மேல் எரிச்சல் தான் தோன்றியது..
“இவள் தனக்குத் தேவையா?..” என்று தோன்றினாலும்.. அவளின் முகம் கண்டிப்பாக இவள் தான் அவன் தேவை என்று உணர்த்தியது…
“சொல்லுங்க டாக்டர்.. நான் என்ன வேணும்னாலும் செய்றேன்.. இந்த ஹாஸ்பிட்டல் வேலை பார்க்கணுமா?.. கண்டிப்பா பார்க்கிறேன்.. பெருக்கி, துடைக்கிற வேலை கூட பார்க்கிறேன் டாக்டர்..” என்றாள் கண்ணீர் பெருக,
“பெருக்கித் துடைக்கிற வேலைக்கெல்லாம் ஆள் வச்சிருக்கேன்.. என் படுக்கைக்குத் தான் இன்னும் ஆள் இல்லை..” என்றான் அவளையே கூர்ந்து பார்த்தபடி,
அவன் சொன்ன வார்த்தைகள் அவள் செவியில் விழுந்து மூளையில் பதிந்து, மனது அதை ஏற்றுக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது..
“புரியலை டாக்டர்..” என்றாள் தெளிவில்லாத முகத்துடன்,
“புரியலையா?.. நீ படிக்கிற பொண்ணு தான்.. ஆறு மாசம் என்னோட பெட் பாட்னரா இருக்கணும்னு சொல்லுறேன்.. இப்பவாது புரியுதா?..
இல்லை.. நீயும் நானும் பிஸிக்கல் ரிலேஷன்சிப்ல இருக்கணும்னு சொல்லணுமா?..
இல்லை ரெண்டு பேரும் தாம்பத்ய உறவு மட்டும் வச்சிக்கப் போறோம்னு சொல்லணுமா?. உனக்கு எப்படிச் சொன்னா புரியும்?..” என்றான் அவளை துளைத்தெடுப்பதை போல் பார்த்துக் கொண்டே,
அதிர்ந்து தன் முட்டைக் கண்களை விரித்தாள் நிலா..
“வாட்ட்.. படுக்கக் கூப்பிடுறீயா?..” என அதிர்ந்தவளுக்கு, அப்படியொரு ஆத்திரம்..
தன் தந்தையின் உயிரை பணயம் வைத்து, தன்னை பகடைக்காயாய் கேட்கிறானா?.. அப்படியொரு கோபம் வந்தது..
“ச்சீய்ய்ய.. நீயெல்லாம் ஒரு டாக்டர்.. உனக்கெல்லாம் எம்.பி.பி.எஸ் னு ஒரு பட்டம் வேற?.. தெருப் பொறுக்கி நாயே..” என ஆங்காரமாக கத்தியவள், வேகமாக கதவை திறக்கப் போக,
“ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு கண்ணம்மா..” என்றவனின் குரலில் அனல் தெறிக்க பார்த்தாள் நிலா..
“டோன்ட் கால் மீ கண்ணம்மா..” என்றாள் அதீத ஆத்திரத்தில்,
“ஓஹ்.. அப்போ கண்ணம்மா, நான் சொல்றதை நல்லா கேளு கண்ணம்மா.. உன் அப்பாவோட உயிர் உனக்கு வேண்டாமா கண்ணம்மா?..” என்றான் சிரித்துக் கொண்டே,
அவனின் சிரிப்பைப் பார்த்தவளுக்கு உயிர் நின்று துடித்தது..
“அப்பாஹ்?.” என்றாள் அதீத வலியில்..
அவளின் மானத்தைப் பற்றிக் கவலைப்பட்டவளுக்கு, தன் தந்தையின் உயிர் ஊசலாடுகிறது என்பதை மறந்து விட்டாள்..
“என்ன பார்க்கிற? உன் அப்பா உயிர் தான்.. நீ வேற ஹாஸ்பிட்டல் கொண்டு போய் பார்க்கிறதா இருந்தாலும். பாரத்துக்கோ.. பட்.. உன் அப்பாவோட ஆயுள் இன்னும் 1 மணி நேரம் தான்.. இங்கே இருந்து ஷிப்ட்டாகவே அரை மணி நேரம் ஆகிடும்.. அதுக்கப்புறம் எங்கே போய் சேர்ப்ப?.. யாரு பார்த்துப்பா.. அப்புறம் அப்பாவை இழந்துட்டு அனாதையா நிக்க வேண்டியது தான்..” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்..
“இவ்வளவு தானா நீ?.. ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டியவனே, ஓர் உயிரைப் பிடித்து வைத்து பேரம் பேசுகிறாயா?..” என தவிப்பாக பார்த்தாள்..
