அத்தியாயம் – 2

 

அத்தியாயம் – 2

    கீர்த்தி திடீரென்று மயங்கி விழவும் உடனே அங்கிருந்தவர்கள் பதறி, என்ன ஆச்சு என்று தண்ணீர் எடுத்து வந்து  ரம்யா கையில் கொடுக்க,

     ரம்யாவோ பதட்டமாக கீர்த்தி முகத்தில் தண்ணீர் தெளிக்க..…

     கீர்த்தி மெதுவாக கண்ணை திறந்து பார்க்கவும் தான். சுற்றி இருந்தவர்கள் ஆசுவாச பெருமூச்சு விட்டனர். 

    ஆனால் அவள் எதிரில் நின்றவனோ, முகத்தில் எந்த வித பதட்டமும் இன்றி தன் இரு கைகளையும் கட்டியபடி அசால்ட்டான பார்வையை அவள் மீது செலுத்தியபடி நிற்க,

     அதற்கு மாறாக   அவளை தாங்கி பிடித்திருந்த அவளது அக்காவும், அன்னையும் கவலையான முகத்துடன் அவளை பார்த்து, ” என்ன ஆச்சோ ஏதாச்சோ ” என்று அவளை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

     இவளோ அவனிடமிருந்து பார்வையை விலக்கி, “எனக்கு ஒன்னும் இல்லம்மா எதுக்கு என்ன இப்புடி பாக்குறீங்க. நிச்சயத்துக்கு லேட்டா வந்துருவேனோன்ற அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன். அதனால மயக்கம் வந்துருச்சு போல ” என்று அவள் வாயில் வந்த பொய்யை கூற.…

       உடனே கூட்டத்திலிருந்து அவளை விலக்கி கைத்தாங்கலாக அங்கிருந்த அறைக்கு  அழைத்துச் சென்ற லட்சுமியும் ரம்யாவும். அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து,

    உணவு கொண்டு வர சொல்லி லட்சுமி கூற, அதுக்குள் ரம்யா  தண்ணீரை குடிக்க சொல்லி கீர்த்தியிடம் கொடுக்க,

     புன்னகை முகமாக அதை வாங்கி குடித்தவள்.

   “ அம்மா இப்ப நீங்க எதுக்கு இப்படி பதறீங்க. ஒன்னும் இல்ல ரிலாக்ஸா இருங்க. அக்கா நீயாவது சொல்லு.”

     “என்னடி அவ சொல்றது. தனியா வேற இருக்க. ஒழுங்கா சாப்பிடுறியா, இல்லையா”

  “ அம்மா ”

  ” இந்த மனுஷனோட கொடுமை இல்லாம இருக்கேன் தான் நானும் உன்னை தனியா விட்டு வச்சிருக்கேன். ஆனா  நீ பத்திரமா இருக்கியா சாப்டியா, இல்லையான்னு. என் நினைப்பு ஃபுல்லா உன் கிட்ட தான் இருக்கு. இப்ப பாரு  அதுக்கேத்த மாதிரி சாப்பிடாம வந்து மயங்கி விழுந்திருக்க, இது மாதிரி எத்தனை தடவை நடந்துச்சோ, என் பிள்ளைக்கு” என்று அவர் கீர்த்தி தலையை தடவி பேச,

    அவரின் அன்பில் உருகி தான் போனாள்.

    “ஆமாம்மா பேசாம  நம்ம கூடயே வச்சுக்கலாமா?”

    ” ஓ மை காட். எதுக்கு ரெண்டு பேரும் இந்த அளவு பதறீங்க” என்று கீர்த்தி கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அந்த அறையின் உள்ளே நுழைந்த அஸ்வின் அப்பொழுது  தான் கீர்த்தியை பார்த்தான்.

      கீர்த்தி வந்த உடனே ஆசையாக அவளை பார்க்க வேண்டும் என்று எழுந்தவனிடம், அவனது அப்பா ஒரு வேலையை கொடுத்து அனுப்பி விட, வேறு வழியில்லாமல் சென்றவன். அதை முடித்துவிட்டு வருவதற்குள் கீர்த்தி மயங்கி விழுந்த செய்தி கேட்டு பதறி அடித்து தான் ஓடி வந்தான்.

     கீர்த்தியோ அஸ்வினை பார்த்ததும் அழகாக சிரித்து, அண்ணா என்று அன்பாக அழைக்க, 

     அவனோ கண்களில் ஒருவித அழைப்புறுதளுடன் ” நல்லா தானே இருந்த கீர்த்தி. என்னாச்சும்மா மயங்கி விழுந்துட்டேன்னு சொன்னாங்க” என்று அருகில் வந்து தலையை பாசமாக தடவ,

     “ஐயோ அண்ணா.  நீங்க வேற இவங்க ரெண்டு பேரும் இதை கேட்டு தான் பயந்துட்டு இருக்காங்க. நீங்க திரும்ப ஆரம்பிக்காதிங்க. எனக்கு ஒன்னும் இல்ல. ஆஃபிஸ்ல கொஞ்சம் லேட்டா தான் வேலை முடிஞ்சுச்சு அண்ணா. சாப்பிட்டு வந்தால் எங்க நிச்சயத்தை மிஸ் பண்ணிவிடுவேனோன்னு  அப்படியே ஃபிலைட் புடிச்சு வந்துட்டேன்.

        பிளைட் லேண்ட் ஆகி நம்ம ஊரு பஸ் புடிச்சு வரணுமே. இங்க தான் டாக்ஸி, ஆட்டோ எதுவுமே இல்லையே, அந்த பரபரப்புல வந்ததுனால சாப்பிடாம மயங்கி விழுந்துட்டேன். வேற எதுவும் இல்ல. 

      அம்மா நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் சாப்பிடாம எல்லாம் இருக்க மாட்டேன். கரெக்டா சாப்பிட்டுருவேன். “

      ”  என்னவோ போ என் மனசு ஆற வரமாட்டேங்குது” 

      அங்கிருந்தவர்களின் அன்பு தொல்லையை தான் கீர்த்தியால் தாங்க முடியவில்லை. அனைவரிடமும் அதை இதை பேசி ஒரு வழியாக சமாளித்தவள். அவர்கள் கொடுத்த உணவையும் அன்பாக வாங்கி சாப்பிட உண்மையில் அவள் கண்கள் கலங்க தான் செய்தது.

       இவர்களை பார்த்த பின்பு, தனக்கு அன்னையில்லை என்ற குறை அவளுக்கு எப்பொழுதுமே வந்ததில்லை. சிறுவயதில் இவர்களுடன் தான் இருந்தாள். ஆனால் எந்த அளவு இவர்களிடமிருந்து அன்பு கிடைக்குமோ, அதே அளவு தன் தந்தையிடம் இருந்து வெறுப்பையும் இவள் சம்பாதித்துக் கொண்டாள்.

      ஒவ்வொரு முறையும் இவளிடம் பேசும் பொழுதும், தேள் தன் கொடுக்கை வைத்து கொட்டுவது போல தான் அவர் பேச்சு இருக்கும். இளைய வயதில் அவரின் திட்டு, சிறுமியாக இருக்கும் போது பேச்செல்லாம் இல்லை அடிதான். லட்சுமியும் எத்தனையோ முறை தடுத்து பலஅடி இவர் மேல் விழுந்திருக்கிறது. அதன் பிறகு ஒரு வயதுக்கு மேல் அடிக்க கூடாது என்று ஸ்ட்ரிட்டாக  லட்சுமி போர் கொடி தூக்கியதால் அன்றிலிருந்து வார்த்தைகளால் அடிக்க ஆரம்பித்து விட்டார். 

     அதனாலயே பள்ளி படிப்பு வரை மிகவும் கடினப்பட்டு அவர்கள் இருந்த வீட்டில் முடித்தவள். கல்லூரி படிப்பை வெளியூரில் தான் தொடருவேன் என்று லட்சுமிய சமாதானம் செய்து கிளம்பிவிட்டாள்.

     வேலுச்சாமிக்கு அவள் சென்றால் போதும் என்று இருந்தது போல, ஒரேடியாக தலைமுழுகி விட்டார்.

      கீர்த்தியும் படிக்கிறேன் என்று வெளியூர் வந்தவள். அப்படியே அங்கு ஒரு வாடகைக்கு வீடு பிடித்து, பார்ட் டைம் ஜாப் செய்து தன் படிப்புக்கான செலவை தானே பார்த்துக் கொண்டாள். இனி என்ன ஆனாலும் அந்த வீட்டிற்க்கு செல்ல கூடாது என்று முடிவை எடுத்தவள். தன் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக சென்னையிலே முடித்துவிட்டு, ஒரு கம்பெனியில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

 

 

அத்தியாயம் 3

இவர்களது அன்பு மழையை தாங்க முடியாத கீர்த்தி ஒரு கட்டத்திற்கு மேல், “சரி சரி ஓகே அண்ணா. என்ன விடு. நீ எப்படியோ நினைச்சத சாதிச்சிட்ட காங்கிராட்ஸ். அதுவும் நம்ம அப்பாகிட்ட ” என்று இவள் சத்தமாக கூறியதை கேட்டு பதறிய அஸ்வின் உடனே அவளது வாயை மூடி, 

    “ஏய் கீது யாருக்கும் தெரியாது. மாட்டிவிட்டுடாத அப்பாகிட்ட ”

   “ஏன் ணா யாருக்கும் தெரியாது”

   “ அரேஞ்ச் மேரேஜ் மாதிரி தான் செட்டப் பண்ணி இருக்கேன்.”

   “ என்ன ”

     “ஆமா அம்மாவுக்கும், ரம்யாவுக்கும் மட்டும் தெரியும். ஆனால் அப்பாக்கு தெரியாது.”

    “ அப்போ உனக்கும் தெரியுமா கீர்த்தி ”

    “ என்னம்மா ஒரே ஊர்ல இருக்கோம். இது கூட  தெரியாம இருந்தா எப்படி. ஒரு நாள் ஸ்வேதா எனக்கு ட்ரீட் கூட கொடுத்தாங்க.”

   “ அண்ணின்னு சொல்லுமா ”

   “ஆமால்ல சாரி சாரி. அண்ணி கூட நான் லஞ்ச் எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். ”

    “பாத்தியா இந்த பையன கமுக்கமா இருந்துட்டு, என்ன வேலை எல்லாம் பார்த்து இருக்கான்னு ”

   ” அம்ம்ம்மா” என்று அவன் அன்னையை கொஞ்ச.

      “போதும் போதும்டா. நீயே தேர்ந்தெடுத்த வாழ்க எப்படி இருக்க போகுதுன்னு நானும் பார்க்கிறேன் டா. உன்னோட  பொண்டாட்டி என்கிட்ட எப்படி நடந்துக்க போறாளோ ” 

    “அம்மா அதெல்லாம் சூப்பரா நடந்துக்குவா. சாரோட டிரைனிங் ”

    ” அம்மா அப்பனா கொஞ்சம் டவுட்டு தான் “என்று கீர்த்தி அஸ்வினை பார்த்து கலாய்க்க.

     “ஏ வாலு. அம்மா கிட்ட என்ன போட்டு கொடுக்குறதே ஒரு வேலையா வச்சிருக்க நீ. நானே அம்மாகிட்ட அதை இதை சொல்லி லவ் மேரேஜ்க்கு சம்மதம் வாங்கி வச்சிருக்கேன். நீ என்னனா இப்ப வந்து எல்லா மேட்டரையும் ஓபன் பண்ணிட்டு இருக்க “என்று அவள் தலையிலே ஒரு கொட்டு வைக்க. 

    அம்மா பாருங்கம்மா என்று தலையை தேய்த்தபடி, லட்சுமியை அவள் பார்க்க,

.  உடனே லட்சுமி அஸ்வினுக்கு ஒரு அடி வைக்க.

      அம்மா அண்ணா தான் இன்னைக்கு கல்யாண மாப்பிள்ளை. அவர போய் இப்படி அடிக்கலாமா என்று அடியும் வாங்க வைத்துவிட்டு, ஏதோ நல்லவள் போல் டயலாக் விட்டுக்கொண்டிருந்தாள்.

     லட்சுமிக்கு  இத்தனை நேரமும் இருந்த இறுக்கம் நீட்டு  சற்று இதமாக இருந்தது. அதற்குள் வேலுசாமிக்கு மூக்கு வேர்க்க,

     அவர்கள் இருந்த அறையின் வாசலிலே ஒரு உறுமல் சத்தம். அனைவருக்குமே தெரிந்து விட்டது அவர்தான் என்று.

    “ லட்சுமி என்ன பண்ணிட்டு இருக்க இங்க. சம்மந்தி வீட்டுக்காரவுகல பாக்கலையா நீ. அங்க உன்ன தான் தேடிட்டு இருக்காங்க வா வா . ”

– தொடரும்

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!