அத்தியாயம்- 2

அத்தியாயம் 2

ஹோட்டல் பாரடைஸ் என்ற எழுத்துக்கள் மின்ன, அந்த பிரம்மாண்ட கட்டிடம் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது !!

ஒரு பக்கம், சுற்று புறத்தை மறந்து ஆறிபோன காபியை வைத்து கொண்டு சுட சுட காதல் செய்து கொண்டிருந்த காதல் ஜோடிகள்..😜😜🤣🤣

இன்னொரு பக்கம் குடும்பம் குடும்பமாக தங்கள் மகிழ்வை கொண்டாடியவண்ணம், விதவிதமான உணவு வகைகளை சுவைத்து கொண்டிருந்த மக்கள்..

இதில் பிசினஸ் மீட்டிங் என்ற பெயரில் கோட் சூட்டில் இருந்த ஆட்கள் சிறு கோப்பையுடன் தலையை தலையை ஆட்டி… ஏதோ பேசி கொண்டிருந்தனர் ஒரு பக்கம்!!

இந்த கூட்டத்தில், தன் நண்பர்களுடன் வந்த நிமி… 

“ஹே.. உனக்கு என்னடி வேணும்..”,என அவள் தோழி பத்மாவை பார்த்து கேட்க..

அவளோ, “ரெண்டு கோக் ரெண்டு சாண்ட்விச் “,என்றாள் அவளுக்கும் அவள் காதலன் ஜிம்முக்கும் சேர்த்து !!

ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்க.. அத்தனையையும் ஆர்டர் செய்து சாப்பிட தயாரானார்கள்..

கிழிந்து போன ஜீன்ஸ் பேன்ட்,வெளுத்து போன கலரில் ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டு. தலை முடிய நல்லா விரிச்சுப்போட்டுட்டு வந்திருந்தா நிமி..

பேச்சிலும் , நடையிலும் அப்படியொரு பந்தா,கர்வம்…. தான் தான் எல்லாம் என்கிற அகம்பாவம் அவள் பேசும் தோரணையிலும் சிரிப்பிலும் தென்பட்டது…

( M V : இத்தனையும் அந்த மூஞ்சில தெரிஞ்சதா🤔🤔🤭🤭..அப்போ இவ தான் அந்த தீபனுக்கு  சரியான ஆள்🤭🤭)

நிமி.. குணத்தை பொருத்தவரைக்கும்,இவ ரொம்ப திமிருபிடிச்சவ.. தான் ஆசைப்பட்ட பொருள் தனக்கே கிடைக்கனும் இல்லனா அது வேற யாருக்கும் கிடைக்கவே கூடாதுன்னு நினைக்கிற சாடிஸ்ட்.. 

சுருக்கமா சொன்னா.. பாக்கறதுக்கு தமன்னா உருவத்துல இருக்கும் திமிரு பட வில்லி இவள்👿👿😄😄

இவளுக்கு இந்த intro போதும்னு நினைக்கிறேன்😜😜🤣🤣

அவளும் அவள் தோழிகளும் கேக்கே பிக்கே என்று சிரித்து கொண்டு மொக்கை கதை பேசி கொண்டிருக்க… திடீரென நிமியின் முகத்தில் 1000 watts பல்பு எரிந்தது !!

என்னடான்னு கேமராவை அந்த பக்கம் திருப்பினா… அங்க ஜம்முன்னு நம்ம ஹீரோ தீபன் வந்துட்டுருந்தான்…!!

அவனை கண்டதும் 🧲 magnet டை நோக்கி செல்லும் இரும்பு போல டக்கென அவனருகே சென்று….

“ஹாய் பேபி.. “,என்றாள் அவன் கைகளை பற்றியபடி…

( சொல்ல மறந்துட்டேன்… சாரி நண்பர்களே… இந்த அரைவேக்காடு தான் தீபனுக்கு அத்தை மகள்.. 🙄🙄🤭🤭)

புருவம் முடிச்சிட அவளை பார்த்தவன், மெல்ல அவள் கைகளை விலக்கியவாறே…

“ஹாய்..”, என்றான்.

நிமிக்கு தீபன் மீது ஈர்ப்பு அதிகம்.. அது அவன் தோற்றதால் வந்தது மட்டுமல்ல அவனின் சொத்து அந்தஸ்த்தாலும் தான் !!

“ஏங்க நானும் ஹாய்ங்க..”, என்று பதிலுக்கு வழிந்தான் பார்த்தூ!!

“ம்ம்…”, என்று விட்டு முகத்தை திருப்பினாள் நிமி..

அப்போதுதான் கவனித்தாள் ஜோதியை… யாரிந்த பேரழகி?? நமக்கே டஃப் குடுக்குறாளே ?? இதுவரைக்கும் மாமா ஆபிஸ்ல இவளை பார்த்தது இல்லயே?? என்று பலவாறு சிந்தித்து கொண்டே.. அவளை தலை முதல் கால் வரை அளவிட்டாள் நிமி.. அவள் திருமணம் ஆகாதவள் என்று உறுதி ஆகிவிட.. இவள் யார்?? என லேசாக குழம்பியது அவள் மனம் !!

அவள் எண்ணங்களுக்கு விளக்கம் குடுக்கும் விதமாக தீபன்,

“இவங்க பேரு ஜோதி.. புதுசா நம்ம ஆபிஸ்ல ஜாயின் பண்ணிருக்காங்க.. வெரி டேலென்டட் … ஷீ இஸ் நிமி, என் கசின்…!!”, என்றான்.

“ஹாய்”, என்ற ஜோதி மரியாதைக்கு அவளுக்கு கை குடுக்க… பதிலுக்கு கை குடுத்த நிமி அவளின் கைகளை இறுக பற்றி முறுக்கினாள் !!

( M V : புத்தூர்ல மாவு கட்டு போட்டுட்டு இருந்திருப்பா போல 🤔🤔🤭🤭)

வலி தாங்காமல் முகத்தை சுளித்த ஜோதி.. சட்டென்று கைகளை விடுவித்து கொண்டாள்…

‘உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்டி’, என்று ஜோதியை பார்த்து மனதிற்குள் கறுவியவள்… 

“என்ன மாமா திடீர்னு இந்த பக்கம்??”,என்று தீபனை பார்த்து கேட்டாள்.

“ஒன்னுமில்ல… டைரக்டர் பாலா என்னை வச்சு படம் பண்றேன்னு சொன்னாப்ல அதான் எல்லாரும் கிளம்பி வந்தோம்”,என்று நக்கலடித்தான் பார்த்தூ…

“என்ன கிண்டலா?? “,என்று அவள் கேட்க..

“பின்ன என்னங்க ?? ஹோட்டலுக்கு எதுக்கு வருவாங்க?? சாப்பிடதான்.. சும்மா சின்னப்பிள்ளை தனமா கேள்வி கேட்டுகிட்டு.. சில்லி கேர்ள்” என்று விட்டு சிரித்தான்..

“மாமா.. இந்த மாதிரி nonsense எல்லாம் ஏன் கூட வச்சிட்டு சுத்துறீங்க?? “,என்றாள் கோபத்துடன்.

“ஷட் அப் நிமி.. அவன் என் ஃப்ரெண்ட்… மைண்ட்  யுவர் டங்க்”,என்று அடிகுரலில் கர்ஜித்தான் தீபன் !!

“இல்ல மாமா”,என்று அவள் தடுமாற…

“போதும்.. ஆல்ரெடி லேட்… வாங்க சீக்கிரம் சாப்பிட்டு மீட்டிங் போகனும்”, என்றான்.

ஒண்ணா சாப்பிட போறாங்களோ?? கூடாது விடவே கூடாது… என்று நினைத்தவள் 

“ஆ… மாமா.. நானும் உங்களோட ஜாயின் பண்றேன்..”

“சாரி நிமி.. எங்களுக்கு மீட்டிங் இருக்கு,நாங்க ஒன்னும் பிக்னிக் வரல.. “,என்றான்.

“இல்ல மாமா.. லஞ்சு உங்க கூட சாப்பிடுறேனே.. பிளீஸ்”, என்று கெஞ்சினாள்.

“போனா போகுது வுடுப்பா.. சோறு தானே வாங்கி தருவோம் “,என்று அவளை கலாய்த்தான் பார்த்தூ 🤣🤣

“ஹலோ.. நான் யாரு.. எப்பேர்ப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் தெரியுமா??”

“ஏன் உங்களுக்கே தெரியாதா??” என்று கேட்டான் பார்த்தூ..

“வாயை மூடு…நான் ஒன்னும் சாப்பாட்டுக்காக வரல, என் மாமாவுக்காக வரேன்”, என்று சொல்லிக்கொண்டே அவன் தோள் மீது கை வைத்தாள்..

ஒகே.. வா.. என்று அவளையும் அழைத்து கொண்டு சென்றான் தீபன்.

ஜோதிக்கு ஏனோ அவளது நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை.. ஏன் தன் கையை பிடித்து அப்படி முறுக்க வேண்டும்?? தன் மீது அவளுக்கு என்ன கோபம்?? இப்போது தானே முதல் முறையாய் இவளை சந்திக்கிறேன்?? என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்தவள், பாதையில் இருந்த படிகட்டை கவனியாது தடுமாறி விழ போக……

லாவகமாக அவளை பிடித்து நிறுத்தியது ஒரு இரும்பு கரம் !!

விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடியவள்.. தான் இன்னும் விழாது இருப்பதை உணர்ந்து மெல்ல கண்களை திறந்தாள் ஜோதி !!

அத்தனை நெருக்கத்தில் அவனை கண்டதும்.. கன்னங்கள் தானாக சிவந்து மின்னியது அவளுக்கு…!! 

கனவில் மிதப்பது போன்ற அவளது விழிகளை கண்டவன், மெய் மறந்து அவளை.. அவள் அழகை ரசித்து கொண்டிருந்தான்.. தன்னையும் அறியாமல் !!

தீபனின் இட கரம் அவள் இடையை அணைத்து இருக்க… வல கை அவளது தோளை பற்றியிருந்தது…!!

தீபன் அருகில் இருக்கிறான் என்ற நினைப்பில் பேசி கொண்டே வந்த பார்த்தூ.. சட்டென திரும்பி பார்க்க… அங்கே அவர்கள் இருவரும் இருந்த நிலையை கண்டு…

“அடப்பாவி டேய்!! பொண்ணுங்களை பாக்காத பாக்காதன்னு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு.. இப்போ வச்ச கண்ணு வாங்காம பாக்குறியேடா.. இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காதுடா டேய்.. நீயெல்லாம் நண்பனா??இல்ல  துரோகிடா நீ துரோகி “,என்று குமுறினான் பார்த்தூ !!

இவன் கதறல் கேட்டு சுயநினைவுக்கு வந்த தீபனும் ஜோதியும்.. ஒருவரை ஒருவர் அசடு வழிய பார்த்து கொண்டனர்…

“என்னடா.. என்னை தெரியுதா?? எவ்ளோ நேரமா கதறிட்டு இருந்தேன்.. உன் காதுல விழுந்திருக்காதே??”

“இல்ல.. “,என்று அவன் தலையாட்ட..

“விழாதுடா விழாது..!! நீதான் இந்த உலகத்திலேயே இல்லயே..”,என்றான்.

அவன் புலம்புவதை கவனியாது ஜோதியை அவன் பார்க்க..

“சாரி “,என்றாள் ஜோதி..

“இட்ஸ் ஓகே.. பாத்து வாங்க…”, என்று விட்டு அவன் முன்னே சென்றான்..

( M V : நிமிக்கு இந்நேரம் பத்திக்கிட்டு எரியனுமே🤔🤔😜😜🤣🤣)

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த நிமிக்கு.. அடிவயிற்றில் ரெண்டு LPG கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது போல எரிந்து பொசுங்கி போனாள்..

ஏற்கனவே அவள் மீது காரணம் அறியாத கோபத்தில் இருந்தவள் இப்போது பரம எதிரியை பார்ப்பது போல அவளை பார்த்தாள் நிமி !!

இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத தீபன், இன்று இவளை விழுங்குவது போல பார்ப்பதென்ன?? சிரிப்பதென்ன?? ஒன்றும் புரியவில்லையே.. அப்படி என்ன இருக்கிறது இவளிடம்?? 

சாதாரண ஷிபான் புடவையில், எவ்வித ஓப்பனையும் இல்லாமல்.. சொல்ல போனா, எந்த நகையும் அவள் போட்ட மாதிரி தெரியல.. அப்புறம் எப்படி, இந்த அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் ஒருத்தியை இப்படி ரசிக்கிறான்??? என்று யோசித்து கொண்டே நடந்தாள்..

இங்கு தீபனுக்கோ, வெகு ஆச்சரியம்.. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது ?? பணத்தை மட்டுமே ரசிக்கும் கண்கள்.. பளிங்கு போன்ற அரிவையை எப்படி ரசித்தது?? பெண்களின் வாசம் அறியாத நாசி, இன்று இவளின் ஸ்பரிசத்தை ஆழ சுவாசித்தது எப்படி?? ஒப்பனையில் ஜொலிக்கும் பல முகங்களில் காணாத அழகை.. ஒப்பனையற்ற இந்த மதிமுகத்தில் கண்டேனோ?? என்று தடுமாறிய அவனது மனம் சட்டென,  இல்லை இல்லை… என் மனம் எப்போதும் மாறாது.. பெண்களுக்கு என் வாழ்வில் என்றுமே இடமில்லை.. என்று மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது !!

இன்னொரு பக்கம், ஜோதியின் மனம் தீபன் தன்னை கட்டியணைத்து தாங்கி பிடித்ததை எண்ணி எண்ணி மயங்கியது… இதுவரை அவனை பற்றி பெரிதாக எதுவும் யோசிக்காத அவள் நெஞ்சம், இன்று அவனிடம் தஞ்சம் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு💘💘..

இதெல்லாம் பரவாயில்லை என்பது போல இங்கு பார்த்தூ என்னடா என்றால், “ஃப்ளைட்ல பறக்க ஆசைபட்டவனை சைக்கிள்ல அழைச்சிட்டு போயிட்டு இப்போ நீ மட்டும் ராக்கெட்டில் பறக்க நினைக்கிறியே இது நியாயமாடா??.. நீயும் வாழாம என்னையும் வாழ விடாம பண்ணிட்டியே.. இப்பவே பாக்குற குழந்தைங்க எல்லாம் என்னை அங்கிள் அங்கிள் னு கூப்பிடுதுங்க.. இப்படியே போனால் என்னாகுமோ??.. ஊருக்குள்ள ஆயிரம் ஃப்ரெண்ட் வச்சிருக்கவன் எல்லாம் நல்லா இருக்கான், ஆனா ஒரே ஒரு ஃப்ரெண்ட்  வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே… அய்யய்யோ !!!”, என்று புலம்பி கொண்டே போனான்..

ஆளாளுக்கு ஒவ்வொன்று புலம்ப..  விதி இவர்களை பார்த்து சிரித்தது!!..

தீபனின் மனதில் காதல் மலருமா??.. 

நண்பர்களே, நான் எழுதும் இந்த தொடரில் ஏதேனும் பிழை இருந்தால் கூறுங்கள்.. திருத்தி கொள்கிறேன்.. மறக்காம கமென்ட் பண்ணுங்க, ஃபாலோ பண்ணுங்க.. நன்றி

                                           – தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page