அப்படியே அனைவரும் உணவு சாப்பிடுவதற்காக ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான் கரண்.
அனைவரும் விருப்ப உணவை சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்க, ரெஸ்ட் ரூம் செல்வதாக சொல்லிவிட்டு அந்த பிரைவேட் அறையில் இருந்து வெளியே வந்த அபி கழிவறைக்கு சென்றவள் உள்ளே சென்று வெஸ்டன் டாலிட்டை மூடி அதன் மேல் அமர்ந்து கொண்டு தனது சாலை வைத்து வாயை மூடி இதுவரை அடக்கியிருந்த அழுகையை அழ ஆரம்பித்தால்.
அப்பொழுது அவளுக்கு எண்ணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு சென்றது..
வழக்கம்போல் அபி வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர்.
ஜெயந்தி மற்றும் மேகநாதன் வந்து சென்றதிலிருந்து அனைவரும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையிலே இருந்தனர்.
ஏனென்றால் அபி தான் அந்த வீட்டை கலகலப்பாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும் ஒரு ஜீவன் .
அவள் சிரிப்பு சத்தம் கேட்காத நாளே இருக்காது. அப்படி இருக்க அந்த சம்பவத்திற்கு பிறகு பெண் அவள் முற்றிலும் அமைதியானால் அப்படித்தான் அன்றும் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது அரை பால்கனியில் அமர்ந்த படித்து படித்துக் கொண்டிருந்தவள் கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் சிந்தை தன்னவனை நினைத்து இருந்தது அவனைப் பிரிந்து தன்னால் இருக்க முடியுமா? கரண் இதை எப்படி தாங்குவான் ஏற்கனவே வாழ்வில் ரணங்கள் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு தன்னுடைய பிரிவு மிகவும் வருத்தத்தை கொடுக்குமே தன்னுடன் சேர்ந்து தனது குடும்பத்தையும் காதலித்தானே அவனுக்கு ஒரு முழுமையான குடும்பத்தை கொடுக்க நினைத்த நானே அதை வேரோடு பிடுங்க போகிறேனே என்று மனதிற்குள் கவலை கொண்டவள் யாருக்கும் தெரியாத வண்ணம் கண்ணீர் வடித்தால்.
அப்பொழுது திடீர் என்று ஏதோ பேசும் சத்தம் அதுவும் மிகவும் சத்தமாக இருக்க அறையை விட்டு வெளியேறியவள் கீழே வந்து பார்க்க அவர்கள் வீட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஆராத்யா அமர்ந்திருந்தால். அங்கே மூன்று தடியர்கள் கையில் கட்டைகளுடன் நின்று இருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் வந்து தனது தந்தையின் அருகில் நின்று “சீனியர் நீங்க என்ன பண்றிங்க எங்க வீட்ல?” என்றால்.
“உன் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்திருக்கேன்!” என்று நக்கலாக கூரியவள் “ஏண்டி கரண் சித்தியும் மாமாவும் வந்து அவ்வளவு அவமானப்படுத்தியும் இன்னும் நீ அந்த கரன் கிட்ட பேசிட்டு தானே இருக்க? அவனும் உன்னை கொஞ்சறான். நீ அமைதியா இருக்க அப்போ உனக்கு கொஞ்சம் கூட உயிர் மேல பயமும் மானம் கெட்டுப் போயிடுமோ என்கிற எந்த பயமும் இல்லை. என்ன மானக்கேடானாலும் பணக்கார பார்ட்டி பணத்தை வசதியோட வாழ்ந்தால் போதும் தான் குடும்பமே நினைக்கிறீங்க அப்படித்தானே?” என்றால்.
” சீனியர் நீங்க எவ்வளவு பெரிய பணக்காரங்களா வேணாலும் இருங்க ஆனா நீங்க வயசுல எங்க அப்பா அம்மாவிடம் சின்னவங்க சோ அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்து பேசினால் கொஞ்சம் நல்லா இருக்கும்!” என்று அவளை எச்சரித்தால் அபி.
ஆனால் அவையெல்லாம் கண்டு கொண்டால் அவள் ஆராத்யா இல்லையே. உடனே வேகமாக எழுந்து அபியின் அருகில் வந்தவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து “ஏண்டி பிச்சைக்காரன் நாயே எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் என்கிட்ட குரல் உயர்த்தி பேசுவ?” என்ற உடன் அவள் அதிரடியில் அனைவரும் மிரண்டு சற்று நிதானித்து பவித்ரா தற்பொழுது ஆராத்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து
” என்ன தைரியம் இருந்தா என் தங்கைய அரைவ. நீ எவ்ளோ பெரிய குடும்பத்தை சேர்ந்தவளா வேணா இருந்துட்டு போ! அதெல்லாம் வீட்டுக்கு வெளியே வச்சுக்கோ தேவையில்லாம எங்க வீட்ல வந்து அதிகாரம் பண்ணாத!” என்று பவித்ராவும் தனது தங்கையை அடித்ததால் கோபம் கொண்டு ஆராத்யாவை கண்டித்தால்.
அதைக் கண்டு கோபமான அந்த இளைஞர்கள் அபியைத் தவிர மற்ற மூவரையும் அமுக்கி பிடிக்க அபியும் அதைக் கண்ட பதறியவள்,
” விட்டுருங்க ப்ளீஸ் அவங்கள எதுவும் பண்ணாதீங்க!” கத்தியவள் பவித்ரா அவர்களிடமிருந்து திமிருவதை கண்டால் .தனது தாய் தந்தையும் வயதான காலத்தில் முட்டி போட்டு இருப்பதை கண்டு பயந்தவள் ஆராத்தியாவின் முன்பு மண்டியிட்டு “ப்ளீஸ் நான் அவர விட்டு பிரியணும் அதுதானே உங்களுக்கு வேணும் இனிமேட்டு நான் அவரை பார்க்க மாட்டேன் நான் எக்ஸாம் முடியற கடைசி நாள் அன்னைக்கு அவர் கிட்ட பிரேக்கப் பண்ணிடுறேன் போதுமா அதுதானே உங்களுக்கு வேணும் தயவு செஞ்சு எங்க வீட்டு ஆளுங்களை எதுவும் பண்ணாதீங்க!” என்று அழுத வண்ணம் கையெடுத்து கும்பிட்டு கத்தினாள்.
அதில் திருப்தி அடைந்தவள் மீண்டும் அந்த சோபாவில் அமர்ந்து தனது காலணியால் அபியின் கன்னத்தை தட்டி விட்டவள் “இந்த நிலைமைல தான் இருக்க.நீ பணக்கார வாழ்க்கை வாழ தகுதியே கிடையாது. அதுவும் நான் ஆசைப்பட்ட ஒருத்தன் என்னைய உதாசீனப்படுத்திட்டு உன்னைய தூக்கி வச்சு கொண்டாடுவது இருக்கவே கூடாது! அவனுடைய விருப்பம் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு பிடிச்சிருக்கு. அதனால் அடைந்தே தீருவேன் அதுக்கு யார் குறுக்க நின்னாலும் உடம்புல உசுரு இருக்காது. ஒழுங்கா நான் சொன்னப்பவே கேட்டு இருந்தா இந்நேரம் இவ்வளவு நான் உங்கள மிரட்டணும் என்கிற அவசியமே வந்து இருக்காது பார்த்து புரிந்து நடந்துக்கோங்க. எங்க அப்பா மினிஸ்டர் என்னால என்ன வேணாலும் பண்ண முடியும். உங்க எல்லாத்தையும் கொன்று போட்டா கேட்க நாதி இல்லாத பிச்சைக்காரன் நாய்கள் நீங்க என் தகுதிக்கு வருவதற்கு ஆசைப்படலாமா?” என்றவுடன்,
” ப்ளீஸ் நான் தான் சொல்லிட்டேனே! அவங்கள விட சொல்லுங்க” என்றால்.
பவித்ராவும் “டேய் விடுங்கடா !” என்று கத்தி கொண்டு இருந்தால்.
அதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஆராத்யா வேகமாக பவித்ராவின் அருகில் வந்தவள் ஓங்கி கன்னத்தில் அறைந்து “என்னடி நீ பெரிய இவளா?” என்று கூறிக் கொண்டே அவள் தலைமுடியை பிடித்து ஆட்டியவள், “வயசுக்கு மரியாதை கொடுக்கணுமா காசு தான் இந்த காலத்தில் பெருசு யார்கிட்ட அதிக காசு இருக்கோ அவங்க தான் இங்க பெரியவங்க சோ நீங்க தான் எனக்கு மரியாதை கொடுக்கணும் ஞாபகம் வச்சுக்கோ” என்ற ஆராத்யா அவளது முடியை விட கண்களில் கண்ணீர் வழிய அவளை கோபமாக பார்த்த பவித்ரா தன் கையறு நிலையை எண்ணி கோபம் கொண்டால்.
அப்பொழுது அங்கே இருந்தவனில் ஒருவனோ “அக்கா இவங்களை இப்படியே விடக்கூடாது உன்னை வேற அந்த பொண்ணு அடிச்சிருச்சு எனக்கு ரத்தம் கொதிக்குது நம்ம ஐயா கிட்ட சொன்னா இவங்களை எல்லாத்தையும் இருக்கிற இடம் தெரியாம பண்ணிடுவாரு!” என்றவுடன் அபியின் தந்தை கதிர்வேல் “வேண்டாமா என் பொண்ணுங்கள விட்டுருங்க நாங்க இனிமேல் உங்க பக்கமே வரமாட்டோம்!” என்றார் ஆராத்யாவின் முன்பு கைக்குப்பிய வண்ணம்.
கௌரியோ என்ன செய்வது என்று தெரியாமல் அழுத வண்ணம் நின்று இருக்க, “பெரிசு இப்பவாவது உண்மைய புரிஞ்சுதே அதுவரைக்கும் சந்தோஷம் உன் பொண்ண ஒழுங்கா அடக்கி வைக்கிற வழிய பாரு ரெண்டு பேரையும் தான் சொல்றேன் இல்ல ஓவரா ஆடினாங்கன்னா அப்புறம் இதோ இருக்கான் இல்ல இவங்க கிட்ட கண் அசைச்சா போதும் ரெண்டு பொண்ணுங்களையும் சீரழிச்சு அடையாளமே கண்டுபிடிக்காத அளவுக்கு தூக்கி போட்டுருவாங்க” என்ற உடன்
“ஐயோ” என்று பதறினார் கௌரி. “பயப்படாதீங்க ஆன்ட்டி அதெல்லாம் நடக்காது என் சொல் பேச்சை கேட்டா அதையும் மீறி ஏதாவது பண்ண ட்ரை பண்ணீங்கன்னா நான் சொன்னதை விட கொடூரமாக நடக்கும்!” என்றவள்,
அபியின் கன்னத்தை தட்டி விட்டு “வரட்டா பேபி சீக்கிரமா என்னுடைய கரண நல்ல ஞாபகம் வச்சுக்கோ என்னுடைய கரண பிரேக் அப் பண்ணு. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ போறோம். நீயும் கூடிய சீக்கிரம் எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ” என்று விட்டு, தனது ஆட்களை அழைத்துக் கொண்டு வெளியேற, அவர்களும் பெண்கள் இருவரையும் வக்கிரமாக பார்த்துவிட்டு கண்ணடித்துக் கொண்டே சென்றனர்.
அதையெல்லாம் பார்த்து பவித்ரா அபி இருவருக்கும் அழுகையாக வர, அபி ஓடி சென்று தனது அப்பாவின் காலடியில் விழுந்தவள் அவரை கட்டிக் கொண்டு அழுதால்.
அவரோ சிலையென நின்று இருக்க கௌரியோ கதவை சாத்திவிட்டு வந்தவர்,
” என்னங்க என்னங்க?” என்றார் சிலையன நிற்கும் கணவனை கண்டு. அப்பொழுது அப்படியே தனது நெஞ்சை பிடித்துக் கொண்டு கதிர்வேல் கீழே சரிய பெண்கள் மூவரும் பதறி “அப்பா அப்பா என்னங்க என்று கதற அவர் மயக்க நிலைக்கு சென்று விட அடுத்த அறை மணி நேரத்தில் அவர் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சையில் இருக்க மூவரும் வெளியே கண்ணீருடன் நின்று இருந்தனர்.
பத்து நிமிடம் கழித்து ஐ சி யூ வார்டில் இருந்து வெளியே வந்த மருத்துவர் “அவருக்கு இதயத்தில் சின்ன பிளாக் இருக்கு. அஞ்சியோ பண்ணனும் அஞ்சு லட்சம் கிட்ட செலவாகும் சீக்கிரமா பண்ணினா அவருக்கு ஹார்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்!” என்றவுடன்
கௌரி “ஐயோ டாக்டர் டாக்டர் என் புருஷன் உயிருக்கு எந்த பிரச்சனையும் வராது தானே?என்ற உடன் ,
டாக்டரோ “கவலைப்படாதீங்க ஆஞ்சியோ பண்ணினா சரியா போயிடும் மைனரா ரெண்டு ப்ளாக் தான் இருக்கு. அப்படியே விட்டுட்டோம்னா மேஜர் பிளாக்கா மாறிடும் அதனால சீக்கிரமா அமௌன்ட் கட்டிடீங்கன்னா ஆப்ரேஷன் பண்ணிடலாம்” என்றவுடன்
பவித்ராவும் “ஓகே டாக்டர் நாங்க பணத்தை கட்டி விடுகிறோம்! நீங்க ஆஞ்சியோ பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று அடுத்தடுத்து வேலைகளை செய்ய ஆரம்பித்தால்.
அவள் இதுவரை சம்பாதித்த பணம் அப்படியே இருக்க அதை உடனடியாக அனைத்து பணத்தையும் தன்னுடைய அப்பாவுடைய ஆபரேஷனிற்கு பணத்தை கட்டினால். அபியும் அழுது கொண்டே தன்னுடைய தாயையும் கவனித்துக் கொண்டாள்..அடுத்து மூன்று மணி நேரம் கழித்து மருத்துவர் ஆஞ்சியோ நல்லபடியாக வைத்து விட்டதாகவும் எந்த பிரச்சினையும் வராது பயப்பட வேண்டாம் 12 மணி நேரம் அப்சர்வேஷன் வைத்துவிட்டு பிறகு நார்மல் வார்டு மாத்தி விடலாம். அதன் பிறகு எப்பொழுது டிஸ்டார்ஜ் செய்யலாம் என்று சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றுவிட,
தனது கணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்ததே போதும் என்று நினைத்த கௌரிக்கு மிகவும் நிம்மதியாக இருக்க, சற்றும் தாமதிக்காமல் அபியை பார்த்தவர் அவளது கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த மருத்துவமனையில் இருந்த கோவிலுக்கு வந்து அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கின் அருகில் இருந்த சூடத்தை ஏற்றி தனது கையில் வைத்து அபியின் முன்பு நீட்டி ” இதுக்கு மேல அந்தப் பையன் உனக்கு வேண்டாம்! அவ கூட பழக மாட்டேன் பேச மாட்டேன் சத்தியம் பண்ணு” என்றவுடன்,
அவளும் பதிரி “அம்மா கை சுட போதுமா ப்ளீஸ்மா தயவு செஞ்சு கீழ போடுங்கம்மா! நான் அவர் கூட பழக மாட்டேன்” என்றால் .
ஆனால் கணவன் உயிர் போராட்டத்தில் இருந்து தப்பியவை எண்ணி மனம் வருத்தத்தில் இருந்த கௌரிக்கும் நெருப்பால் ஏற்பட்ட எரிச்சல் பெரிதாக தெரியவில்லை.
அதனால் அவர் அப்படியே கல்போல் நின்று “இனிமே நீ அந்தப் பையன லவ் பண்ண கூடாது போதும் உங்க அப்பாவ இழந்துட்டு நம்ம குடும்பம் நிம்மதியா இருக்க முடியுமா? சொல்லு! எனக்கு தாலி பிச்சை கொடுடி ” என்று மண்டியிட்டு கதறி அழுதார்.
அவளும் ஐயோ அம்மா இப்படி பண்ணாத என்று அவரை எழுப்பி விட,
“அப்பா வேணுமா கரண் வேணுமா நீயே முடிவு பண்ணிக்கோ!” என்று மனதை கல்லாக்கி கொண்ட தனது தந்தையின் உயிர் முக்கியம் என்று உணர்ந்தவள் “சரி மா நான் இனிமேல் அவர பாக்கல எக்ஸாம் முடிஞ்சு கடைசி நாள் பிரேக்கப் பண்ணிடுறேன் அதுக்கு மட்டும் பர்மிஷன் கொடுங்க !” என்றால். தனது கையில் சத்தியம் செய்தவளை நிமிர்ந்து நம்பிக்கையுடன் பார்த்தவர்,
” நீ சொன்ன வார்த்தையை காப்பாற்றுவ என்று நம்புறேன் அதையும் மீறி அவன்தான் முக்கியம்னு போனினா அதோட இந்த வீட்டு பக்கமே வந்துராத. அப்பா அம்மா அக்கா மூணு பேரும் உனக்கு சொந்தம் என்பதை மறந்திடு” என்று விட்டு கையில் காயம் ஏற்பட்டதை எல்லாம் உணராமல் அவர் கணவனை பார்க்க உள்ளே சென்றுவிட,
அப்படியே அந்த இடத்தில் மடிந்த அமர்ந்தவள் கையிலும் நெருப்பானது சுட்ட எரிச்சல் இருக்க அதைவிட மனதில் தன்னுடைய மேல் வாழ்வில் சேரவே முடியாது என்ற ஒரு எண்ணம் ஆயிரம் வாள்கள் ஒன்றாக நெஞ்சில் இறங்கியது போல் ஒரு உச்சபட்ச வழியை உணர்ந்தவள் கண்களில் கண்ணீரானது ஏற்காமல் வழிய இருவரையும் தேடிக் கொண்டு வந்த பவித்ரா கூப்பிட நிற்காமல் செல்லும் அன்னையை பார்த்துவிட்டு திரும்பி தங்கையே பார்க்க அவளோ அழுத வண்ணம் இருந்ததை கண்ட பதறியவள் அருகில் வந்து என்னவென்று விசாரிக்க, தனது அக்காவை கட்டிக் கொண்டு அழுதவள் “இனிமேட்டு என்னோட வாழ்க்கையில கரன் இல்லக்கா தெரிஞ்சே அவர் மனசை உடைக்க போறேன் ! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ! அவருக்குன்னு அவங்க அம்மாவுக்கு பிறகு ஒரே உறவு நான் மட்டும்தான் அப்படின்னு சொன்னாரு ஆனா அவருக்கு இப்போ நானும் இல்லாமல் அவர் அனாதையாக போறாரு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ” என்று பவித்ராவை கட்டிக்கொண்டு அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பவியும் கையறு நிலையில் கண்களில் வழியும் கண்ணீருடன் தங்கையை தேற்றி உள்ளே அழைத்து வந்தால்.
அதையெல்லாம் தற்பொழுது நினைத்து பார்த்து அழுத அபி “இல்ல அப்பாவோட உயிர் முக்கியம் நம்மளோட காதலால யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. மத்த அப்பாக்கள் மாதிரி இல்லாம நம்ம அப்பா இந்த காதலையும் மதிச்சு வீட்டுக்கு எல்லாம் வர வச்சு சொந்தம் கொண்டாடினார் . ஆனால் அது எல்லாம் இப்போ பாழாகி போச்சு என்னோட காதல் கை கூடலனாலும் பிரச்சனை இல்ல . அப்பாவோட உயிர் முக்கியம் மத்தவங்க மாதிரி இல்லாம என்னோட காதலை ஏற்றுக் கொண்டார். இப்போ அவர் உயிர் ஆபத்துல இருக்குன்னா அந்த காதலை எனக்கு தேவையில்லை கரண் கொஞ்ச நாள் கஷ்டப்படுவார். ஆனால் அதுக்கப்புறம் அவர் நல்லா இருப்பார் . கண்டிப்பா அவர் நல்லா இருக்கணும் கடவுளே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு இன்று எப்படியாவது அவனை பிரேக்கப் செய்து விட வேண்டும் என்ற அவள் அறையில் இருந்து வெளியேறி முகத்தை நன்கு கழுவி விட்டு துடைத்துக் கொண்டு மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்திற்கு அந்த பிரைவேட் அறைக்குள் வந்தால்.
