அத்தியாயம்-29

அந்தப் பிரபலமான ஆடம்பரமான பாரில், இளமைப் பட்டாளங்கள் ஆடல் பாடல் மற்றும் மது என்று நேரத்தை  கழித்துக் கொண்டிருக்க, மறைவான இடங்களில் பலதரப்பட்ட பிசினஸ்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன.
 

 

அங்கே ஒரு இருக்கையில் மோனா அமர்ந்திருக்க, அவளுக்கு அருகில் இதுவரை பப்களுக்கு வராமல் இருந்த சந்துரு, இவளின் வற்புறுத்தலின் பேரில் இன்று வந்திருந்தான். அனைத்தையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..
 

 

அங்கே ஒவ்வொருவரும் ஆட்டம் ஆடிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டும், மது தந்த போதையில் மயக்கத்தில் அங்கங்கள் உரச, இளைஞர்களுடன் பெண்கள் ஆடிக் கொண்டிருக்க, அதைக் கண்டவனுக்கு வியப்பாகவும் ஆசையாகவும் இருந்தது.
 

 

அதை பார்த்த மோனி, அவனை உசுப்பேற்றும் விதமாக டிரிங்க்ஸ் ஆர்டர் செய்ய ஆரம்பித்தாள்.
 

 

அப்போது, “ஹாய் மோனா” என்று ஒரு குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.
 

 

அங்கே, கவர்ச்சியான உடையில் தோழியை பார்த்து சிரித்தவண்ணம், அங்கே ஒலிக்கும் பாடலை முனுமுனுத்தவாறே மோனியை நோக்கி நடந்து வந்தாள் ஆராத்யா.
 

 

அதைப் பார்த்து சிரித்த மோனி, “ஹாய் தியா, எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு,” என்று தோழியை கட்டிப்பிடித்து நலம் விசாரித்தவள், மீண்டும் சந்துருவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
 

 

அவளையே வைத்த கண் வாங்காமல் சந்துரு பார்த்துக் கொண்டிருக்க, “என்ன மோனி, உன்னுடைய  பிரண்டை அறிமுகப்படுத்த மாட்டியா?” என்றாள் தியா.
 

 

“ஆமாண்டி, உன்னை பார்த்த சந்தோஷத்தில் எல்லாம் மறந்துட்டேன். இவர்தான் சந்துரு, மை பாய் பிரண்ட்,” என்றவள்,
 

 

“சந்துரு, மீட் மிஸ் ஆராத்யா, மை காலேஜ் க்ளோஸ் ஃபிரண்ட்,” என்றாள்.
 

 

அவனும், “ஹாய் தியா,” என்று அவளது நீட்டிய கையில் தனது கையை பொருத்தி கைகுலுக்கியவுடன், அதைத் தடவிக்கொண்டே கையை எடுத்துக்கொண்டான்.
 

 

சிறிது நேரம் அப்படியே பேசிக் கொண்டிருக்க, சந்துருவை பார்த்த ஆராத்யா, “உங்களைப் பற்றி இவ முழுசா சொன்னா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே?  ஒய்ஃப் எப்படி? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றாள்.
 

 

அவன் தர்மசங்கடமாக உணர, மோனி, “சந்துரு, ஜஸ்ட் சில் மேன்! நான் தான் சொல்லிட்டேனே அவளுக்கு உன்னுடைய ஃபேமிலி பற்றி. எல்லாமே தெரியும் இல்ல, ஃப்ரீயா பேசு,” என்றவுடன்,
 

 

ஆராத்யாவும், “ஓகே, உங்களுக்கு விருப்பம் இல்லன்னா சொல்ல வேண்டாம்,” என்று நல்லவள் போல் பேசினாள்.
 

 

“ஐயோ, அப்படியெல்லாம் இல்லை. எங்க ரிலேட்டிவ் தான், தூரத்து சொந்தம். கல்யாணம் ஆச்சு. அதுக்கப்புறம் நல்லாதான் போயிட்டு இருந்தது. கொஞ்ச நாள் என்னை விட்டு விலகி தான் இருந்தா. சிக்ஸ் மன்த்ஸ் கழிச்சுதான் நாங்க லைஃப் ஸ்டார்ட் பண்ணோம். அதுக்கப்புறம் ஒரு குழந்தை உருவாச்சு… அதையும் நானே என் கையால தெரியாம கொன்னுட்டேன்,” என்று அந்த நிகழ்வைப் பற்றி விளக்கியவன்,
 

 

“அது ரொம்ப குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, அதுக்கப்புறம் என் மனைவியை நல்லா தான் பார்த்துக்கிட்டேன்.  அதுக்கப்புறம் அவளும் ப்ரெக்னன்ட் ஆகினாள். ஆனால் இப்போ ரொம்ப என்கிட்ட எதிர்பார்க்கிறா. எப்ப பாரு அவ பின்னாடியே சுத்தணும் நினைக்கிறா. என்னால முடியல. கொஞ்ச நேரம் அவளோட சந்தோஷமா இருக்கலாம்; வீட்டுக்கு போனா ஏதாவது ஒரு பிரச்சனையை தூக்கிட்டு வரா. பத்தாதுக்கு எங்க அம்மாவும் சேர்ந்து கத்துறாங்க. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல. அதனால தான் உடம்பாலையும்…” என்றவன், மோனியின்  உடம்பை ஒரு காமப் பார்வையுடன் பார்த்துவிட்டு, “மனசாலையும் நான் நிம்மதியா இருக்கேன். மோனி  மட்டும் இல்லன்னா கண்டிப்பா மறுபடியும் என் மனைவியை ஏதாவது பண்ணிடுவேன்… எனக்கு பயமா இருக்கு,” என்றான்.
 

 

“என்ன இப்படி புரிஞ்சுக்காம இருக்காங்க… சரி, நான் அவங்களை பார்க்கலாமா?” என்றவுடன், தனது கைபேசியில் இருந்த திருமண புகைப்படத்தை எடுத்துக் காட்ட, அதை கண்டவள் அதிர்ச்சியானவள் போல் நடித்து,
 

 

“இது உங்க வைஃப் பேர் அபிரஞ்சிதாவா?” என்றாள்.
 

 

“ஆமாங்க, உங்களுக்கு எப்படி தெரியும்? மோனி சொன்னாளா?” என்றான்.
 

 

“இவங்க சென்னை தானே?” என்று கேட்டவுடன், “ஆமா, கரெக்டா சொல்றீங்களே!”  என்றான். 
 

 

“அப்போ உங்களுக்கு அவளைப் பற்றிய எல்லா விஷயமும் தெரிஞ்சு… எவ்வளவு பெரிய நல்ல மனசு உங்களுக்கு,” என்றவள், “குடுங்க உங்க கையை,” என்று வலுக்கட்டாயமாக அவனது கையைப் பிடித்து குலுக்கினாள். அதில் அவன் புரியாமல் விழித்தான்.
 

 

“என்னாச்சு ? உங்களை மாதிரி ஒரு ஒழுக்கசீலனுக்கு உங்க மனைவி இப்படி புரிஞ்சுக்காம இருக்காங்களே! இவங்கள மாதிரி தான் உங்கள மாதிரி ஆம்பளைகள் வெளியில சுகத்தை தேடுறாங்க,” என்று மோனியை பார்த்து கண்ணடிக்க, அவனுக்கு சற்று சங்கோஜமாக  இருந்தது.
 

 

“பிரதர், சங்கோஜப்படாதீங்க. இதெல்லாம் இப்ப இருக்குற லைஃப்ல சகஜம் தான்,” என்றவள்,
 

 

அவனுக்கு ஒரு கிளாஸ் மதுவை ஊற்றி கொடுக்க, அவனும் குடித்தவன், “ஆனா நீங்க ரொம்ப நல்லவரு. அவ இன்னொருத்தனை காதலிச்சு இருக்கா அப்படின்னு தெரிஞ்சும் நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க. யூ ஆர் கிரேட் பிரதர். அவ பாவம்… அவளோட காதல் கைகூடாமலேயே போச்சு,” என்று விஷ வார்த்தைகளை தொடங்கினாள் ஆராத்யா.
 

 

மதுவை அருந்திக் கொண்டிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டு புறையேறியது. மோனி அவனை தட்டி ஆஸ்வாசப்படுத்தி, “என்னாச்சு சந்துரு?” என்றாள்.
 

 

“இப்ப நீங்க என்ன சொன்னீங்க? என் வைஃப்புக்கு லவ்வர் இருந்தாங்களா?” என்றான் அதிர்ச்சியுடன்.
 

 

“ஓ ஷிட்… உங்களுக்கு தெரியாதா? நான் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுதான் மேரேஜ் பண்ணி இருக்கீங்கன்னு நினைச்சிட்டேன். சாரி பிரதர், தெரியாம சொல்லிட்டேன். ஓகே மோனி, பை டா… நான் அப்புறமா பார்க்கிறேன்,” என்று எழுந்து செல்ல முயன்றாள்.
 

 

அவளை வழி மறித்து நின்றவன், “ப்ளீஸ், ப்ளீஸ் உட்காருங்க. எனக்கு தெரியாது. சொல்லுங்க—யாரை லவ் பண்ணா? என்ன விஷயம்?” என்றான் சந்துரு பதட்டமாக .
 

 

“இல்ல சந்துரு, நான் தான் தெரியாம ஏதோ பேசிட்டேன். நீங்க அதெல்லாம் மனசுல இருந்து எடுத்துருங்க,” என்றாள் வேண்டுமென்றே.
 

 

“ப்ளீஸ் தியா, தயவு செய்து சொல்லுங்க. என்ன விஷயம்? எனக்கு மண்டை பிளக்குற மாதிரி இருக்கு,” என்றவுடன், அபி மற்றும் கரண்  இருவரின் காதலைப் பற்றி சொல்லியவள், “நான் கூட அந்த கரனை காதலிச்சேன். ஆனா அவன் என்னை ஒதுக்கிட்டான். இவளும் பணத்துக்காக தான் அவனை காதலிச்சு இருக்கா. அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல… இப்போ உங்களுக்கு மனைவியா தான் எனக்கு அவளை தெரியும்,” என்றாள்.
 

 

அதில் அவன் முகம் பல மடங்கு கோபத்தில் தத்தளித்தது.

 

“அதனாலதான் அவ உங்க கூட சிக்ஸ் மன்த்ஸ் லைஃப் ஸ்டார்ட் பண்ணாம இருந்தாளா? அது என்ன இருந்தாலும் அவளும் பொண்ணு தானே… அந்த பழைய காதலோட தாக்கம் இருக்க தானே செய்யும். அதுவும் அவங்க எவ்வளவு க்ளோஸா இருந்தாங்க…” என்றவுடன்,
 

 

“என்ன சொல்றீங்க? அப்போ இல்லையே… அவ வெர்ஜின் தானே?” என்றான்.
 

 

“என்ன பிரதர்… லவ்வர்னா அப்படி இப்படியா இருப்பதா செய்வாங்க? என்கிட்ட கூட அந்த போட்டோஸ் எல்லாம் இருக்கு,” என்று அவள் கல்லூரி நாட்களில்  எடுத்த புகைப்படங்களை காட்டினாள்.
 

 

அவற்றைப் பார்த்தவனுக்கு கோபம் கிடுகிடுவென்று ஏறியது.

 

“சாரி சந்துரு… ஆனா இப்போ உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு. இதெல்லாம் கண்டுக்காதீங்க. தயவு செய்து உங்க வைஃப் கிட்ட நல்லபடியா நடந்துக்கோங்க… அபி பாவம்,” என்றவள், சந்துருவின் முகத்தில் இருந்த கோபத்தை கண்டு,  மோனியை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.
 

 

அவள் வந்த காரியம் நல்லபடியாக நடந்திருந்தது. முழு போதையில் இருந்த சந்துரு தள்ளாடி நடக்க, “வா சந்துரு, நான் உன்னை வீட்டில் டிராப் பண்ணுறேன்,” என்றாள் மோனா.
 

 

“இல்ல, நானே பார்த்துக்கொள்கிறேன்,” என்றான்.
 

 

“அப்படியெல்லாம் என்னால உன்னை விட முடியாது. உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால தாங்க முடியாது,” என்று நல்லவள் போல் பேசினாள் மோனா.
 

 

“நீ ரொம்ப நல்லவ… அந்த அபியை கல்யாணம் பண்ணதுக்கு பதிலா நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம்,” என்றான்.

 

“ஸ்வீட்… இப்ப மட்டும் ஒன்னும் கெட்டுப் போகவில்லை. எப்படியாவது அவளை டிவோர்ஸ் பண்ணிட்டு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்,” என்றாள்.
 

 

“கண்டிப்பா, பேபி,” என்று அவள் இதழில் முத்தமிட்டவன் மயங்கி விழுந்தான்.
 

 

அவன் மயங்கியதை உணர்ந்த மோனி, “சபா … முடியலடி இவன் கூட,” என்றாள்.

 

“கொஞ்ச நாள் தான். அதுக்கப்புறம் அவன் அவளை டிவோர்ஸ் பண்ணினதும் நீயும் அவனை விட்டு விலகிடு. நான் பார்த்துக்கறேன்,” என்றாள் ஆராத்யா.
 

 

“சரி, வா… அவனை வீட்டில் விட்டுரலாம்,” என்று கூறி காரை எடுத்தாள்.
 

 

சந்துருவை வீட்டில் விட்டுவிட்டு, இருவரும் ஆராத்யாவின் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றனர்.
 

 

“நான் கேட்டது இருக்கு தானே?” என்றவுடன், “உள்ள போ,” என்று ஒரு அறையை காட்டினாள்.
 

 

அங்கே ஒரு இளைஞன் அவளுக்காக காத்திருந்தான். அவனை பார்த்த மோனி, அவனது தேக வனப்பில் ஈர்க்கப்பட்டு அவனுடன் சல்லாபிக்க ஆரம்பித்தாள்.
 

 

வெளியே சோபாவில் அமர்ந்திருந்த ஆராத்யா, ஒரு கோப்பையில் மதுவை அருந்திக்கொண்டே,  ஹெர்பல் சிகரெட்டை பற்றவைத்து, “நான் இன்னைக்கு போட்ட நெருப்பு உன் வீட்டில் சீக்கிரம் புகைய போகுது,” என்று சொல்லிக்கொண்டே புகைக்க ஆரம்பித்தாள்.

 

மறுநாள் காலை தூங்கிக் கொண்டிருந்த அபியின் மீது வாலி தண்ணீர் ஊற்ற, அடித்துப் பிடித்து எழுந்தவள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தாள். 
 

 

எதிரே கோபமான முகத்துடன் வாலியை கையில் வைத்துக் கொண்டிருந்த கணவனை பார்த்தவள், அவன் வேகமாக அதை கீழே போட, அந்த சத்தத்தில் அதிர்ச்சி அடைந்தாள். முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டு, “என்னாச்சு சந்துரு? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?” என்றாள் அபி .
 

 

அதில் எதுவும் பேசாமல் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தவன், முடியை பிடித்து இழுத்து அவளை நிற்க வைத்தான். “ஏண்டி, உனக்கு காலேஜ் படிக்கிறப்பவே ஒரு லவ் இருந்ததா?” என்றவுடன், அவள் இவனுக்கு எப்படி இது தெரியும் என்று அதிர்ச்சியாக பார்த்தாள்.
 

 

அவள் பாவனையை வைத்து புரிந்து கொண்டவன், “அப்போ உண்மைதான். நேத்து கூட அவங்க சொல்றதை நான் நம்பல. நீ அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டேன்னு ஒரு சின்ன நம்பிக்கை மனசுக்குள்ள இருந்தது. ஆனா நீ எவ்வளவு பெரிய கேடியா இருந்திருப்பே! எதுவுமே சொல்லாம உன் காதல  மறைச்சு கல்யாணம் பண்ணிட்ட. அதே மாதிரி தான் உன்னோட அப்பா அம்மாவும் எதுவுமே சொல்லாம கல்யாணம் பண்ணி வைத்திருக்காங்க ?” என்றான்.
 

 

அவளுக்கோ இவன் முடியை பிடித்ததில் ஏற்பட்ட இறுக்கம் வலியை கொடுக்க, “சந்துரு, ப்ளீஸ் விடு,” என்று போராடி அவனது கையை எடுத்துவிட்டாள்.
 

 

“உனக்கு எப்படி உண்மை தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியாது. ஆமா, எனக்கு ஒரு லவ் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஃபர்ஸ்ட் இயர் ஒரு வருஷம் தான் இருந்தது. அதுக்கப்புறம் நாங்க பிரிஞ்சிட்டோம்,” என்றவள், “ஏன்  நீ யாரையும் சைட் அடிச்சது இல்லையா? லவ் பண்ணது இல்லையா?” என்றாள் கோபமாக.
 

 

“நான் யாரையும் லவ் பண்ணினதில்ல. அப்படியே லவ் பண்ணி இருந்தாலும் அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது. நான் ஆம்பள” என்றவுடன்,

“ஆமா, நீங்க லவ் பண்ணுவீங்க. பொண்டாட்டி கர்ப்பமா இருக்குறப்போ உங்க உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள வேற ஒருத்தியோட சுத்துவீங்க.  நான் செக்கபுக்கு தனியா போவேன். உன் அம்மாவை கூப்பிட்டாலும் அவங்க வர மாட்டாங்க. நீயும் எவ கூடவோ சுத்திட்டு வருவ? எனக்கு தேவையான டிரஸ் வாங்கிக்கொடுப்பதுக்கு உன்கிட்ட காசு இருக்காது, எரிச்சல் படுவ. ஆனா அவளுக்கு மட்டும் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ் எல்லாம் வாங்கிக்கொடுப்பதுக்கு உன்கிட்ட காசு இருக்கும்,” என்று இவளும் தனது பங்குக்கு கத்தினாள்.
 

 

அப்பொழுது, “என்னடா காலங்காத்தாலே சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்று அவளது மாமியார் வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

அபியின் நிலையை பார்த்தவர், “டேய், என்னடா இவ்ளோ ஈரத்தோட நின்னுட்டு இருக்கா? நீ வேற கோபமா நின்னுட்டு இருக்க. என்ன தான்டா ஆச்சு? இதுவரைக்கும் குடிக்காதவன், நேத்து எதுக்குடா குடிச்சிட்டு வீட்டுக்கு வந்த?” என்றார்.
 

 

“இதோ எல்லாம் இவளால தான், மா. இவளை என்னிக்கு கட்டினேன்னா அன்னைக்கே என்னோட முழு நிம்மதியும் போயிருச்சு. மேடம்க்கு காலேஜ் படிக்கிறப்பவே ஒரு காதல் இருந்திருக்கு. அதை என்கிட்ட சொல்லாம மறைச்சு கல்யாணம் பண்ணி இருக்கா. அதை வந்து இப்ப கேட்டா, ‘ஆமா லவ் இருந்துதான், அதுக்கு இப்ப என்ன?’ன்னு என்கிட்ட தெனாவெட்டா பேசறா மா ?” என்றான்.
 

 

“அப்படியா சொன்னா இந்த சிரிக்கி மவ…” என்று அவர் மாமியாரும் அவளை அடிக்க கையை ஓங்க,

அதை தடுத்து பிடித்தவள், “அத்தை, தேவையில்லாம என் மேல கை வைக்காதீங்க,” என்று மிரட்டினாள்.

“ஏன் உங்க புள்ள இதை மட்டும் சொல்றாரே? அவன் இப்போ இன்னொருத்தியோட கூத்தடிச்சிட்டு இருக்கான். நான் மனைவி இருக்கிறப்பவே இன்னொருத்தியோட affair ல இருக்கான். அதெல்லாம் உங்க புள்ள சொல்லலையா? அதெல்லாம் கேட்க மாட்டீங்களே! நான் காலேஜ்ல, அதுவும் ஒரு வருஷம் லவ் பண்ணியிருந்தது தான் உங்களுக்கு இப்ப தப்பா தெரிகிறது. அதுக்கப்புறம் நான் ரெண்டு மூணு வருஷம் யாரையும் லவ் பண்ணாம இருந்தேன்னு உங்களுக்கு தெரியலையா? ஏன் உங்க பையன் காலேஜ் படிக்கிறப்ப யாரையும் காதலிக்கலையா? முடிஞ்சு போன விஷயத்தை, புதைந்து போன விஷயத்தை இப்படி குழி தோண்டி பேசிட்டு இருக்காரே உங்க புள்ள! அதெல்லாம் கேட்க மாட்டீங்க. ஒரு பிள்ளை தாச்சி படுத்துட்டு இருக்கான்னு கூட மனிதாபிமானம் இல்லாம தண்ணி ஊத்தி அடிச்சு இப்படி துன்புறுத்துறான். நீங்களும் ஒரு பிள்ளையை பெத்துட்டு வந்தவங்க தானே? அந்த நேரத்துல எப்படி இருக்கும் கூடவா உங்க பிள்ளைக்கு சொல்லித் தர மாட்டீங்க?” என்று  பேசினாள்.
 

 

“ஏண்டி, உன் மேல தப்பு நாங்க சொன்னா, நீ அதையெல்லாம் விட்டுட்டு எங்க அம்மாவையே கேள்வி கேக்குறியா? இது எல்லாம் யார் கொடுத்த தைரியம்? அவன் கொடுத்தானா?” என்றவன், அவள் கன்னத்தில் மீண்டும் அறைந்தான்.

“எனக்கென்னமோ இந்த குழந்தையும் என்னோடதுதானா இல்லையா…” என்று இழுக்க, ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்தவள்,

“டேய், கொன்னுடுவேன் ராஸ்கல்! இன்னொரு வாட்டி என்னுடைய கர்ப்பத்தைப் பற்றி தப்பா பேசினா கொன்னுடுவேன் டா உன்னை!” என்றாள்.
 

“அது எப்படி நீ என்னை தள்ளிவிட்டு என் குழந்தையை அழிக்க முயற்சி பண்ணுவ? அதுக்கப்புறம் குழந்தை இல்லன்னு என்கிட்ட எரிச்சல் காட்டுவ? கஷ்டப்பட்டு நான் இந்த குழந்தையை சுமக்க ஆரம்பிச்சா, யாரோ ஒருத்தர் சொன்னதைக் கேட்டு இந்த குழந்தை உன்னோடதா இல்லையா என்று சந்தேகப்படுறியே! அப்போ நீ ஆம்பளை இல்ல,” என்றவுடன், அவன் அவளது கழுத்தைப் பிடித்தான்.

அசராமல் அவனை பார்த்தவள் மூச்சுத்திணற, “டேய், செத்திடப்போறாடா ! இவ நம்ம வீட்ல இருக்கறது எல்லாருக்கும் தெரியும். கொலை கேஸ்ல நம்ம உள்ள போகணுமா? சும்மா இரு!” என்று அவனை மிரட்டிய தாட்சாயணி, வலுக்கட்டாயமாக அவன் கையை அவளது கழுத்திலிருந்து எடுத்தார்.
மூச்சு வாங்கிக் கொண்டவள் திணறித் திணறி சுவாசித்தாள். பின்பு நிதானம் அடைந்து  “எப்படி என்னை இளக்காரமா பேசுறப்போ உனக்கு நல்லா இருக்கு? இதே உன்னோட ஆண்மையைப் பற்றி தப்பா பேசினா உனக்கு வலிக்குதா? அப்படித்தானே இருக்கும் என்னோட பெண்மையை நீ பேசும்பொழுது! ஏதாவது தப்பு நீங்க பண்ணிட்டு, அசால்ட்டா பொண்ணுங்க மேல தப்பைத் திருப்பி விடுறீங்க. ஆமாம், நான் காதலிச்சேன். இப்போ என்ன? நான் அவனோட சுத்திட்டு இருக்கேனா? இந்தா, என் போனை எடுத்து பார். இதில் அவனோட பெயர் ஏதாவது இருக்கா? நம்பர் இருக்கா? இருந்தா கண்டுபிடி டா!” என்று ஃபோனை காட்ட, அதை வாங்கி தூக்கி போட்டு உடைத்தான்.

அதைப் பொருட்படுத்தாமல், “இப்போ எங்க உன் போன்? உன்னோட அந்த ஆசை நாயகியோட நீ என்ன பேசினேன்னு, சாட் எல்லாம் எடுத்து காட்டு!” என்றவள் பேசிக்கொண்டிருக்க, மீண்டும் அவளை அறைந்தவன், “பொட்ட நாயே! நான் ஆம்பள. அப்படித்தான் இருப்பேன். ஒழுங்கா என் பேச்சைக் கேட்டு இந்த வீட்ல இருக்க முடியுன்னா இரு; இல்லன்னா உசுரோட புதச்சிடுவேன்!” என்றான்.அவன் தனது அம்மாவை அழைத்துக் கொண்டு கதவு வரை சென்றவன், “இனிமே இந்த ரூமை விட்டு நீ வெளியே  போகக் கூடாது,” என்றான்.

“அம்மா, அவளுக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டும். குழந்தை இருக்குனால அதுவும். அந்த குழந்தை பிறந்ததுக்கப்புறம் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்து அது என் குழந்தைன்னு தெரிஞ்சா மட்டும் தான் அவள் என் வாழ்க்கையில் இருப்பா. இல்லனா குழந்தையையும் கொன்று, இவளையும் டிவோர்ஸ் பண்ணிடுவேன்,” என்று மனசாட்சி இல்லாமல் பேசிவிட்டு, கதவை அடைத்து சென்றான்.
அவன் சென்றதும், புயல் வந்து ஓய்ந்தது போல அமைதியாகி, மெத்தையில் அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. “என்ன வாழ்க்கடா இது? எப்போ செஞ்ச காதல் இவனுக்கு எப்படி தெரிஞ்சது? யார் சொல்லி இருப்பாங்க?” என்று அவள் மனம் குழம்பியது.
இரண்டு நாட்கள் இப்படியே சென்றது. அபி அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. மதியம் மட்டும் ஒரு தட்டு உணவு உள்ளே வைக்கப்படும்; சிறைக் கைதி போல.
அபிக்கோ சாப்பிட மனசில்லை. ஆனாலும் குழந்தைக்காக சாப்பிட்டாள்.
இரவில், பாவம் பார்த்து, இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை வைத்து செல்வார் தாட்சாயணி. அவருக்கும்  கொஞ்சம் மனதில் ஈரம்  இருந்தது போல.

செல்போன் உடைந்து ஆப் ஆகி கிடந்தது. சார்ஜ் போட்டாலும் டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை. இதை யாரிடமாவது ரிப்பேர் செய்ய கொடுத்தால் தான் இந்த நரகத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்தாள்.

யாராவது உதவி செய்வார்களா என்று காத்திருந்தாள். ஒரு நாள் அதற்கான வாய்ப்பும் வந்தது… ஆனால் அது அவளுக்கு சாதகமா, பாதகமா என்பது விதியின் விளையாட்டு.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page