அவளது நெருக்கம் அவனை ஏதோ செய்ய, திணறித்தான் போனான் அவன்.
சற்று சற்று நேரத்தில் வெளியே எந்த பேச்சுக்களும் கேட்காமல் இருக்க ” “அப்பாடா! நல்ல வேலை அந்த ரவுடிங்க போயிட்டாங்க “என அவனை விட்டு அவள் விலக.
” நல்ல வேளை தள்ளி போய்ட்டா ” என நினைத்தவன் இப்பொழுது தான் நிம்மதியாக மூச்சு விட்டான்.
எழுந்தவள் கதவை திறந்து வந்து பார்க்க பாட்டி இல்லை, மூலிகை கூடையும் இல்லை, “ஓ!பாட்டி மலைக்கு மூலிகை பறிக்க தான் போயிருப்பாங்க” என அவன் அருகில் வந்தவள் , “அச்சச்சோ! மறந்தே போய்ட்டேனே ” என்றாள்.
“இவ எதை மறந்துட்டேன்னு சொல்றா” என அவன் நினைக்க.
“உச்சி பொழுதாகிடுச்சு காலைல இவருக்கு அந்த கசாயம் கொடுக்கவே இல்ல, பாட்டி திட்ட போது ” என வேகமாக அந்த மூலிகை இலையை அரைத்து கொண்டுவர.
அவள் அரைக்கும் சத்தம் கேட்டு “இவ எதை? இப்படி அரச்சிகிட்டு இருக்கா” என்றவன் மெதுவாக கண்களை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அவனது கை விரலும் கால் விரலும் மெல்ல மெல்ல அசைத்து கொண்டிருந்தான். அதை அவள் கவனிக்காமல் அந்த் கசாயத்தை டம்ளரில் கலக்கி கொண்டு வந்தவள்,, “இப்ப நான் உங்களுக்கு இந்த மருந்த கொடுக்க போறேன் நீங்க குடிச்சிட்டு சீக்கிரம் சரியாகனும் சரியா!” என்றவள் வேகமாக அவள் அதை குடிக்க.
அவள் சொன்னது அவனுக்கு தெளிவாக கேட்க,”,என்ன? நமக்கு கஷாயத்தை கொடுக்க போறேன்னு சொல்றா அது எப்படி ?இருக்கும் ” என அவன் அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவனது முகத்தை அவள் கைகளால் ஏந்தினால்,
“இவ இப்ப என்ன? பண்ண போறா,,” என்று அவன் நினைக்கும் முன் சட்டென் குனிந்து அவன் இதழில் முத்தமிட்டவன் தன் நாவல் அவள் அவன் உதடுகளை திறந்து அவன் வாய்க்குள் அந்த கசாயத்தை கொடுக்க ,,
அதில் அதிர்ந்தவன் இப்போது மெல்ல கண் திருந்து பார்த்தான் , தேன் நிலாவின் அழகான வெள்ளி நிலவு போன்ற முகத்தை கண்டான் , கண்களை இறுக மூடி அவனுக்கு அந்த கசாயத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் சற்று நேரத்தில் அவள் கண் விழித்து பார்க்க அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் வேகமாக அவனை விட்டு விலகினாள்.
அவன் இன்னும் அதிர்ந்தபடி அவளையே பார்த்து கொண்டிருக்க, “அது அது நீங்க மூணு நாளா உடம்பு சரி இல்லாம இருந்தீங்களா இந்த கசாயத்தை குடிச்சா தான் உங்களுக்கு சரியாகும்னு பாட்டி சொல்லுச்சு அதனாலதான் நான் உங்களுக்கு எப்படி கொடுக்க ,, கொடுத்தேன் இருங்க நான் போய் பாட்டியை பார்த்துட்டு வரேன்” என வேகமாக வெளியே ஓடி வர .
” என்னது! மூன்று நாள் ஆச்சா அப்ப இந்த மூணு நாளைக்கு இப்படித்தான் நமக்கு இந்த மருந்து கொடுத்துக்கிட்டு இருக்காளா இவ,,என்னடா நடக்குது ” என அவன் எழ முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஒரு கையில் கட்டு போட்டு கழுத்தோடு சேர்த்து கட்டி இருந்தது, ஒரு கால் முட்டியை அசைக்கக்கூட முடியவில்லை ,,” ஏன்? என்னால எதுவும் பண்ண முடியல” என அவன் தட்டு தடுமாறி கொண்டு இருந்தான் .
” பாட்டி பாட்டி” என கத்தி கொண்டே காட்டுக்குள் வந்தாள் தேன் நிலா ,
அவள் எதிரில் வந்த பாட்டி” எதுக்குடி? இப்படி கத்துற இங்க தானே இருக்கேன் ” .
“இல்ல அந்த ரவுடிங்க உன்ன கடத்திட்டு போயிட்டாங்களோன்னு தேடி வந்தேன்” .
“அந்த ரவுடி இனி என்னைய கடத்திட்டு போய் என்ன? பண்ண போறாங்க”.
“அப்படி சொல்லாத இப்ப வயசு பொண்ணை விட சின்ன பொண்ணுங்களையும் , கெழவியையும் தான் கிடத்திட்டு போறாங்க” .
“அடப்பாவிகளா! நீ என்னடி என்னென்னமோ சொல்லி என்ன பயமுறுத்திக்கிட்டு இருக்க, நீ இங்க எதுக்கு? வந்த”.
“நான் உன்னைத்தான் தேடி வந்தே”.
“அப்போ அந்த புள்ளையை ஒத்தையில விட்டுட்டு வந்திருக்கியா?”.
“ஆமா! அவர் என்ன புதையலா யாரும் தூக்கிட்டு போக”.
“அப்படி சொல்லாத இப்போதைக்கு அந்த பையன் குழந்தை மாதிரி தான் உடம்பு சரியாகும் வரை நம்ம தானே பார்த்துக்கணும் “என்று அவர்கள் வீட்டிற்கு வர மெதுவாக எழுந்து நின்றவன் தடுமாறி விழ போக ஓடி வந்த நிலா அவனைத் தன் மார்போடு தாங்கி பிடித்து மெதுவாக அமர வைத்தாள்.
அவனருகில் வந்த் பாட்டி ” ராசா எழுந்துட்டியா இப்போ உனக்கு எப்படி? இருக்கு சாமி” என கேட்க.
“நான் நல்லா இருக்கேன், உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி என்னோட உயிரை காப்பாத்தினதுக்கு”.
” ராசா நன்றி சொல்லணும்னா நீ என் பேத்திக்கு தான் சொல்லணும்”.
“என்ன ? சொல்றிங்க”.
“இவ தான் இந்த மூணுநாளா உன் பக்கத்துல இருந்து நாளா ராப்பகலா உன்ன கண்ணு முழிச்சு பார்த்துகிட்டா ” என்றார்.
அவன் அவளை பார்க்க அவன் பார்வையை தாங்க முடியாமல் தலையை துணிந்து கொண்டாள் தேன் நிலா.
“உன் பெயர் என்ன ? ராசா “.
“தேவ்” என்றான்.
“நான் இந்த ஊரு மருத்துவச்சி, நீ மூணு நாளா இங்கதான் இருக்க , உன்னை காப்பாத்தவே முடியாதுனு தான் நானே நினைச்சேன் தெரியுமா ! அந்த அளவுக்கு உன் உடம்பெல்லாம் காயமா இருந்துச்சு யார் உன்னை இப்படி அடிச்சாங்க?” என கேட்டார் பாட்டி.
“எனக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த மலை அடிவாரத்தில் இருந்து உருட்டி விட்டுட்டானுங்க” ,
“ஓ இங்க இருக்க மரம் செடி கொடில எல்லாம் அதுல அடிபட்டதனால் தான் உங்களுக்கு இவ்ளோ காய ஆச்சா?”என அவள் குழந்தை போல் கேட்க.
“ஆமா!” என தலையாசைத்தான் .
“நிலா காலையில மருந்து குடுத்தியா இல்லையா?”.
“கொடுத்தாங்க நல்லா கொடுத்தாங்க” என்றான் அவளை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டே.
“நீ என்ன? சொல்ற ” என பாட்டி தெரியாமல் கேட்க.
“அது ஒன்னும் இல்ல பாட்டி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் கசாயத்தை அரைச்சு அவர்க்கு கொடுத்தேன் அதை தான் சொல்றாரு” என்றவள் தடுமாற அவள் நிலையை உள்ளுக்குள் ரசித்தான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை அவளது தடுமாற்றம் அவனை என்னவோ செய்தது ,
அவனுடைய ரவுடி சாம்ராஜ்யத்தில் அவள் ஒரு அழகான பூ போல் தெரிந்தாள் அவனுக்கு.
“நீங்க ரெண்டு பேரு மட்டும் தான் இந்த வீட்ல இருக்கீங்களா?”.
“ஆமா! தேனிலாவோட அம்மா அப்பா சின்ன வயசுலயே ஒரு விபத்துல தவறிட்டாங்க, அதுக்கப்புறம் கொஞ்சம் காலத்துல என் வீட்டுக்காரும் போயிட்டாரு, இந்த புள்ளையை நான் தான் வளத்திட்டு இருக்கேன், இவளை ஒரு நல்லவன் கையில இவ்வளவு புடிச்சு குடுத்துட்டேனா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்” என்றார் பாட்டி கண் கலங்கியபடி.
“அப்படி எல்லாம் சொல்லாத பாட்டி எனக்கு குழந்தை பிறந்தாலும் என்னோட குழந்தைகளை நீ தான் வளர்க்கணும்” என எப்பவும் போல துடுக்காக பேசியவள் , அச்சோ! இப்பொழுது அவன் முன்னிலையில் இப்படி பேசிவிட்டோமே என தன் நாக்கை கடிக்க.
அவளது பேச்சைக் கேட்டதும் அவனுக்கு உடனே சிரிப்பு உண்டானது , அந்த இரும்பு மனிதன் இதயத்திலும் மெல்லிய சாரல் வீச தொடங்கியது,,
இரவு ஆனதும் பாட்டி தன் கைகளால் சாப்பாடை பிசைந்து அவனுக்கு ஓட்டி விட மெதுவாக சாப்பிட்டான், பாட்டியின் கையால் சாப்பிடும் போது அவனுக்குள் இருந்த தாய் பாசத்தை உணர்ந்தான்.
இரவு மூவரும் நன்றாக உறங்கிய பின் சற்று நேரத்தில் ஜன்னல் வழியே புகை வர சிறிது நேரத்திற்குள் வீட்டிற்கு ஐந்து பேர் வந்தனர், வந்தவர்கள் பாட்டியின் முகத்திலும் நிலாவின் முக்கிலும் ஒரு துணியை வைக்க இருவரும் அப்படியே மயங்கி விட்டனர்.
அவர்கள் தேவை பார்க்க கண்விழித்து அவர்களே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்,
“பாஸ்,,” என அவர்கள் அனைவரும் அவன் முன் தலைவணங்கி நிற்க மெதுவாக தலையசைத்தான்.
அவர்கள் ஏதோ பேச வர, ” இங்க வேண்டாம் வெளியில போலாம்” என்று அவன் கண்ணசைவில் கூற , மெதுவாக அவனை கை தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர் .
சற்று தூரம் வந்து அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான் தேவ் , சற்று நேரத்தில் அவன் முன்னால் , கை கால் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் மண்டியிட்டபடி இருந்தனர்.
தேவ் ன் இடது கையாலான ரவி, “பாஸ் இவனுங்கள எங்களால முடிஞ்ச அளவு அடிச்சு துவைத்துவிட்டோம் , சொல்லுங்கடா யார் உங்களை இப்படி பண்ண சொன்னது சொல்லுங்கடா” என அவர்கள் முதுகில் உதைக்க ,
“நிறுத்து” என கையசைத்தான் தேவ்.
“சொல்லுங்கடா”.
“அது வந்து எங்க பாஸ் ஓட பேரு அருள் அவர்தான் உங்களை கொல்ல சொல்லி எங்களுக்கு பணம் கொடுத்தார் ” .
” உங்களால கொல்ல முடிஞ்சிடுச்சா டா எங்க பாஸை” என மீண்டும் ஒரு எத்து விட்டான் .
” நாங்க அவரை கொல்லவே இல்லையே அப்பறம் எதுக்கு எங்கள நீங்க,, ” என ஒருவன் பயத்துடன் கேட்க.
ரவி ஒரு பெரிய வாழை தேவ் கையில் கொடுக்க ஒரே வெட்டாக மூவரின் தலையவும் துண்டு துண்டாக வெட்டினான், அவன் கண் மூடி திறந்த பத்தாவது இடத்தில் நிமிடத்தில் அந்த இடம் ரத்தக்கரை இருந்து தெரியாமல் அப்புறப்படுத்தினார்கள் தேவ் ன் ஆட்கள் .
அந்த பாறையில் சற்று நிமிர்னுடன் அமர்ந்திருந்த தேவ் ஐ பார்த்த அவனது ஆட்களுக்கு சிங்கம் ஒன்று உடல் நலம் சரியில்லாமல் அதே நேரம் கம்பிரம் குறையாத தோரணயில் அமர்ந்திருப்பது போல் தெரிந்தது .
” பாஸ் நாங்க உங்களை தேடி வந்துட்டேன், ஆனா அந்த பொண்ணு அந்த பாட்டியும் உங்களை இன்ச் அளவு உங்களை விட்டு விலகாமல் உங்க கூடவே இருந்தாங்க, பகல்ல அந்த பாட்டி , நைட் பொண்ணு உங்களை கண்ணிமைகாம பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததனால நாங்க” என ரவி கூற.
” எல்லாம் தெரியும் ” என்றான், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவர் அவனை பரிசோதித்து விட்டு” சார் உங்களுக்கு அந்த நாட்டு மருந்து கொடுத்திருக்கிறதுனால இப்ப உங்க உடம்பு கொஞ்சம் கொஞ்சம் சரி ஆகிட்டு வருது , இப்ப நம்ம இங்கிலீஷ் மருந்து கொடுத்தோம்னா அது உங்க ஹெல்த்துக்கு தான் பிரச்சனையாகும் அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்க இந்த நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம் சார் ” எனக்கூறி அவர் செல்ல தேவ் யோசித்துக் கொண்டிருந்தான்,
“இதில் யோசிக்க என்ன பாஸ் இருக்கு நீங்க கொஞ்ச நாளைக்கு இங்கே இருக்கறது” .
“நானும் அதைத்தான் நினைக்கிறேன், என்னோட மைண்டுக்கும் இப்ப இருக்குற இந்த சூழ்நிலைதான் புடிச்சிருக்கு சோ நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வரேன்”.
“ஓகே பாஸ்” என அனைவரும் சந்தோஷப்பட்டார்கள் , அவனுடைய ஆட்கள்.
“ஏன்? நான் இங்க இருக்கறதால உங்களுக்கு என்ன? அவ்வளவு சந்தோசம்”.
“இல்ல பாஸ் அது வந்து இங்க வந்ததுக்கப்புறம் தான் உங்க முகத்தில் கொஞ்சம் சிரிப்பை பார்க்கிறோம்”.
“ஏன்?நான் இதுக்கு முன்னாடி சிரிக்கவே இல்லயா!?”.
“அந்த சிரிப்புக்கும் இந்த சிரிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு பாஸ்”.
” என்ன? வித்தியாசம்” என கேள்வி கேட்டான் .
அப்போது அவனை தேடி வந்தாள் தேன் நிலா,
❤️அவ அவங்க எல்லாரையும் பார்த்துருவாளா? தெரிஞ்சுக்க அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க.❤️
