அபிராமி சோர்வாக கட்டிலில் படுத்திருந்தாள்.
வெகு நேரமாக அவளையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த்.
இருவருக்கும் திருமணமாகி முழுதாக இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த். எதையோ யோசித்த வண்ணம் அவனின் புருவம் சுருங்கி இருந்தது.
அபிராமியின் முகத்தை பார்த்தவன் அவளிடம் அனுமதி வாங்காமலேயே புடவை விலகிய அவளின் வயிற்று பகுதியின் தன் கைகளை பதித்தான்.
அபிராமி பதறி எழுந்தாள். அஸ்வந்த்தை பார்த்தவள், என்னங்க? என்றாள் பதற்றத்தோடு.
வெளியே தான போனீங்க? எப்போ ரூம்க்குள்ள வந்திங்க என்று கேட்டவளுக்கு அவனின் முகம் புதிதாக தெரிந்தது.
நீ படு அபி. ரெஸ்ட் எடு என்றவன் மீண்டும் அவளின் வயிற்று பகுதியில் தன் கரங்கள் கொண்டு வருடினான்.
அபிராமி கூச்சத்தில் நெளிந்தாள். ஆனால், அவனின் கரம் கொடுத்த இதம் அவளுக்கு பிடித்திருந்தது.
பீரியட்ஸ் தான அபி என்று கேட்டான்.
அபிராமி திகைப்பாக அவனை பார்த்தாள். ஆமாங்க… தயக்கமாக கூறினாள்.
உன் நடையை வச்சி கண்டு புடிச்சிட்டேன் என்றான்.
அந்த அளவுக்கா நம் நடை இருந்தது என்று மனதிற்குள் புலம்பினாள் அபிராமி.
போன மாசம் உனக்கு டேட் ஆகலையே என்று கேட்டான்.
இர்ரெகுலர் பீரியட்ஸ்ங்க எனக்கு என்றவளின் கண்கள் இப்பொழுது சுவற்றை வெறித்தது. கோபப்படுவாரோ என்று தோன்றியது அவளுக்கு.
நல்லா சாப்பிடு அபி என்றவன் அவளின் அடி வயிற்றை மென்மையாக வருடினான்.
அபிராமி தன் வெட்கத்தை மறைத்து, தான் படுத்திருந்த பஞ்சு மெத்தையில் கால்களை அழுத்தி தேய்த்தாள். இது வரை இருவரும் மனம் விட்டு பேசியதில்லை. அதனால், அஸ்வந்த்தின் நெருக்கம் அபிராமியை சித்திரைவதை செய்தது.
ரெஸ்ட் எடு அபி. கண் மூடி தூங்கு வயிறு வலி சரியாயிரும் என்றான் அஸ்வந்த்.
அது வந்து… ங்க உங்க கை என்று சங்கடத்தோடு அவள் கூற, ஸ்ஸ் எதுவும் பேசாமல் தூங்கு என்று ஹஸ்கி குரலில் கூறி அவளின் பிறை நெற்றியில் முத்தம் வைத்தான் அஸ்வந்த்.
முதல் முத்தம் பெண்ணவளை சொர்க்கத்திற்கு இழுத்து சென்றது போல் இருந்தது. கண்கள் மூடி கீழ் உதட்டை அழுந்த கடித்தாள் அபிராமி.
அவளின் அருகிலேயே அவளை அணைத்து கொண்டதை போல் படுத்தான் அஸ்வந்த். அபிராமிக்கு ஏகத்துக்கும் வெட்கம் வந்தது. என்னாச்சி? திடிர்னு இப்படி மாறிட்டாரே என்று தான் நினைத்தாள்.
அபி…. அவளின் காதோடு அழைத்தான் அஸ்வந்த்.
ம்ம்ம் என்றாள் அபிராமி.
எனக்கு ஒரு ப்ரென்ட் இருக்கான்னு சொன்னேன்ல என்று கேட்டான்.
ஆமாங்க… ஆகாஷ் என்றாள் அபிராமி.
எனக்கும் சுகன்யாவுக்கும் கல்யாணம் ஆனதுல இருந்து அவனை போய் நான் பார்க்கவே இல்லை டி. சொல்லப்போனால் அவன்கிட்டே நான் பேசியே ஒரு வர்ஷத்துக்கு மேல் ஆயிடுச்சு என்றதும், அபிராமி தன் தாமரை மொட்டு விழிகளை விரித்தாள்.
என்னங்க சொல்றிங்க? நீங்க அவங்களோட இப்போ தொடர்புல இல்லையா என்றவளுக்கு தானோ முகத்தில் ஒரு வித வருத்தம் வந்து போனது.
ஆமா டி என்றான். அப்படினா அவங்கள போய் பார்த்துட்டு வாங்க என்றாள் அபிராமி.
அவன் எங்க இருக்கானு எனக்கு தெரியல அபி என்றவன் அவளை அழுத்தமாக பார்த்தான்.
பேஸ் புக், இன்ஸ்டாகிராம் அதுல சர்ச் பண்ணா கிடைக்க போறாரு என்றாள் அபிராமி.
உடனே அவனின் கைபேசியை எடுத்து தன் நண்பனை தேடினான் அஸ்வந்த்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் இருந்த இடத்தில் இருந்தே தன் நண்பன் ஆகாஷ்ஷின் முகவரியை தேடி கொண்டிருந்தான் அஸ்வந்த்.
அவனின் இரண்டு மணி நேர போராட்டம் எப்படியோ வெற்றியில் முடிந்து விட்டது.
இதோ அவனின் நண்பன் மும்பையில் இருக்கிறான். அவனின் பேஸ் புக் ப்ரொபைலில் அவனுக்கு ஒரு குடும்பமே இருக்கிறது போல் அல்லவா புகைப்படம் காட்டுகிறது. ஆனால், நாம் அவனுடன் தொடர்பில் இல்லாமல் போய் விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவித்தான் நாயகன்.
இரண்டு மணி நேரமாக தன் கண்ணாளனின் முக மாறுதலை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள் கோதை.
அபி என்று அருகிலேயே இருக்கும் தன் மனைவியை இறுக்கி அணைத்தான் அஸ்வந்த்.
என்னங்க? என்று அவனின் சந்தோச துள்ளலில் தானும் இன்பமானாள் அபிராமி.
என் ப்ரென்ட் மும்பையில இருக்குறான். நான் போய் அவனை பார்த்துட்டு வரேன் என்றவனுக்கு ஆனந்த மகிழ்ச்சி.
சரிங்க. பார்த்துட்டு அப்டியே நம்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க. நானும் அவங்கள பார்க்கனும் என்றாள் அபிராமி.
சரி அபி என்றவன், நீ ஓகே தான அபி? இல்லைனா நான் உன்னோட கூட ரெண்டு நாள் இருந்துட்டு போகவா? என்று அவளின் கன்னங்களை பற்றினான் அஸ்வந்த்.
தன் கன்னத்தில் கை பதித்த அஸ்வந்த்தின் கரங்களை பிடித்த அபிராமி, நான் பார்த்துக்குறேன். நீங்க உங்க பிரெண்டை பார்த்துட்டு அப்படியே நம்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க என்றாள்.
சரி அபி என்றவன் மீண்டும் அவளின் பிறை நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, மும்பை கிளம்புவதற்கு தனக்கு தேவையான உடைகளையும், ஆவணங்களையும் எடுத்து பேக் செய்தான்.
அவனின் முத்தத்தில் மயங்கிய அபிராமி, அஸ்வந்த்தின் இந்த மாற்றம் கண்டு உள்ளுக்குள் சந்தோசமானாள். அதை விட பேரானந்தம் அவன் அவளை உரிமையாக “டி ” சொல்லி அழைப்பது தான்.
அவன் ஏற்கனவே கூறியது தான். நமக்கு சுஜித் ஒருவன் போதும் என்று கூறி இருந்தான். அபிராமிக்கும் அதில் சம்மதம் தான். ஆனால், தன்னவனின் அன்புக்கும் , அரவணைப்புக்கும் ஏங்கினாள். இப்பொழுது அதுவே கிடைக்கின்ற பொழுது அதை முழுதாக ஏற்று கொள்ள ஆரம்பித்து விட்டாள் கோதை.
வீட்டில் அனைவரிடமும் கூறிவிட்டு தன் நண்பனை காண பயணத்தை தொடங்கி விட்டான் நாயகன்.
****
தன் சின்னஞ்சிறு பிஞ்சு பாதங்களில் நடை போட்டு கொண்டிருந்தது அந்த குட்டி தேவதை. நம் கார்த்திக்கின் தங்கை கார்த்திகாவின் மகள். ( கார்த்திக் மற்றும் கார்த்திகா இருவரும் யார் என்று ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே? நம் அபிராமியின் தங்கை அகிலாவை காதல் தொல்லை செய்து கொண்டு அவள் பின்னால் சுற்றுகிறானே அவன் தான் இந்த கார்த்திக் )
அது தத்தி தத்தி தன் தாய் மாமனின் அறையை எட்டி பார்த்து உள்ளே செல்ல, கார்த்திக் குளித்து விட்டு அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தான்.
தங்கம் என்று தன் மருமகளை பார்த்தவன் கொஞ்ச, அந்த குட்டி மழலை தன் வெண்ணிற கொலுசுகள் சிணுங்க, மாமனிடம் ஓடி வந்து அவன் கால்களை கட்டி கொண்டது.
தங்கம், மாமா வேலைக்கு போறேன். போய்ட்டு வந்ததும் என் தங்கத்தை தூக்கிட்டு போய் பைக்ல வச்சி சுற்றி காட்டுறேன் என்றான் கார்த்திக்.
அதுவோ உதட்டை குவித்து இப்பொழுதே ஊர் சுற்ற வேண்டும் என்று அழ, குட்டி தேவதையின் அழுகையை நிறுத்துவதற்காக, சரி டி செல்லம் அழாதீங்க. மாமா வெளியே அழைச்சிட்டு போறேன் என்று அந்த குட்டி தேவதையை அள்ளி தன் தோளில் போட்டு கொண்டு தன் டூ வீலரை உயிர்ப்பித்து முறுக்க, அந்த சத்தத்தில் தன் இரண்டு கரங்களையும் தட்டி சந்தோசப்பட்டாள் குட்டி தேவதை.
ஆகாஷ்னி குட்டி மாமாவோட வண்டியில போக போறிங்களா? என்று கேட்டு கொண்டே வந்தார் நம் கார்த்திக்கின் தாயார்.
ஆகாஷ்னி என்ற பெயரில் தன் பற்களை கடித்து தாயை முறைத்தான் கார்த்திக். ஏனெனில் நம் குட்டி தேவதையின் பெயர் தான் ஆகாஷ்னி.
அவனின் கோபத்தை கண்ட அவனின் தாய் வாயை மூடி கொண்டார்.
கார்த்திக் சிறிது தூரம் டூ வீலரை இயக்கி கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வந்து மருமகளை தன் தாயிடம் ஒப்படைத்தான்.
இன்னொரு முறை பாப்பாவை அந்த பேர் சொல்லி கூப்பிட கூடாது என்று முறைத்த மகனிடம், சரி ப்பா என்றார் அவனின் தாய்.
பாவம் அண்ணனின் பேச்சில் நம் கார்த்திகா தான் மனம் உடைந்து போனாள். அவளின் எண்ணம் முழுதும் நிலைக்காமல் போன தன்னுடைய திருமண வாழ்க்கையில் சென்று நின்றது. நீ தான் தவறு செய்து விட்டாய் என்று அவளின் மனம் கூறியது. இல்லை அவன் தான் உனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அவளின் மூளை அறிவுறுத்தியது.
அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் புரண்டது.
****
இரண்டு நாட்கள் கடந்தது. இருள் சூழ தொடங்கிய நேரம் அது.
அகிலா தன் வேலையை முடித்து விட்டு, நீண்ட சாலையில் தன் பயணத்தை தொடர்ந்தாள்.
அவளின் பயணத்தில் இடையூராய் அவளின் கைபேசி சிணுங்கியது.
யார் அது? என்று நினைத்த அகிலா, திரையில் தெரிந்த தன் மாமனின் பெயரை பார்த்து விட்டு அழைப்பை ஏற்றாள்.
மாமா ஏன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல? என்று தான் கேட்டாள் அவனின் மச்சினிச்சியான அகிலா.
அவளின் கேள்வியை காதில் வாங்காத அவளின் மாமன் அஸ்வந்த், உனக்கு வாட்ஸாப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கிறேன் பாரு என்றான்.
என்ன போட்டோ என்ற அகிலா, அஸ்வந்த்தை தொடர்பிலேயே வைத்து விட்டு வாட்ஸாப் ஓபன் செய்தாள்.
அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அதிர்ந்து தான் போனாள் பெண்ணவள்.
ஹெலோ…அகிலா லைன்ல இருக்குறியா?
ஆமா மாமா என்றாள்.
இவர் யார்னு உனக்கு தெரியுமா? என்று கேட்டான்.
தெரியாம எப்படி இருக்கும். இவரால எனக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா? என்று கூறியவளின் முகத்தில் அவ்வளவு கோபம்.
ஆனால், அந்த பக்கம் மாமன் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து தான் போனாள் அகிலா.
என்ன மாமா சொல்றிங்க? என்று கேட்டவளுக்கு கார்த்திக்கின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வந்தது.
அகிலா இப்போ என்ன பண்ற? வீட்டுக்கு போய்டியா? என்று இன்னொரு பெரிய விஷயம் கூற காத்திருந்தான் போலும் நம் நாயகன்.
இல்லை மாமா. நடந்து போய்ட்டு இருக்குறேன். நீங்க சொல்லுங்க என்று அவள் கைபேசியை காதில் வைத்து பேசி கொண்டே சாலையில் நடை போட, மாமன் கூறி கொண்டிருந்த விஷயத்தை கேட்டு அவளின் புருவம் ஏறி இறங்கியது.
கடைசியாக அவனின் கேள்விக்கு, நம் அகிலா ” எனக்கு ஓகே தான் மாமா ” என்றாள்.
சரி அகிலா நம்ப மார்னிங் மீட் பண்ணுவோம் என்று கூறி வைத்து விட்டான் அஸ்வந்த்.
நம் அகிலாவிற்கு இப்பொழுது தான் லேசாக பயம் வர ஆரம்பித்தது. கடவுளே அபிராமி அக்காக்கு மட்டும் நான் இப்படி பண்றது தெரிஞ்சிடக் கூடாது என்று வேண்டி கொண்டாள் அகிலா.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
