அத்தியாயம் 32

இளம் காலை பொழுதில் நம் அகிலா அழகான பட்டு உடுத்தி நேர்த்தியாக இருந்தாள். 

திடீரென்று புடவையில் கிளம்பி கொண்டிருக்கும் தன் மகளை பார்த்த கௌரி, என்ன டி இன்னைக்கு புடவை கட்டிருக்குற? என்று கேட்டார். 

ஆ…. அது என்று தான் திணறியவள், அது அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே ஆபிஸ் போறேன் ம்மா என்று சமாளித்தாள். 

அபி வீட்டுக்கு எதுக்கு டி? என்கிட்டே ஏன்  சொல்லவே இல்லை? அபியும்  என்கிட்டே சொல்லல என்று தான் கேள்வி கணைகளை தொடுத்தார். 

 

அ… து என்று அவள் திணறும் போது கௌரியின் கைபேசி சிணுங்கியது. 

 

டீப்பாயில் இருந்து அலறும் தன் கைபேசியை எடுத்த கௌரி உதட்டில் புன்னகையோடு தான் அழைப்பை ஏற்றார். பின் அழைத்தது அவரின் அன்பு மகள் அபிராமி ஆயிற்றே. 

அபி, நல்லா இருக்குறியா டா? என்று பாசத்தோடு கேட்டார் கௌரி. 

அக்காவா! ஐயோ! அக்கா எதுக்கு கால் பண்ணாள். அய்யயோ ஒன்னும் புரியலையே!  பயமா வேற இருக்குது என்று புலம்பினாள் அகிலா. 

அபிராமி தன் தாயிடம் என்ன பேசினாளோ தெரியவில்லை. ஆனால், கௌரி ” சரிம்மா அகியை அனுப்பி வைக்கிறேன் ” என்று கூறி கைபேசியை அணைத்து விட்டார். 

அதன் பிறகு கௌரி அவரின் வேலையை தொடர, என்ன இது?  அம்மா வேற எதும் கேட்காமல் போறாங்க என்று நெற்றி சுருக்கி யோசித்தாள் அகிலா. 

 

எதும் சொல்லாம இருக்குறதே இப்போதைக்கு நல்லது என்று நினைத்து விட்டு , தன் புருவத்தின் மத்தியில் அழகான வட்ட வடிவ ஸ்டிக்கர் பொட்டு எடுத்து வைத்து விட்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்த்து விட்டு அலுவலகம் செல்ல தயாராக, அதற்குள் கௌரி அகிலாவிடம், அபிராமிக்கு பிடித்த கோதுமை அல்வாவை நொடிக்குள் செய்து எடுத்து வந்து கொடுத்தார். 

போற வழியில நீயே தின்னுறாத என்று கூறும் தாயை பார்த்த அகிலா, எனக்கும் இப்படி பண்ணலனா தான இருக்குது என்று சிலுத்து கொண்டு சென்று விட்டாள். 

அபிராமி வீட்டில் இல்லாதது  எப்பொழுதும் ஒரு வெறுமை நிறைந்து இருக்க, இவளுக்கும் திருமணமாகி விட்டால் இந்த வீடு அமைதி என்ற பள்ளதாக்கில் தான் மிதக்கும் என்று நினைத்து பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டார் கௌரி. 

பெண் பிள்ளை ஆயிற்றே கண்டிப்பாக புகுந்த வீடு செல்ல தான் வேண்டும். 

****

அகிலா இன்று தான் முதல் முறை தன் அக்காவின் வீட்டிற்கு தனித்து செல்கிறாள். 

உள்ளே சென்றதும் தன் செல்ல மகன் சுஜித்தை அள்ளி ஆசை தீர முத்தம் வைக்க வேண்டும் என்று அவள் கைகள் வேறு பர பரக்க, எப்படியோ ஒரு வழியாக சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டாள். 

அந்த வீட்டின் ஹாலில் குடும்பம் முழுதும் குழுமி இருக்க, அபிராமி தான் வீட்டிற்குள் நுழையும் தன் தங்கையை பார்த்ததும் அடிக்க தான் பாய்ந்தாள். 

 

அகிலா, அக்காவின் வேகத்தை பார்த்து புரிந்து கொண்டவள், ஐயோ மாமா உங்க பொண்டாட்டிகிட்டே இருந்து என்னைய காப்பாற்றுங்க என்று அஸ்வந்த்தின் பின் சென்று மறைந்து கொள்ள, 

 

என்ன அபி பண்ற? விஷயத்தை தெளிவா சொல்லியும் நீ இப்படி பண்ணுனா என்ன அர்த்தம் என்று கேட்ட அஸ்வந்த் அவளின் கைகளை தன் கையால் பிடித்து அவளை நகர விடாமல் செய்து விட்டான். 

நீங்க போட்ட பிளான் எனக்கு புடிக்கவே இல்லை. நான் எதோ நீங்க சொல்லிட்டீங்கனு தான் அரை மனதா சம்மதம் சொன்னேன் என்றாள் அபிராமி. 

ஒரு ரெண்டே நாள் அபி, அப்பறம் எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும் என்றான் அஸ்வந்த். 

 

அஸ்வந்த் இவ்வளவு தூரம் பேசிய பின் அவனின் மனையாள் அமைதியாகி விட்டாள். 

அஸ்வந்த் அவளையே பார்த்தான். வீட்டில் அனைவரும் இருப்பதை மறந்து விட்டனர் போலும். 

ஒரு சில நிமிடங்கள் அப்படியே கரைய, பாரிஜாதம் சங்கரை பார்த்து விழியால் சைகை செய்ய சங்கர் தன் மகனையும் மருமகளையும் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்தார். 

வாவ் ஆகாஷ்! போட்டோவை விட நேர்ல ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்குறீங்க என்று வேண்டுமென்றே அகிலா அவனை பிடித்து கலாய்க்க, அபிராமி அவளின் கைகளை தன் கணவனின் கைகளில் இருந்து மெதுவாக பிரித்து எடுத்தாள். 

 

அகிலாவின் கூற்றை கேட்டு, ஏங்க என்று தான் சிரித்து கொண்டான் ஆகாஷ். 

அவனின் வாய் சிரிப்பை உதிர்த்தாலும் அவனின் கண்களில் ஒளி இல்லை. அது அனைவருக்கும் புரிந்தது. 

மும்பையில் எப்படியோ தன் நண்பன் ஆகாஷை கண்டுபிடித்து, இவ்வளவு காலமும் தனிமையில் தவித்த அவனை இங்கு அழைத்து வந்து விட்டான் அஸ்வந்த். 

என் பையன் சுஜித் எங்க? என்று அகிலா கேட்க, ரூம்ல தான் இருக்குறான் என்ற அபிராமி தங்கையின் கைகளை பிடித்து, வா நான் அவன்கிட்டே உன்னைய அழைச்சிட்டு போறேன் என்று அழைத்து சென்று விட்டாள். 

தன்னுடைய அறைக்குள் வந்ததும் அபிராமி அறையின் கதவுகளை மூடி தாழ் போட, அகிலா கட்டிலில் இரு பக்கமும் தலையணைக்குள் அழகாக பூக்குவியல் போல் துயில் கொண்டிருக்கும் சுஜித்திடம் சென்று அவனை அள்ளி தூக்கினாள். 

அச்சோ செல்லம், தூங்கும் போது கூட அழகா இருக்குறீங்களே!  என்று அவனின் கழுத்தில் முகம் புதைத்து நம் அகிலா தன் மகனுக்கு முத்தங்களை வாரி வழங்கி கொண்டிருக்க, அவள் பின்னால் காளி அவதாரம் எடுத்து நின்றாள் அபிராமி. 

 

அவனை கீழே படுக்க வை. அப்பறம் பாதி தூக்கத்துல எழுந்திரிச்சா அழுவான் என்றாள் அபிராமி. 

இருந்தாலும் உன் மம்மி உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வச்சி உன்னைய கெடுத்துட்டாள். சித்தி வீட்டுக்கு வந்துருக்குறேன். ஆனால், நீ இன்னும் தூங்கிட்டு இருக்குற பேட் பாய் என்று கூறிவிட்டு அவனை கட்டிலில் கிடத்ததினாள் அகிலா. 

 

சீக்கிரமா வளர்ந்து சித்தி… சித்தினு எப்போ கூப்பிடுவ என்று கூறி மறுபடி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு திரும்பியவள் அபிராமியை பார்த்து அதிர்ந்து விட்டாள். 

 

அபிராமியின் விழிகள் நன்றாக சிவந்து இருந்தது. அவளுக்கு அதிகமாக கோபம் வராது. ஆனால் கோபம் வந்து விட்டால் அவளின் கண்கள் ரத்த சிவப்பாக மாறி விடும். இப்பொழுதும் அப்படி தான் இருந்தது. 

 

என்னக்கா என்று பயத்தோடு கேட்டாள் அகிலா. 

கார்த்திக்கை விரும்புறியா? என்று நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டாள் அபிராமி. 

அகிலாவின் இதயம் ஒரு நொடி தன் துடிப்பை நிறுத்தி விட்டு, பின் மறுபடி துடித்தது. 

இ…. இல்…. இல்லைக்கா என்று கூறினாள். 

எதுக்கு திணறுற? என்று கேட்டாள். 

இல்லை நீ கோபமா இருக்குறியா? அதான் பயமா இருக்குது எனக்கு என்றவள் சிரமப்பட்டு வார்த்தையை வெளிவிட்டாள். 

தப்பு பண்ணலனா பயப்பட வேணாமே. அப்போ கார்த்திக்கை விரும்புற அப்படி தான என்றாள் அபிராமி. 

 

இல்லைக்கா நம்பு. இதுக்கு மேல நீ என்கிட்டே இப்படி கேட்காத என்றாள் அகிலா. 

 

அப்போ ஏன் டி மாமா சொன்ன பிளான்க்கு ஓகே சொன்ன? என்று கேட்டாள் அபிராமி. 

அது… ஆகாஸ் பாவம். மாமா ஹெல்ப் கேட்டாரு அதான் ஓகே சொன்னேன் என்று இழுத்து கூறியவள் குனிந்து தரையை பார்த்தாள். 

ஓ அப்படியா? சரி என்ற அபிராமி அதோடு பேச்சை முடித்து கொண்டு அறையை திறந்து வெளியே சென்று விட்டாள். 

அகிலா மூச்சை இழுத்து விட்டு கட்டிலில் அமர்ந்தாள். இரண்டு நிமிடம் கழித்து அறையை விட்டு வெளியே சென்றாள். 

ஐயோ அத்தை மாமாவை பார்க்கலையே என்று இப்பொழுது தான் நினைவு வந்தவள், அவர்களிடம் நலம் விசாரித்தாள். 

 

நல்ல பொண்ணு என்ற பாரிஜாதமும் சங்கரும் சிரித்து கொண்டனர். 

ஓகே ரெண்டு பேரும் கிளம்புங்க என்று இருவரையும் அனுப்பி வைத்தான் அஸ்வந்த். 

 

சரி மச்சான் என்ற ஆகாஷ், அஸ்வந்த்தின் டூ வீலரை உயிர்ப்பிக்க அகிலா அவன் பின் ஏறி கொண்டாள். 

போலாம் ப்ரோ என்றாள். 

ஆகாஷ் மிதமான வேகத்தில் டூ வீலரை இயக்கி கொண்டு சென்றான். 

அகிலா அவனின் தோளில் கைப்போட்ட வண்ணம் இந்த பயணத்தை ரசித்தாள். 

அதோ சற்று தொலைவில் தெரிந்தது ஒரு பூக்கடை. எத்தனை முறை இந்த கடையில் வந்து தன் ஆசை காதலிக்கு  பூ வாங்கி கொடுத்து அவள் தலையில் அவனே சூடி விடுவான். நினைக்கும் பொழுதே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. 

பூக்கடையை தாண்டி சென்றதும்,  இரண்டு இடத்தில் ஸ்பீட் பிரேக்கர் வந்தது. 

ஐயோ கார்த்திக் கொஞ்சம் மெதுவா போங்க என்ற குரல் அவனின் மனதில் இருந்து தான் வந்தது. அது வெறும் பிரம்மை தான். அதற்கே அவனின் விழிகளில் லேசாக நீர் கசிந்தது. 

இப்பொழுது அதே ஸ்பீட் பிரேக்கில் மெதுவாக ஏற்றி சென்றான் ஆகாஷ். 

அரை மணி நேர பயணம் தான் அது. மாமா சொன்ன லொகேஷன் இது தான் ப்ரோ என்றாள் அகிலா. 

 

அது இவனுக்கு தெரியாதா என்ன? எத்தனை முறை வந்திருக்கிறான். அந்த வீட்டின் முன் மெதுவாக பைக்கை இயக்கினான். பால்கனியில் தன்னந்தனியாக நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் கார்த்திகா. 

வெகு நாட்கள் கழித்து அவளை பார்த்தான். கார்த்திகா என்று சத்தமாக அழைத்து ஓடி சென்று அவளை அணைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. ஆனால், இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான். 

அகிலா இந்த வீட்டை இப்பொழுது தான் பார்க்கிறாள். வீட்டை பார்த்து விட்டு பால்கனியை பார்த்தவள், கார்த்திகாவா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்குறாள். 

 

கடைசியா நான் பார்க்கும் போது ரொம்ப அழகா இருந்தாலே, இப்போ கொஞ்சம் குண்டா நல்லாவே இல்லை என்று உதட்டை சுழித்து கூறினாள் அகிலா. 

 

என் புள்ளையை சுமந்து பெற்றதால இப்போ ரொம்ப அழகா இருக்குறாள் என்று ரசனையாக கூறினான் ஆகாஷ். 

அகிலா தன் நாக்கை கடித்து கொண்டாள். சாரி ப்ரோ என்றாள். 

பரவாயில்லை நீங்க பேசுனதை நான் மனசுல வச்சிக்க மாட்டேன் என்றான் ஆகாஷ் . 

ஹயோ ப்ரோ நான் பேசுனத்துக்கு சாரி கேட்கல. உங்க முன்னாடி பேசிட்டேன்னு தான் சாரி கேட்டேன் என்றாள். 

டூ வீலரை நிறுத்திய ஆகாஷ், பின்னால் திரும்பி அவளை பார்க்க, ஹீ… ஹீ போலாம் ப்ரோ என்றாள் அகிலா. 

கார்த்திகா   ஆகாஷ் இருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த அடுத்த பதிவில் பார்த்து விடலாம். தொடர்ந்து வாசியுங்கள் கண் கொண்டு பாரடா ( டி ) என்னை. 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page