கரண் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, வினோதன் இருக்கும் இடத்துக்கு சென்றான்.
அங்கே சந்துருவும் அவன் அம்மாவும் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் இருந்தார்கள்.
அபி அனுபவித்த துன்பம் நினைவுக்கு வந்ததால், கரண் சந்துருவை கடுமையாக அடித்தான்.
அவன், “அபி என் காதலி, வருங்கால மனைவி. நீ அவளை ஏமாத்தி, இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்க,” என்று கூறி, தாட்சாயினியையும் கண்டித்தான்.
மேலும், சந்துருவை மோனா ஏமாற்றியது ஆராதனாவின் பிளான் என அனைத்தையும் கூறினான்.
பின்னர், “இனிமேல் அபி வாழ்க்கையில் நீ வேண்டாம்,” என்று கூறி டிவோர்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து கேட்டான். சந்துரு தவறை உணர்ந்து அபியை விட மறுக்க, “நீயே அவளை ஏற்றுக் கொண்டாலும் துரோகம் செய்த உன்னை அவள் ஏற்க மாட்டாள்! அதனால் பிரச்சனை செய்யாமல் கையெழுத்து போடு! இல்லையென்றால் ஜெயிலுக்கு அனுப்புவேன்!” என்று எச்சரிக்க, சந்துரு பயந்து கையெழுத்திட்டான்.
அவர்களை போலீஸிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து, கரண் அங்கிருந்து மனநிறையுடன் சென்றான்.
மறுநாள், கரண் அபியிடம் டிவோர்ஸ் பேப்பரை காட்டினான். அவள் கடந்த காலத்தை நினைத்து உடைந்து அழுதாள்.
கரண் அவளை ஆறுதல் கூறி, “என்னை நம்பி நமது காதலை நம்பி எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடு,” என்று முழு காதலையும் கண்களில் தேக்கி கேட்டான்.
அதற்கு அபி சம்மதித்து டிவோஸ் பத்திரத்தில் கையெழுத்துட்டாள்.
பின்னர், அவளுக்காக தேவையான பொருட்கள், நகைகள், வளகாப்பிற்கு அனைத்தையும் வாங்கி, வீட்டிற்கு கொண்டு சென்றான்.
அவளை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டு, சாப்பாடு ஊட்டி, ஓய்வெடுக்கச் செய்தான்.
அவள் தூங்கிய பிறகு, அவளது பெற்றோரிடம் அனைத்து விஷயங்களையும் கூறியவன் , தனது வேலைக்காக மீண்டும் அலுவலகத்துக்கு சென்றான்.
அந்த காலை நேரம் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்தில் சிறிய மேடை அமைத்து ஒரு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிகாலையிலேயே வேலைகள் தொடங்கியதால், இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் தயாராகிவிட்டது. ஒரு பக்கம் சமையலும் நடந்து கொண்டிருந்தது.
அபியின் வீட்டில், காலையில் தயாராகி வந்த கரணை கதிர்வேலன் மகிழ்ச்சியாக வரவேற்றார்.
கௌரியும் அவன் முகத்தில் சோர்வைக் கவனித்து ஓய்வு எடுக்கச் சொன்னார். அதற்கு கரண், “இன்று ஒரு முக்கியமான நாள்” என்று கூறி, தனது வீட்டில் அபிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னான்.
அதைக் கேட்ட இருவரும் ஆச்சரியப்பட்டனர். தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்துள்ளேன், நீங்கள் ரெடியாக வந்தால் போதும் என்று கூறி, அவர்களுக்கு உடைகள் கொடுத்தான்.
அபியின் அறைக்குள் சென்ற கரண், அவள் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து மனதில் புதுவிதமான மகிழ்ச்சி அடைந்தான். அவளை மெதுவாக எழுப்பி, சிரிப்பும் சின்ன சிணுங்கல்களும் நடக்க, இருவருக்கும் நெருக்கமான தருணங்கள் ஏற்பட்டன. பின்னர் அவளை தயாராக சொல்லி, தானே கொண்டு வந்த உடைகளை அணியச் செய்தான்.
அபி தயார் ஆன பிறகு, கௌரியின் உதவியுடன் புடவை கட்டி அழகாக அலங்கரிக்கப்பட்டாள். அவளை பார்த்த கரண் அழகை ரசித்தான். அனைவரும் சேர்ந்து கிளம்பி, ஒரு இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்றபோது அது பதிவாளர் அலுவலகம் என்று தெரிய வந்தது. கரண் அமைதியாக அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். பெற்றோரின் சம்மதத்துடன், அபியிடம் விருப்பம் இருப்பின் மட்டுமே கையெழுத்திடச் சொன்னான். சிறிது தயக்கத்திற்குப் பிறகு, அபியும் சம்மதித்து கையெழுத்திட்டாள்.
இருவருக்கும் பதிவு திருமணம் இனிதே நிறைவேறியது. கரண் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, மற்றவர்களுக்கும் நிம்மதியைத் தந்தது. அபிக்கும், இதுவரை இருந்த தனிமை அகன்று, புதிய வாழ்க்கை தொடங்கிய உணர்வு வந்தது. இனி அவனுடன் வாழ வேண்டும் என்ற உறுதியை அவள் மனதில் எடுத்துக் கொண்டாள்.
கார் மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. வீட்டிற்கே போவோம் என்று நினைத்து கண்களை மூடிய அபி, கார் நின்றதும் திறந்து பார்த்தாள்; பிரம்மாண்டமான பங்களாவில் வந்திருப்பதை பார்த்தாலே அதிர்ச்சி அடைந்தாள்.
கரண், “இது நம்ம வீடு” என்று கூறி, அவளையும் பெற்றோரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
அங்கே நந்தினி ஓடி வந்து அபியிடம் அன்பாக பேசினாள். தன் தவறுகளை உணர்ந்து, கரணிடம் மன்னிப்பு கேட்டு, தங்கை என ஏற்றுக்கொள்ளச் கேட்டாள். கரண் குழப்பமடைந்தாலும், அபி நடுவே இருந்து அவர்களை இணைக்க முயன்றாள்.
வீட்டிற்குள் நுழையும் போது ஜெயந்தி ஆரத்தி எடுத்தாள்; அதனால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
பின்னர் நவீனும் கரணிடம் மன்னிப்பு கேட்டான். கரண் உடனே ஏற்க முடியாது, சிறிது நாள் வேண்டும் என்று தெளிவாகச் சொன்னான்.
அபியை அமர வைத்து கவனித்துக் கொண்ட கரண், அவளுக்கு உணவு ஊட்டினான். அதிகமாக சாப்பிட்டதால் அபிக்கு வாந்தி வந்தது; அவன் அதைப் பற்றி கவலைப்படாமல், அமைதியாக அவளை பார்த்துக் கொண்டான். “நம்ம குழந்தை” என்று சொன்ன அவன் வார்த்தைகள் அபியின் மனதை உருகச் செய்தது. அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
பின்னர் அவளை வேறு உடை அணியச் செய்து, பியூட்டிஷியன்களிடம் எளிமையான அலங்காரம் செய்யச் சொல்லி, கரண் வெளியேறி விழா ஏற்பாடுகளை கவனித்தான். அங்கு அவன் நெருங்கியவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் வந்திருந்தனர். ஜெனிபரும் எளிமையாக வந்திருந்தவள் தன்னால் முடிந்த வேலைகளை செய்தாள்.
அந்த அறை கதவு திறக்க, வெளியே சோபாவில் அமர்ந்திருந்த கரண் ஆவலாக திரும்பிப் பார்த்தான்.
அங்கே அழகான வண்ண உடை அணிந்து, மிதமான ஒப்பனையில் தேவதை போல அபி நடந்துவந்து கொண்டிருந்தாள்.
அவளின் அழகில் மயங்கியவன் எழுந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க, இரண்டு பெண்கள் அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்து கரணருகில் விட்டுவிட்டு சென்றனர்.
“கரண்… கரண்…” என்று அழைத்தவுடன், அவன் பார்வையைத் தாங்காமல் அவள் கூச்சப்பட்டாள்.
சுயநினைவுக்கு வந்தவன், “போலாமா? எல்லாரும் நம்மளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க,” என்றான். ஆமோதிப்பாக தலையை ஆட்டியவள், அவனுடன் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.
மேடையில் ஐயர் அமர்ந்து ஹோமகுண்டம் வைத்திருந்தார். “இது வளைகாப்புதானே, எதுக்கு ஐயர்?” என்று அபி கேட்டாள்.
“அப்படித்தான் பண்ணணும், அமைதியா உட்காரு,” என்று அவன் சொன்னான்.
அவள் அமைதியாக அவன் காட்டிய இருக்கையில் அமர, அவனும் அருகில் அமர்ந்தான்.
அப்போது “கெட்டிமேளம்!” என்ற ஐயர் குரலுடன் தாலி கொடுக்கப்பட்டது. அதை எதிர்பார்க்காத அபி அதிர்ந்து கரணை பார்த்தாள். “உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா, அபி?” என்று கரண் கேட்டான்.
கண்ணீர் கலந்த சிரிப்புடன், “ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டியே… இன்னும் கேக்கற?” சிரித்துக்கொண்டே என்றாலும், அவன் வாயிலிருந்து கேட்க ஆசைப்பட்டாள்.
“ஓகேவா?” என்றான் மீண்டும்.
“கண்டிப்பா,” என்றவுடன், அவளது கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான். இரு குடும்பத்தாரும் மகிழ்ந்தனர். விருந்தினர்கள் குழப்பத்துடன் இருந்தாலும், அமைதியாக நிகழ்வைப் பார்த்தனர்.
வினோதன் ஜெனிபரை நோக்கிப் பார்த்தான். அவள் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தாள்.
அவனுக்கு, “நாம எப்போ இப்படி வாழ்க்கையில் இணைவது?” என்ற எண்ணம். அவளோ அதை உணர்ந்து சிரிப்பை அடக்கினாள்.
பின்னர் சீமந்தம், வளைகாப்பு நடந்தது. முதலில் கரண் தங்க வளையலை அபிக்கு அணிவித்து, நெற்றியில் முத்தமிட்டான். அனைவரும் ஆசீர்வதித்தனர்.
விழா முடிந்து, உணவு பரிமாறப்பட்டது. கரண், அபியை நண்பர்கள் மற்றும் கம்பெனி உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருந்தான்.
அப்போது முகத்தை ஷாலால் மூடிய ஒரு பெண் உள்ளே வர முயன்றாள். வாட்ச்மேன் தடுத்தும் அவள் வந்தாள்.
“யார் நீ?” என்று கரண் கேட்டான்.
முகத்தைத் திறந்தவள் காயங்களுடன் ஆராத்யா.
அவளைப் பார்த்ததும் அனைவருக்கும் கோபம். அவள் பார்வை அபியையே நோக்கியது.
“ஏன் கரண்? என் காதல் புரியலையா?” என்று கண்ணீருடன் கேட்டாள்.
அவள் குற்றம் சாட்டியதும், கூட்டத்தில் கிசுகிசு தொடங்கியது. அபி அழுதாள்.
அதைத் தாங்காமல், கரண் ஆராத்யாவை அறைந்தான்.
“என் வாழ்க்கை அபிக்கு மட்டும்தான். உன்னை போல அடுத்த குடும்பத்தை பிரித்து கெடுதல் நினைப்பவருக்கு எனது வாழ்க்கையில் இடம் இல்லை,” என்று அவளை நிறுத்தினான்.
அதன் பின் அனைவரையும் நோக்கி, “அபி வயிற்றில் இருக்கும் குழந்தை அவளோட முன்னாள் கணவனுடையது. ஆனா, இப்போ அவள் என் மனைவி. அந்தக் குழந்தையும் என்னோடது,” என்றான்.
மேலும், ஆராத்யா செய்த துரோகம், அவள் வாழ்க்கை குறித்து அனைத்தையும் வெளிப்படுத்தினான்.
“யாராவது தவறாக பேசினா விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்,” என்று எச்சரித்தான்.
பின்னர் ஆராத்யாவை நோக்கி, “எவ்வளவு அடிச்சாலும் நீ திருந்த மாட்டே,” என்றான்.
ஜெயந்தி, “தயவு செய்து இங்கிருந்து போமா,” என்றார். ஆனால் ஆராத்யா, ஜெயந்தி மேகநாதன் இருவரும் அபியின் குடும்பத்தை மிரட்டிய பழைய விஷயங்களை கரனிடம் கூறினாள்.
கரண், “எல்லாம் எனக்கு தெரியும். இது எங்க குடும்ப விஷயம். நீ வெளிய போ,” என்றான்.
அவனைப் திரும்பி செல்ல முயன்றபோது, “எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது!” என்று சொல்லி, அவள் கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டாள்.
அபியை நோக்கி சுட்ட தோட்டாவை, அவளைத் தாக்குவதற்கு முன் கரண் தனது தோளில் வாங்கிக் கொண்டான்.
வினோதன் ஆராத்யாவை பிடித்து வெளியே அழைத்துச் செல்ல, ஜெனிபர் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தாள். இரண்டு வண்டியும் விரைவில் வந்தது.
கரண் காயமடைந்ததை பார்த்து அபி அழுதாள். அவன், “அழாதே, குழந்தைக்கு பாதிப்பு ஆகும்,” என்று அவளை தேற்றினான். அப்போது அபிக்கு பிரசவ வலி தொடங்கியது.
அவளை கரண் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
மருத்துவமனையில் கரணுக்கு சிகிச்சையும், அபிக்கு பிரசவமும் ஒரே நேரத்தில் நடந்தது. குழந்தை பிறந்ததும் தான் சிகிச்சைக்கு செல்வேன் என்று கரண் பிடிவாதம் பிடித்தான்; அபி கட்டாயப்படுத்தி அவனை அனுப்பினாள்.
சிறிது நேரத்தில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அபியின் ஆசைப்படி, குழந்தையை முதலில் கரணின் கைகளில் கொடுத்தனர். குழந்தையை பார்த்த கரண் மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தான்; குழந்தையும் அவன் விரலை பிடித்தது.
பின்னர் அபியை பார்த்த கரண் அவளது நலத்தை கேட்டான்; அவளும் அவன் கையை பற்றி கவலைப்பட்டாள். குழந்தை தன்னைப் போலவே இருப்பதை அறிந்து அவள் நிம்மதி அடைந்தாள்.
அதற்கிடையில், ஆராத்யா மற்றும் அவளது தந்தை செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். இதை தொலைக்காட்சியில் பார்த்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், இதற்குப் பிறகு நடக்கவிருக்கும் சம்பவம் அவர்களை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்யப் போகிறது.
